Wednesday, September 16, 2020

பசி (1979)– சினிமா விமர்சனம் ( தேசிய விருது பெற்ற படம் )

 

பசி – சினிமா  விமர்சனம்

 

ஷோபா  நடிச்ச  படங்கள் எல்லாத்தையும்  பார்த்துடலாம்னு  ஒரு முயற்சியில் இருந்தப்போ  இந்தபப்டம்  மட்டும் பெண்டிங்க்ல  ரொம்ப நாள்  இருந்ததுக்குக்காரணம்  டைட்டில் . நெஞ்சை  உருக்குவது  மாதிரி  படங்கள்  பார்த்தால் சில  நாட்கள்  நம் இயல்பு வாழ்க்கை  பாதிக்கும். அதனால  ஃப்ரீ ஆனபின் பார்த்துக்கலாம்னு தள்ளி  வெச்சிருந்தேன் , ஓணம்  பண்டிகை  முடிஞ்சு  கொஞ்சம்   ரிலாக்ஸாக  இருப்பதால்  இப்போ பார்த்துட்டேன்

 

நாயகி ஒரு குப்பத்தில்  வசிப்பவள் , அப்பா  தண்ணி  கேஸ், ரிக்‌ஷா  ஓட்டுனர் , அம்மா  ஹவுஸ் ஒயிஃப் , ஒரு அண்ணன் , 4  தம்பிகள்  கொண்ட  பெரிய  குடும்பம். அப்பா  பொறுப்பில்லாம  தண்ணி  அடிக்கறதால  குடும்பப்பொறுப்பை  சுமக்கும் கட்டாயம்  நாயகிக்கு

 

அண்ணன்  லவ் மேரேஜ்  பண்ணிக்கிட்டு  தனியா  குடித்தனம்  போனதும் , மருமக  மாமியாரை  மதிப்பதில்லை , கண்டுக்கறதில்லை  என்பதும்  ஒரு குறை

 

இந்த  மாதிரியான குடும்பச்சூழலில்  நாயகி  கிட்டே ஒரு லாரி டிரைவர்  அன்பா பேசறார் , பழகறார், உதவறார்.  அவர்  நல்ல  மனசால்  ஈர்க்கப்பட்டவர்  தன் பெண்மையை  அவரிடம்  பரிசாக  பறிகொடுக்கிறார்

 

இந்த  விஷயம்  அம்மாவுக்குத்தெரிஞ்சு  வீட்ல  பிரச்சனை வெடிக்குதும் ஊர் உலகம்  என்ன பேசும்? என பழி பாவத்துக்கு அஞ்சி  அம்மா  தற்கொலை  செஞ்சுக்கறா

 

பிறகு தான் நாயகிக்கு விபரம் தெரியுது தன்னைக்காதலித்தவன் அல்லது  காதலிப்பதாக  நம்ப  வைத்தவன் ஏற்கனவே மணம்  ஆனவன்

 

அதுக்குப்பின் அவ  என்ன முடிவெடுத்தா?  என்பதும்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  என்ன என்பதையும்  யூ ட்யூப்பில்  கண்டு  மகிழ்க

இந்தப்படத்தில்  பாராட்டத்தக்க  முதல்  அம்சம்  சென்னை  சேரி  மக்களின்   பேச்சு வட்டார  வழக்கு  நடை  அச்சு அசலாக  கண்  முன் நிறுத்தியது. அவர்களின் வாழ்க்கை  முறை  , குனநலன்கள்  எல்லாத்தையும்   டீட்டெய்லாக  விவரித்த  விதம். ரெண்டாவது  அம்சம் ஷோபாவின்  அற்புதமான  நடிப்பு . இவர்  ஏற்று நடித்த  கதாபாத்திரங்கள்  எல்லாமே  மிக  வித்தியாசமானதாகவும் , பிரபல நடிகைகளோ  பிற நடிகைகளோ  ஏற்கத்தயங்கும்  வேடங்களாகவே அமைவதே.  பின்னிப்பெடல்  எடுத்துட்டார்  நடிப்பில்

 

இந்தப்படத்தின்  மூலம்  சிறந்த  நடிகைக்கான  தேசிய  விருது , தமிழக  விருது  வாங்கியது  பாராட்டத்தக்கது

 

அப்பாவாக  டெல்லி கணேஷ்.  குடிகாரக்கணவன்  பாத்திரத்தைக்கண்  முன் நிறுத்தறார்.  அம்மாவாக  வருபவர்  பெயர்  தெரியல , நல்லா பண்ணி இருக்கார்

 

  ஏமாற்றும்  காதலனாக  விஜயன் , சிறப்பு , முழுக்க  முழுக்க  வில்லனாக இராமல் மனசாட்சிக்கு  ஓரளவு பயப்படும்  ஆளாக  கேரக்டர் ஸ்கெட்ச்  அமைத்தது  சிறப்பு

 

 

சபாஷ்  டைரக்டர்

1        விஜயன் – ஷோபா  இருவருக்குமான  உரையாடல்களில்  அடிக்கடி  விஜயன்  ஷோபாவை  வசனத்தால்  ,மடக்குவதும்  அதுக்கு ஷோபா “எப்படி நான்  பேசுனாலும் நீ  என்னை  மடக்கிடறய்யா என  வெட்கபப்ட்டு  சரண்டர்  ஆவதும்  கண்கொள்ளாக்கவிதை

2   ஊர்  கூடி  விஜயனை  அடித்து  ஏமாற்றியது  இவந்தானா ? என கன்ஃபர்ம் பண்ணக்கேட்கும்போது  ஷோபா  எடுக்கும்  முடிவும்  அதுக்கு  அவர்  கூறும் காரணாஅமும்  செஞ்சை    நெகிழ  வைக்கும்  காட்சி  அமைப்பு

 

 

3        ஷோபாவைப்பற்றி கேள்விப்பட்டு  விஜயனின்  மனைவி  அவருக்குக்கொடுக்க வ்ரும்  அங்கீகாரமும் , மரியாதையும் சிறப்பு

4        விஜயனின்  மனைவிக்கு  கணவனைப்பற்றிய  கசப்பான  உண்மை  தெரிய  வரும்போது அவர்  காட்டும் ரீ ஆக்சனும் அதற்கு விஜயனின்  ரீ ஆக்சனும்

 

நச்   வசனங்கள்

 

1        என்  மகன் இவன் தான் என்னைக்காப்பாத்தப்போறான்

 அப்போ நீ   யாரையும்  காப்பாத்த  மாட்டியா?

 

2        கடன் கேட்டா சினேகிதம்  கெட்டுடுமோ?னு யோசிக்கிறேன்

3        ஆதாயம் இல்லாம  ஒரு பெண்ணுக்கு  எவனும் உதவ மாட்டான்

4 எப்படி நான்  பேசுனாலும் நீ  என்னை  மடக்கிடறய்யா

4        ஒரு தடவை அவ தப்பு பண்ணுனதுக்கே அவங்கம்மா தண்டவாளத்துல தலை கொடுத்துட்டா, நான்   தினம்  தினம்  தப்பு பண்றேன், இங்கே ஒண்ணூம் நடக்க  மாட்டேங்குது

5         புருசனும், பொண்டாட்டியும்  ஒருவருக்கொருவர்  பாலமா இருக்கனுமோ தவிர  பாரமா  இருக்கக்கூடாது

6        கட்னவ  சுத்தமா இருக்கனும்னு  நீ எதிர்பார்க்கற மாதிரி  நீ சுத்தமா  இருக்கனும்னு நினைச்சிருக்கியா?

7        கட்னவ கண்  கலங்குனா  அந்த  பாவம்  உன்னை  சும்மா  விடாது

8         உலக்கையை  முழுங்கிட்டு  வா-ன்னா  உரலையே முழுங்கிடுவே போல

 

9        ஊர் , உலகம்  நீ  எப்பட்ட்டவன்னு பார்க்காது . எவ்ளோ  காசு  கைல வெச்சிருக்கே?னு தான் பார்க்கும்

 

 

லாஜிக்  மிஸ்டேக்ஸ்

 

1        என்னதான்  ஏழைப்பெண்ணாக இருந்தாலும்  தான் பழகும்  லாரி டிரைவர்  ஏற்கனவே திருமணம்  ஆனவர்  என்பதை  உனராமல்  நாயகி  அவரிடம்  மனதை , உடலைப்பறி கொடுப்பது  எப்படி?  அவரை  நல்லவர்  என  அறிமுகப்படுத்தும்  தோழி  அவர்  கல்யாணம் ஆனவர்  என்பதை  குறிப்பிடாதது  ஏன்?

2   குடிகாரக்கணவன் ,  4 ஆண்  குழந்தைகள் , ஒரு பெண்  என  எல்லோரையும்  விட்டு விட்டு  மகள்  கெட்டு விட்டாள்  என  அம்மா  தர்கொலை  பண்ணுவது  ஏற்றுக்கொள்ள முடியவில்லை ,  தற்கொலை  என்பது  கண   நேர  முடிவு தான்  என்றாலும்  அந்த  சூழல்  சரியாக  சித்தரிக்கப்படவில்லை

 

3   விலை  மகளாக  வரும் பெண்  ஷோபாவுக்கு  உதவ  முன் வருவதும் அவருக்கு  பண  உதவி செய்ய   அவர்  ஏற்பாடு செய்யும் விதமும்  கவிதை

 

சி.பி ஃபைனல்  கமெண்ட் -  ஏ செண்ட்டர்  ரசிகர்களுக்கு  படத்தின்  வசன  நடை  ஆரம்பத்தில்  கொஞ்சம்  தடுமாற்றமாக  இருக்கலாம்,  ஆனா பொறுமையாப்பார்த்தா  செட்  ஆகிடும், அந்தக்காலத்தில்  பெண்களால்  கொண்டாடப்பட்ட  படமாம்  இது , க்ளைமாக்ஸ்  காட்சியில் நீங்கள்  கண்ணீர்  சிந்தவில்லை  என்றால்  நீங்கள்  இரும்பு மனிதராக இருக்கக்கூடும்   ரேட்டிங்  3.25  / 5

0 comments: