Sunday, August 23, 2020

தப்புத்தாளங்கள் (1978) - சினிமா விமர்சனம்

 Thappu Thalangal - Wikipedia

தப்புத்தாளங்கள் (1978) - - சினிமா விமர்சனம்

 

ஆண்களின்  உடல் பசியைப்போக்கி தன்  வயிற்றுப்பசியைப்போக்கும்  அம்மாவுக்குப்பிறந்த  மகன்  தான் ஹீரோ . அம்மா  குடும்ப  வாழ்க்கையில்  ஈடுபட்டு  தொழிலை  விட்ட பின்  பிறந்த  மகன்  தான்  ஹீரோவின் தம்பி

 

சின்ன வயசுலயே  வன்முறை தான் வாழ்வுக்கு வழி என்ற  தவறான  புரிதலால்  அடிதடி  ரவுடியாக   உருமாறும் ஹீரோ . ப்ரியமானவளே  படத்தில்  ஹீரோ  விஜய்  சிம்ரனை  ஒரு வருச  காண்ட்ராக்ட்   மனைவியாக  நடத்துவது  போல  ஹீரோவின்  தம்பி  கண்ணில்  பட்ட  அந்த  மாதிரி  பெண்களை  மாதாந்திர  காண்ட்ராக்டக்கு எடுத்து  சலித்தபின் செட்டில்  பண்ணி  அனுப்பிட்டு  அடுத்த  ஆள்  தேடும்  தான் தோன்றித்தனமான  கேரக்டர்

 

ஹீரோவின்  அம்மா  போலவே  ஒரு  விலை  மகளுக்குப்பிறந்த  பெண் தான்  ஹீரோயின் . இவரும்  தாய்  எவ்வழி  தானும் அவ்வழி  என நடப்பவர்

 

ஒரு முறை  போலீஸ்  துரத்தி  ஓடி  ஒளிய  ஹீரோயின்  வீட்டுக்குள்  நுழையும்  ஹீரோ  ஹீரோயினை  சந்திக்கிறார். பின் சந்திப்பு  தொடர்கிறது.

 

 ஒரு முறை  என்னம்மா  அடிக்கடி  இருமிட்டே இருக்கே?  என   இருமல்  மருந்து  வாங்கித்தருகிறார்  ஹீரோ. அந்த  மருந்து  ஹீரோயின்  இருமலை  மட்டும் சரி  செய்யலை , அவர்  மனசையும் சரி  செய்யுது

 

 இருவரும்  சேர்ந்து  வாழ  முடிவெடுக்கறாங்க .

 

 இப்போ  ஹீரோ வின் தம்பி  மற்றும் பழைய  கஸ்டமர்ஸ்  எல்லாம்  குறுக்கே வர்றாங்க , அந்தப்பிரச்சனைகளை  எல்லாம்  இருவரும்  எப்படி சமாளிச்சாங்க? என்பதே  திரைக்கதை. இருவ்ரும்  ஒன்றாக  கணவன்-மனைவியாக  வாழ  முடிந்ததா?  என்பது க்லைமாக்ஸ் ட்விஸ்ட்

 

 இந்த  மாதிரி  ரிஸ்க்  ஆன  , நெகடிவ்  ஆன  சப்ஜெக்ட்டைத்தொட   கே  பாலச்சந்தர்  தவிர  வேறு   யாருக்குத்துணிவு  இருக்க முடியும்? ஓப்பனிங்க்ல இருந்தே  கேரக்டர்  ஸ்கெட்ச்  பக்காவா  பண்ணுவது   இவரது  பாணி

 

  ஹீரோவா நெகடிவ் ரோலா  இருந்தாலும் பெண்களைக்கவரும்  பாத்திரம் ரஜினிக்கு . இதில்  சிகரெட் ஸ்டைல் இல்லாதது  திருப்தியான ஒரு ஆச்சரியம் . ஹீரோயின் இருமும்போது  கரிசன்ம்  காட்டுவது , உள் பாவாடையில் கிழிசல்  பார்த்ததும்  நள்ளிரவில் கடைக்குப்போய்    பாவாடை  எடுத்து  வருவது  என  பல காட்சிகளில்  லேடீஸ்  செண்ட்டிமெண்ட், அசத்தி விட்டார்

 

 ஹீரோயினாக  புது முகம்  சரிதா. அறிமுகம் ஆகும்  முதல்  படத்துலயே  வில்லங்கமான  ரோல் . இது மாதிரி  கேரக்டர்களை  ஏற்று நடித்தால்  கோடம்பாக்கத்தில்  அதே  பிராண்ட்  முத்திரை  விழுந்து  விடும் என்பது  தெரிந்தும்  துணிச்சலாக  நடித்தவருக்கு  சபாஷ் . அதைத்தொடர்ந்து  பல நல்ல  கேரக்டர்கள்  இவரைத்தேடி  வந்ததும்  இன்னொரு ஆச்சரியம்

 

ஹீரோவின்  தம்பியா  வருபவர்  யார்னு தெரியல , பரவாயில்லை  ரகம் தான். கமல்  மாதிரி  பிரபலமான  ஆளை  போட்டிருந்தால்  இன்னும்  கவனம்  கிடைத்திருக்கும். இந்த  கேரக்டர்  ஸ்கெட்ச்  ஆட்டோ  சங்கர்  கேரக்டர் என்  சொல்லப்படுது. 1980ல்  தண்டனை  அடைந்த  ஆட்டோ  சங்கர்  இதே போல்  பெண்களை  காதலிகளை  மாற்றுபவராம்

 

பின்  பாதி  திரைக்கதை  இப்படித்தான்  இருக்கும் என நாம்  நினைத்தால்  ஏமாந்தோம், சில ட்விஸ்ட்  உண்டு

 

 இதுக்குப்போயி  அலட்டிக்கலாமா?  இந்தப்படத்தில்  செம  ஃபேமசான  டயலாக். ( ஆக்சுவலா  அது பாடல்  வரி )

 

பெண்களை  ரெடி பண்ணும்  புரோக்கர்  கேரக்டர்கள்  இரண்டில்  செம  செண்ட்டிமெண்ட்டான  சீன்கள்  2 இருக்கும். அக்மார்க்  கே பி டச் 

 

 இசை  யாரோ புதுமுகம் போல , 3  பாடல்களில்  2  தேறுது 

 

 வியாபார  ரீதியில்  இது வெற்றி பெறா  விட்டாலும்  விமர்சன ரீதியாக பலரின் பாராட்டுக்களைப்பெற்ற  படம்

கீதப்ப்ரியன்|Geethappriyan|: தப்புத்தாளங்கள் [1978]படத்தின் அறிமுகங்கள்  தொடர்ச்சி 3

சபாஷ்  டைரக்டர்


1  பிம்ப்  ஆக  வரும்  முதல்  நபர்  ஒரு சந்தர்ப்பத்தில்  தன்  மகளையே  அந்த  மாதிரி  இடத்தில்  சந்திப்பதும்  அடுத்த  ஷாட்டில்  அவர்  குடும்பமே  தற்கொலை  செய்து  பிணமாகக்கிடக்கும் காட்சியும்


2   இன்னொரு  பிம்ப்    தற்கொலை செஞ்ச பிம்ப்  பற்றி தன் மனைவியுடன்  சந்தோஷமாக  பேசிக்கொண்டிருக்கும்போது  அப்பாடா, தொழில் ல போட்டி இல்லை   எனும்போது  அவரது  மகள்  “ அப்பா , என்ன   தொழில்  பண்றீங்க? என கேட்கும்போது  கேமரா  ஆங்கிள் , இவரின் முக பாவம்


3  வெறும்  2000  ரூபா காசுக்காக  ஹீரோவும் , மனைவியும்  கஷ்டப்படும் சீன், ஆலாய் பறந்து  காசுக்கு ஏற்பாடு செய்வது 

நச்  வசனங்கள்

 

1        பணம்  யார்  கொடுப்பாங்களோ  அவங்களுக்கு  நான்  விசுவாசமா  இருப்பேன்

2   நீ  என்  கிட்டே  பொண்டாட்டி  மாதிரி  நடந்துக்கனும், ஆனா  பொண்டாட்டி  மாதிரி   அட்வைஸ்பண்ணிட்டு இருக்கக்கூடாது

 

2        எனக்குப்பொண்ணுங்களைப்பிடிக்கும், ஆனா  மேரேஜ்பண்ணிக்கப்பிடிக்காது

4  என்  வாழ்க்கைல நடந்த  வித்தியாசமான  அனுபவம் – அப்பா  , மகன்  இருவரும்   என் வீட்டு  வாசல்ல  எதிர்  எதிரே  சந்திச்ட்டாங்க , ஒரே சண்டை , பிரச்சனை  என்னான்னா  அப்பாவை விட மகன்  5  ரூபா  அதிகம்  எனக்குத்தந்துட்டானாம்

 

5   பணம்  மட்டும்  இருந்திருந்தா  கற்பைக்காப்பாத்தி  இருப்பேனோ  என்னவோ?

 

 அப்போ  பணக்காரப்பெண்கள்  எல்லாம்  கற்புள்ளவங்கனு  சொல்ல வர்றியா?

 

6   கற்பின்  பெருமைகள்  பற்றி  நிறைய  படிச்சிருக்கேன், ஆனா  அதெல்லாம்  படிக்கும் முன்பே  கற்பை  இழந்துட்டேன்

 

7  கள்ளத்தனமா  ஒரு  வீட்டுக்குள்ளே  புகுந்தும்   நான்  மாட்டிக்கலை

 

 எப்படி?

 

 உள்ளே  கணவன் ம்னைவி  கோலத்துல  இருந்தவங்க   கள்ளத்தனமா  சந்திக்க  வந்தவங்க



 லாஜிக்  மிஸ்டேக்ஸ்



1  நாயகி  விலைமகளாக  வருகிறார், ஒற்றை ஆளான  அவருக்கு மாதத்தில்  ஒரு நாள்  அல்லது  2 நாள்  வருமானமே   உணவுக்கு  போதுமானது . வீட்டு வாடகை 3 நாள்  வருமானம்  என்றாலும்

எப்படியும் அவருக்கு மாசம்  ஒரு சேமிப்பு  தேறும் , ஆனா  தொழிலை  விட  முடிவெடுக்கும்போது  ஹீரோ  வேலை செய்யும் இடத்தில்  கட்டச்சொல்லும் 2000  ரூபா  காசுக்கு  தடுமாறுவது  எப்படி?


2  ஹீரோயின்  ஒரு  லோ க்ளாஸ்  அயிட்டம்  என  காட்டப்படுது. அதாவது  மலிவு  விலை  மாது. ஆனா ஒரு சீனில் ஜட்ஜே  இவரோட  கஸ்டமர்தான் என வசனம்  வருது. ஹை க்ளாஸ்  வருமானம்  உள்ள  ஜட்ஜ் எப்படி லோ கிளாஸ்  அயிட்டம்  கிட்டே போவார்?



3  வில்லன்  நாயகி  விலை மாதுவாக  இருக்கும்போது  கண்டுகொள்லவே  இல்லை, ஆனா  திருந்தி  வாழும்போது  ஹீரோ கண் முன் ரேப் செய்வேன் என சவால் விடுவதும்  நாலஞ்சு  அடியாட்கள்  ஹீரோவைப்பிடித்துக்கொள்ள  வில்லன் நாயகியை ரேப் செய்வதும் ரண கொடூரம்., நம்பவே முடியல , செயற்கையா இருந்தது


4  ஹீரோவுக்கு  எழுதப்படிக்கத்தெரியாது  என  எல்லாருக்கும் தெரியும், ஆனா ஒரு முக்கிய கேரக்டர் ஜெயிலில்  ஹீரோவை சந்திக்க  முடியாத போது  இந்த லெட்டரையாவ்து  தந்துடுங்க  எனக்கொடுப்பது  எப்படி? அதுக்குப்பதிலா  என்ன  மேட்டர்  என்பதை  சொல்லி அனுப்பி இருக்கலாமே?

சி.பி ஃபைனல்  கமெண்ட்  ரஜினி – சரிதா  மாறுபட்ட  நடிப்பில்  ஒரு   மெலோ டிராமா.  பெண்களுக்குப்பிடிக்கும்.,  ரேட்டிங்   3 / 5

 


0 comments: