Monday, November 23, 2020

GRAND MASTER ( மலையாளம்) – சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்)

 


GRAND MASTER ( மலையாளம்) – சினிமா  விமர்சனம்  ( க்ரைம்  இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்)

 

சம்பவம் 1

 

ஹீரோ  ஒரு  போலீஸ்  ஆஃபீசர். அவரோட  ம்னைவி ஒரு வக்கீல்.ஒரு பெண்  குழந்தை,. ஒரு  கொலை  கேஸ்  விஷயமா  ஹீரோ  தன் மனைவி  கிட்டே  சொன்ன  தகவலை  மனைவி  தன்னோட கட்சிக்காரருக்கு  பாஸ்  பண்ணிடறதால அந்த  கொலையாளி  அந்த  கேஸ்ல  இருந்து  சாமார்த்தியமா  தப்பிச்சுடறாப்டி . இதை  வேணும்னே செய்யலை, ஏதோ தெரியாத்தனமா  செஞ்சுடராப்டி . இருவருக்கும்  கருத்து  வேறுபாடு  ஏற்பட்டு  பிரிஞ்சிடறாங்க. இந்த சம்பவம் நடந்து  10 வருடங்கள்  ஆகுது. அப்பப்ப  தன் பெண்  குழந்தையை  ஹீரோ  போய் பார்த்துக்கறாரு, கல்விச்செலவுக்கு பணம்  தர்றாரு

 

 சம்பவம் 2 –ஒரு  விஐபி   ஒரு  பெண்ணை  விரும்பறாரு. போக வர  இருக்காரு, ஏகப்பட்ட  சொத்து  அவருக்கு . அதனால  அந்த  பொண்ணு  அவர்  கிட்டே  அப்பப்ப  கை மாத்து  மாதிரி  கொஞ்சம்  கொஞ்சமா  பணம்  வாங்கி  அது கடைசில  2  கோடி ரூபா  பக்கமா  ஆகுது. பொதுவாவே  பொண்ணுங்க  கிட்டே  தர்ற  பணமும், உண்டியல்ல  போடற  பணமும்  ஒண்ணுதான் . நம்ம  கைக்கு அது  மீண்டும்  கிடைக்காது . இது  தெரியாத  அந்த  வி ஐபி  தான்  கொடுத்த  பணத்தை  திருப்பி கேட்கறாரு.  அந்தப்பொண்ணுக்கு  அதை  எப்படி தர்றதுனு  தெரில ,  எப்படி எஸ்  ஆகலாம்னு  யோசிக்குது

 

 சம்பவம் 3    ரெஸ்டாரண்ட்  நடத்திட்டு வர்ற  60+  வயசான ஒரு லேடி  திடீர்னு  கொலை  செய்யப்படறாங்க . அடுத்ததா  ஒரு பிரபலமான  பாடகி  கொலை செய்யப்படறாங்க வயசு 25+  இவங்களுக்கு  ஒரு லவ்வர்  உண்டு . ஆனா  யாருக்கும்  அந்த  லவ்வர்  யார்னு தெரியாது. சீக்ரெட்டா  லவ்வி இருக்காங்க இந்த பாடகியை  ஒரு தலையா  ஒரு தறுதலை  லவ்வி இருக்கான். போலீஸ்  அவனை விசாரிக்குது. இந்த  2  கொலைகளும்  ஒரு ஆள்  தான் செஞ்சிருக்கான், ஆனா  2  பேருக்கும்  எந்த  தொடர்பும் இல்லை . கொலை செய்யப்பட்ட  இந்த 2  பெண்களுக்கும் ஏதோ ஒரு விதத்துல  சம்பந்தம்  இருக்கும்னு  போலீஸ்  நினைக்குது ஆனா  கண்டுபிடிக்க  முடியல . இப்படி  இருக்கறப்ப  3 வதா  ஒரு கொலை  நடக்குது. அதுவும்  பெண் தான், 30 வயசு இருக்கும் . இதுக்கும்  காரணம்  தெரியல

 

 சம்பவம் 4 -   ஹீரோக்கு  வில்லன்  ஃபோன் பண்றான். உங்களை  பல வருடங்களா  பார்த்துக்கிட்டு இருக்கேன், நீங்க கேஸ்களை  டீல் பண்ற  விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆக்சுவலா நான் உங்க தீவிர  ஃபேன், ஆனா  பர்சனல்  லைஃப்ல உங்க மனைவியைப்பிரிஞ்ச  பின்  உங்க  சாமார்த்தியம்  குறைஞ்சிடுச்சு . இப்போ  ஒரு கேம்  விளைட்யாடலாம், நான்  தொடர்ந்து  சில  கொலைகள்  பண்ணப்போறேன். அதை  நீங்க  கண்டு பிடிக்கனும்  சினிமாக்கு டீசர்  ட்ரெய்லர்  விடற  மாதிரி  கொலைகாரன்  ஹீரோக்கு  க்ளூ கொடுத்துட்டு  இன்ன தேதி  இன்ன  இடம்  அப்டினு சொல்லி  அந்தக்கொலைகளை  பண்றான்

 

  மேலே  சொன்ன  4  சம்பவங்களும்  எப்படி ஒண்ணுக்குண்ணு  கனெக்ட்  ஆகுது  என்பதை   நெட்  ஃபிளிக்சில்  கண்டு  மகிழ்க

 

  ஹீரோவா    கம்ப்ளீட் ஆக்டர்  மோகன் லால் . இவரோட  நடிப்பைப்பற்றி சொல்ல  எல்லாம் நமக்கு  வயசு பத்தாது , என்னமா  ஆக்ட்  குடுக்கறாரு? ஓவர்  பில்டப் இல்லை . ஹீரோயிசம்  இல்லை. போலீஸ்  ஆஃபீசருக்கு  உண்டான  மிடுக்குடன் கச்சிதமாக  பண்ணி  இருக்கார். பெண் குழந்தையிடம்  அப்பாவாக  அவர் பாசம் காட்டுவது நெகிழ்ச்சி . பொதுவாவே  பழைய படங்களில்  எல்லாம் அம்மா  மகன்  செண்ட்டிமெண்ட்  காட்சிகள்  தான் அதிகம்  வைக்கப்படும், ஆனா  இப்போ  எல்லாம்  அப்பா  மகள்  செண்ட்டிமெண்ட்  சீன்கள்  அதிகம்  வருது . லேட்டஸ்ட்  உதா மகாநதி  , தங்க மீன்கள்

 

ஹீரோயினா ,  லாயரா  ப்ரியாமணி .  கச்சிதமான  நடிப்பு . இவரது  மிரட்டலான  நடிப்பை   சாருலதா  எனும்  க்ரைம்  த்ரில்லரிலும்,  அற்புதமான  கிராம  வெள்ளந்தித்தனத்தை  பருத்தி  வீரன்லயும்  கண்டு  களித்தோம். இதில்  வாய்ப்பு கம்மி  இருந்தாலும் வந்த வரை  குட்

 

 ஹீரோ  ஹீரோயின்  மகளா  வரும்  பேபி  ஆர்ட்டிஸ்ட்  ஓவர்  ஆக்டிங்  இல்லாமல்  நல்லா  பண்ணி   இருக்கு . பேபி ஷாலினி  மாதிரி  ஓவர்  ஆக்டிங்  பண்ணா  கடுப்பா  ஆகும்,  ( பின்னாளில்  ஷாலினி  அஜித்  இயல்பான நடிப்பில்  காதலுக்கு மரியாதை , பிரியாத  வரம்  வேண்டும்  அமர்க்களம், ல  நல்லா  பண்ணினாங்க

 

வில்லனா  பாபு  ஆண்ட்டனி . பூ  விழி  வாசலிலே  புகழ்  ஆண்ட்டனி . அவரது  விக்  ஒரு மைனஸ் . அவரது  நடிப்பிலும்  கூட  ஒரு மிடுக்கு  மிஸ்சிங்

 

இன்னொரு  வில்லனாக  ரியாஸ்கான். கச்சிதமான  நடிப்பு . இவரது  ரிலேட்டிவாக  வரும் லேடி  போலீஸ்  ஆஃபீசர்  நடிப்பு  கொஞ்சம்  செயற்கை . இன்னும்   நல்லா  பண்ணி  இருக்கலாம்

 

நச்  டயலாக்ஸ்

 

1 எதிராளி  மனசுல  என்ன  நினைக்கறாங்கனு நாம முன் கூட்டியே யூகிக்கனும், அவனோட அடுத்த 64  மூவ்கள்  நமக்கு  தெரிஞ்சிருக்கனும், அவன் தான் செஸ்ல  கிராண்ட்  ,மாஸ்டர்

 

2   குடும்பம்  நம்ம கை விட்டுப்போனா நம் எல்லா திறமையும் காணாம போய்டும்

 

3   கேள்விகள்  கேட்பது  நிருபரான உங்க வேலை , அதுக்கு  பதில்  சொல்வதும் சொல்லாததும் என் இஷ்டம்

 

4  சாரி சார் , ரொம்ப  வருசம்  கேப் விட்டதால  எனக்கு டச்  விட்டுப்போச்சு

 

 வருசங்கள்  அதிகமாக அதிகமாக வீரியமும் அதிகம் ஆகும்

 

5  பர்சனல்  வாழ்க்கைலயும் சரி ,  செஸ்லயும் சரி  நாம தோல்வியை ச்ந்திச்சே ஆகனும்

 

6   காதல்லயும், நட்புலயும்  தோல்வி மிக  முக்கியமான  வரம்

 

7  ஆச்சரியமா  இருக்கே? இதுல எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருக்காதே? எப்படி நம்பிக்கை வந்தது?

 

 சில  தோல்விகள்ல இருந்து  கத்துக்கிட்டேன்

 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  குள்றுபடிகள்

 

1  கோடீஸ்வரனுக்கு  ஆசை நாயகியா    இருப்பவர்  அவர்  தன்  மீது  மயக்கத்தில்  இருக்கார்  என தெரிஞ்சும்  லூஸ்  மாதீரி  நடந்துக்குவது  நம்ப  முடியல. பொதுவா  பொண்ணுங்க  இப்படி ஒரு புளியங்கொம்பு  கிடைச்சா  சொத்தை  நைசா  அபேஸ்  பண்ணிடுவாங்க, அதானே  உலக  வழக்கம்? இது  கேனம்  மாதிரி  உங்க  மேல  எனக்கு லவ்  எல்லாம்  இல்ல, பணம் தான்  குறி. அதுக்குதான்  பழகுனேன்னு  ஓப்பன்  ஸ்டேட்மெண்ட்  குடுக்குது. நம்பவே  முடியல

 

2  மைனரா  இருக்கும்  ஒரு 17 வயசு  பெண்ணை ஒரு ஆள்  கெடுத்துடறான். அதை  வெச்சு  அந்த  மைனர்  பொண்ணு , கார்டியன்  எல்லாம் அவர்  கிட்டே  பணம்  பறிப்பது  மிரட்டுவது  மடத்தனமா  இருக்கு. அதுக்கு  அந்தாளை  மேரேஜ்  பண்ணீக்க  சொல்லி  இருக்கலாம், மொத்த  சொத்தும்  கைக்கு  வரும் .  இன்ஸ்டால்மெண்ட்ல  எதுக்கு  வசூல்  பண்ணிட்டு ?

 

3  ரெண்டேகால்  மணி  நேரம்  ஓடும்  படத்தில்  முதல்  25  நிமிசம்  வரும்  ஒரு சீரியல்  கொலை  கேஸ்க்கும் படத்தின்  மெயின் கதைக்கும்  சம்பந்தம்  இல்லை , சும்மா  டைவர்ட்  பண்ண   அந்தக்கதை. அது  இல்லாமயே  இன்னும் க்ரிப்பா  படம் தந்திருக்கலாம் . இந்த  விமர்சனத்தில்  நான்  அந்த  கதையை  ஓப்பன்  பண்ணலை

 

4  ஹீரோ – ஹீரோயின்  பிரிவதற்கான  காரணம்  வலுவாக  இல்லை . பின்  ஹீரோயின்  தன் தப்பை  2  வருடங்கள்  கழித்து  உணர்ந்ததா  க்ளைமாக்ஸ்ல  ஒரு சம்பவத்தோட சொல்லுது. அப்போவே வந்து  இணைஞ்சிருக்கலாமே? ஈகோனு சப்பைக்கட்டு  கட்றாங்க

 

சி.பி ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம் இன்வெஸ்டிகேஷன்  த்ரில்லர்  விரும்பிகளுக்கு இந்தப்படம்  பிடிக்கும் . நெட்  ஃபிளிக்சில்  கிடைக்குது. முதல்  25  நிமிசம்  ஸ்கிப்  பண்ணியே பார்க்கலாம்  ரேட்டிங்  3 / 5

 

3

0 comments: