Friday, June 05, 2020

THAPPAD ( HINDI) - சினிமா விமர்சனம் ( டொமெஸ்டிக் வயலென்ஸ்)



பொதுவா ஒரு சினிமாப்படம் ரிலீஸ் ஆனா இது ஹிட் , இது சூப்பர் ஹிட் , இது ஃபிளாப் , இது அட்டர் ஃபிளாப் , மீடியமா இருக்கு , சுமார் , பரவால்ல இது போன்ற ஏதோ ஒரு ரிசல்ட் தான் ஆடியன்சிடம் இருந்து  வரும், ஆனா சில டைம் மிக்ஸ்டு ரிவ்யூஸ் வரும். ஒரு சாரார் படம் ஆஹா ஓஹோ அபாரம் பரிமளா ரேஞ்சுக்கு பேசுவாங்க , இன்னொரு சாரார் அப்டி ஒண்ணும் பிரமாதம் இல்லையே? மொக்கையாதான் இருக்கு அப்டினு சமூக வலைத்தளங்கள்ல பதிவிடுவாங்க  இந்தப்படம் பார்க்கும் பெண்கள் எல்லாம் அபாரம் , மாறுபட்ட படைப்பு என சிலாகிப்பாங்க, சிலாகிக்கறாங்க , ஆண்கள்  இந்த சின்ன விஷயத்துக்கா இப்டி ஒரு முடிவு எடுப்பாங்க? என கேள்வி கேட்பாங்க. அவங்க ஆணாதிக்கவாதிங்க கிடையாது. ஆனா காலம் காலமா அப்படி அவங்க  , மனசுல அந்த விஷயம் சாதாரண விஷயமா பதிஞ்சு போனதுதான் காரணம். 


 பொதுவா புரொடியூசர் டைரக்டர் கிட்டே கதை கேட்கறப்போ படத்தோட ஒன் லைன் சொல்லுய்யா என்றுதான் கேட்பாங்க. 2 1/2 மணி நேரம் செதுக்கி வெச்சிருந்த  திரைக்கதையை ஆனந்த விகடன்ல வர்ற 10 செகண்ட் கதை மாதிரி சுருக்கி சொல்ல இயக்குநருக்கு தனி திறமை வேணும்.இந்தப்படத்துக்கு ஒன் லைன் ஸ்டோரி கேட்டெல்லாம் படம் எடுக்க ரிஸ்க் எடுத்திருக்க மாட்டார்னு தோணுது 

சரி , மேட்டருக்கு வருவோம்.,நாயகியும் நாயகனும் நல்ல வசதியான வீட்டில் கூட்டுக்குடும்பமாய் வாழும்  தம்பதிகள் .வீட்டில் பணிப்பெண் இருந்தும் தன் கையால் சமையல் செய்து பரிமாறும்  நல்ல பெண் தான் நாயகி. நாயகன் தன்  கம்பெனில நடக்கும் பார்ட்டிக்கு தன் மனைவியோட போறாரு. அவரு ப்ரமோஷன்ல லண்டன் போவதாக பேச்சு. அதைக்கொண்டாடற வேளைல அது கேன்சல் ஆகும் சூழல்  அது சம்பந்தமா தன் ப்ரமோஷனுக்கு உலை வெச்சதா நம்பும் ஆள் கிட்டே நாயகன் வாக்குவாதத்தில் ஈடுபடும்போது அதைத்தடுக்க வரும் தன் மனைவியை நாயகன் “பளார்”


ஏதோ கோபத்துல அடிச்ட்டேன், டென்ஷன் .  அப்டினு நாயகன் தன் தரப்பு வாதத்தை முன் வெச்சாலும் நாயகியால் அதை ஜீரணிச்சுக்க முடியல முன் போல சகஜமா அவளால இருக்க முடியல . மனமாற்றத்துக்காக தன் தாய் வீடு போறதா சொல்லிட்டு கிளம்பறா

நாயகன் , நாயகி இருவருக்கும்  ஏற்பட்ட மனஸ்தாபம் என்ன ஆச்சு?அவங்க ஒண்ணு சேர்ந்தாங்களா? இல்லையா? என்பதே மிச்ச மீதி திரைக்கதை 


நாயகனின் ஆணாதிக்க மனப்பான்மை ஓப்பனிங்  சீன்லயே இயக்குநர் வெளிப்படுத்தி இருக்காரு  “ ஏங்க , நான் கார்  ஓட்ட கத்துக்கவா?     “ வேணாம், நீ புரோட்டா சுட முதல்ல கத்துக்க போதும்” 
  

நாயகியா வரும் டாப்ஸி பண்  மிக அமைதியான , ஆழமான நடிப்பு . பல இடங்களில் மவுனங்களால் தன் வலியை  பார்வையாளர்களுக்கு கடத்தி இருக்கிறார். குறிப்பாக  பார்ட்டியில் அத்தனை பேர் முன்னிலையில் அறை வாங்கியதும் அவர் அதிர்வது , உறைவது எல்லாம் அபாரம் 


வக்கீலாக வரும்  பெண்ணின் நடிப்பும் கம்பீரம். அவர் டாப்சியிடம் சில பாடங்கள் கற்றுக்கொள்வதை தன் பார்வையாலேயே சொல்கிறார். டாப்சியின் வீட்டில் பணிப்பெண்னாக வருபவர் தன் கணவனால் அடிக்கடி அறை வாங்குவதை விளையாட்டாக  நாயகியிடம் சொல்லி வரும்போதே  இது ஒரு டீசர் தான் என இயக்குநர் நமக்கு குறிப்பால் உணர்த்துகிறார்.

படத்தின் ஜீவனான அம்சங்கள் இரண்டு .
 1  நாயகி தனக்கு ஜீவனாம்சம் வேண்டாம்  என்று திட்டவட்டமாக இருப்பது
 2  கணவன் மேல் போலீஸ் புகார் எல்லாம் வேணாம் என பெருந்தன்மையாக சொல்வது 

நாயகியின் சகோதரன், அவரின் மனைவி இருவருக்குள் ஏற்படும் பிணக்குகள் பின் இருவரும் இணைவது ஒரு எக்ஸ்ட்ரா கவிதை எபிசோட் . 

 நாயகின் அருகாமை வீட்டுப்பெண் ( கணவன் இல்லாதவர் ) மகள் இருவருக்குமான உரையாடல்கள் கொஞ்சம் செயற்கை என்றாலும் ரசிக்க வைக்கிறது

தன் பிரமோஷன் , தன் பதவி , தனக்கான ஏமாற்றம் என தன்னைப்பற்றியே சிந்திக்கும் நாயகனின் பாத்திரப்படைப்பு  கொஞ்சம் வில்லத்தனம் தான் 

 அவர்  ஒரு முறை கூட மனைவியிடம் மனதார மன்னிப்புக்கேட்கவில்லை என்பதும் குறைதான் நாயகிக்கு , ஏதோ சமாதானப்படுத்துவதற்காகத்தான் சாரி சொல்கிறார்


சபாஷ் இயக்குநர் 

1  பெண்கள் தங்கள் சுயத்தை இழப்பது  கல்யாணத்துக்குப்பின் தான் என்ற கருத்தை படத்தில் வரும் ஒவ்வொரு பெண் பாத்திரங்கள் மூலமும் வெவ்வேறு கோணத்தில் சொல்லி இருப்பது அபாரம் 

2 படத்தில் ஏகப்பட்ட  கேரக்டர்கள் இருந்தாலும் எல்லோருக்கும்  முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் அமைத்தது 


3 படத்தைப்பார்க்கும் ஆண்கள் அடுத்த முறை தன் மனைவியை அறையும் முன்/அடிக்கும் முன் ஒரு  நிமிசமாவது தயங்குவார்கள், அந்த அளவுக்கு 
ஒரு இம்பேக்ட்டை படம் தந்திருக்கும்



 நச் வசனங்கள் 


 1   நீ என்னை விரும்பறே, நான் உன்னை விரும்பறேன், எதுக்கு மேரேஜ்?


2 என் பொண்ணு ஏதாவது தப்பு பண்ணினா அதை மன்னிச்சிடுங்க அப்டினு உங்க அப்பா மேரேஜ் டைம்ல என் கிட்டே சொன்னாரு

 ஓஹோ, இத்தனை வருசத்துல நான் ஏதாவது தப்பு செஞ்சேனா? 

 டீயை ரொம்ப நேரம் கொதிக்க வெச்சுடுவே , அவ்ளோ தான்

3   அம்மா சமையலை சிலாகிக்கறவங்க அவங்களையே சமைக்க கொண்டாந்துடலாமே? 

4   கல்யாணம் பண்ணிக்கோ

 ஏன்? சந்தோசமாதானே  இருக்கேன்?

 ,மேரேஜ் பண்ணிக்கிட்டா இன்னும் சந்தோசமா இருப்பே 

5  இந்தப்பொண்ணுங்களை எதுக்குதான் ட்ரைவ் பண்ண விடறாங்களோ?

 6  அம்மாக்களுக்கு எப்பவுமே சாய்ஸ் என்பது இருந்ததில்லை 


 7  என்னை ஏன் அடிச்சே?

 அதுக்கு லைசென்ஸ் எடுக்கனுமா? 




8   முத டைம் தானே அறைஞ்சிருக்கார்? தப்பில்லையே?

 ஓஹோ .  நான் உன்னை முத டைம் “ ஏமாத்திட்டா”  இது ஜஸ்ட் முத தப்பு தானே?ன்னா ஒத்துக்குவியா? 


9  குடும்பப்பெண்ணுக்கு சகிப்புத்தன்மை வேணும்

 இதைத்தான் என் அம்மாவுக்கு அவங்க அம்மாவும், அவங்களுக்கு அவங்களோட அம்மாவும் காலம் காலமா சொல்லிக்குடுத்து  வளர்த்து இருக்காங்க்.  ஏன்? ஆணுக்கு பொறுமை இருக்கக்கூடாதா?

10   வெற்றி எப்போதும் பலதரப்பட்ட  சிந்தனைகளை , மனிதர்களை உருவாக்க வல்லது 

11 . வெறும் நன்றினு மட்டும் எஸ் எம் எஸ் அனுப்புனா போதுமா ? புது ஆளுங்க அறிமுகம் அதிகம் இல்லாதவங்க பண்றது அது 


12   நாங்க எல்லாம் சகிப்புத்தன்மையோட வாழ்ந்துட்டோம்

 ஓஹோ , அந்த சகிப்புத்தன்மையால சந்தோஷமா இருந்தீங்களா>?


 அது வந்து.... ம்.. இல்லை 


13   அம்மா சந்தோசமா இருந்தா தான் பேபி சந்தோஷமான  சூழலில் பிறக்கும் 


16  சரியா , கச்சிதமா நடந்துக்கறதால மட்டு,ம் நமக்கு மகிழ்ச்சி கிடைச்சிடாது 

 சி.பி கமெண்ட் =  இது பெண்களுக்கான படம்  மட்டும் அல்ல, ஆண்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் . இப்படி ஒரு சூழல் ஆண்கள் வாழ்வில் வந்தால் அதை எப்படி ஃபேஸ் பண்றது? என படிப்பினை தரும் படம் , டோண்ட் மிஸ் இட் . அமேசான் பிரைம் ல கிடைக்குது ,ரேட்டிங்   3.25 / 5 

0 comments: