Saturday, October 10, 2020

நிழல்கள்(1980) - சினிமா விமர்சனம் ( பாரதிராஜா + மணிவண்ணன்)

 


வெற்றி பெற்ற  ஒரு படைப்பாளனின்  ஜனரஞ்சக வெற்றிப்படத்தில்  நாம் கற்றுக்கொள்ள  , ரசிக்க எத்தனை  விஷயங்கள்  இருக்கிறதோ அதற்கு சற்றும் குறைவில்லாமல்  ஜனரஞ்சக  ரீதியாக  தோல்வியை சந்தித்த  படத்திலும் இருப்பது  ஆச்சரியமான விஷயம்தான்.,தொடர்ந்து  5  வெற்றிப்படங்களைத்தந்த  இயக்குநர்  பாரதிராஜா  தந்த  முதல்  தோல்விப்படம்  இது . பதினாறு  வயதினிலே ( 1977), சிகப்பு ரோஜாக்கள் ( 1978) , கிழக்கே  போகும் ரயில் (1978) , புதிய  வார்ப்புகள்  (1979), நிறம் மாறாத  பூக்கள் (1979)  என்ற பட்டியலில்  இயக்குநர்  கே பாக்யராஜ்  அவருக்கு  உதவி உ= இயக்குநராக , வசனகர்த்தாவாக  பணி  ஆற்றியது  கண்  கூடு. கே  பா இல்லாமல்  பாரதிராஜ இயக்கிய  முதல்  படம்  இது  . அதனால்தான்  தோல்வி என்று அந்தக்காலத்தில்  பேசினர்


 இயக்குநர்  மணிவண்ணன்  கதை , வசனத்தில்  மிகுந்த  நம்பிக்கை  கொண்ட  பாரதிராஜா  இதில் சறுக்கினாலும்  , மீண்டும்  இதே  மணிவண்ணனின்  கதை  வ்சனத்தில்  அலைகள்  ஓய்வதில்லை  எனும்  வெள்ளி  விழாக்காவியத்தைத்தந்தது  வரலாறு 


1980  தீபாவளிக்கு  பல படங்கள்  வந்தாலும்  கே பாலச்சந்தரின்  வறுமையின் நிறம்  சிகப்பு , நிழல்கள்  இரண்டும்   ஒரே நாளில்  கிட்டத்தட்ட  ஒரே  கதை  அம்சத்துடன்  வந்த  படங்கள் , இதில்    கே பா   வெற்றி , பா,ராஜா தோல்வி 


இந்தப்படத்துக்குஇன்னொரு  சிறப்பு உண்டு . வைரமுத்து +  பாரதிராஜா  கூட்டணி  இதில் தான்  ஆரம்பம். தீபன்  சக்ரவர்த்தி  இதில் அறிமுகம். ஒளிப்பதிவாலர் கண்ணன்  இதில்  பாரதிராஜாவுடன்  இணைகிறார்  ( நான்  படப்பிடிக்கு  என் கண்களை  எடுத்து  செல்வதில்லை . கண்ணனின் இரு கண்களைத்தான்  அழைத்துச்செல்கிறேந்பா.ரா) 

படத்தோட  கதை  என்ன?   எம் ஏ  இங்க்லீஷ்  லிட்டரேச்சர்  படிச்சு  முடிச்சிருந்தாலும்  வேலை  கிடைக்காத விரக்தியில்  இருக்கும்  இளைஞாகவும், சமூகத்தில்  மேல்  மிகவும்  கோபம் உள்ள  இளஞனாகவும்  இருக்கும்  நிழல்கள்  ரவி ,  இன்றில்லச விட்டாலும் என்றாவது ஒரு நாள்  தமிழகம் போற்றும் இசை  அமைப்பாளராக  உருவாகி விடுவேன் என்ற  நம்பிக்கையில் இருக்கும்  சந்திரசேகர் ,  சராசரி  மனிதர்கள்  வாழ்வது  போல்  வாழாமல் வித்தியாசமாக  வாழ  ஆசைப்படும் கல்லூரி  மாணவன்  ராஜசேகரன்  , ஒரு மிடில்  கிளாஸ்  ஃபேமிலி  யில்  இருக்கும்  மகளாக  ரேணுகா  இவங்க  4 பேரைச்சுற்றி  நடக்கும்  கதை  தான்  இது 


நிழல்கள்  ரவி  ஹீரோயினுக்கு  வீட்டுக்கே  வந்து  ட்யூஷன்  எடுக்கும்  ஆளாக  வந்து  ஆரம்பத்தில்  அவரது  வெறுப்பை , தவறான  புரிதலை சம்பாதித்து  பின் பரஸ்பரம் காதலிக்கும் கேரக்டர்


ராஜசேகரன் தன்னிடம்   நட்பாகப்பழகிய  ரேணுகாவை  காதல்  என  தவறாகப்புரிந்து  கொள்லும்  கேரக்டர் 


 சந்திர சேகர்  இந்த  ஆட்டத்துக்கே  வராம  தனி ஆவர்த்தனம்  செய்யும்  கேரக்டர் 


இந்த  4   பேரில்  முக்கியமாக சொல்ல  வேண்டியது  நாயகியின் தோற்றமும், நடிப்பும்.  குடும்பப்பாங்கான  முகம், இயற்கையான நடிப்பு . இன்னொரு ரேவதியாகவோ , சுஹாசினியாகவோ , நதியாவாகவோ  கண்ணியமான  கதாநாயகியாய்  வந்திருக்க  வேண்டியவர்  காலத்தின்  கோலத்தால்  சினிமாவில்  தொடராமல்  பரத  நாட்டிய  ஆசிரியையாக  மாறி விட்டாராம்


ராஜசேகரன்  கிட்ட்டத்தட்ட  வைரமுத்துவின்  ஹேர் ஸ்டைல் , மோகனின்  முகச்சாயல்  கொண்டு  நல்லா  நடிச்சிருக்கார் 


சந்திர  சேகர்   வழக்கம்  போல்  யதார்த்தமான  நடிப்பு 


ஜனக்ராஜ்  இதில்   வில்லனாக  வருகிறார். காஜா  ஷெரீப்  கவனிக்க வைக்கும் ரோல் 

சபாஷ்  டைரக்டர் 



1  இது ஒரு பொன்மாலைப்பொழுது  பாடல்  படமாக்கப்பட்ட  விதம் கவிதை பூங்கதவே  தாழ்  திறவாய்  மறக்கவே முடியாத  பாடல் . . மடை  திறந்து  பாட்டு  ஒரு உற்சாக  ஊற்று 


2  நிழல்கள் - ரவி - ரேணுகா  காதல்  வெளிப்படுத்தும் விதம் , அதைத்தொடர்ந்த  காதல்  காட்சிகள்  கண்ணியம்  கலந்த  கவிதை 


3   சமூக  அவலங்களை  மணிவண்னனின்  கம்யூனிச  பார்வையில்  சொன்ன விதம் 


நச்  டயலாக்ஸ்


1   எதை  அடையப்போறோம், எப்படி  அடையப்போறோம்னு ஒரு இலக்குடன் பயணிச்சா  நம்மா  வெற்றி நிச்சயம் 


2 பெத்தவங்க  பிரச்ச்னையையே தீர்க்க முடியாத  நம நாட்டின் பிரச்சனையை  எப்படி தீர்க்கப்போறோம்?


3   என்  உலகம்  உங்களுக்குப்புரியாது ப், அது  தனி


 உன்னையே  எங்களால  புரிஞ்சுக்க  முடியாத  போது  உன் உலகத்தை  எப்படி புரிஞ்சுக்க? 


4  உறக்கம் இல்லாத  இரவுகள் , இரக்கம் இல்லாத  இரவுகள்


5   அடி வயத்துல  அடுப்பு  எரிஞ்சாலும், அடுத்தவங்க  காசுக்கு  ஆசைப்படாத  ஜாதி சார் நாங்க 


6  வேலை  கிடைக்காத  எல்லாருமே  ஆத்திரப்பட்டா  உலகில்  கண்னாடி ஜன்னலே  யாரும்  வைக்க  முடியாது 


7   பெத்தவங்களை  சந்தோஷப்படுத்தினா மத்ததெல்லாம்  தன்னால  சரி  ஆகிடும்


8   நீ  என் பிரதி  பிம்பம், உன் கிட்டே  பேசறது  என் கிட்டே  நானே  பேசுவது  மாதிரி ‘


9   மாத்தி  மாத்தி  நீங்க  2 பேரும்  பேசுவதால்  என்  மன்சை  மாத்திட முடியாது 



லாஜிக்  மிஸ்டேக்ஸ், திரைக்கதையில்  சில  நெருடல்கள்


1    படத்தில்  முக்கியமான  கேரக்டர்கள் எல்லாமே  நெகடிவான  முடிவை  அடைவது  பார்வையாளர்களால்  ஏத்துக்கவே முடியாது . அட்லீஸ்ட்  அஞ்சு  பேரில்  மூன்று  பேருக்கு  நெகடிவ்  முடிவு , 2 பேருக்கு  பாசிட்டிவ் முடிவு என காட்டி இருக்கலாம்


2   பாரதிராஜாவின்  கவித்துவம் வாய்ந்த  காதல்  ரசனை  , மணிவண்ணனின்   கம்யூனிச  சித்தாந்தங்கள்  கரெக்டான  அளவில்  மிக்ஸ்  ஆகலை . படத்தின்  கதை  முன்னிறுத்துவது  காதலையா? புரட்சியையா? என்ற  குழப்பம்


3   தான்  விரும்பிய  காதலி  தனக்குக்கிடைக்க வில்லை  என்றதும்  ரேப்  பண்ணத்துணியும்  கேரக்டரை  ஏத்துக்க  முடியலை .அதுவும்  அந்தக்காலத்தில்   அது   அசாத்தியம் 


4  ஒரு  பெண்ணுக்கு  ஒரு ஆணின்  பார்வை  துல்லியமாக  தெரிந்து  விடும்  , நாயகிக்கு  ராஜசேகரன்  தன்னைக்காதலிப்பது  கடைசி  வரை தெரியாது  என்பது  ஏத்துக்க முடியல 



  சி.பி  ஃபைனல்  கமெண்ட் -  பாரதிராஜாவின்  ரசிகர்கள்  தாராளமாகப்பார்க்கலாம்.  க்ளைமாக்ஸ்  மட்டும்  ஜீரணிக்கக்கொஞ்சம் கஷ்டமா  இருந்தாலும் இது  கவனிக்கத்தக்க  ஒரு படைப்பே . ரேட்டிங் 2. 75 / 5 




0 comments: