Saturday, July 18, 2020

BLACKMAIL( HINDI) –சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் – பிளாக் ஹியூமர் _)




நாம எல்லாம்  சின்னப்பையனா  இருந்தப்ப காக்காக்கடி  ரொம்ப  ஃபேமஸ். பெரிய நெல்லிக்காயை ஒன் பை டூ  பண்ணனும்னா டைரக்டா  கடிச்சு பாதி ஆக்கி  ஷேர் பண்ண மாட்டோம், கர்ச்சீஃப் அல்லது  துணில  சுத்தி  கடிப்போம், இல்லைன்னா  அது  எச்சி  ஆகிடும், இப்படி  அடுத்தவங்க எச்சில் பட்டதை அசூயையாப்பார்த்த  அதே சமூகத்தில் தான் சில வினோதங்கள்  நடக்குது , சில்க் ஸ்மிதா  கடிச்சு  மிச்சம்  வெச்ச  எச்சில்  கொய்யாப்பழம்  ரூ 40,000  க்கு ஏலம் போச்சாம், அப்போ தங்கம்  ஒரு பவுன் 3500 ரூபாம் கிட்டத்தட்ட  12  பவுன்  ரேட், இன்னைக்த விலைவாசிக்கு   நாலரை  லட்சம்  ரூபா ஆகுது அதுல  பெருமையா  ஃபோட்டோ எல்லாம்  போட்டு  மாலைமலர்ல நியூஸ்   வேற  வந்தது, அந்த ஆளுக்கு வீட்ல எப்படி  மறுபடி சாப்பாடு போட்டாங்க தெரில


மிடில்  கிளாஸ்  ஃபேமிலி மேனான  ஹீரோ  டாய்லெட்  பேப்பர்  தயாரிக்கும்  கம்பெனில எக்ஸ்க்யூட்டிவா ஒர்க்  பண்றார்.ஏகப்பட்ட  கடன், கிரெடிட்  கார்டு  கடன்  கொண்ட சராசரி  இந்திய இளைஞர். இவருக்கு  ஒரு மனைவி உண்டு  , குழந்தை  கிடையாது .தம்பதிகளுக்குள்  பெரிய அளவில்  ஒட்டுதலும்  இல்லை , அதிகம் சண்டையும் இல்லை. ஏனோதானா  லைஃப் தான்

 ஆஃபீஸ்ல  கொலீக்  ஒருத்தன் “ தம்பி , இப்டியே  தண்டமா  இருக்காத , எல்லாரும்  ட்யூட்டி முடிச்ட்டு  6 மணிக்கு  வீட்டுக்குக்கிளம்பிடறாங்க  நீ மட்டும்  ஆஃபீஸ்ல  வெட்டியா  தனியா  உக்காந்து   டைம் பாஸ்  பண்ணிட்டு  லேட்டா  10 மணிக்கு  வீட்டுக்குப்போறே, ஒரு நாள்  ஷாக்  சர்ப்பரைசா  முன் கூட்டியே  வீட்டுக்குப்போய்  பூ  வாங்கிக்குடுத்து  மனைவியை  ஆச்சரியப்படுத்து அப்டிங்கறான்

கல்யாணம் ஆன புதுசுல  எல்லாருமே  சம்சாரத்துக்கு டெய்லி  4  முழம்  பூ வாங்கிட்டுப்போனவங்க  தான் , எல்லாம்  முதல்  ஒரு வருசம் , அப்புறம்  அது விட்டுப்போய்டுது.. ஒரு வேளை  பூக்காரி  நல்லாருந்தா  தொடருமோ என்னமோ ?

 ஹீரோ அதன்படி  ஒரு நாள்  சீக்கிரமா  வீட்டுக்குப்போறாரு . அவருக்கு மட்டும் இல்லை , ஆடியன்சுக்கும் ஷாக் .  மனைவி  வேற  ஒரு ஆளோட டிஸ்கஸ்  பண்ணிட்டு இருக்காப்டி .  அலறி ஆர்ப்பாட்டம்  பண்ணாம  கமுக்கமா  ஹீரோ  கிளம்பி வந்துடறார்

அவன்  வீட்டை விட்டு  வெளியே  வந்ததும்  அவனை  ஃபாலோ  பண்ணி  அட்ரஸ்  கண்டு பிடிக்கிறார். விபரங்களை  சேகரித்த  பின்   அவனை   1 லட்சம்  பனம்  கேட்டு பிளாக்மெயில்  பண்றார்

 கள்ளக்காதலன்  ஒரு தண்டம் , வீட்டோட  மாப்ளையா   எடுப்புச்சோறு  சாப்பிடறவன், அவனை மனைவி, மாமனார், மாமியார்   யாரும்  மதிக்கறதில்லை. இவன்  எப்படி  பணம்  ரெடி  பண்ணுவான்?

 இந்தக்கதைல  ஒரு ஆக்சிடெண்டல்  டெத்தும் , 2  கொலைகளும் நடக்குது . அப்புறம் என்ன ஆச்சு? என்பது  சஸ்பென்ஸ்  . பிளாக்  காமெடி  என சொல்லப்படும்  நகைச்சுவை  இழை  படம் பூரா  வருது . இது சிலருக்குப்பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம்

 ஹீரோவா  இர்ஃபன்  கான். இந்தப்பட  ஷூட்டிங்  நடக்கும்போதுதான்  இவருக்கு  கேன்சர் இருக்குனு கண்டுபிடிச்சாங்க . இவ்ரோட  நடிப்பு  டாப் கிளாஸ் . மிக யதார்த்தமான  நடிகர் ஒரு  மில்லி  மீட்டர் அளவு கூட  ஓவர் ஆக்டிங் இல்ல

,மனைவியாக  வருபவர்  ஓக்கே ரகம் . அழகு , இளமை  நடிப்பு எல்லாம்  கச்சிதம்

கள்ளக்காதலனாக வருபவர்  நடிப்பு ஆடியன்சுக்கு வெறுப்பு ஏற்படும்படி கன கச்சிதமாக  நடிச்சிருக்கார் . அவரோட  மனைவியா  வர்றவர்  எகத்தாளமான  நடிப்பு , புருசனை  நாயை விடக்கேவலமாக  நடத்துவதும்  டேய்  எடுப்புச்சோறு  என விளிப்பதும்  கொடூரம்

 ஒளிப்பதிவு  , இசை   அருமை , எடிட்டிங்  இன்னும்  ட்ரிம் பண்ணி இருக்கலாம், பாட்ல் காட்சிகள்  ஸ்பீடு பிரேக்  தான், எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட்  ஏடாகூட  சப்ஜெக்ட்  என்றாலும்  கண்ணியமான  காட்சி அமைப்புகளில்  மனம் கவர்கிறார்  இயக்குநர்



சபாஷ்  இயக்குநர்

1  நாயகியின்  கள்ளக்காதலனின் மாமனார்  மாமியார்    நடிப்பும்  அவர்கள்  கேரக்டர்  ஸ்கெட்சும்  அருமை .மாப்ளையை  மிரட்டும்  சீன் காமெடி  கலக்கல்

2 நாயகன்  பணி செய்யும் கம்பெனியின்  பின்புலத்தை  வைத்து  எழுதப்பட்ட காமெடி  டிராக்  கொஞ்சம்   விரசம், தமிழக  ஆடியன்ஸ்  சங்கடப்ப்டலாம், ஆனால்  அதையும் தாண்டி சில  இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிகிறது

3  வடிவேலு  காமெடியில்  வருவது  போல் தோட்டக்காரன், வாட்ச்மேன்  என ஆளாளுக்கு  பிளாக்மெயிலில்  ஈடுபடுவது,ம், காட்சி அமைப்பும் காமெடி

4  ஒவ்வொரு ஆளும்  மிரட்டும்போதும் அவரைக்கொலை  செய்வது  போல்  நாயகன் கற்பனை  செய்து  பார்ப்பது  நச்  சீன்

நச்  டயலாக்ஸ்

1        துப்பாக்கியைக்கண்டு ஜனங்க  பயப்படறாங்க, ஆனா  சுடுவது பாதிப்பை  ஏற்படுத்துவது  குண்டு தான் , ஆக்சுவலா புல்லட்டைப்பார்த்துதானே  பயப்படனும்?

2         இந்த துப்பாக்கி  எவ்ளோங்க?       2 லட்சம்
3         
4         இந்த துப்பாக்கி  எவ்ளோங்க?       ஒரு லட்சம்
இது?
50,000

அய்யோ,  ஓவ்ர், இது?

  யோவ், இது 6999  ரூபா 6 புல்லட் ஃப்ரீ , உனக்காகவே இருக்கு இதை எடுத்துக்கோ

அவ  கன்னிப்பொண்ணுதான் , ஒரு ஆளைப்பார்த்தாலே அவ வெர்ஜினா? இல்லையா?னு நான் கண்டு பிடிச்சிடுவேன்

லாஜிக்  மிஸ்டேக்ஸ்

1  நண்பனிடம்  யாராவது  தன் மனைவி  சோரம் போன மேட்டரை   ஷேர்  பண்ணுவாங்களா? அவன்  நாயகனின் மனைவியை  ட்ரை  பண்ண  மாட்டான்? என்பது  என்ன நிச்சயம்?

2   மனைவி  துரோகம்  செய்வது  தெரிந்த  பின்னர்  நாயகன் எப்படி  மனைவி கேட்கும்   பெரிய  தொகையை  தர சம்மதிக்கிறார்?

3  நாயகனின் மனைவி  அடிக்கடி  நாயகனிடம்  நாயகியின் அப்பாவுக்கு  ஆபரேஷன்  செலவுக்குப்பணம்  வேண்டும் என  பொய்யாக  சொல்லி  வாங்கறார். அதை  மாமனாருக்கோ , மாமியாருக்கோ ஃபோன் பண்ணி கிராஸ் செக் செய்ய மாட்டாரா?  (க்ளைமாக்ஸ்ல  பண்றார்)

4  நாயகனின் மனைவியின்  கள்ளக்காதலனின் மனைவி   தன் புருசனின்  லட்சணம்  அறிந்து  அவனைக்கொலைம் செய்ய  திட்டம் போட்டு கத்தி  எல்லாம் எடுத்து  ரெடி ஆகறார், எதுக்கு அவ்ளோ  ரிஸ்க்? சாப்பாட்ல  விஷம் கலந்தா  ஈசி ஆச்சே?

சி.பி   ஃபைனல்  கமெண்ட் – ஜாலியான  டைம் பாஸ்  காமெடி  படம்  பார்க்க  ஆசைப்படுபவர்கள்  பார்க்கலாம், சில  லாஜிக் மீறல்களைக்கண்டுக்கக்கூடாது  , ரேட்டிங்   3 / 5



0 comments: