Friday, September 20, 2019

காப்பான் - சினிமா விமர்சனம்

ஹீரோ ஒரு மிலிட்ரி இண்ட்டெலிஜென்ஸ் ஆஃபீசர் . பிரதமருக்கு செக்யூரிட்டி ஆஃபீசராக நியமிக்கப்படறார். பிரதமரைக்கொல்ல ஒரு க்ரூப் அலையுது . அவர் கிட்டே இருந்து இடைவேளை வரை காப்பாத்தறார். நம்ம தமிழ் நாட்டிலும் சரி , இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் சரி ஒரு திருடன் செத்தா திருடனோட மகன் தான் புது திருடன்  ( அரசியல்வாதின்னாலே திருடன் தானே?, உழைச்சு சம்பாதிக்கறவன் ஏன் இந்த கேவலமான அரசியலுக்கு வர்றான்?)


 பிரதமரோட மகன் புது பிரதமரா பதவி ஏற்ற பின் அவரைக்கொல்லவும் திட்டம் தீட்டப்படுது. அதை ஹீரோ எப்படி முறிஒயடிக்கிறார் என்பதே மிச்ச மீதி திரைக்கதை


ஹீரோவா சூர்யா. மிலிட்ரி கட்டிங் விறைப்பான பாடி லேங்க்வேஜ் எல்லாம் பக்கா , ஆனா அவர் டான்ஸ் மூவ்மெண்ட்களில் இன்னும் அஞ்சான், என் ஜிகே இவ்ற்றின்  பாதிப்பில் இருந்து மீண்டு வரனும். காக்க காக்க , சிங்கம் அளவுக்கு இதில் ஈர்க்க முடியல,. அவர் அருகே எப்போதும்   ஆஜானுபாவமான மோகன் லால்  அல்லது அவரை விட உயரமான ஆர்யாவோ இருப்பதால் கூட இருக்கலாம். ஆக்சன் காட்சிகளில் ஓக்கே ரகம் .சமீபத்திய தோல்விப்படங்களுக்கு இது ஒரு கம் பேக் மூவி தான்


மோகன் லால் பாடி லேங்க்வேஜ், டயலாக் டெலிவரி   பக்கா. அனுபவம் பேசுதுகேரளாவில் இது போதிய அளவு கொண்டாடப்படாதது ஏன் என தெரியல  ( ஓப்பனிங் இல்லை)


ஆர்யா வை பிரதமரோட மகனா விளையாட்டுப்பிள்ளையா பார்ப்பது ஒரு கொடுமைன்னா அவரே பிரதமர் ஆவது மகாக்கொடுமை . பிரதமர் ஆன பிறகும் அவர்  [பாடி லேங்க்வேஜ் என்னமோ அதே பாஸ் என்கிற பாஸ்கரன் மாதிரி தான். கேர்கடர் செலக்‌ஷனில் , கேர்க்டர் வடிவமைப்பில் இயக்குநர் இந்த இடத்தில் சறுக்கி இருக்கிறார்.

ஹீரோயினாக சாயிஷா.தமிழ் சினிமா அக்மார்க் ஹீரோயின் கேரக்டர், பாவம் , க்ளைமாக்சில் படம் முடிந்தபின்  ஒரு டூயட் வைத்தது அநியாயம்


வில்லனாக பொம்மன் இரானி கன கச்சிதம் , இவரை அனில் அம்பானி போல் வடிவமைச்சிருக்காங்க 

 சமுத்திரக்கனியும் உண்டு

 பட்டுக்கோட்டை பிரபாகர் தான் வசனம் , இவர் தன் டச் இருக்கனும்கறதுக்காக வலியனா டபுள் மீனிங் டயலாக்ஸை 4 இடங்களில்  புகுத்தி இருக்கிறார். சூர்யாவுக்கு லேடீஸ் ஆடியன்ஸ் , ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம், அதை கருத்தில் கொண்டு அடக்கி வாசித்து இருக்கலாம்


 ஹாரீஸ் ஜெயராஜ்  பாடல் காட்சிகளில் பாஸ் மார்க் வாங்கினாலும் பிஜிஎம்மில் சொதப்பல். விஜய்யின் துப்பாக்கி யில் காட்டிய ஈடுபாட்டை இதில் காட்டாமல் விட்டு விட்டார்


கே வி ஆனந்த் இயக்கம் கச்சிதம். ஆனால் அவரது முந்தைய படங்களான  கனா கண்டேன் , கோ இவற்றோடு ஒப்பீடு செய்தால்   இது பல மாற்று குறைவே


 படம் பிரமாதம்னும் சொல்ல முடியாது , மொக்ம்கைனும் ஒதுக்கிட முடியாது , ஆவரேஜ்

நச் வசனங்கள்


1  ஒரு உயிரை பலி குடுத்துத்தான் 100 உயிரைக்காப்பாத்த முடியும்னா அந்த ஒரு உயிரை பலி குடுக்கறது தப்பில்லைனு மனு தர்மம் சொல்லுது #kaappaan



2  போலீஸ் ,மிலிட்ரி மாதிரி விவசாயமும் ஒரு சர்வீஸ்தான்#kaappaan

வீட்டுக்காக உழைப்பது கடமை.

நாட்டுக்காக உழைப்பது பெருமை #kaappaan


4  மண்ணுக்கு மகத்துவமான சக்தி இருக்கு ,மண்ல போடற எந்தப்பொருளும் ஏதோ ஒரு வகைல ஏதோ ஒரு உயிருக்குப்பயன் அளிக்கும்படி மண் அதை மாத்திடும் #kaappaan


சீக்ரெட்ஏஜெண்ட்னா பாராட்டு கூட ரகசியமா பெற வேண்டி இருக்கு #kaappaan


6  நல்லது செய்யறதுக்கே சில கெட்டது செய்ய வேண்டியதா இருக்கு #kaappaan


7ஆளுங்கட்சி நல்லதா அமைஞ்சா மட்டும் போதாது , அதிகாரிகளும் அரசாங்கத்துக்கு ஒத்துழைக்கனும் #kaappaan


8    அந்த ஆண்ட்டிக்கு 40 +   இருக்கும்

 யோவ் , ஆண்ட்டின்னாலே 40 +  தானே


 நான் வயசைச்சொல்லலை ( pkp touch )   #kaappaan 




 9  உன்னால முடியாதுனு ஒருத்தனை உசுப்பி விட்டா அதை அவன் உடனே முடிச்சுக்காட்டுவான் #kaappaan 


10   என்னை லவ் பண்ணுய்யா 

 அதுக்கு எல்லாம் டைம் இல்லை 

 யோவ்


சரி , 2 நிமிஷம்  தர்றேன், அதுக்குள்ளே எதுனா லவ் பண்ணிக்க 


 2 நிமிஷத்துல நூடுல்ஸ்தான் பண்ண முடியும் 
#kaappaan 



11   போராடறது  தப்புன்னா போராடறதுக்கான சூழலை உருவாக்கறதும் தப்பு தானே? #kaappaan 


12  பேங்க் ல வாங்குன லோனை அடைக்க முடியலைன்னா கார்ப்பரேட்  முதலாளி நாட்டை விட்டு ஓடிப்போறான், ஆனா கடனை அடைக்க முடியலைன்னா விவசாயி தற்கொலை பண்ணிக்கறான், எந்த விவசாயியாவது ஓடிப்போனான்னு நியூஸ் வந்திருக்கா? 
#kaappaan 

13   பொதுவா  உழைக்கறதுக்குதான் சம்பளம் வாங்குவாங்க , ஆனா நாங்க ( மிலிட்ரி) சாகறதுக்கும் / சாகப்போறதுக்கும் சேர்த்தே  சம்பளம் வாங்கறோம்  #kaappaan 


14    சார்  எதுக்காக இந்த காம்ப்ரமைஸ்க்கு இறங்கி வந்திருக்கீங்க?

 முன்னாடி போற அம்பு முதல்ல பின்னால வந்துட்டுதான் போகும்  #kaappaan

15   பொண்ணுங்க செய்யாதே-ன்னா செய் அப்டினு அர்த்தம்    #kaappaan 


7  

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  தீவிரவாதி / வில்லன் சதித்திட்டம் தீட்டி பிரதமரைக்கொல்ல முயற்சிக்க ஹீரோ அதை முறியடிக்கும் கதைகள் எனக்குத்தெரிந்ததை பட்டியல் இடுகிறேன் ,உங்களுக்குத்தெரிந்ததை நீங்கள் பட்டியல் இடவும்
1 சூரியன் (சரத் குமார்)− மெகா ஹிட்
2 ஐ லவ் இந்தியா(சரத்குமார்)− பெய்லியர்
3 மாநகரக்காவல் − விஜயகாந்த் − ஹிட்

4 செங்கோட்டை - அர்ஜூன் -  சுமார்
5  அலெக்ஸ் பாண்டியன் - கார்த்தி - ஃபிளாப்

6  காப்பான் −சூர்யா   ( ரசிகர்கள் கையில்)


நான் சின்னப்பையனா இருக்கும்போது விஜய்,சூர்யா இவங்க 2 பேருக்கும் கேரளா தான் கோட்டை னு சொல்வாங்க,இப்ப கோட்டை விட்டுட்டாங்க போல,சமீபத்திய தோல்விகளால் இருவருக்கும் கேரளாவில் ஓப்பனிங் குறைஞ்சிடுச்சு,காப்பான் fdfs@ கேரளா ,கோட்டயம் அனுபமா 10.45 am ஷோ காத்து வாங்குது .இதுவரை 240/824 சீட் புல் ஆகி இருக்கு. 1/3 கூட இல்லை #kaappaan

1



No photo description available.

3  கதைக்குத்தேவை இருக்கோ இல்லையோ ஹீரோ விவசாயத்துக்கு ஆதரவா கருத்து சொல்ற மாதிரி வசனங்கள் பெருகிடுச்சு இப்ப #kaappaan



 1990 கள் ல விஜயகாந்த் ,சரத்குமார் ,அர்ஜூன் வகையறாக்கள் அடிச்சு துவைச்சு காயப்போட்டதேசபக்தி,காஷ்மீர்,பாகாஸ்தான் தீவிரவாதிகள் ,பிரதமர் உயிரை காப்பாற்றும் ஹீரோ என கதைக்கரு,திரைக்கதை உத்திகளில் பழைய பார்முலாவில் பயணித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.பிகேபி + கேவி ஆனந்த்+ கபிலன் வைரமுத்து இத்தனை பேர் உழைப்பும் வீண்தானோ னு தோணுது @ இடைவேளை #காப்பான்

சபாஷ் டைரக்டர்

1  கேரளா மார்க்கெட் பிடிக்க மோகன்லால் கேரக்டர் அமைத்த விதம் குட்

2  பெரிய பட்ஜெட் படம் என்பது காட்சிகளின் பிரம்மாண்டத்தில் தெரிகிறது


 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  லூசு ஹீரோயின் மப்பில் இருந்து தெளிந்து எழுந்ததும் ஹீரோ கிட்டே < எதுனா தப்பு நடந்ததா? என கேட்கறார், ஒரு பொண்ணுக்கு அது கூடவா தெரியாது?

2  ஹீரோயின் மணிக்கட்டு பகுதில , ஹீரோவோட புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் ;ல பாம் செட் பண்றாரு வில்லன் , பாம் இருக்கா?னு  செக் பண்ற செக் போஸ்ட் எல்லாம் தாண்டி எப்படி அவங்க வந்தாங்க?


3  மிலிட்ரி ஆஃபீசர்   ஆன ஹீரோ தன்னையே வில்லன் ஒரு தணுவா ரெடி பண்றதை எப்படி   உணராமல் இருந்தார்?


4  கேனயனான வில்லன் தான் போடும் ஒவ்வொரு திட்டத்தையும் அப்படியா புட்டு புட்டு வெச்சுட்டு இருப்பான்?


5  சமுத்திரக்கனி சொல்லும் ஃபிளாஸ்பேக் லவ்ஸ்டோரி நாடகத்தனம், கதைக்கு சம்பந்தமே இல்லை 


6  பிரதமரின் ஆஃபீசில் , வீட்டில் பாதுகா;ப்பு ஏற்பாடுகள் இவ்வளவு  கேவலமாவா இருக்கும்? ஒட்டுக்கேட்கும் கருவிகள்  அசால்ட்டா ஆங்காங்கே கிடக்கு

7  கண்காணிப்பு கேமரா என்பது  ஸ்டேண்டர்டா ஒரு இடத்தில் இருக்கும், ரொட்டேட் ஆகற கேமரா தனியா இருக்கும் .. ஆனா படத்துல அது மிஸ்சிங்,. ரொட்டேட் ஆகற கேமரா மூவ்க்கு தகுந்த மாதிரி  ஹீரோ   இடம் பெயர்வது  லாஜிக் சொதப்பல்



 விகடன் மார்க் ( யூகம்)   40

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)   3.5 /5 


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க்  2.5 / 5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)




 சி.பி கமெண்ட் -காப்பான் − யூகிக்கக்கூடிய திரைக்கதை அமைப்பு ,நாடகத்தனமான காட்சி அமைப்புகள் ,ஒட்டாத காதல் பெரிய மைனஸ்.விவசாயிகள் பிரச்சனை,தேசப்பற்று வசனங்கள் அனைத்தும்"செயற்கை,எனக்குப்பிடித்த பிகேபி வசனம் எழுதி இருந்தும் பிரமாதம்னு சிலாகிக்க முடியாதது வருத்தம் ,சூர்யாவுக்கு தொடர் தோல்வி கிடைப்பதும் சங்கடமா இருக்கு ,விகடன்,"40 ரேட்டிங் 2.5 / 5 #kaappaan

0 comments: