Tuesday, March 31, 2020

தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா! எப்படி பரவியது,ஒரு அலசல்

தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா! எப்படி பரவியது, யார் மூலம் பரவியது, முதன்முறையாக முழு தகவலும்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் இதுவரை 67 பேரை தாக்கியுள்ளது என தெரியவந்துள்ளது. இவர்கள் 67 பேரும் யார்? எங்கிருந்து வந்தார்கள்? யார் மூலம் யாருக்கு பரவியது? முதலிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விவரங்களை அறிந்து கொள்வதன் மூலம் எவ்வாறு பரவுகிறது, இதை தடுப்பது எப்படி என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என கருதுகிறோம்.

#மார்ச்7 : தமிழகத்தின் முதல் நோயாளியாக ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45 வயது ஆணுக்கு கடந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் சென்னை விமான நிலையத்திற்கு பிப்ரவரி 28ஆம் தேதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#மார்ச்18 : இரண்டாவது நோயாளி 25 வயதான இளைஞர் டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு திரும்பியவர் என தெரியவந்தது. இவர் கடந்த மார்ச் 12ஆம் தேதி சென்னைக்கு திரும்பிய நிலையில் மார்ச் 18ஆம் தேதி அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. ''

#மார்ச்__20 : மூன்றாவது நோயாளி சென்னையை சேர்ந்த 21 வயதான ஆண். இவர் அயர்லாந்து நாட்டில் இருந்து
மார்ச் 17ஆம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியவர்.

#மார்ச்21 : நான்காவது நோயாளியாக 65 வயது ஆண் சென்னையை சேர்ந்தவர் இவர் நியூசிலாந்து நாட்டில் இருந்து சிங்கப்பூர் வழியாக மார்ச் 12 ஆம் தேதி சென்னை வந்தவர்.

#மார்ச்11: ஐந்து மற்றும் ஆறாவது நோயாளிகள் 69 வயது மற்றும் 75 வயதான ஆண்கள் தாய்லந்து நாட்டினை சார்ந்த மதப்பிரச்சார குழுவை சார்ந்தவர்கள். இவர்கள் ஈரோட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக கண்டறியப்பட்டனர். இவர்கள் டெல்லியிலிருந்து ஈரோட்டிற்கு டிரெயின் மூலம் வந்துள்ளது தெரியவந்துள்ளது.

#மார்ச்22 : ஏழாவது நோயாளியாக 25 வயது பெண் கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் ஸ்பெயின் நாட்டில் இருந்து டெல்லி, பெங்களூர் வழியாக கோயம்புத்தூர் மார்ச் 15ஆம் தேதி வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#மார்ச்20 : எட்டாவது நோயாளியாக 43 வயதான ஆண். இவர் துபாயில் இருந்து மதுரை வழியாக திருநெல்வேலி திரும்பியவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

#மார்ச்_20 : ஒன்பதாவது நோயாளியாக 64 வயது பெண் சென்னையை சேர்ந்தவர். இவரும் அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வந்தவர் என்பது கண்டறியப்பட்டது.

#மார்ச்23 : பத்தாவது நோயாளியாக 25 வயது ஆண் சென்னையை சேர்ந்தவர். இவர் லண்டனில் இருந்து பெங்களூர் விமானத்தில் வந்து சென்னைக்கு காரில் வந்தவர் என்பது கண்டறியப்பட்டது.

#11ஆவது நோயாளியாக 48 வயதான ஆண் இங்கிலாந்து நாட்டில் இருந்து திருப்பூர் திரும்பியவர் என்பது தெரியவந்தது.

#12வது நோயாளி இவர்தான் முதல் உள்ளூர் நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மதுரையை சேர்ந்த 54 வயதான ஆண். இவர் 5 மற்றும் 6 ஆவது நோயாளிகளான மத பிரச்சார குழுவுடன் தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மரணித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#மார்ச்24 : பதிமூன்றாவது நோயாளி 74 வயதான ஆண் சென்னை போரூரை சேர்ந்த இவர் அமெரிக்காவில் சிங்கப்பூர் வழியாக சென்னை திரும்பியவர்.

#14ஆவது நோயாளி சென்னை புரசைவாக்கத்தினை சேர்ந்த 52 வயதான பெண். இவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியவர் என்பது கண்டறியப்பட்டது.

#15வது நோயாளி சென்னை கீழ்கட்டளை சேர்ந்தவர். இவர் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து டெல்லி வழியாக சென்னை திரும்பியவர் என கண்டறியப்பட்டது.

#16ஆவது நோயாளி சென்னை கோட்டூர்புரத்தினை சேர்ந்த 65 வயதான ஆண் இவரும் நியூசிலாந்து நாட்டில் இருந்து சென்னை திரும்பியவர் என தெரியவந்தது.

#17ஆவது நோயாளி சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த 55 வயதான பெண்.

#18வது நோயாளி 25 வயதான ஆண் சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் இவர் லண்டனில் இருந்து பெங்களூர் விமான நிலையம் வந்து சென்னை வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#மார்ச்25 : 19,20, 21, 22 நான்கு பேரும் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்தவர்கள். மதப் பிரச்சாரம் செய்ய வந்து இந்தியாவில் தங்கியிருந்தவர்கள். இதில் நான்கு பேருக்கு சேலத்தில் கொரோனா உறுதியானது.

#23ஆவது நோயாளி சென்னையை சேர்ந்த 63 வயதான ஆண். இவர் மேற்கண்ட நான்கு 19-22 நோயாளிகாளான இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#24ஆவது நோயாளி 18 வயது ஆண், இவர் டெல்லியில் இருந்து வந்த இரண்டாவது நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர் என்பது கண்டறியப்பட்டது.

#25ஆவது நோயாளி 26 வயது ஆன வேலூரை சேர்ந்த இளைஞர். இவர் துபாய் நாட்டில் இருந்து இந்தியா திரும்பியவர் என தெரியவந்தது.

#26வது நோயாளியாக 63 வயதான ஆண் இவரும் ஐந்து மற்றும் ஆறாவது நோயாளிகளான தாய்லாந்து நாட்டைச் சார்ந்த மத பிரச்சார குழுவினருடன் பயணித்தவர் என்பது கண்டறியப்பட்டது.

#மார்ச்26 : 27-வது நோயாளி துபாயில் இருந்து திருச்சி திரும்பிய 24 வயது ஆண் என கண்டறியப்பட்டது.

#28ஆவது நோயாளி சென்னையைச் சேர்ந்தவர். இவர் லண்டனில் இருந்து திரும்பியவர்.

#29ஆவது நோயாளி சென்னையை சேர்ந்த 63 வயதான பெண். இவர் இருபத்தி எட்டாவது நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்.

#மார்ச்27 : 30 ஆவது நோயாளி 25 வயதான பெண் அரியலூரை சார்ந்தவர் இவர் சென்னையில் தங்கியிருந்து அரியலூருக்கு இடம்பெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

#31வது மற்றும் #32வது இவர்களிருவரும் 42 மற்றும் 46 வயதான ஆண்கள். தாய்லாந்து நாட்டை சார்ந்த நோயாளிகள் ஐந்து மற்றும் ஆறுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரியவந்தது.

#33வது நோயாளி 23 வயதான ஆண் அமெரிக்காவிலிருந்து திரும்பிய 14வது நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர் என தெரியவந்துள்ளது..

#34வது, #35வது நோயாளிகள் இரண்டுபேரும் மரணமடைந்த மதுரையை சேர்ந்த 12 ஆவது நோயாளி குடும்பத்தினர் என தெரியவந்தது.

#36வது நோயாளி 73 வயதான பெண் இவர் சென்னை பம்மலை சேர்ந்தவர்.

#37வது நோயாளி இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த மதப்பிரச்சாரம் குழுவுடன் தொடர்புடையவர் என தெரியவந்தது. 19 முதல் 22 நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர் என்பது தெரியவந்தது.

#38வது நோயாளி சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 29 வயதான ஆண்.

#மார்ச்28 : முப்பத்தி ஒன்பதாவது நோயாளி தஞ்சாவூரை சேர்ந்த 42 வயதான நபர் இவர் மேற்கிந்திய தீவுகள் நாட்டில் இருந்து திரும்பியவர் என தெரிய வந்தது.

#40வது நோயாளி லண்டனில் இருந்து திரும்பிய 49 வயதான ஆண் வேலூரை சேர்ந்தவர் என தெரிய வந்தது

#41வது நோயாளி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 60 வயதான ஆண் என தெரியவந்துள்ளது.

#42வது நோயாளியாக சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயதான இளைஞர் இவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியவர் என தெரியவந்தது.

#மார்ச்29 : நாற்பத்தி மூன்றாவது நோயாளியாக கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயதான பெண். இவர் நோயாளி 26 உடன் தொடர்பில் இருந்தவர் என தெரியவந்துள்ளது.

#44வது, #45வது மற்றும் #46ஆவது நோயாளிகள் 58 வயதான பெண், 10 மாத குழந்தை, 51 வயதான பெண் இவர்கள் மூவரும் மேற்கண்ட 43வது நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தினர் என தெரியவந்துள்ளது.

#47வது, 48, 49 மற்றும் 50 இவர்கள் நான்கு பேரும் முறையே 45, 48, 62 மற்றும் 67 வயதான ஆண்கள். டெல்லியில் இருந்து ஈரோடு திரும்பிய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மத பிரச்சார குழுவினருடன், அதே மாநாட்டு கூட்டத்தில் கலந்துகொண்டு டெல்லியில் இருந்து ஈரோடு திரும்பியவர்கள் என தெரியவந்துள்ளது.

#மார்ச்30 : இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா நோய் இருப்பது தெரிய வந்துள்ளது.

#51ஆவது நோயாளி மதுரையைச் சேர்ந்த பன்னிரண்டாவது நோயாளி குடும்பத்தினை சேர்ந்த ஆண் என்பது தெரியவந்துள்ளது

52 முதல் 55 வரை நான்கு நோயாளிகளும் அமெரிக்காவிலிருந்து திரும்பிய 42வது நோயாளியான 25 வயது மேற்கு மாம்பல இளைஞரின் குடும்பத்தினர் என்பதும், 52 வயது 76 வயது 15 வயது பெண்கள் மற்றும் 20 வயது ஆண் ஆகியோர் சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நோயாளிகள் 56 முதல் 65 வரை 10 ஆண்கள் அனைவருமே டெல்லியிலிருந்து ஈரோடு திரும்பியவர்கள். ஈரோடு திரும்பிய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மத பிரச்சார குழு உடன் இருந்தவர்கள். இவர்கள் ஏற்கனவே ஈரோட்டில் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 10 பேருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

#66வது நோயாளியாக சென்னையைச் சேர்ந்த 50 வயது பெண்மணி இவர் சென்னை பிராட்வெயை சேர்ந்தவர்

#67வது நோயாளியாக குளித்தலையை சேர்ந்தவர் இவர் டெல்லியில் இருந்து திரும்பியவர் என்பது தெரியவந்துள்ளது.

தவ்ஹீது ஜமாத் அமைப்பு சார்பில் தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 1500 பேர் பங்கேற்றனர்.1,500 பேரில் 981 நபர்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் 16 பேருக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் அடையாளம் காணமுடியாத அளவிற்கு தற்போது சிக்கல் நீடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மத பிரச்சார குழு மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலமும் அவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் மூலமும் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மற்றபடி சமூகத் தொற்று என்பது தமிழகத்தில் இதுவரை ஏற்பட்டதாக தெரியவில்லை. அரசும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், மத பொதுக் கூட்டங்களுக்கு சென்று வந்தவர்கள் உள்ளிட்டவர்களை தனிமைப்படுத்துவதில் தனி கவனம் கொள்வதால் கொரோனாவில் இருந்து தப்பிப்பது எளிதாக இருக்கும்.

அரசு அறிவித்து கொண்டிருக்கும் தனிமைப்படுத்துதல் தனிமைப்படுத்தல் தனிமைப்படுத்துதல் என்பதை அனைவரும் கட்டாயம் பின்பற்றுவோம் கொரோனாவில் இருந்து விடுபடுவோம்.


0 comments: