Monday, August 10, 2020

அக்னி சாட்சி (1982)– சினிமா விமர்சனம் ( ஃபேமிலி டிராமா)

 Agni Sakshi (1982 film) - Wikipedia

அக்னி  சாட்சி – சினிமா விமர்சனம் ( ஃபேமிலி டிராமா)

 

ஹீரோ டான்ஸ்  மாஸ்டர்    கம்  நாடக  ஆசிரியர் , நவீன  சிலப்பதிகாரம்  மாதிரி  ஒரு நாடகத்துல  கண்ணகியையே  குத்தம்  சொல்ற  மாதிரி  ஒரு   இடம் வருது, நாயகி ரசிகையா  அதை  பாராட்றா . ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கற  முதல்  ஆத்ம திருபதியே  பாராட்டும், உண்மையான  அங்கீகாரமும் தான். அந்த  வகைல அந்த  ரசிகையின்   நட்பு  ஹீரோவுக்குப்பிடிச்சிருக்கு, தொடர்ந்து  கடிதங்கள்  வாயிலாக  அவங்க  நட்பு  வலருது. நாயகியும், ரசிகையுமான  அவர்   ஒரு கவிதாயினியும் கூட ,  அவங்க  நட்பு  காதலில்  மலர்ந்து  பெற்றோர் சம்மதத்துடன்  கல்யாணத்தில்  முடியுது

 

 மேரேஜ் டைம்ல  பெண் வீட்ல  2 பேர்  பேசிக்கும் ஒரு விஷயம்  சஸ்பென்ஸா  காட்டப்படுது. நாயகியைப்பற்றிய  ஒரு உண்மையை  மறைச்சு  இப்படிக்கல்யாணம்   பண்றமே , நாளை  உண்மை  தெரிஞ்சா  என்னாகும்?

 

 நாயகியைப்பற்றிய  அந்த  உண்மை  என்ன? அது தெரிஞ்சு  நாயகன்  எடுக்கும் முடிவு என்ன?  என்பதுதான்  பின் பாதி  திரைக்கதை

 

 ஹீரோவா சிவக்குமார் . இந்தக்காலத்துல  வேணா  செல்ஃபி செல் ஃபோனை  தட்டி விட்டதால  இளைய  தலைமுறையால்  கிண்டலாகப்பார்க்கப்படலாம், ஆனா  அந்தக்காலத்துல  சிவாஜி , எம்ஜியார், ரஜினி, கமல்   வரிசைல  போராடி  ஜெயிச்ச  ஒரு நடிகர் , தமிழ் சினிமா  உலகத்திலேயே  தனி  மனித    ஒழுக்கம்  கொண்டவராகவும் குடி , தம் இல்லாத  டீ டோட்டலராகவும்  இருந்தவர், திரை உலக  மார்க்கெண்டேயன்  என பெயர் பெற்றவர் . அருமையான  நடிப்பு .பல   இடங்களில்  சபாஷ்  போட    வைக்கிறார். இவரை  டான்ஸ்  மாஸ்டராக காட்டியதெல்லாம்  ஓவர் , அதுக்குப்பதிலா  நாடக் ஆசிரியர்  கம் ஓவியர்னு காட்டி இருக்கலாம், நிஜமாவே அவர் சிறந்த  ஓவியர். ஒரு மிடில்  கிளாஸ்  கணவனைக்கண் முன் நிறுத்தறார்

 

 நாயகியா  சரிதா . மாநிற  மரகதம் . அந்தக்காலத்துலயே அந்நியன்  கேரக்டர்   பண்ணிய  துணிச்சல்காரர்.  மிரள வைக்கும் நடிப்பு , எப்போ என்ன செய்வார்? என யாராலும் யூகிக்க முடியாத  குணாதிசயத்தை  அவர் வெளிப்படுத்தும்  இடங்கள்  அற்புதம்

 

 நாயகனின் அப்பாவாக  பூர்ணம்  விஸ்வநாதன்  அருமையான  பங்களிப்பு , பின் மாமியாராக , நாத்தனாராக  வருபவர்களும் குட் . மனவியல்  மருத்தவராக சாரு ஹாசன்  சாஃப்ட் ஆக்டிங்

 

 பணிப்பெண்ணாக  வரும் பெண்  எல்லார்  காலிலும் விழுவது அக்மார்க் கே.பி டச்

 

 பெண்கள் அவசியம் காணவேண்டும்; ஆண்கள் மிக அவசியமாக காணவேண்டும்... `அக்னி  சாட்சி' செய்த மேஜிக் என்ன? | Nostalgia Series: Revisiting K. Balachander  and Saritha movie Agni Sakshi

 சபாஷ்  டைரக்டர்

 

1   அம்மா  உனக்கு வைக்கப்போகும் முதல்  டெஸ்ட்  ஒரு தீப்பெட்டி  கொடுத்து  குத்து  விளக்கு  ஏத்தச்சொல்வாங்க , அவங்க  சிக்கனவாதி , ஒரே குச்சில 5  திரியையும்  பத்திடனும்  என  ஹீரோ  டிப்ஸ்  கொடுக்க  ஆனா  நடந்ததோ  வேற , ஒரு கோலம்  போடு  என  சிம்ப்பிளா  சொல்வாங்க . அது வரை   குத்து  விளக்கு ஏத்த  பயிற்சி  எடுத்து இருந்த  நாயகி  தடுமாறுவதும்  பின் சமாளிப்பதும்  ரசிப்புத்திறன் கொண்ட  காட்சி

 

2  மிட்நைட்  2 மணிக்கு  மாமியார்  பெட்ரூம்  கதவைத்தட்டி  மன்னிப்புக்கேட்க  பத்ரகாளி  மாதிரி  நிற்கும்  சீன்  கலக்கல் .அந்த  சீனில்  மொத்த  கேரக்டர்களையும் அப்டி  கூப்ல உக்காந்து    வேடிக்கை  மட்டும்  பாருங்க  கணக்கா  ஒன் விமன்  ஆர்மியாக  நடந்த  சரிதாவின் நடிப்பு

 

3    நியூமரலாஜிபடி அனந்தபத்மநாபன்  பேருக்கு முன்னால  ஒரு ஏ  சேர்த்துட்டா   ஆனந்தபத்மநாபன்  ஆகிடலாம், நல்லாருக்கும்  செஞ்சுடலாமா? என கேட்க  அய்யய்யோ வேணாம், மனைவி பேரு மங்களம், பேருக்கு முன்னால  ஏ சேர்த்தா

 அமங்களம்  ஆகிடும்  என  சொல்வது  மூட நம்பிக்கைக்கு  எதிரான  சட்டையர்  காமெடி

 

4     ஆக்ரோசமான  சம்பவங்களால்  லேசாக அலுப்பு தோன்றும்  ஒரு இடத்தில்  சூப்பர்  ஹிட் மெலோடியான  கனாக்காணும் கண்கள்   மெல்ல , உறங்காதோ  காதில்  சொல்ல ...  செம  அட்டாச்சிங்

 

3  சினிமா  தியேட்டரில்  படம்  பார்க்கப்போகும்  நாயகன், நாயகி அங்கே   மனைவியைத்துன்புறுத்தும்  சீனில்  சரிதா  நடந்துகொள்ளும்  விதம்   அதற்கு ஆடியன்சின்  ரெஸ்பான்சும் அக்மார்க்  கே பி டச்

 

4   கமல் , ரஜினி  இருவரையும்  கெஸ்ட்   ரோலில்   நடிக்க  வைத்த  புத்திசாலித்தனம், அதிலும்  வழக்கம்  போல் ரஜினியே ஸ்கோர்  பண்ணுவது  ( கமல் – ரஜினி  காம்போ  படங்கள்  எல்லாவற்றிலும் ரஜினியே கலக்கி இருப்பார்

 

5    கணவன்   தன்  மனைவியின்   ஃப்ளோ அப்  புகைபப்டங்களை  கூட்டுக்குடும்ப  வீட்டின் ஹாலில்  ஆங்காங்கே  வைப்பது  சினிமாத்தனம்  தான் என்றாலும்  ரசிக்க வைத்தது

 

 

நச்  டயலாக்ஸ்

‘1   தண்டிக்கற  உரிமையை  தனி  மனிதனுக்கு யாரும் தர்லை எனும்போது  கண்ணகிக்கு மட்டும் மதுரையை  எரிக்கும்  உரிமையை தந்தது  யார்?

 

2  நீ  ஜாக்கிரதையா  இருக்கனும்னு அம்மனை  வேண்டிக்கிட்டேன்

 

 அப்படியே அம்மனையும்  ஜாக்கிரதையா இருந்துக்கச்சொல்லுங்க, ஏன்னா  சிலை எல்லாம் திருடு   போகுது

 

 

3   இந்தியப்பெண்கள்   சிலுவையால்  அறையப்பட்டிருக்கிறார்கள், பாதிப்பேர்  புருஷனால  கொடுமைப்படுத்தப்படறாங்க  , பாதிப்பேர்   மாமியாரால்  கொடுமைப்படுத்தப்படறாங்க 

 

4   புத்திசுவாதீனம் , சித்தப்பிரமை  இந்த  இரண்டுக்கும்  இடையே  ஒரு   மெல்லிய  கோடு தான்  இருக்கு

 

5  பொண்ணுக்கு  பரத  நாட்டியம்  ஆடத்தெரியுமாம், முடிச்சுடலாமா?

 

அய்யய்யோ , வேணாம்,  வீட்ல ஆட்டமா  ஆடுவா

 

6  உங்க  மனைவி உங்களுக்கு  விடுதலை  கொடுக்க நினைச்சிருக்காங்க , தான் செஞ்ச  தப்புக்கு  பிராயசித்தமா  ஏதாவது செய்யனும்கற  எண்ணம் அவர்  அடிமனசுல ஆழமாப்பதிஞ்சிருக்கு

 பெண்கள் அவசியம் காணவேண்டும்; ஆண்கள் மிக அவசியமாக காணவேண்டும்... `அக்னி  சாட்சி' செய்த மேஜிக் என்ன? | Nostalgia Series: Revisiting K. Balachander  and Saritha movie Agni Sakshi

லாஜிக்  மிஸ்டேக்ஸ்

 

 1 மருமகளை  வெறுப்பேற்ற  மாமியார்   நாயகியின்  தாய்  வீட்டு சீதனமா  அம்மா கொண்டு  வந்த  பலகாரத்தை  குப்பைத்தொட்டியில்  போட்டுட்டேன்  என்பது   கொடூரம் ,அவங்களுக்குப்பிடிக்கலைன்னா   சாப்பிடாமல்  இருக்கலாமே? மருமகளிடம்  தந்திருக்கலாம். அம்மாவும்  மகளிடம்  டைரக்டாக  தந்திருக்கலாம்.  அந்த  சீன் கொஞ்சம்  செயற்கையா  இருந்தது

 

2   ஓப்பனிங்  சீன்ல நடனத்தாரகை  ஒருவர் நாயகனிடம்  தன் விருப்பத்தை  தெரிவிக்கும்போது  என் கவனம்  என்  தொழில்ல  எனும் நாயகன்  அடுத்த  சீனே  வேறொரு பெண்ணுடன் காதலில்  விழுவது  எப்படி?

 

3   மூன்றாம்  பிறைல    சில்க் ஸ்மிதா  கேரக்டரும்,  காதல்  கோட்டைல   ஹீரோ  கேரக்டரும்  ஒரு மைண்ட்  டைவர்சனுக்காகப்படைக்கப்பட்டது  போல்  நாயகனை  வசப்படுத்த   அந்த நடன  தாரகை  கேரக்டர்  உருவாக்கப்பட்டிருக்கு  போல, ஆனா தேவை  இல்லாதது, கதையோட   ஒட்டலை

 

4   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் ஆக  வரும் அந்த  ஃபிளாஸ்பேக்  காட்சி சரியாக  மனசில்  ஒட்டவில்லை, எடிட்டிங்கில்  சுருக்கி  இருக்கலாம், ஆனா  இன்னும் 2  சீன் அதிகப்படுத்தி  காட்டி இருக்கனும்

 

சி.பி ஃபைனல்  கமெண்ட் – இந்தப்படம்  அந்தக்காலத்தில் செம  ஹிட் அடிச்ச  படமாம், ஏன்னு யோசிச்சுப்பார்த்ததில்  பெண்கள்  தனக்கு இந்த  மாதிரி  ஒரு ஆண்  கணவனா  வந்தா  எப்படி இருக்கும்? என ஏங்கி  இருக்கலாம், , இந்தப்பட   நாயகி மாதிரி   நல்ல  வேளை  நமக்கு  மனைவி  அமையலை, தப்பிச்சிட்டோம்டா சாமி  என  ஆண்கள்  நிம்மதியா  இருந்திருக்கலாம்.  ஆண்களை  விட பெண்களை  அதிகம் வசீகரிக்குக்ம்  படம் . ரேட்டிங்  3 / 5

 

 

0 comments: