Monday, June 07, 2021

அதே கண்கள் 1967 - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

 ஹீரோயினோட அப்பா  கூடப்பிறந்தவங்க  3  பேரு ,  எல்லாரும்  ஒரு  பங்களாவில்  வசித்து  வருகிறார்கள் .முதல்  அண்ணன்  அதாவது  ஹீரோயினோட அப்பா  மைசூர்  போனப்ப  ஒரு  விபத்துல  இறக்கிறார். ஆக்சுவலா  அது  விபத்து  இல்லைனு  பின்னாளில்  தெரிய  வருது 


 படத்தோட  ஓப்பனிங்  சீன்ல   ஹீரோயினோட  சித்தப்பா  தூக்கில்  தொங்கிய  நிலையில்  இருக்கார் .  அதுவும்  தற்கொலை  இல்லை   கொலை அந்தக்கொலையை  நேரில்  பார்த்த  சித்தியையும்  கொலைகாரன் கொலை  பண்ண  ட்ரை  பண்றான், ஆனா  சித்தி  தப்பிடறா . அந்தக்கொலையைப்பார்த்த  அதிர்ச்சில  அவ  சித்தப்பிரமை  அடைஞ்ச  மாதிரி  ஆகிடறா.


போலீஸ்  வருது  ,  விசாரிக்குது.   அடுத்தடுத்து  சித்தி ,  இன்னொரு  சித்தப்பா  கொலை  ஆகறாங்க 


இது  ஒரு  டிராக் , சஸ்பென்ஸ்   டிராக்


  இன்னொரு  டிராக் . காமெடி  டிராக்


  ஹீரோயினை  லவ்  பண்ற  ஹீரோ  வாடகைக்குடி இருக்க  வீடு  தேடி  வர்றார்.  அங்கே  பிரம்மச்ச்சாரிக்கு  வீடு  இல்லைனு  சொல்றாங்க , அதனால  தன்  நண்பனுக்கு  பெண்  வேடம்  போட  வைத்து  தன் மனைவி  என  பொய்  சொல்லி  வீட்டில்  குடி  வர்றார்  ஹீரோ 


ஹவுஸ்  ஓனர்  பெண் வேடத்தில்  இருக்கும்  நண்பனைக்கண்டு  ஜொள்  விடுவது   தனி  காமெடி  டிராக்


ஹீரோ    எப்படி  கொலைகாரனைக்கண்டு  பிடிக்கறார்  என்பதே  மிச்ச  மீதிக்கதை 


 ஹீரோவா  ரவிச்சந்திரன்.  ஊமை  விழிகள்  படத்தின்  வில்லன். லிப்ஸ்டிக்  எல்லாம்  பூசி  ராமராஜனுக்கே  முன்னோடியா  இருக்கார்

ஹீரோவின்  நண்பனா  நாகேஷ்  செம  ஆக்டிங்.  பெண்  வேடத்தில்  செய்யும்  லூட்டிகள்  கலக்கல்  காமெடி 


 3  சித்தப்பாக்களில்  அசோகன்  தான்  கொலைகாரன்  என்பது  போல  காட்சிகளை  சாமார்த்தியமா  நகர்த்திக்கொண்டு  போனாலும் க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  குட்  


  அந்தக்காலத்துலயே  பாடல் காட்சிகளை  படமாக்குவதில்  பிரம்மாண்டம் காட்டி  இருக்காங்க 





நச்  டயலாக்ஸ்


1    நான்  குக்கிங்க்  எக்ஸ்க்யூட்டிவ்  ஆஃபீசரா  இருக்கேன்


  ஓஹோ , சமையல்காரனா?


2   மேடம், வீடு  காலினு  வெளில  போர்டு  இருக்கு ,  உள்ளே  வந்தா  நீங்க  இருக்கீங்க்ளே?


 அதாவது  மேலே  காலி 


 ஓ. உங்களுக்கு  மேல்  மாடி  காலியா? 


3   உங்களுக்கு  எத்தனை  குழந்தைங்க ?


 விட்டா  எனக்கு  எத்தனை  ஒயிஃப்ங்கனு கேட்பீங்க  போலயே?



4    வீட்ல  பெரியவங்க  யாராவது  இருந்தா  கூப்பிடுங்க 


 ஏன் ? என்னைப்பார்த்தா  பெரியவங்க  மாதிரி  தெரியலையா?


  ச்சே  ச்சே  சின்ன  பாப்பா  மாதிரி  இருக்கீங்க 


5  என்னது ?    தண்டர்  கேக்கா?அப்டீன்னா?


 இடி  ஆப்பம்


6   இந்தாங்க  லட்டு ,  உங்க  சிஸ்டரைக்கொஞ்சம்  வரச்சொல்லுங்க 


 இந்த    ஒரு  லட்டைக்கொடுத்துட்டா?  அவ்ளோ  சீப்பாவா?




பாடல்கள் 


1   பூம்  பூ  மாட்டுக்காரன்  தெருவில்  வந்தாண்டி 


2 கண்ணுக்குத்தெரியாதா?  பெண்ணுக்குப்புரியாதா? 


3   ஓ  ஓ  எத்தனை  அழகு  20  வயதினிலே? 

4  வா  அருகில்  வா  தா  உயிரைத்தா 


5  பொம்பளை  ஒருத்தி  இருந்தாளாம்

6   என்னென்னெவோ  நான் நினைத்தேன்  (  இந்த  ஒரு  பாட்டுதான்  சுமார்  ரகம், மற்றவை  அனைத்தும்  செம  ஹிட் )



லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  கொலைகாரன்  ஹீரோயினைக்கொலை  பண்ண  பல  சான்ஸ்  கிடைச்சும்  அதை  எல்லாம்  யூஸ்  பண்ணாம  பர்த் டே  பார்ட்டியில்  அவ்ளோ  கூட்டத்தில்  குறி  மிஸ்  பண்ணி  சுடுவது  காமெடி .  ஹீரோயின்  தனிமையில்  இருக்கும்போதே  சுடலாமே? 


2  கொலைகாரனைக்கண்டுபிடிக்கறேன்னு  சவால்  விடும்  ஹீரோ  லவ்  பண்ற  வேலையைத்தான்  மெயின் ஜாப்பா  பண்ணிட்டு  இருக்காரு 


3  ஜமீன்  வாரசுகள்  5  பேரைக்கொலை  பண்ண  நினைக்கும்  கொலைகாரன்  அவங்க  எல்லாரும்  ஒரே  கார்ல  டிராவல்  பண்றப்ப  போட்டுத்தள்ளுவதுதான்  ஈசி , விபத்துனு  ஃபிரேம்  பண்ணி  இருக்கலாம்.  அதை  விட்டுட்டு  ஒவ்வொரு  ஆளா  கொலை  பண்ணுவது  காதில்  பூச்சுற்றல் 


4     அதுவரை  நடந்த  கொலைகளை  எல்லாம்  விபத்து  மாதிரி  அல்லது  தற்கொலை  மாதிரி  ஃபிரேம்  பண்ணூம்  கொலைகாரன்  ஹீரோயினைக்கொலை  செய்யும்போது  மட்டும்  அந்த  ஃபார்மெட்டில்  செய்யாமல்  கொலை  மாதிரி  தெரிஞ்சாலும்  பரவாயில்லை  என  துப்பாக்கியில்  சுட  முயற்சிப்பது  ஏன்? 


  சி.பி  கமெண்ட்  -   அந்தக்கால  படமாக  இருந்தாலும்  ஜாலி  எண்ட்டர்டெய்ன்மெண்ட்  +  க்ரைம்  த்ரில்லர்  வரிசைல  இன்றைய  ரசிகர்களும்  பார்த்து  ரசிக்கும்  அளவில்  படம் இருக்கு .  செம  ஹிட்  பாட்டு

 படம்  அமேசான்  பிரைம்ல  இருக்கு 

0 comments: