Wednesday, October 07, 2020

கிழக்கே போகும் ரயில் (1978)– சினிமா விமர்சனம் ( கிராமியக்காதல்)


16  வயதினிலே  எனும்  கிராமியப்படம்  தமிழ்  சினிமாவையே ஒரு புரட்டு புரட்டியது. ஆனந்த விகடன் வரலாற்றிலேயே  அதிக  மதிப்பெண்  அளிக்கப்பட்ட படம்  என்னும் அந்தஸ்தை  படம் ரிலீஸ்  ஆகி இத்தனை  வருடங்கள்  ஆகியும் தக்க வைத்துக்கொண்ட படம் அது.( 61.5 /100  அப்பேர்ப்பட்ட  மெகா ஹிட்  படம்  கொடுத்தவரின்  அடுத்த  படத்துக்கு எந்த  அளவுக்கு  எதிர்பார்ப்பு  இருந்திருக்கும்?


 பாரதிராஜா + கே பாக்யராஜ் இவர்களின் காம்போவில்   வந்த  மெகா ஹிட்  படம் இது, இப்போதான்  யூ ட்யூப் ல  பார்க்கிறேன். கதைனு  பெருசா  எதுவுமில்லைன்னாலும் கிராமத்து கலாச்சாரம் , அவங்க  நம்பிக்கைகள் , மூட நம்பிக்கைகள்  இவற்றை எல்லாம்  கண் முன்  நிறுத்தியதும் , இளையராஜாவின் சூப்பர்  ஹிட்   பாடல்களும்  தான்  படத்தை  செம  ஓட்டம் ஓட வெச்சிருக்கு போல

 

ஹீரோ ஒரு கவிஞர் . கிராமத்துல  இருக்கார் .வேலை  எதுக்கும் போற்தில்லை . வெட்டியாதான் இருக்கார்

 

 ஹீரோயின்  அந்த  ஊருக்கு  சொந்தக்காரரைப்பார்க்க  வருது . ஹீரோவோட அப்பா  தண்ணி  தெளிச்சு  விட்டுடறதால  ஹீரோ  கோவிச்ட்டு  வீட்டை விட்டு வெள்ல  வந்து  தனியா  ஊருக்கு ஒதுக்குப்புறமா  இருக்கார் .,  ஹீரோவோட தங்கை  மன்சு  கேட்காம  தூக்குப்போசில  அண்ணனுக்கு  சாப்பாடு  கொடுத்து  விடறார்.  அதைக்கொண்டு வரும்  நாயகிக்கும், நாயகனுக்கும் காதல்

 

ஹீரோ ஹீரோயின்  அறிமுகம்,  அவங்க  காதல் ,  பழக்கம்  இதை  வெச்சே  பாதிப்படம்  ஓடிடுது

 

 ஊர்  மக்களுக்கு  விஷயம்  தெரிய  வந்ததும்  ஹீரோவுக்கு  மொட்டை  அடிச்சு  விட்டுறாங்க . நான் ஒரு பெரிய  ஆளாகி  திரும்ப  வந்து  உன்னைக்கூட்டிட்டுப்போறேன்  என  ஹீரோ ஹீரோயின் கிட்டே   வாக்கு  கொடுத்துட்டு   பட்டணம்  போய்டறார்

 

பின்னாளில்  கே பாக்யராஜ்  ஹீரோவாக  நடித்து  கதை  வசனம்  எழுதிய  புதிய  வார்ப்புகள்  படக்கதையும் கிட்டத்தட்ட 60%  இதே கதை  தான். அதுவும் பாரதிராஜா இயக்கம்,  நம்ம  மக்களின்  ஞாபக  சக்தியை நினைச்சா  பெருமையா இருக்கு  

காதலர்கள்  இணைந்தார்களா? இல்லையா? என்பதே  க்ளைமாக்ஸ்

 

ஹீரோவா  புதுமுகம்  சுதாக்ர் . அந்தக்காலத்துல  இவருக்கு ஏகப்பட்ட  ரசிகைகளாம், அப்பாவி கிராமத்து  ஆள்:க்கு   பொருத்தமான  முகம் . மற்றபடி  சொல்லிக்க  ஒண்ணுமில்லை

 

 ஹீரோயினா  ராதிகா . ஒளிப்பதிவாளர்  அல்லது  இயக்குநர்  இருவரில் ஒருவர்  கூட ஒரு  முக்கிய விஷயத்தை  கவனிக்க வில்லை  , ராதிகாவுக்கு  முதல்  படத்திலேயே  அளவுக்கு அதிகமாக  உதட்டை விரித்து  சிரிக்கும்  பழக்கம்  இருக்கு போல , கவனிச்சு ஜஸ்ட்  ஸ்மைல்  மட்டும்  போதும் , உதடு பிரியாம  சிரிக்கனும்னு சொல்லி  இருக்கலாம்  . மற்ற படி நடிப்பெல்லாம்  ஓக்கே

 

விஜயன்  ஒரு முக்கிய  கேரக்டரில் பட்டாளத்தானாக  வர்றார். கவுண்டமணி , காந்திமதி  ஜோடி  கச்சிதமான  நடிப்பு

 

க்ளைமாக்சில்   மழை  வெள்ளத்தை  நிறுத்த  கிராமத்தில்  ஒரு கன்னிப்பெண்  முழு நிர்வானமாக  ஊரை  வலம் வந்தா  போதும்  என்ற  க்ளைமாக்ஸ்  சீனை  எடுத்த  விதம்  குட் .அந்த  மாதிரி  நம்பிக்கை  பல  கிராமங்களில்  இருக்கு.


சபாஷ்  டைரக்டர் 


1  உதவி  வசனகர்த்தா , பாடல்  ஆசிரியர் ( 1 பாட்டு) , நடிப்பு , உதவி இயக்கம்  என  கே பாக்யராஜ்  பெயரை  4  இடங்களில்  இடம்  பெறச்செய்த  பெருந்தன்மை முதலில்  பாராட்டப்பட  வேண்டியது 


2    வாஸ்தவமான  பேச்சுங்கோ  என்ற  பஞ்ச்  டயலாக்  இதில் செம  ஹிட் . ஒருவர்  அடிக்கடி  இதை  சொல்வார் . யார் என்ன சொன்னாலும்  இதே பஞ்ச்  தான்


3   ஹீரோ ஹீரோயினை  தன் உளளங்கைகளால்  தூக்கும்  காட்சி  கவிதை 


4  படம்  பூரா  கிராமத்து  சொல்லாடல்கள் , பழமொழிகளை  அள்ளித்தெளித்த  வசனனக்ர்த்தா  வின் சாமார்த்தியம் , நாயகி  ஆங்காங்கே  போடும் விடுகதைகள்  , மற்றும் புதிர்கள்  அந்நாளில்  மிக  பிரபல,மாம்


5    ஹீரோவுக்கு  மொட்டை  அடித்து  அவமானப்படுத்தும்  சீனில்  அவரது  தந்தை  தற்கொலை   செய்து கொள்ளும்  காட்சியை  குறியீடாகக்காட்டிய  தன்மை 

6   கடைசி  20 நிமிடங்களில்  காதல்  ஜோடி இணைவார்களா? இல்லையா?  என்ற  பதைபதைப்பை  நமக்குள்  கடத்திய  பாங்கு


7  பாடலக்ளுக்கான  சிச்சுவேஷன்களை  அமைத்த  விதம் , அதுக்கான லீட் , பிஜிஎம்  எல்லாம் பக்கா 


நச்  வசனங்கள்


1   எமனுக்கு  வாக்கப்பட்டா   எருமை  மாடு  மேய்ச்சுத்தானே ஆகனும்?


2   மனைவிக்கு  குழந்தை  இல்லைன்னா மச்சினியை  இரண்டாந்தாரமா கட்டிக்கறது  ஒண்ணும்  தெய்வக்குத்தம்  இல்லையே?  ஊர் வழக்கம் தானே?


3 என்னங்கய்யா  பெரிய  மனுசன்  கெட்ட வார்த்தை  எல்லாம் பேசறீங்க? 


4  வாஸ்தாவமான  பேச்சுங்கோ

 செம  ஹிட்  அடித்த  பாடல்கள்


1  கோவில்  மணி  ஓசை  தன்னை  கேட்டதாரோ


2  மாஞ்சோலைக்கிளி தானோ


3  பூவரசம்பூ  பூத்தாச்சு , பொண்ணுக்கு  சேதியும்  வந்தாச்சு 


4  மலர்களே... 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  நாயகன்  தண்டமா  கிராமத்தில்  வெட்டியா இருப்பவர்   அடிப்படையில் ஒரு கவிஞர்  என  சொல்லப்படுது , ஆனா  அவர்  தபால்  ,மூலம் பத்திரிக்கைகளுக்கு  கவிதை  அனுப்புவது  , பிரசுரம்  கண்டது  மாதிரி   காட்சி  வைத்திருந்தால்  பின் வரும்  காட்சியில்  அவர்  கவிதை  எழுதிப்புகழ்  பெறுவது மாதிரி  சீனில் நம்பகத்தன்மை ஏற்பட்டிருக்கும்   


2   ஹீரோ  ஊரை  விட்டு  பட்டணம்  போய்  கொஞ்ச  நாட்கள்  கழித்து  பெரிய ஆள் ஆவது  போல் காட்டி இருக்கலாம்,  , ஆனா  ஒரே சீனில்  அவர்  கவிதை  மழை  பொழிவதும்   கட்  பண்ணா  கவிஞர்  ஆகி பணம்  சம்பாதிச்ச  மாதிரி  ,மிராக்கிள்  மாதிரி  காட்டியதும் ஏத்துக்க  முடியல ( ஆனா  இதே  பேட்டர்ன்ல    தாவணிக்கனவுகள்ல  ஹீரோ பெரிய  டைரக்டர், நடிகர்  ஆகறார் என  படிப்படியாக  காட்டியதை  ஜனங்க  ஏத்துக்கலை ,அது  தோல்விப்படம் ) 


சி.பி   ஃபைனல்  கமெண்ட்-   பார்த்தே  ஆக வேண்டிய  காவியம்  என சொல்ல மாட்டேன், ஆனா  ஆனந்த  விகடன் ல  55  மார்க்  வாங்கிய  படம்  என்ற  தகுதிக்காகவும் , மெகா  ஹிட் படங்களை  எபடித்தான்  இருக்கு , பார்ப்போம் என  நினைப்பவர்களும் பார்க்கலாம்  ரேட்டிங்  2. 75 / 5 . க்ளைமாக்சில்  என் கொடி பறக்கும் என  குறியீடுக்காட்சியாக  இயக்குநர்  ஸ்டேஷன்  மாஸ்டராக   பச்சைக்கொடி  ஆட்டும்    சீன்  உண்டு 

கிழக்கே போகும் ரயில்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பாரதிராஜா
கதைசெல்வராஜ்
இசைஇளையராஜா
நடிப்புசுதாகர்
ராதிகா
உஷா
வெளியீடுஆகத்து 10, 1978[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: