Wednesday, October 21, 2020

UNARU (1984) -மலையாளம்- சினிமா விமர்சனம் ( எ மணிரத்னம் ஃபிலிம்)

 



மணிரத்னம்  இயக்கிய  முதல்  படமான   பல்லவி அனுபல்லவி சிறந்த  திரைக்கதைக்கான  விருது  வாங்கியதும்  கேரளாவைத்தேர்ந்த  திரு  ஜான்  மலையாளத்தில்   ஒரு படம்  இயக்கக்கேட்டுக்கொண்டார்.  1982ல்  ரிலீஸ்  மெகா ஹிட்டான ஈநாடு மலையாளப்பட தயாரிப்பாளர் இவர் ஆனா திவ்யா   என்ற டைட்டிலில்  ஒரு காதல்  கதையை  ரெடி பண்ணி  வெச்சிருந்ததால்  மலையாளப்பட வாய்ப்பை  ஏற்க  தயங்கினார். ( அதுதான் பின்னாளில்  மவுனராகம்.) ஆனால்  அவரை  சம்மதிக்க வைத்து  ஒரு கம்யூனிசம்  பேசும்  பொலிட்டிக்கல்  டிராமாவாக  படம்  எடுக்க  முன் வந்தார் 


1984 ல் ரிலீஸ்  ஆன கொம்பேறி மூக்கன் என்ற  படத்தில்  ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் எனும் சூப்பர்  ஹிட் பாடல்   இளையாராஜா  இசை   அமைத்தாரே  அதே  மெட்டில்  அப்படியே இந்தப்படத்திலும்  இளையராஜா  மெட்டமைத்திருப்பார்  ஒரு பாடலுக்கு 


ஹீரோ   வேலை  தேடி வர்றார். தொழிற்சங்கம் ல மெம்பரா  இருந்தாதான் இங்கே வேலைனு சொல்றாங்க . அந்த  காலகட்டத்துல கேரளாவில் தொழிற்சங்கம்  2  பிரிவுக்ளாக  இயங்கி வந்தது.  அந்த 2 ல்  ஏதோ ஒன்றில் மெம்பராக  இருந்தால்  தான் வேலை  கிடைக்கும்


ப்ல  பக்கம்  போராடியும்  ஹீரோவுக்கு வேலை  கிடைக்கலை . 5000  ரூபா  பணம்  கேட்கறாங்க .  பவுன் விலையோடு ஒப்பிடும்போது இது 1 லட்சம் ரூபாய்க்கு சமம் , ஹீரோ  தனக்குத்தெரிந்தவர்களிடம்  முறையிட   சிலர்  ஒண்ணு  கூடி  தனியா  ஒரு சங்கம்  ஆரம்பிக்கறாங்க 


அந்த  சங்கத்துக்கு  ஒரு தலைவர்  தேர்ந்தெடுக்கப்படறார். அவர்  ஜட்ஜ் ஐய்யா குமாரசாமி மாதிரி  பணத்துக்கு விலை போகிறார். பணத்தை வாங்கிக்கிட்டு தொழிலாளர்களுக்கு எதிரா  நடந்துக்கறார். இது தெரியாத  ஹீரோ தலைவன் மேல் ரொம்ப மரியாதை வெச்சிருக்கார் ( பின்னாளில்  இதே கேரக்டரை  மணிரத்னம்  தனது  பகல்  நிலவு படத்தில் அப்பாவியாக ஏமாறும் நாயகனாக முரளியையும், வஞ்சக  தலைவனாக சத்யராஜையும் படைத்தார் )


இந்த  கம்யூனிச  புரட்சி   போராட்ட்டங்கள்  ஒரு   பக்கம்  போய்க்கிட்டு இருக்க ஹீரோ ஒரு பெண்ணை லவ்வறார். சக  தொழிலாளியின் தங்கை. ஆனா  எப்போப்பாரு போராட்டம்,அடிதடி , சண்டை   என இருக்கும் ஹீரோவுக்கு பொண்ணு தர  அவருக்கு விருப்ப்ம் இல்லை 


இதுக்குப்பின் என்ன ஆச்சு?  என்பதை  யூ ட்யூப்பில் கண்டு மகிழ்க 



ஹீரொவா மோகன் லால் . ஹீரோவா  படத்தில் வராம கதையின் நாயகனா  வந்திருப்பார். திரைக்கதை  இவரைச்சுற்றி வராது. அண்டர் ப்ளே ஆக்டிங்


 ஹீரோயினாக சபீதா  ஆனந்த். இவர்  ஒரு பாவமான  முகத்துக்கு  சொந்தக்காரர் . பொதுவா  நாயகிகளைப்பார்த்தா  நமக்கு சைட் அடிக்கும் ஆசை வரும், ஆனா இவரைப்பார்த்தா  மட்டும்  பரிதாபமா  இருக்கும் , ஏன்னு தெரியல 


படம் பூரா  யாராவது ஏதாவது பேசிக்கிட்டே  இருக்காங்க , லியாகத் அலிகான் கூட இவ்ளோ வசனம் எழுதலை


இது  பெண்களுக்குப்பிடிப்பது மிக சிரமம், மணிரத்னம்  ரசிகர்கள்  அவரது  வழக்கமான  பாணி  படத்தை  எதிர்பார்த்து ஏமாற வேண்டாம், மழை , குதிரை , ரயில்  எல்லாம்  இதில் கிடையாது 


சி.பி ஃபைனல் கமெண்ட் - . இளையராஜாவின் பின்னணி  இசை  படத்துக்கு பிளஸ்  தான்  என்றாலும் மணிரத்ன மேஜிக் இல்லாதது  ஏமாற்றம்.  இந்தப்படத்தை  அந்தக்கால  வாகை சந்திரசேகர் , விஜயகாந்த்  வகையறாக்களை   வைத்து  தமிழில்  எடுத்திருந்தால்  சுமாரா  போய் இருக்கும்,  ஆனா மலையாளத்தில் இது ஃபெய்லியர் படம் , ரேட்டிங்  2 / 5 


Unaru
Unaru poster.jpg
Theatrical release poster
Directed byMani Ratnam
Produced byN. G. John
Written byT. Damodaran
StarringMohanlal
Sukumaran
Ratheesh
Sabitha Anand
Music byIlaiyaraaja
CinematographyRamachandra Babu
Edited byB. Lenin
Production
company
Geo Movie Production
Release date
  • 14 April 1984
Running time
150 minutes[1]
CountryIndia
LanguageMalayalam

0 comments: