Monday, March 30, 2020

அரசு இயந்திரம் vs அரசாங்கம் #corona

*டாக்டர். சில்வியா பிளாத் - முகநூல்......*

அரசு இயந்திரம் vs அரசாங்கம் 

#one_week_of_lock_down

கடந்த ஏழு நாட்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நோயாளிகள் ஆராயும் போது 
கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்துள்ளன 
1. March 21st ( 283 cases  ) - 
March 22nd ( 396 cases )
Increase by 39.92 %

2. March 22nd ( 396 cases  ) - 
March 23rd ( 468 cases )
Increase by 18.18 %

3. March 23rd ( 468 cases  ) - 
March 24th ( 566 cases )
Increase by  23.43 %

4. March 24th ( 566 cases  ) - 
March 25th ( 645 cases )
Increase by  13.95 %

5. March 25th ( 645 cases  ) - 
March 26th ( 720 cases )
Increase by just 11.62 %

6. March 26th ( 720 cases  ) - 
March 27thh ( 886 cases )
Increase by just 12.30 %

7. . March 27th ( 886 cases  ) - 
March 28th ( 933 cases ; as of now from covid19india.org)
Increase by just 5.31 % as at 5 pm 28th March 2020.

Every third day it will double அப்படிங்கிற டிரெண்ட் every fourth day double ன்னு extend பண்ணி இருக்காங்க. இப்படி பண்ணுறத நோய் இன்னும் நம்ம கையை மீறிப் போக வில்லை என்பதைக் காட்டுகிறது. 

லாக் டவுன் க்கு அப்புறம் இத்தாலி, அமெரிக்கா மாதிரி நோயாளிகள் எண்ணிக்கை அப்படியே டக்குன்னு உயராமல் கொஞ்சம் ஸ்டெடியா தான் உயர்கிறது. 

உண்மையில் உலக நாடுகள் எல்லாம் இந்தியாவில் எதிர் பார்த்த அளவுக்கு இல்லாமல் இப்படி ஸ்டெடியா ஒரு வாரம் தாங்கினதே ஆச்சரியமா பார்க்கப் படுகிறது. ஏனெனில் இந்தியாவில் உள்ள சூழ்நிலைகள் இந்த வைரஸ் வெகு வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்கின்றன. இருந்தாலும் இந்தியா இதனுடன் நின்று போராடும் வலிமை இன்னும் எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை.

 ஆஸ்திரேலியா கவர்மென்ட்க்கு அங்கு உள்ள மருத்துவர்கள் அனைவரும் லாக் டவுன் வேண்டும் என்று மெயில் எழுதியும் கண்டு கொள்ளாத அரசாங்கம் போல இல்லாமல் இங்கு உடனடியாக லாக் டவுன் அமல் படுத்தப்பட்டதிற்கு காரணம் இந்திய அரசு இயந்திரம் ஆகும். 

அரசாங்கம் வேறு அரசு இயந்திரம் வேறு. அரசாங்கத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அரசு இயந்திரம் அதன் நிர்வாகிகளைக் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் தன்னிச்சையாக இயங்கும் வலிமை கொண்டது. இதனைக் அந்த அந்த ஏரியாவில் உள்ள மக்களின் நன்மைக்காக எந்த அளவிற்கு பயன்படுத்தலாம் என்பது மட்டுமே மக்கள் பிரதிநிதிகளுடன் இருக்கிறது. 

டெல்லி மற்றும் உத்திர பிரதேசம் அரசாங்கம் அதனுடைய வேலை வாய்ப்பு சார்ந்து வெளியே வந்த மக்களை அரவணைப்புகள் செய்யத் தவறியது ஆளும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது. 

இதில் கொரோனா தொற்று செயல்பாடுகளில் தமிழ் நாடு மற்ற எந்த இந்திய மாநிலங்களின் விட மற்ற உலக நாடுகளை விட முண்ணனியில் இருப்பதற்குக் காரணம் இந்த அரசு இயந்திரங்கள் அதிகாரிகளால் திறமையாக நிர்வாகம் செய்யப் படுவது மட்டுமே காரணம் ஆகும் 

முதல் வாரத்தில் கொரோனா பற்றி நாம் அச்சப்படத் தேவையில்லை என்று சட்டசபையில் பேசி விட்டு காலையில் வெளிநாடுகளில் இருந்து சில பேர் ஊருக்குள் புகுந்து விட்டனர் என்று டிவிட் போட்டு விட்டு, அடுத்ததாக கொரோனா ஊருக்குள் மின்னல் வேகத்தில் பரவுகிறது என்று சென்ற வாரத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் கொடுத்த செய்திகள் யாவும் மக்களை அச்சப்பட வைத்தன என்பது மட்டும் உண்மை. 

ஆனால் இந்த கால கட்டத்தில் தமிழ்நாட்டில் உண்மையில் என்ன நடந்தது என்று நோக்கும் பொழுது, ஏன் மின்னல் வேகத்தில் பரவிய கொரோனா ஏன் இன்னும் கட்டுக்குள் உள்ளது என்று பார்க்கும் போது நம்முடைய அரசு இயந்திரம் காரணம் என்று தெரிய வருகிறது. 

WHO வில் உள்ள Mike Ryon பேசும் போது நீங்கள் லாக் டவுன் பண்ணுவது மட்டும் நோயைக் கட்டுப் படுத்த முடியாது. கூடவே சேர்ந்து effective public health measures வேண்டும் என்று ஒரு பேட்டியில் கூறி இருந்தார் 

தமிழ் நாடு Dept of Public health இந்த ஒரு வாரத்தில் இறங்கி வேலை செய்யது உண்மை. இதன் இயக்குநர் டாக்டர் குழந்தை சாமி, இந்தப் பிரிவின் கீழ் வரும் ஓவ்வொரு ஊழியரையும் களத்தில் இறக்கி விட்டு உள்ளார் . இந்த போராட்டத்தில் உள்ள ரியல் unsung ஹீரோ இவர் தான் என்று தோன்றுகிறது. 

இரண்டாவது கட்ட இறுதியிலும் மூன்றாவது கட்ட ஆரம்பத்திலும் நின்று கொண்டு இருக்கும் தமிழ் நாடு வரும் வாரங்களிலும் இந்த மாதிரியே நின்று விட்டால் நாம் எதிர் பார்த்த அளவுக்கு இழப்புகள் எதுவும் ஏற்படாமல், தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்று தப்பிவிடலாம் 

தமிழ்நாடு பொதுச் சுகாதாரத் துறை- Dept of public health (DPH)  தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகம், எடுத்து உள்ள நடவடிக்கைகள் 

1)இந்த லாக் டவுன் கண்டிப்பாக தேவை என்று தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி ஏப்ரல் 14 ந்தேதி வரை லாக் டவுன் வாங்கியது 

2) வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் முகவரி வாங்கி அவர்களுடைய அட்ரஸ் தேடி வீடு வீடாக இவர்கள் தனிமைப்படுத்தி உள்ளார்கள் என்று நோட்டிஸ் ஒட்டியது 

3)அவர்களது குடும்பத்தினர் மற்றும் அந்த தெருவில் உள்ள மற்றவர்களுக்கு காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் இருக்கா என்று ஆய்வுகள் செய்தது. 

4)தமிழ் நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மேற்பட்ட நபர்களை இவ்வாறு தேடி ஆய்வு செய்து தனிமைப் படுத்தியது. இந்தியாவில் அதிக அளவில் நபர்களை கண்டு பிடித்து வீட்டில் தனிமைப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு தான். 

5)பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் ஒவ்வொரு 3 கிமீ அளவில் தனியாக, லாக் செய்து வீடு வீடாக சோதனை செய்யச் சென்றது. இதுவரை எந்த ஒரு உலக நாடும் இப்படி வீடு வீடாக சோதனை செய்ய செல்லவில்லை. சவுத் கொரியாவில் லாக் டவுன் செய்யாமல் கண்ணில் பட்ட அனைவருக்கும் பரிசோதனை செய்து தனிமைப் படுத்தப் பட்டது. 

6) டிரோன் மூலமும், தீயணைப்பு வண்டிகள் மூலம், தண்ணீர் வண்டிகள் மூலமும் கிருமி நாசினி மருந்துகள் தெளித்து ஊரையே மொத்தமாக சுத்தம் செய்ததது. அதுவும் Drone மற்றும் டெக்னாலஜி உதவி கொண்டு மருந்து தெளித்தது உலகிலேயே முதல் முறையாக என்று தாரளமாக சொல்லலாம் 

7)கொரோனா பாதிப்பு அடையும் High risk ஆட்கள் பற்றிய விழிப்புணர்வு ஊரில் மீடியாக்கள் மூலம் அனைவரும் அறிந்து கொள்ள வைத்த IEC நடவடிக்கைகள்

8) இப்படி கொரோனா பாதிப்புடன் வெளிநாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் என்று சந்தேகப் படுபவர்கள் ஊரில் கண்டறிய இயலாத போது GPS தொழில் நுட்பம் கொண்டு அவர்கள் சென்று வந்த இடங்களை கண்டறிதல் என்று ஜெர்மனியில், சவுத் கொரியாவில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் வைத்து தேடும் வேட்டை ஆரம்பித்தது 

 என்று வெளிப்படையாக சொல்லாத நடவடிக்கைகள் என்று தமிழக அரசு இயந்திரங்கள் உலகத் தரத்தில் இயங்குவது  முக்கியமாக இந்த ஒரு வாரம் கண்டிப்பாக பாராட்டுக்கு உரியது. இந்த கால கட்டத்தில் கண்டிப்பாக நாம் ஒரு பாதுகாப்பான கைகளில் இருக்கிறோம் என்று உணர வைத்தது இதனுடைய முக்கிய வேலை. 

ஆனால் சென்ற ஞாயிறு சுய ஊரடங்கு நன்றாக நிறைவேற்றி விட்டு மாலை ஐந்து மணி அளவில் அனைவரும் வெளியே வந்து கை தட்டி உள்ளே இருந்த நோக்கத்தையே கெடுத்தது போல இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்து கட்டுக்குள் வைத்து இருப்பதை மக்கள் வெளியே வந்து கெடுத்து விடுவது பார்க்கும் போது நிறைய வருத்தமாக உள்ளது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை இறைச்சி வாங்க அலை மோதிய கூட்டம் சென்ற ஒரு வாரத்தின் வேலையை கெடுத்து விட்டது என்பது மட்டும் தான் உண்மை. 

இந்த வாரம் எப்போதும் இல்லாதது விட மிக முக்கியமான ஒன்று. காரணம் போன வாரம் நாம் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் மூலம் அனுப்பி வைத்த இளைஞர்கள் மூலம் கொரோனா அதிக அளவில் பரவ வாய்ப்பு இந்த வாரம் தான்.

ஏனெனில் இந்த கிருமி பாதித்த ஐந்து முதல் ஏழு நாட்களில் காய்ச்சல் வர ஆரம்பிக்கும். சென்ற திங்கள்கிழமை சென்றவர்களுக்கு இந்த திங்கள், செவ்வாய் முதல் லேசான காய்ச்சல் மற்றும் உடம்பு வலி ஆரம்பிக்கும். எனவே ஒரு பகுதியில் நிறைய பேருக்கு காய்ச்சல், உடம்பு வலி, இருமல் போன்றவை ஒரே நேரத்தில் வந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகவல் சொல்லவும். 

பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் உங்களை ஆய்வு செய்து தனிமைப் படுத்த வேண்டுமா என்று தீர்மானம் செய்வார்கள். 

இந்த வாரம் போன வாரத்தை விட மிகவும் விழிப்புணர்வுடன், விழிப்பாக இருக்க வேண்டும் என்ற செய்தி மிகவும் முக்கியமானது. எனவே காய்கறி வாங்கக் கூட மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை வெளியே வருவது நல்லது. ஒரு வாரமும் வெளியே வராமல் இருந்தால் அதை விட நல்லது 

இன்னும் இரு வாரங்களுக்கு இந்த மாதிரி இழப்புகள் எதுவும் இல்லாமல் தாண்டி விட்டோம் என்றால் இந்த மிகப் பெரிய ஆபத்தில் இருந்து எளிதாக தப்பிக்க முடியும். 

மக்கள் எல்லாம் வழக்கம் போல டிக்டாக் பார்த்துக் கொண்டும் டிக்டாக் பண்ணிக் கொண்டும் வீட்டுக்கு உள்ளேயே சந்தோசமா இருந்தா போதும். மற்றது எல்லாம் அரசாங்கமும் அரசாங்க பணியாளர்களும் பார்த்துக்குவாங்க. யாரையும் தயவு செய்து வீட்டை விட்டு வெளியே அனுப்பாதீங்க.  வெளியே யாரையாவது பார்த்தாலும் உள்ள போகச் சொல்லுங்க . அரசாங்கம் சொல்லுறது அப்படியே கடைப்பிடிக்க வேண்டும்.

#stay_at_home 

#stay_at_home 

#stay_at_home

thanks டாக்டர். சில்வியா பிளாத் - முகநூல்......

0 comments: