Friday, June 12, 2020

Gulabo Sitabo ( ஹிந்தி) 2020 - சினிமா விமர்சனம் ( காமெடி(!!??) மெலோ டிராமா)


Gulabo Sitabo Online Release: Is it the Face of the Pandemic ...
ஒரு எழுத்தாளரோட பிரமாதமான சிறுகதையும் அதன் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டும்  எடிட்டருக்கு ரொம்ப பிடிச்சுப்போய்டுது. அவரு  அந்த ரைட்டரைக்கூப்பிட்டு இந்தக்கதையை ஒரு நாவலா ரெடி பண்ணுங்க , 15 வார தொடர்கதையா போட்டுடலாம்கறாரு. ரைட்டருக்கு கசக்குதா? ஓக்கே சொல்லிடறாரு. ஆனா சிறுகதை தந்த தாக்கத்தை நாவலால தர முடியலை. எல்லாரும் அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை மட்டும் தான் சிலாகிச்சாங்க , மொத்த நாவலை பெரிய அளவில் யாரும் வரவேற்கலை. 

மேலே சொன்னது சும்மா ஒரு கற்பனை. இந்தப்படத்தோட   ஸ்க்ரிப்ட் ரைட்டர்  ஜூஹி சதுர்வேதி திறமையான திரைக்கதை ஆசிரியர் தான் . ஆனா க்ளைமாக்ஸ் ல வர்ற 15 நிமிச பிரமாதமான காட்சி கொடுக்கும் தன்னம்பிக்கையால  மத்த அம்சங்களை கவனிக்க தவறிட்டார்னு சொல்லலாம். படம் ரொம்ப ஸ்லோ. . 2 மணி நேரம் ஓடற படம் 3 மணி நேரம் ஓடற மாரி ஒரு ஃபீலிங்

 இதை தமிழ்ல  ரீமேக் பண்ணா  கமல் + அமரர் கிரேசி மோகன் + இளையராஜா  + பி சி ஸ்ரீராம் கூட்டணின்னா கலக்கலா இருக்கும்

சரி கதைக்கு வருவோம். ஹீரோ 75 வயசானவர். அவருக்கு 90 வயசு ஆன மனைவி . ஏன் 15 வருட வித்தியாசம்?கறதுக்கு க்ளைமாக்ஸ்ல விளக்கம் இருக்கு மனைவி படுத்த படுக்கையா இருக்கு .மனைவிக்கு சொந்தமான மேன்சன்ல  பல குடும்பங்கள் வாடகைக்கு தங்கி இருக்காங்க. அந்த வாடகை தான் இவங்களுக்குப்படி அளக்குது.


தாவணிக்கனவுகள் ஹீரோ மாதிரி இதுல இன்னொரு ஹீரோ  இவருக்கு 3 தங்கச்சிங்க. இவங்களை எப்போ கரை சேர்க்கறது? நாம எப்போ காதலியைக்கரம் பிடிக்கறது?னு அங்கலாய்ப்போட இருக்காரு .வாடகை கொடுக்காம  டிமிக்கி  அடிப்பாரு , லேட் பண்ணுவாரு, டிராமா போடுவாரு


நான் பாடும் பாடல் படத்துல கவுண்டமணி ஹவுஸ் ஓனரா வந்து பண்ற அலப்பறைகள் எல்லாம் நமக்கு செம சிரிப்பு . இதுல  ஹவுஸ் ஓனர், வாடகைக்கு குடி இருப்பவர்கள்  வெச்சு கொஞ்சம் காமெடி ட்ரை பண்ணி இருக்காங்க. 

 திடீர்னு ஆர்க்கியாலஜி  டிபார்ட்மெண்ட்ல இருந்து வந்து  இதை அரசு TAKE OVER பண்ணப்போகுதுனு சொன்னதும் பிரச்சனை ஸ்டார்ட் ஆகுது

75 வயசு ஆளா அமிதாப்ஜி கல்க்கிட்டாரு , உடல் மொழி அபாரம், கூன் விழுந்த மாதிரி கடைசி வரை பர்ஃபார்மென்ஸ்.

ஆயுஷ் குரானா வழக்கம் போல கலக்கல் நடிப்பு


இசை  சுமார் ரகம் தான், இன்னும் கலக்கி இருக்கலாம். 3  பாடல்கள் இருக்கு , பரவால்ல

 ஒளிப்பதிவு , ஆர்ட்  டைரக்சன் பக்கா




 சி.பி கமெண்ட் - இது ஜனரஞ்சகப்படம் அல்ல. எல்லோருக்கும் பிடிக்காது. ரேட்டிங்   - 3 / 5  



0 comments: