Friday, November 27, 2020

காவல் துறை உங்கள் நண்பன் - சினிமா விமர்சனம்

 

விசாரணை  என்ற  பிரமாதமான  படம்  இயக்கிய  வெற்றி  மாறன்  அதே சாயலில்  அதே பாணியில் அதே கதைக்கருவில்  கொஞ்சம் சுத்தி  அடிச்சு  ஒரு கதை  ரெடி  பண்ணி  இருக்காங்க. இதுக்கு  உதாரணமா  மலையாளத்தில்  பிருத்விராஜ்  நடிச்ச 2  படங்களை  சொல்லலாம், டிரைவிங்  லைசென்ஸ், அய்யப்பனும்  கோஷியும். இரண்டும்  ஈகோ  கிளாஸ்தான்  கதை  , திரைக்கதை  வேற. அதே  மாதிரி  தான்  இதுவும்.. ஆனா  விசாரணை  தந்த  தாகமோ நம்பகத்தன்மையோ , பதைபதைப்போ  இது  தர்ல , ஆனாலும்  எடுத்துகொண்ட கதைக்கருவுக்கு  நல்லா  உழைசிருக்காங்க


ஹீரோ ஒரு சாதாரண உணவு டெலிவரிபாய். லவ் மேரேஜ்  பண்ணி  இருக்கார். பைக்ல  ஒய்ஃப்  கூட  ஒரு பக்கம்  போய்க்கிட்டு இருக்கும்போது  போலீஸ்  செக்கிங். வழக்கமா 100 ரூபா பிச்சை  எடுக்குமே  டிராஃபிக்  போலீஸ்  அதே  மாதிரி  ஒரு சிச்சுவேஷன், இன்ஸ்பெக்டர்  கொஞ்சம்  கெத்தா  பிச்சை  கேட்கறாரு, ஹீரோ  கொஞ்சம்  தெனாவெட்டா  பதில்  சொல்ல  இன்ஸ்பெக்டருக்கு  ஈகோ  டச்  ஆகுது. எப்படி  எல்லாம் அவரை  பழி  எடுக்கறார்  , அலைய  வைக்கிறார்   என்பதே கதை


ஹீரோவும் , தயாரிப்பாளரும் ஒருவரே  ரமேஷ்  ரவி. இவருக்கு  முக  பாவனைகள்  ஒத்துழைக்கலை. விஜய் ஆண்ட்டனி  மாதிரி  எல்லாத்துக்கும்  ஒரே  பாவனை  தான்


ஹீரோயினா  ரவீனா ரவி. கலக்கலான  நடிப்பு. கலங்க  வைக்கும்  ஆத்மபூர்வமான  பங்களிப்பு’


  வில்லனா  போலீஸா  மைம்  கோபி. எகத்தாளமான நடிப்பு . செம


பாடல்கள் 2  தேவையே இல்லை. ஸ்பீடு பிரேக்கர்


ஒளிப்பதிவு   எடிட்டிங்  ஓக்கே  ரகம்


நச்  டயலாக்ஸ் 


1 ஆஃபீஸ்ல  உன்னை  டிராப்  பண்ணவா?


எதுக்கு? தடுக்கி  விழுந்தா  ஆஃபீஸ் பக்கத்துலயே  இருக்கு


அப்போ  தூக்கிட்டு  வந்துடவா?


2 போலீஸ்ல  காட்டக்கூடாத   2 விஷயங்கள்


1  முகத்துல பயம்   2 பாக்கெட்ல பணம்


3  நைட்  டைம்ல மட்டும்  போலீஸ்  கிட்டே மாட்டிக்கவே  கூடாது.திருடன் கிட்டே மாட்டிக்கிட்டா  கூட அண்டர்வேராவது மிஞ்சும்


4சட்டம்கறது பணம்  இருக்கறவங்களுக்கு  வாலாட்ற  நாய்


5  போலீஸ் யூனிஃபார்மோட  வாட்ச்மேனைப்பார்த்தாலே  ஜனங்க ஒரு அடி தள்ளி  நிக்கக்காரணம்  போலீஸ் மேல  வெச்சிருக்கும் பயம், அதை  சுத்தமா  காலி  பண்ணினது  சோசியல்   மீடியாக்கள்  தான்



6   ஒரு  கிரிமினல்  போலீஸ்  மாதிரி  யோசிக  முடியாது, ஆனா  ஒரு  போலீஸ்  கிரிமினல்  மாதிரி  யோசிக்க  முடியும் 


7 போலீஸ்  ஸ்டேசஹனுக்கு  ஒரு பிரச்சனையோட  ஒருத்தன்  வந்தா  அவன்  வாழ்நாள்  பூரா  நிம்மதியாவே  இருக்க  முடியாது


8  போலீசான  நாங்க  பப்ளிக்  சர்வண்ட்  தான், ஆனா நிஜத்துல  பப்ளிக் தான் எங்க  சர்வண்ட்



 லாஜிக்  சொதப்பல்கள்


1   போலீஸ்  ஸ்டேஷனுக்கு   முதல் முறை போய் மாட்டிக்கிட்ட  ஹீரோ  மீண்டும்  தனியாவே  என்ன  தைரியத்தில்  போறார்? வக்கீலோட போலாமே?


2 கணவன்  3  நாட்களாக  வீட்டுக்கு  வரவில்லை  என்றதும்  மனைவி  பதற  வேண்டாமா?  சும்மா  ஃபோன்  மட்டும்  பண்ணிட்டு இருக்கு 



3   போலீஸ்  கைதியை  அடிப்பதை  போலீசே  வீடியோ  எடுத்து  வாட்சப்பில்  பரப்புவது  ஓவர். அவருக்குதான்  ஆபத்து 


4  ஹீரோயின்  மேல்  கடைசி வரை  போலீஸ்  கை வைக்காதது.. 


5  வக்கீலோடு  ஹீரோயின்  போலீஸ்  ஸ்டேஷன்  போகும்போது  வக்கீல் எதிரிலேயே  வில்லன்  தெனாவெட்டாக  பேசுவது



சி.பி ஃபைனல் கமெண்ட்- விறுவிறுப்பாக  2  மணி  நேரம்  எடுத்துக்கொண்ட  கதையை  நல்லாதான்  சொல்லி  இருக்காங்க, ஆனா நம்பகத்தன்மை சுத்தமா  இல்லை . ஆனந்த  விகடன்  எதிர்பார்ப்பு  மார்க்  41, ரேட்டிங்   2.75 / 5

Monday, November 23, 2020

GRAND MASTER ( மலையாளம்) – சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்)

 


GRAND MASTER ( மலையாளம்) – சினிமா  விமர்சனம்  ( க்ரைம்  இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்)

 

சம்பவம் 1

 

ஹீரோ  ஒரு  போலீஸ்  ஆஃபீசர். அவரோட  ம்னைவி ஒரு வக்கீல்.ஒரு பெண்  குழந்தை,. ஒரு  கொலை  கேஸ்  விஷயமா  ஹீரோ  தன் மனைவி  கிட்டே  சொன்ன  தகவலை  மனைவி  தன்னோட கட்சிக்காரருக்கு  பாஸ்  பண்ணிடறதால அந்த  கொலையாளி  அந்த  கேஸ்ல  இருந்து  சாமார்த்தியமா  தப்பிச்சுடறாப்டி . இதை  வேணும்னே செய்யலை, ஏதோ தெரியாத்தனமா  செஞ்சுடராப்டி . இருவருக்கும்  கருத்து  வேறுபாடு  ஏற்பட்டு  பிரிஞ்சிடறாங்க. இந்த சம்பவம் நடந்து  10 வருடங்கள்  ஆகுது. அப்பப்ப  தன் பெண்  குழந்தையை  ஹீரோ  போய் பார்த்துக்கறாரு, கல்விச்செலவுக்கு பணம்  தர்றாரு

 

 சம்பவம் 2 –ஒரு  விஐபி   ஒரு  பெண்ணை  விரும்பறாரு. போக வர  இருக்காரு, ஏகப்பட்ட  சொத்து  அவருக்கு . அதனால  அந்த  பொண்ணு  அவர்  கிட்டே  அப்பப்ப  கை மாத்து  மாதிரி  கொஞ்சம்  கொஞ்சமா  பணம்  வாங்கி  அது கடைசில  2  கோடி ரூபா  பக்கமா  ஆகுது. பொதுவாவே  பொண்ணுங்க  கிட்டே  தர்ற  பணமும், உண்டியல்ல  போடற  பணமும்  ஒண்ணுதான் . நம்ம  கைக்கு அது  மீண்டும்  கிடைக்காது . இது  தெரியாத  அந்த  வி ஐபி  தான்  கொடுத்த  பணத்தை  திருப்பி கேட்கறாரு.  அந்தப்பொண்ணுக்கு  அதை  எப்படி தர்றதுனு  தெரில ,  எப்படி எஸ்  ஆகலாம்னு  யோசிக்குது

 

 சம்பவம் 3    ரெஸ்டாரண்ட்  நடத்திட்டு வர்ற  60+  வயசான ஒரு லேடி  திடீர்னு  கொலை  செய்யப்படறாங்க . அடுத்ததா  ஒரு பிரபலமான  பாடகி  கொலை செய்யப்படறாங்க வயசு 25+  இவங்களுக்கு  ஒரு லவ்வர்  உண்டு . ஆனா  யாருக்கும்  அந்த  லவ்வர்  யார்னு தெரியாது. சீக்ரெட்டா  லவ்வி இருக்காங்க இந்த பாடகியை  ஒரு தலையா  ஒரு தறுதலை  லவ்வி இருக்கான். போலீஸ்  அவனை விசாரிக்குது. இந்த  2  கொலைகளும்  ஒரு ஆள்  தான் செஞ்சிருக்கான், ஆனா  2  பேருக்கும்  எந்த  தொடர்பும் இல்லை . கொலை செய்யப்பட்ட  இந்த 2  பெண்களுக்கும் ஏதோ ஒரு விதத்துல  சம்பந்தம்  இருக்கும்னு  போலீஸ்  நினைக்குது ஆனா  கண்டுபிடிக்க  முடியல . இப்படி  இருக்கறப்ப  3 வதா  ஒரு கொலை  நடக்குது. அதுவும்  பெண் தான், 30 வயசு இருக்கும் . இதுக்கும்  காரணம்  தெரியல

 

 சம்பவம் 4 -   ஹீரோக்கு  வில்லன்  ஃபோன் பண்றான். உங்களை  பல வருடங்களா  பார்த்துக்கிட்டு இருக்கேன், நீங்க கேஸ்களை  டீல் பண்ற  விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆக்சுவலா நான் உங்க தீவிர  ஃபேன், ஆனா  பர்சனல்  லைஃப்ல உங்க மனைவியைப்பிரிஞ்ச  பின்  உங்க  சாமார்த்தியம்  குறைஞ்சிடுச்சு . இப்போ  ஒரு கேம்  விளைட்யாடலாம், நான்  தொடர்ந்து  சில  கொலைகள்  பண்ணப்போறேன். அதை  நீங்க  கண்டு பிடிக்கனும்  சினிமாக்கு டீசர்  ட்ரெய்லர்  விடற  மாதிரி  கொலைகாரன்  ஹீரோக்கு  க்ளூ கொடுத்துட்டு  இன்ன தேதி  இன்ன  இடம்  அப்டினு சொல்லி  அந்தக்கொலைகளை  பண்றான்

 

  மேலே  சொன்ன  4  சம்பவங்களும்  எப்படி ஒண்ணுக்குண்ணு  கனெக்ட்  ஆகுது  என்பதை   நெட்  ஃபிளிக்சில்  கண்டு  மகிழ்க

 

  ஹீரோவா    கம்ப்ளீட் ஆக்டர்  மோகன் லால் . இவரோட  நடிப்பைப்பற்றி சொல்ல  எல்லாம் நமக்கு  வயசு பத்தாது , என்னமா  ஆக்ட்  குடுக்கறாரு? ஓவர்  பில்டப் இல்லை . ஹீரோயிசம்  இல்லை. போலீஸ்  ஆஃபீசருக்கு  உண்டான  மிடுக்குடன் கச்சிதமாக  பண்ணி  இருக்கார். பெண் குழந்தையிடம்  அப்பாவாக  அவர் பாசம் காட்டுவது நெகிழ்ச்சி . பொதுவாவே  பழைய படங்களில்  எல்லாம் அம்மா  மகன்  செண்ட்டிமெண்ட்  காட்சிகள்  தான் அதிகம்  வைக்கப்படும், ஆனா  இப்போ  எல்லாம்  அப்பா  மகள்  செண்ட்டிமெண்ட்  சீன்கள்  அதிகம்  வருது . லேட்டஸ்ட்  உதா மகாநதி  , தங்க மீன்கள்

 

ஹீரோயினா ,  லாயரா  ப்ரியாமணி .  கச்சிதமான  நடிப்பு . இவரது  மிரட்டலான  நடிப்பை   சாருலதா  எனும்  க்ரைம்  த்ரில்லரிலும்,  அற்புதமான  கிராம  வெள்ளந்தித்தனத்தை  பருத்தி  வீரன்லயும்  கண்டு  களித்தோம். இதில்  வாய்ப்பு கம்மி  இருந்தாலும் வந்த வரை  குட்

 

 ஹீரோ  ஹீரோயின்  மகளா  வரும்  பேபி  ஆர்ட்டிஸ்ட்  ஓவர்  ஆக்டிங்  இல்லாமல்  நல்லா  பண்ணி   இருக்கு . பேபி ஷாலினி  மாதிரி  ஓவர்  ஆக்டிங்  பண்ணா  கடுப்பா  ஆகும்,  ( பின்னாளில்  ஷாலினி  அஜித்  இயல்பான நடிப்பில்  காதலுக்கு மரியாதை , பிரியாத  வரம்  வேண்டும்  அமர்க்களம், ல  நல்லா  பண்ணினாங்க

 

வில்லனா  பாபு  ஆண்ட்டனி . பூ  விழி  வாசலிலே  புகழ்  ஆண்ட்டனி . அவரது  விக்  ஒரு மைனஸ் . அவரது  நடிப்பிலும்  கூட  ஒரு மிடுக்கு  மிஸ்சிங்

 

இன்னொரு  வில்லனாக  ரியாஸ்கான். கச்சிதமான  நடிப்பு . இவரது  ரிலேட்டிவாக  வரும் லேடி  போலீஸ்  ஆஃபீசர்  நடிப்பு  கொஞ்சம்  செயற்கை . இன்னும்   நல்லா  பண்ணி  இருக்கலாம்

 

நச்  டயலாக்ஸ்

 

1 எதிராளி  மனசுல  என்ன  நினைக்கறாங்கனு நாம முன் கூட்டியே யூகிக்கனும், அவனோட அடுத்த 64  மூவ்கள்  நமக்கு  தெரிஞ்சிருக்கனும், அவன் தான் செஸ்ல  கிராண்ட்  ,மாஸ்டர்

 

2   குடும்பம்  நம்ம கை விட்டுப்போனா நம் எல்லா திறமையும் காணாம போய்டும்

 

3   கேள்விகள்  கேட்பது  நிருபரான உங்க வேலை , அதுக்கு  பதில்  சொல்வதும் சொல்லாததும் என் இஷ்டம்

 

4  சாரி சார் , ரொம்ப  வருசம்  கேப் விட்டதால  எனக்கு டச்  விட்டுப்போச்சு

 

 வருசங்கள்  அதிகமாக அதிகமாக வீரியமும் அதிகம் ஆகும்

 

5  பர்சனல்  வாழ்க்கைலயும் சரி ,  செஸ்லயும் சரி  நாம தோல்வியை ச்ந்திச்சே ஆகனும்

 

6   காதல்லயும், நட்புலயும்  தோல்வி மிக  முக்கியமான  வரம்

 

7  ஆச்சரியமா  இருக்கே? இதுல எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருக்காதே? எப்படி நம்பிக்கை வந்தது?

 

 சில  தோல்விகள்ல இருந்து  கத்துக்கிட்டேன்

 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  குள்றுபடிகள்

 

1  கோடீஸ்வரனுக்கு  ஆசை நாயகியா    இருப்பவர்  அவர்  தன்  மீது  மயக்கத்தில்  இருக்கார்  என தெரிஞ்சும்  லூஸ்  மாதீரி  நடந்துக்குவது  நம்ப  முடியல. பொதுவா  பொண்ணுங்க  இப்படி ஒரு புளியங்கொம்பு  கிடைச்சா  சொத்தை  நைசா  அபேஸ்  பண்ணிடுவாங்க, அதானே  உலக  வழக்கம்? இது  கேனம்  மாதிரி  உங்க  மேல  எனக்கு லவ்  எல்லாம்  இல்ல, பணம் தான்  குறி. அதுக்குதான்  பழகுனேன்னு  ஓப்பன்  ஸ்டேட்மெண்ட்  குடுக்குது. நம்பவே  முடியல

 

2  மைனரா  இருக்கும்  ஒரு 17 வயசு  பெண்ணை ஒரு ஆள்  கெடுத்துடறான். அதை  வெச்சு  அந்த  மைனர்  பொண்ணு , கார்டியன்  எல்லாம் அவர்  கிட்டே  பணம்  பறிப்பது  மிரட்டுவது  மடத்தனமா  இருக்கு. அதுக்கு  அந்தாளை  மேரேஜ்  பண்ணீக்க  சொல்லி  இருக்கலாம், மொத்த  சொத்தும்  கைக்கு  வரும் .  இன்ஸ்டால்மெண்ட்ல  எதுக்கு  வசூல்  பண்ணிட்டு ?

 

3  ரெண்டேகால்  மணி  நேரம்  ஓடும்  படத்தில்  முதல்  25  நிமிசம்  வரும்  ஒரு சீரியல்  கொலை  கேஸ்க்கும் படத்தின்  மெயின் கதைக்கும்  சம்பந்தம்  இல்லை , சும்மா  டைவர்ட்  பண்ண   அந்தக்கதை. அது  இல்லாமயே  இன்னும் க்ரிப்பா  படம் தந்திருக்கலாம் . இந்த  விமர்சனத்தில்  நான்  அந்த  கதையை  ஓப்பன்  பண்ணலை

 

4  ஹீரோ – ஹீரோயின்  பிரிவதற்கான  காரணம்  வலுவாக  இல்லை . பின்  ஹீரோயின்  தன் தப்பை  2  வருடங்கள்  கழித்து  உணர்ந்ததா  க்ளைமாக்ஸ்ல  ஒரு சம்பவத்தோட சொல்லுது. அப்போவே வந்து  இணைஞ்சிருக்கலாமே? ஈகோனு சப்பைக்கட்டு  கட்றாங்க

 

சி.பி ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம் இன்வெஸ்டிகேஷன்  த்ரில்லர்  விரும்பிகளுக்கு இந்தப்படம்  பிடிக்கும் . நெட்  ஃபிளிக்சில்  கிடைக்குது. முதல்  25  நிமிசம்  ஸ்கிப்  பண்ணியே பார்க்கலாம்  ரேட்டிங்  3 / 5

 

3

Saturday, November 21, 2020

LUDO ( HINDI) –சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி க்ரைம் த்ரில்லர் )

 


LUDO ( HINDI) –சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி க்ரைம் த்ரில்லர் )

6 சிறுகதைகள் தனித்தனியாக சொல்லப்படாமல் கலந்து கட்டி சொல்லப்பட்டு ஒரே நேர்கோட்டில் ஐந்து கதைகளையும் இணைக்கும் திரைக்கதைதான் இந்த லூடோ . நெட் ஃபிளிக்சில் கிடைக்கிறது .ஹிந்தி , தெலுங்கு , தமிழ் என 3 மொழிகளில் கிடைக்குது
சம்பவம் 1 ஹீரோ ஒரு ரவுடி . பாஸ் சொல்லும் அடிதடி வேலைகளை எஸ் பாஸ்னு செஞ்சுட்டு வர்ற ஆள். ஒரு கட்டத்துல ஒரு கேஸ்ல மாட்டி 6 வருசம் ஜெயில் தண்டனை அனுபவிச்ட்டு வெளில வந்து பார்த்தா ஹீரோவோட சம்சாரம் வேற ஒரு ஆள் கூட குடித்தனம் பண்ணிக்கிட்டு இருக்காப்டி, அது கூட பரவால்லை , குழந்தைங்க கிட்டே அப்பா யார் என்கிற உண்மையை மறைச்சு தன் புது ஜோடியை அப்பாவா காட்டிடுது, ஏன்னா அப்பா ஜெயில் கைதின்னா கேவலம் அது போக தன் வண்டவாளம் தெரிஞ்சிடும்
ஹீரோவோட பாஸ் ஹீரோவோட சம்சாரத்தோட புது புருசனை கடத்திட்டுப்ப்போய் மிரட்றாப்டி. தன்னிடம் பழையபடி வேலைக்கு வரனும், இல்லைன்னா ஹீரோவோட சம்சாரத்தோட புது புருசனை போட்டுத்தள்ளிடுவேன்கறான்.அதுக்கும் மசியலைன்னா அடுத்த கட்டமா ஹீரோவோட சம்சாரம், குழந்தைகளையும் கடத்திடுவேன்னு மிரட்றாப்டி .ஹீரோ பாஸ்க்கு அடி பணிஞ்சாரா? என்ன செஞ்சார் என்பதை மிச்சக்கதை
சம்பவம் 2 இது வேற கதை . இந்தக்கதை ஹீரோ ஒரு ரெஸ்டாரண்ட்ல சர்வர் . இவருக்கு ஒரு முன்னாள் காதலி உண்டு. காதலிக்கு வசதியான ஆஃபர் வந்ததும் ஆண்டாண்டு காலமா பெண்கள் செய்யும் அதே சேஃப்டி சைடு எஸ்கேப் செஞ்சுடறாப்டி. இந்த மாதிரி காதலனுக்கு துரோகம் செய்யும் பெண்கள் வாழ்க்கைல ஆண்டவன் அல்லது விதி எதுனா தண்டனை கொடுப்பார் இல்லையா? அதன் படி நாயகியின் புருசன் வேற ஒரு கள்ளக்காதல் வெச்சிருக்காரு
ஒரு நாள் டவுட் வந்து நாயகி புருசனை ஃபாலோ பண்றா. முதல்ல கள்ளக்காதலி வீட்டுக்குப்போகும் புருசன் சம்சாரம் ஃபாலோ பண்றதைப்பார்த்து சுதாரிச்சு காரை டேக் டைவர்சன்னு திருப்பி நண்பன் வீட்டின் முன் காரை நிறுத்தறான். அந்த பேக்கு நாயகி பரவால்ல, நம்ம புருசன் நல்லவன் போல அப்டினு கிளம்பிடறா. அதுக்குப்பின் காரை அங்கேயே விட்டுட்டு புருசன் கள்ளக்காதலி வீட்டுக்குப்போறான்
காரை எங்கே போய் நிறுத்துனாரோ அந்த நண்பன் அன்று கொலை செய்யப்படறார். அதனால புருசன் அந்தக்கொலைக்கேசில் மாட்டிக்கறார்.
கொலைக்கேசில் இருந்து தப்பிக்க தன் மனைவி கிட்டே கள்ளக்காதலி விஷயம் உண்மைதான். அன்னைக்கு நான் அவ வீட்டில் தான் இருந்தேன். அவ அட்ரஸ் தர்றேன், அவ வந்து சாட்சி சொன்னாதான் நான் இந்தக்கேசில் இருந்து தப்பிக்க முடியும்கறான்
நாயகி உடனே தன் பாய் பெஸ்டியின் உதவியை நாடறா.அந்த இளிச்சவாய் பாய் பெஸ்டியும் உயிரைக்குடுத்து உதவறான்.
வெளீல வந்த புருசன் உனக்காக இவ்ளோ செய்யறானே உன் முன்னாள் காதலன் அதுக்கு பரிகாரமா , பிராயசித்தமா நீ அவனுக்கு என்ன செஞ்சே?னு கேட்கறான். அதுக்குப்பின் மனைவி எடுக்கும் முடிவு தான் க்ளைமாக்ஸ்
சம்பவம் 3 -முதல் சம்பவத்தில் ஹீரோ ஒரு பாஸ் கிட்டே அடியாளா வேலை செஞ்சார்னு சொன்னனே அந்த பாஸ் ஒரு விபத்தில் மாட்டி ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்கார் . அவரைப்பார்த்துக்கற நர்ஸ் மேல பாஸ்க்கு இன்சிடண்ட் லவ். அங்கே வரும் டாக்டர் நர்சை தனியா கூட்டிட்டுப்போய் சில்மிஷம் பண்ண அந்த பேசண்ட் நிலையிலும் பாஸ் அந்த டாக்டரை அடி பின்னி எடுக்கறார் . இதைப்பார்த்து நர்சுக்கும் பாஸ் மேல லவ் . இவங்க லவ் இறுதியில் என்ன ஆச்சு?
சம்பவம் 4 - பணத்துக்காக பலரும் அடிச்சுட்டு இருக்கும்போது எதிர்பாராத விதமா வேற ஒரு க்ரூப்புக்கு சொந்தமான பணப்பை ஒரு நர்சுக்கும், ஒரு இளைஞரனுக்கும் கிடைக்குது. அவங்களை ஒரு க்ரூப் துரத்துது . இவங்க வாழ்க்கைல நடந்தது என்ன?
சம்பவம்5 - ஒரு குழந்தை தன் பெற்றோர் தன்னை சரியா கவனிக்கறதில்லை , கண்டுக்கறதில்லைனு ஏங்குது . ஆக்சுவலா குழந்தையின் எதிர்காலம் கருதிதான் பணம் சேமிக்க அம்மாவும், அப்பாவும் ஓடி ஓடி உழைக்கறாங்க . அது பாப்பாவுக்கு புரியல. டி வி ல பார்த்த ஒரு காட்சி அது மனசுல ஆழ பதியுது / அதாவது குழந்தையைக்கடத்தி ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டுது . உடனே பதறிப்போன பெற்றோர் விழுந்தடிச்ட்டு குழந்தையைக்காப்பாத்த களம் இறங்கறாங்க . இதைப்பார்த்த அந்த பாப்பா நாமும் இதே போல் ஒரு கடத்தல் டிராமா போடலாம்னு நினைக்குது . இதுக்குப்பின் நடந்தது என்ன?
சம்பவம் 6 - காதலன் ஏழை. காதலிக்கு நல்ல பணக்கார ஆஃபர் கிடைச்சதும் காதலனைக்கழட்டி விட்டுட்டு மேரேஜுக்கு சம்ம்மதிக்கறா. மேரேஜுக்கு இன்னும் 5 நாட்கள்: தான் இருக்கு . அப்பதான் காதலன் ஒரு போர்ன் வெப்சைட்ல அவங்க 2 பேரும் அப்டி இப்டி இருந்த வீடியோ க்ளிப் அப்டேட்டப்பட்டிருப்பதைப்பார்க்கறான், காதலி கிட்டே சொல்லப்போனா அவன் பிளாக்மெயில் பண்ண ட்ரை பண்றதா தப்பா நினைக்கறா. பின் இருவரும் போலீஸ் கேஸ் ஃபைல் பண்ணப்போனா அவங்க எந்த ஹோட்டல்ல தப்பு செஞ்சாங்களோ அந்த ஹோட்டலைக்கண்டு பிடிச்சாதான் லாக் பண்ன முடியும்னு போலீஸ் சொல்லுது
உடனே அவங்க இதுவரை எந்த எஃந்த ஹோட்டல்ல எல்லாம் தப்பு செஞ்சாங்கனு ஒரு லிஸ்ட் எடுத்து அந்த ஹோட்டல்களுக்கெல்லாம் போய் கேமரா ஒளிச்சு வெச்சிருக்கா ங்களா?னு செக் பண்ண கிளம்பும் பயணம் நீண்டுக்கிட்டே போகுது , இந்தப்பயணத்தில் மறுபடி தப்பு பண்ணாங்களா? இல்லையா? மீண்டும் சேர்ந்தாங்களா? மாப்ளைக்கு விஷயம் தெரிஞ்சதா? என்பது எல்லாம் சஸ்பென்ஸ்




இதுல நமக்கு தெரிஞ்ச முகம்னு பார்த்தா அபிஷேக் பச்சன் தான் அவர் தான் மெயின் ஹீரோ. அருமையான நடிப்பு .மனைவி தனக்கு துரோகம் செய்ததை முக பாவனைகளாலேயே வலியை கடத்துவது கலக்கல் என்றால் அந்த குழந்தைக்கதையில் அவருடனான ஒட்டுதல் அபாரம். அந்த பேபி போர்ஷன் பெண்கள் கண்களை குளம் ஆக்கிடும்
அபிஷேக் பச்சனை விட அதிக காட்சிகள் வருவது அந்த பாய் பெஸ்டி கேரக்டர். அட்டகாசமான கேரக்டர் ஸ்கெட்ச், காதலி தனக்கு கிடைக்கலை , இனியும் கிடைக்க மாட்டா என்று தெரிந்தும் காதலிக்காக தன் வாழ்நாள் சேமிப்புப்பணத்தை தியாகம் செய்வது , உயிரை பணயம் வைத்து காதல்கியின் புருசனை ஜெயிலில் இருந்து காப்பாற்றுவது என ஏகப்பட்ட இடங்களில் இளைஞர்கள் மனதில் நங்கூரம் போட்டு அமர்கிறார். அ வரது ஹோட்டல் மெனு ஒப்பிக்கும் காட்சி கலக்கல் ரகம் என்றால் காதலியை வழி அனுப்பி விட்டு சோகமாக டான்ஸ் ஆடுவது அருமை
மூன்றவதா நம்மைக்கவர்பவர் பாஸ் தான். வில்லத்தனமான நடிப்பு ஒரு புறம் , நர்சுடனான காதல் ஒரு புறம் , பின்னி இருக்கிறார் நடிப்பில்.
4 வதா அந்த பாஸ் மனம் கவர்ந்த நர்ஸ் நடிப்பு . கூச்சப்படாதீங்க , நர்ஸ் எல்லாரும் அம்மா மாதிரி என்று சொல்பவர் அடுத்த 3 வது காட்சியிலேயே அவர் மீது காதலில் விழுவது அருமை
5வதா 6 வதா நம் மனம் கவர்பவர்கள் அந்த இளைஞன் கேரக்டர் , இன்னொரு நர்ஸ் கேரக்டர் . அந்த இளைஞன் செம பர்சனாலிட்டி
7 வதா நம் மனதைக்கவர்பவர் பாய் பெஸ்டியை உபயோகப்படுத்திக்கொள்ளும் நாயகி . முகத்தில் குற்ற உணர்ச்சி, ஆனா காரியவாதி கிட்டத்தட்ட உன்னை நினைத்து லைலா கேரக்டர் ஸ்கெட்ச். 8 வதா நம் மனம் கவர்பவர் அந்த குழந்தை/ சிறுமி. இயல்பான நடிப்பு
திரைக்க்தை பற்றி சிலாகிச்சே ஆகனும்., இதுக்கு திரைக்கதை அமைப்பது ரொம்ப சவாலானதே. அனாயசமா பண்ணி இருக்காங்க . கடைசி 20 நிமிடங்களை இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம். ஒளிப்பதிவு, இசை அருமை .
சி.பி ஃபைனல் கமெண்ட் - பெண்கள் செய்யும் துரோகங்கள் அதிகமாக காட்டப்படுவதால் இது ஆண்களுக்கு ரொம்ப பிடிக்கும், குறிப்பாக பெண்களால் வஞ்சிக்கப்படும்/பட்ட ஆண்களுக்கு ரொம்ப பிடிக்கும், பெண்கள் மனதை அந்த குழந்தை போர்சன் மட்டும் கவரும், நெட் ஃபிளிக்சில் காண்க . ரேட்டிங் 3 / 5




நச் வசனங்கள்
1 பாவ , புண்ணிய கணக்கெல்லாம் உண்மைதானா? புரிய மாட்டேங்குதே?
அப்போ கொரோனாவால உயிர் இழந்தவங்க எல்லாம் பாவம் செஞ்சவங்களா?
2 ஃபாரீன்ல எல்லாம் பசு பால் மட்டும் தான் தருது , நம்ம நாட்டில் மட்டும் தான் ஓட்டு வாங்கவும் யூஸ் ஆகுது
3 கோபத்தோட கலரும் சிவப்புதான் , காதலோட கலரும் சிவப்புதான்
4 குழந்தையோட எதிர்காலத்துக்காக ஓடிஓடி உழைப்பவர்கள் அவங்க நிகழ்காலத்தை இழந்துடறாங்க
5 ஆர்டினரியா இருக்கறவங்களை இந்த உலகம் கண்டுக்காது , எக்ஸ்ட்ரா ஆர்டினரியா இருக்கறவன் தான் இந்த சமூகத்தால் உற்று கவனிக்கப்படுவான்
6 இவனோட கனவுகள் பெருசு , ஆனா பர்ஸ் சிறுசு
7 யூ ஆர் நாட் எ ஃபோட்டோஜெனிக் ஃபிகர்
யூ மீன்ஸ்?
நேர்ல ரொம்ப அழகா இருக்கீங்க
8 சேர்த்து வைக்கற அளவுக்கு என் கிட்டே சொத்தும் இல்லை , கடன் வாங்கற அளவுக்கு பற்றாக்குறையும் இல்லை
9 இந்த கிட்நாப்ல எனக்கு ஏதும் தொடர்பு இருக்குமா?னு போலீஸ் என் மேல சந்தேகப்படுது
ஏன்?
லெட்டர்ல சைன் என்னுது போலவே இருக்காம்
அப்போ லெட்டரை எழுதுனது யாரு?
ஹிஹி நான் தான்
10 உன்னை ஏன் கல்யாணம் பண்ண முடியாதுன்னா ப்ராப்ளம் நீ பணக்காரன் இல்லை என்பதால் இல்லை , உன்னால என்னைக்குமே பணக்காரன் ஆக முடியாது என்பதுதான்
12 ஏழை கிட்டே பணம் இல்லை , பணக்காரன் கிட்டே நிம்மதி இல்லை
13 சில உறவுகளுக்கு லாஜிக் கிடையாது ப், ஒன்லி மேஜிக்
14 யானை சறுக்கி விழுந்தா எலி கூட ஏறி செய்யுமாம்
15 ஆபத்துக்காலத்துல எவன் உன் கூடவே இருக்கானோ அவனை கெட்டியா பிடிச்சுக்கோ
16 உன் புருசனைக்காப்பாத்தனும்னு நீதானே சொன்னே? நீ எது சொன்னாலும் நான் செய்வேன்னு உனக்கு தெரியாதா?
நீ ஒரு எமோஷனல் ஃபூல்
17 மிஸ்1 அவன் உங்க பாய் ஃபிரண்டா? கணவனா? அப்பாவா?
அது நான் குடிக்கற சரக்கைப்பொறுத்தது
18 யூ ஆர் மாஸ்டர் ஆஃப் ஆர்ட் ஆஃப் லீவிங். கழட்டி விட்டுட்டுப்போறதுல மன்னி ( மன்னன் பெண்பால்)
19 ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் ஒரு பிசாசு ஒளிஞ்சிட்டு இருக்கும், நேரம் வரும்போது தன்னை வெளிப்படுத்திக்கும்

Tuesday, November 17, 2020

பிஸ்கோத் – சினிமா விமர்சனம்

பிஸ்கோத் – சினிமா விமர்சனம்

 

தமிழ்  சினிமா  உலகில்  காமெடியனாக  இருந்து  ஹீரோ ஆன  சோ  முகமது பின் துக்ளக் ல  ஹீரோவாக  செம  ஹிட் படம்  கொடுத்தார். அது அவரே  கதை வசனம்  எழுதிய  நாடகம், நாகேஷ்   கே பாலச்சந்தர்  டைரக்சன்ல   நீர்க்குமிழி , சர்வர்  சுந்தரம்  என   ஜெயித்தார்.   சுருளிராஜன்  மாந்தோப்புக்கிளியே மெகா  ஹிட் கொடுத்தார். சந்திரபாபு  மாடி  வீட்டு ஏழை  என  சொந்தப்படம்  எடுத்து  கையைச்சுட்டுக்கிட்டார். (  நாடோடி  மன்னன்  ல காமெடி  டிராக்ல  நடிக்க  கால்ஷீட்  தராம  எம் ஜி ஆரை  இழுக்கடிச்சதுக்கு  டிட்  ஃபார் டாட்டா  இந்தப்படத்துல  கால்ஷீட் தராம எம் ஜி ஆர்  அலைய வெச்சார்)

 

 ஒரு நீண்ட  இடைவெளிக்குப்பின்  கவுண்டமணி   பணம்  பத்தும்  செய்யும்    ஜெயிச்சார்  ஹீரோவா . ஆனா  பிறந்தேன்  வளர்ந்தேன் அட்டர் ஃபிளாப். விவேக்  ஹீரோவா  நடிச்ச  வெள்ளைப்பூக்கள்  மீடியம்  ஹிட் த்ரில்லர். வடிவேலு  23ம்  புலிகேசியில்  ஜெயிச்சார். இந்திர    லோகத்தில்    நா  அழகப்பன்  ல தோற்றார். தொடர்ந்து  எலி  கூட காப்பாத்தலை .


செந்தில்  கிழக்கு  ஆப்பிரிக்காவில்  ஷீலா  வில் மீடியமா  ஜெயிச்சார். யோகிபாபுக்கு பெருசா  கூர்க்கா கை கொடுக்கல



சந்தானம் கே  பாக்யராஜ்  இயக்கிய  இன்று போய் நாளை  வா  வை அட்லீ  ஒர்க் பண்ணி  பிறகு  பிரச்சனை  ஆகி  செட்டில்மெண்ட்  பண்ணி  ஜெயிச்சார்.அதுக்குப்பின் இனிமே இப்படித்தான்  ஓடலை . தில்லுக்கு  துட்டு  மீடியம் ஹிட் 


இப்போ  பிஸ்கோத்  விமர்சனத்துக்கு  வருவோம். இந்தக்கதைக்கு  ஆக்சுவலா  பாட்டி சுட்ட  பக்குவமான  வடைகள்னு டைட்டில்  வெச்சிருக்கலாம், ஏவி எம்மின்  பாட்டி  சொல்லை  தட்டாதே  மாதிரி  ஹிட்  ஆக்கி இருக்கலாம்


பொதுவா  சந்தானம்  கிட்டே  என்ன பிரச்சனைன்னா  இவர்   கிட்டே  ஜனங்க  எதிர்பார்ப்பது  ஒன் லைனர்  பஞ்ச் , காமெடி  கவுண்ட் டவுன். ஒரு கல் ஒரு கண்ணாடில  கிட்டத்தட்ட 107    காமெடி  டயலாக்ஸ்  பேசி  ஹீரோ  மாதிரி நல்லா  பண்ணி  இருந்தார். ஆனா  நிஜமா இவர்  ஹீரோவா  நடிக்கும்போது  ஆக்சன்  ஹீரோவா , நாயகி  கூட  டூயட்  பாடும்  மாமூல்  மசாலா  ஹீரோவா  தன்னை  பிரமோட்  பண்ணிக்க  நினைக்கறார். அது  சரியா  ஒர்க் அவுட்  ஆக மாட்டேங்குது 


படத்தோட கதை  என்ன?னு பார்க்கும் முன் இது எங்கே இருந்து  உருவி இருக்காங்கனு பார்ப்போம். 2008ல்  ஹாலிவுட்டில் ரிலீஸ்  ஆன  பெட்  டைம்  ஸ்டோரீஸ்  ல இருந்து  ஒரு 80%  உருவி இருக்காங்க 



ஹீரோவோட  அப்பா  பிஸ்கெட்  கம்பெனி  ஓனர். அவரோட  பார்ட்னர்  அந்தக்கம்பெனியை  நைசா  ஆட்டையைப்போட்டுடறார். அந்தக்கம்பெனிலயே சூப்பர்  வைசரா  வேலை பார்க்கும்  ஹீரோ  அந்த கமெப்னிக்கு   ஜி எம்  ஆனாரா? இல்லையா? என்பதுதான்  கதை . 


அடிக்கடி  அநாதை  ஆசிரமம்  போகும் வழக்கம்  உள்ள  ஹீரோ  அங்கே  ஒரு பாட்டி சொல்லும் கதைகள்  நிஜ  வாழ்வில்  நடப்பதைக்கண்டு பிடிக்கறார்


ச்ந்தானம்  ஹீரோவா  தட்டுத்தடுமாறி  பண்ணி இருக்கார் .  ஆடுகள்ம  நரேன்  அப்பா  ரோல்.  கொஞ்ச நேரம் தான். ஆனந்தராஜ் தான் பார்ட்னர். அவர்  பெரிய அளவில்  வில்லத்தனம்  ஏதும் பண்ணலை 


 2  ஹீரோயின்கள் தாரா  அலிசா .ஸ்வாதி  முப்பலா . ரெண்டுமே சுமார்  ரகம் தான். வாய்ப்பும் அதிகம் இல்லை  பாட்டியாக  வரும் சவுகார்  ஜானகி  தெளிவான குரலில் கதை சொல்றார்

ஒளிப்பதிவு , இசை , எடிட்டிங்  எல்லாம் சொல்லிக்கொள்ளும் அளவு சிலாகிக்கும் அளவு இல்லை 

 நச்   டயலாக்ஸ் 

1        நாம  எதைக்கொடுக்கறோம்கறது  முக்கியம்  இல்லை , கொடுக்கனும்கற  மனசுதான்  முக்கியம்

2        கொசு ( பேபி) = என்னை  வரவேற்கவா  இவங்க  கை தட்றாங்க?

கொசு(அப்பா) = உன்னை  சாகடிக்க  ட்ரை  பண்ணி  இருக்காங்க . இந்த  உலகத்துல யாரையும்  நம்பக்கூடாது

 

3        பல்  வலி  பொறுக்க முடியல

 பல் வலிக்கும்போது  ஏன்  பொறுக்கப்போறே? ஓரமா உக்காந்து ரெஸ்ட் எடுக்கலாமில்ல?  ( 1982  சாவி வார இதழ்  உ ராஜாஜி ஜோக்)

 

4        இது  ஜட்டியா  ? ஜல்லடைக்கரண்டியா? இத்தனை  ஓட்டை  இருக்கு ?

 

5        பாட்டி , என்ன  பண்ணிட்டு  இருக்கீங்க?

 

 பேரனுக்கு  கதை  சொல்,லிட்டு இருக்கேன்

 

 பேரனா? இங்கே  யாருமே  இல்லையே?

 

 அவந்தான்  இறந்துட்டானே?

 

6        இந்தக்கதைல  ராஜா  இல்லையா?

 அவன்  உண்மைல  ராஜா  ஆக வேண்டியவன் தான், ஆனா “தளபதி”யா  இருக்கான்   (  குறியீடு – ஸ்டாலினுக்கா? இளைய தளபதிக்கா?)

 

7        கட்டப்பா

 ச்சீ , இதெல்லாம் ஒரு கெட்டப்பா?

 

8        எப்பவும்  சாயங்காலம்  விளக்கு வைக்கற  டைம்ல  இவர்  பொண்ணு  வீட்டுக்கு வந்துடுவா, ஆனா  இன்னும் வர்லை

 இதுக்கா  மெனக்கெட்டு  என்னைக்கூப்பிட்டீங்க, ? உங்க  பொண்ணு  வந்த  பின்   விளக்கு  வெச்சா போச்சு

 

9        க்டத்துன  பொண்ணை  10  நிமிசத்துல  கூட்டிட்டு  வர்றோம்

 அப்போ  மீனம்பாக்கம்லதானே  இருக்கீங்க?

 

பாஸ், கரெக்டா  நம்ம  லொக்கேஷனை  கண்டு பிடிச்ட்டான்

 

 

10    கோழில  இருந்து  முட்டை  வந்ததா? முட்டைல  இருந்து  கோழி  வந்ததா?

 நாமக்கல் பண்ணைல  இருந்து  வந்தது  ( 2001  தினமணி  சிறுவர்  மணி  வெ  சீதாராமன்    ஜோக் )

 

11    அடிக்கற  காத்துல  காகிதமும்  பறக்கும், பறவையும்  பரக்கும், காத்து  நின்னாதான்  எது  பறவை? எது  காகிதம்?னு தெரிய  வரும்  ( அரதப்பழசு)

12    அது  சாதா  புக்  இல்லை

 பின்னே? பைண்டிங் பண்ண  புக்கா?

 

13    கன்னத்தில் முத்தம்  கொடுத்தா  வெறும் ஃபிரண்ட் தான், உதட்டுல  கொடுத்தாதான்  பாய் ஃபிரண்டாம்

 அப்டியா? 2ம் பக்கத்து  பக்கத்துல  தானே  இருக்கு ? அட்ஜஸ் பண்ணி  கொடுத்திடுங்களேன்

 

14    ஆதரவே  இல்லாதவங்களுக்காகத்தான்  அனாதை  இல்லைம், அதையும் நாம இடிச்சுட்டா  அவங்க  என்ன  செய்வாங்க?

 நானே  உன் மேல  இரக்கப்பட்டுதான்  போஸ்ட்  குடுத்திருக்கேன், நீ அவங்க  மேல  இரக்கப்படறியா?

 

லாஜிக்  மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில  நெருடல்கள்

 

1  ஐஸ்க்ரீம்  வியாபாரம்  செய்யலாமா?  என  ஒரு பேச்சு  வரும்போது  அது  தொண்டைக்கு கெடுதல்னு டயலாக்  வருது , ஆனா  பிஸ்கெட்  கூட  மைதால , அஸ்கா  சர்க்கரைல  செய்யறதால  அதுவும்தானே  கெடுதல்/ அதை  மட்டும்  செய்யலாமா?


2  பாகுபலி , 300  பருத்தி  வீரர்கள்  படங்களை  ஸ்பூஃப்  பண்ணுனது  சரியா  ஒர்க் அவுட்  ஆகலை.


3   ஒரு கம்பெனில  வேலை செய்யற  ஹீரோ , வில்லன்  இருவரும்    யார்  அதிக  டேலண்ட்? அது ஏன்  ஓனருக்கு  புரியல  என்பதற்கான  காட்சி அமைப்புகள்  சரியா  சிங்க்  ஆகலை 


4  நான்  கடவுள்  மொட்டை  ராஜேந்திரன், கிரேன் மனோகர்  இருவரையும்  சந்தானம் ஏதோ எடுபுடி  மாதிரி  தான் ட்ரீட்  பண்றார் , கவுண்டமணி  கூட என்ன தான் செந்திலை  அடிச்சாலும் , உதைச்சாலும் செந்திலை பர்ஃபார்மென்ஸ் பண்ண விடுவார் . சந்தானம்  மனதளவில்  கமல்  மாதிரி  தான் மட்டும் தான் திரையில்  ஜொலிக்கனும்னு நினைக்கறார்


5  ஹீரோ -  ஹீரோயின்  இருவருக்குமான  கெமிஸ்ட்ரி  ஒர்க் அவுட்  ஆகலை 


6    பாட்டியை  நைசா  ஊருல  விட்டுட்டு வர்ற  காட்சி  2019ல் தினமல்ர்    டி வி ஆர் நினைவு சிறுகதைப்போட்டியில்  கலந்து  கொண்ட  இளவல்  ஹரிகரன்  தன் மனைவி  பெயரில்  எழுதிய  சிறுகதையை  தழுவி  அமைக்கப்பட்டிருக்கிறது 


சி.பி ஃபைனல்  கமெண்ட் =  தியேட்டருக்குப்போய் 100  ரூபா  கொடுத்துப்பார்க்கும் அளவு  ஒர்த் இல்லாத  சுமார் ரகப்படம், டிவி  ல காமெடி  க்ளிப்பிங்க்ஸ்ல  பார்த்தா  போதும் . எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன்  மார்க் 39 .  குமுதம்  ரேங்கிங்க்  - சுமார்  .. அட்ரா சக்க ரேட்டிங்  1.75 / 5