Monday, June 22, 2020

CHOLA ( SHADOW OF H2O)-மலையாளம் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)

22.11.1984 ல ஆர் சி சக்தி இயக்கத்தில் வெளி வந்த சிறை படம் செம ஹிட். அனுராதா ரமணன் எழுதிய  சிறுகதைக்கு  தகுந்த திரைக்கதை எழுதி இருப்பார் இயக்குநர். தன்னை வன்புணர்வு  செய்தவனையே போராடி  மணம் முடிக்கும் நாயகியின் கதை. பொதுவா  ஒரு பெண்ணை வன் புணர்வு செய்பவன் சமுதாயத்தால் , சட்டத்தால் தண்டிக்கப்படனும்.அப்போதான் அது போன்ற கொடுஞ்செயல்கள்  பின் நடைபெற  சாத்தியங்கள்  குறையும். ஒரு பெண்ணை  கொடுமைக்கு உள்ளாக்கினால் அவளை திரும்ணம் செய்து கொள்ளலாம்   எனும் எண்ணம் வளர்ந்தால் பல தீய விளைவுகல்  உண்டாகும்


கிட்டத்தட்ட அதே கதைக்கரு ஆனால் வேற திரைக்கதை என வந்த படம்  14/4/1989  ரிலீஸ் ஆனா இரா பார்த்திபனின்   புதிய பாதை . தன்னை வன்புணர்வு செய்த நாயகன் வீட்டு எதிரே குடி வந்து கொஞ்சம் கொஞ்சமா அவன் மனதை மாற்றி   திருமணம் செய்து  கொள்ளும்  ஒரு பெண்ணின்  கதை . இது அதிரி புதிரி ஹிட் ஆனது நக்கலான வசனங்கள் , அற்புதமான நடிப்பு என பல பிளஸ்கள்  இருந்தன. 

இந்த இரண்டு படங்களுக்கும் முன்னோடியாக  14/8/1982ல் ரிலீஸ் ஆன சகலகலா வல்லவன் பிளாக் பஸ்டர் ஹிட்  நாயகனின் தங்கையை வன்புணர்வு  செய்த  வில்லனை பழி வாங்க நாயகன் கிராமத்து கெட்டப்ல இருந்து நகரத்து  கெட்டப்பில் மாறி வில்லனின்  தங்கையை  காதலித்து மணப்பதும் தன் தங்கைக்கு மாறு வேடம் (!!!) அணிவித்து   வில்லனுக்கு மணம்  முடித்து வைப்பார் , கமலின்  இந்தப்பட வசூலை  இதுவரை வேறு எந்த கமல் படமும்  முறியடிக்கவில்லை 


 தமிழ் சினிமாவுக்கு இவ்வகைப்படங்கள் புதுசல்ல , எம் ஜி யார் , சிவாஜி காலத்திலேயே நடை  முறையில்  இருந்ததுதான், ஆனா கிளைக்கதையா வரும். நாயகனின் சகோதரியை வில்லன்  வன் புணர்வு  செய்திருப்பான். போலீசில்  புகார் அளித்து வில்லனுக்கு ஜெயில் தண்டனை வாங்கித்தராமல்  நாயகன்  போராடி  வில்லனுக்கே மணம்  முடிப்பார்


6.12.2019 ல்  ரிலீஸ் ஆன CHOLA ( SHADOW  OF H2O)-மலையாளம்  விமர்சகர்களால்  மிகவும் கொண்டடப்பட்டு கேரள மீடியாக்களில் பரபரப்பாக  விவாதிக்கப்பட்ட  இப்படத்தைப்பற்றிப்பார்ப்போம் 


கேரளாவில் உள்ள  ஒரு கிராமம். அங்கே  இருக்கும் ஒரு இளம் காதல்  ஜோடி  ஒரு நாள் கட் அடிச்ட்டு நகரத்தை சுத்திப்பார்க்க வர்றாங்க பொதுவா  இது மாதிரி கிளம்பும் காதலர்கள்  தனிமைல தான் இருக்க விரும்புவாங்க . கிளம்பறதும் தனிமைக்காகத்தான் , ஆனா இதுல நாயகனின்   முதலாளியுடன் அவரது  ஜீப்லயே  போறாங்க . அப்படி  ஒரு முடிவை காதலன் ஏன் எடுத்தான் என்பதற்கு பதில்  இல்லை . 


ஒரு நாள் ப்ரோக்ராம் தான் இது. காலை 6 மணிக்கே கிளம்பறாங்க.  என்ன பொய் சொல்லிட்டு அவ்ளோ வெள்ளென நாயகி கிளம்புனா  ? என்பதற்கும் பதில் இல்லை .ஸ்பெஷல் கிளாஸ்னு பொய் சொன்னாக்கூட 8 மணி தான் சரியான டைமா இருக்கும் 


3 பேரும்  ஜீப்ல்  போறாங்க.கடல்ல காதல்  ஜோடி குளிக்குது. பின் டிரஸ்  மாற்ற   ஒரு ஓரமா மறைவில் வண்டியை நிறுத்த  நாயகன் கேட்க  ஓனர் என்னடான்னா  ஒரு பாடாவதி லாட்ஜூக்கு கூட்டிட்டுப்போறார். .


நாயகன்  கிட்டே   பணம்  கொடுத்து  கடைல போய் சரக்கு வாங்கிட்டு வா அப்டினு அனுப்பறார். அந்த  லூசுக்காதலன்  ஏன் ஜீப்ல தானே வந்தோம்? ஆன் த வே ஏன் வாங்கலை?னு கேட்டிருக்கலாம், கேட்கல . 


 காதலியையும் முதலாளியையும் ரூம்ல விட்டுட்டு கடைக்குப்போறான், அந்த  கேப்ல  ஓனர் நாயகியை  வன் புணர்வு  செய்து விடுகிறார். 

திரும்பி  வந்த  காதலன்  என்ன முடிவெடுத்தான்?  வில்லன்  எப்படி  டீல் பண்ணினான்? நாயகியின்  முடிவு என்ன? இந்த மூன்றுக்குமான  கேள்விகளுக்கு  நீங்க கற்பனையே பண்ணிப்பார்க்க முடியாத ஒரு புது திரைக்கதையை  முன் வைக்கறாங்க 




வில்லனா , முதலாளியா  ஜோசப் பட ஹீரோ  ஜோஜூ ஜார்ஜ் அருமையான நடிப்பு , உடல் மொழி . வழி  எங்கும் சிணுங்கிக்கொண்டே வரும் நாயகியை  மிரட்ட மறைமுகமாக   நாயகனை கண்டித்துக்கொண்டே  இருப்பது சுவராஸ்யம்


 நாயகியா  நிமிஷா சசாயன் பிரமாதமான நடிப்பு , நாம தனியா பஸ்ல போலாம், இவரு கூட வேனாம் என  மருகுவதும்  , எப்போதும்  டென்சனாக இருப்பதும்  விழிகளில் , உடல் மொழியில்  பதட்டத்தைக்கொண்டு வருவதும் கலக்கலான   நடிப்பு 


காதலனாக   அகில்  விஸ்வநாத்  கேரக்டர்  ஸ்கெட்சில்  இயக்குநர் சொதப்பி  இருப்பதால் அவர் மீது வர வேண்டிய பரிதாபம் வராமல் எரிச்சல்  தான் வருது


 சபாஷ்  இயக்குநர்


1 லொக்கேஷன்  செலக்‌ஷன் , ஒளிப்பதிவு  இரண்டும் தான் படத்தின் மிகப்பெரிய  பிளஸ். அட்டகாசமான  அருவி , ஆறு  சூழலை  அழகிய விதத்தில் ரசனையாக படம் பிடித்த  ஒளிப்பதிவாளருக்கு  ஒரு ஷொட்டு  . பனி படர்ந்த காலைப்பொழுது , மழையின் குளிர்ச்சி  எல்லாவற்ரையும்  உணர வைத்த  கேம்ரா அபாரம்


2   நாயகி  நிமிஷாவின்  நடிப்பு , அவரது இளமை  படத்தின் மற்றும் ஒரு பிளஸ். பின் பாதி திரைக்கதை , நாயகி எடுக்கும்  முடிவு , க்ளைமாக்ஸ்   அனைத்தும்  மாறுபட்டது


 லாஜிக் மிஸ்டேக்ஸ்   , இயக்குநரிடம் சில கேள்விகள்


1  ஒரு  ஓனரிடம்  வேலை செய்யறவனுக்கு  அவரோட  கேர்க்டர்  எப்டி? ஆள் என்ன டைப்? பெண்கள் விஷயத்தில்  எப்படிப்பட்டவர்? என்பது  நிச்சயமாக  தெரிஞ்சிருக்கும். அப்டி  இருந்தும்  எந்த நம்பிக்கையின் அடிப்படையில்  காதலியை தனிமையில்  விட்டுட்டு போறார்? ஜீப் பயணத்துக்கு எப்படி  ஒத்துக்கிட்டார்? முதல்ல  லவ் ஜோடிகள்  போடும் திட்டம் முதலாளிக்கு  எப்படி  தெரிஞ்சுது?அவர்  ஏன் கூட வர்றார்?

2 காதலன்  கடைக்குப்போகும்போது  காதலி நான் தனிமைல   ஓனர் கூட இருக்க மாட்டேன், உங்க கூட நானும் வர்றேன்னு அடம் பிடிச்சிருக்கலாமே? அப்டி ஏதும் செய்யலை 


3  பாத்ரூம் ல் நாயகி  கதவை  தாழ் போட்டுட்டு உள்ளேயே  இருந்திருக்கலாம். கதவை  வில்லன் உடைக்க வழி இல்லை , சத்தம்  கேட்டா லாட்ஜ் ஓனர், மேனேஜர் யாராவது என்ன ஏது -னு கேட்டு வருவாங்க ,  ஆனா நாயகி   அப்டி செய்யலை 


4   வில்லன் நாயகனை விட  2 மடங்கு  உடல் எடை , உடல் பலம்  கொண்டவர் , எதிர்க்கும் நாயகனை வில்லன் லெஃப்ட் ஹேண்ட்ல  டீல் பண்றார். ஆனா க்ளைமாக்ஸ்ல மட்டும் நாயகன்  வீறு ல்கொண்டு  எழுவதும்  ,தாக்குவதும் நம்பும்படி இல்லை 


பெற்றோரை நம்பு , வேறு யாரையும் எக்காலத்திலும் எந்த  சூழலையும் நம்பாதே எனும் கருத்தை  சொல்லும்  படம்  என்ற அளவில்  பாராட்டலாம். ரேட்டிங்   2.75  / 5 , அமேசான் பிரைமில்  கிடைக்குது

0 comments: