Monday, June 17, 2019

மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு ஏகப்பட்ட வேலை வாய்ப்பு உருவாகி இருக்கே? அது போதாதா?

1  முதல்வரும்,துணை முதல்வரும், அன்போடு,அரவணைப்போடு இணைந்து செயல்படுகின்றனர்.-  ராஜேந்திர பாலாஜி:  

அன்”போடு”, அரவணைப்”போடு”?அப்படிப்போடு அப்படிப்போடு


ஆந்திரா மாதிரி 5 துணை முதல்வர்கள் வராம இருக்கனும்னா வேற வழி?


===================


2   ஒரு சில கருத்துகளை கூறி, எதிரிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது- ராஜேந்திர பாலாஜி: 


அப்போ கருத்து சுதந்திரம்  கறதை காயலான் கடைக்குப்போட்டுடனுமா?


===================


: விவசாயம், வேலைவாய்ப்பு,வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்கு தான், மத்திய பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்-நிர்மலா சீதாராமன்


ஆனா விவசாயிகளை மட்டும் பிரதமர் சந்திக்கவே மாட்டார்னு சந்தி சிரிக்குதுங்க்களே?


வறுமை ஒளிப்பு வேணா சாத்தியம், வறுமை ஒழிப்பு டவுட்


 மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வேணா ஏகப்பட்ட வேலை வாய்ப்பு 


பக்கோடா தயாரிப்பு வேலை வாய்ப்பா?


===================

4  வறட்சி, குடிநீர் பிரச்னை குறித்து விவாதிக்க, அனைத்து கட்சி கூட்டம், சட்டசபை கூட்டத்தை, உடனே கூட்ட வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  - உ ள்ளேன் ஐய்யா அட்டெண்டென்ஸ் போட்டாச்


===============


5   நாட்டில், உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இது, வீட்டு பட்ஜெட்டில், தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது= ரண்தீப் சுர்ஜேவாலா, 'டுவிட்டரில்' கருத்து 


ஹோட்டல்ல சாப்பிடாம வீட்டில் சமைச்சு சாப்பிட்டா ஜிஎஸ்டி கட்ட வேண்டியதில்லைங்கர மாதிரி வேற ஒரு அரிய கருத்தை நிர்மலா சீதாராமன் அறிவிப்பார்


====================6    தமிழகத்தில், குடிநீர் பற்றாக்குறையால்,மக்கள் தவிக்கின்றனர்.-ஸ்டாலின் : 

டாஸ்மாக்ல மட்டும் தண்ணி பிரச்சனையே வர்றதில்ல ஃபுல் ஸ்டாக் இருக்கு


===============


7   ஆளும் கட்சியினர்,குடிநீர் பற்றாக்குறைபற்றி கவலைப்படாமல் உள்ளனர்.=ஸ்டாலின் :-  அவங்களுக்கு  ஒற்றைத்தலைமை கோரிக்கை கவனிக்கவே நேரம் சரியா இருக்கு, இரட்டைத்தலைவலி

================


8  தி.மு.க., ஆட்சியில், பல குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. வரும் காலங்களிலும்,மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, தி.மு.க., முனைப்போடு செயல்படும்-ஸ்டாலின் :


எதிர்க்கட்சியா இருக்கும்போதுதான் திமுக நல்லா செய்லபடுது, அதனால ஜனங்க எதிர்க்கட்சியாவே வெச்சிடப்போறாங்க 


=================

9   லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., ஏன் தோற்றது என, சிறு குழந்தைக்குக் கூட தெரியும்...பா.ஜ., தான், அதற்கு காரணம் என்று. அது இயற்கை-செல்லப்பாண்டியன் 


அப்போ சட்டசபைத்தேர்தல்ல தனித்துப்போட்டினு இப்பவே தில்லா அறிவிச்சிடுங்க பார்ப்போம்


  சின்னக்குழந்தைகளுக்குத்தெரிஞ்சது கூட உங்களுக்குத்தெரியாம போச்சே? ஏன் கூட்டணி வெச்சீங்க?

==========

==================


10  அ.தி.மு.க., தன்னிச்சையாக நின்றிருந்தால், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கும்.-செல்லப்பாண்டியன் 


அதெப்பிடி  ஓனரை மீறி உங்க இஷ்டத்துக்கு முடிவு எடுக்க முடியும்?மோடி + அமித்ஷா தானே இப்போ ஓனர்?
================



11  லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு கிடைத்திருக்கும் வெற்றி, ஸ்டாலின் என்ற ஒருவருக்கானது அல்ல; தி.மு.க., கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் கிடைத்தது.- அமைச்சர், ராஜு

கிரிகெட்லயும் சரி அரசியல்லயும் சரி ஜெயிச்சா டீம் ஒர்க், தோற்றா கேப்டன் சரி இல்ல , தலைமையை மாற்றனும்

===============


 12 கடந்த ஏழு நாட்களாக, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, 13.65 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை வெறும், 0.90 சதவீதம் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப, இவற்றின் விலையை குறைக்காதது ஏன்? கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலனை, பொதுமக்களுக்கு வழங்க, மத்திய அரசு தவறிவிட்டது.- ரண்தீப் சுர்ஜேவாலா

மக்கள் நாய் மாதிரி குரைச்சுட்டே இருந்தாலும் அரசு விலையை குறைப்பதில்லை

=================


13  கட்சியின், லோக்சபா கொறடா பொறுப்பை எனக்கு, கட்சித் தலைவர், சந்திரபாபு நாயுடு அளித்துள்ளார். இந்த மிகப் பெரிய பொறுப்புக்கு, நான் தகுதியானவன் இல்லை. அதனால், தகுதியான சிறந்த ஒருவருக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளேன்.-


தெலுங்கு தேசம், எம்.பி., கேசினேரி ஸ்ரீனிவாஸ்: 

அரசியல்வாதிக்கு உண்டான தகுதியே இல்லை போல, பதவி வேணாம்கறாரே?

================

14   கேரளாவில் கம்யூ., கட்சியின் தோல்விக்கு சபரிமலை பிரச்னைதான் காரணம்' - இந்திய கம்யூ 

அப்போ வெள்ளப்போக்கு காரண்ம் இல்லையா?அடங்க்ப்பா


================



நடுத்தர மக்களுக்கு அதனால என்ன பயன்?



================


16   | 24 மணி நேரமும் திரைப்படங்களை திரையிட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது # இனி ரிலீஸ் ஆன முதல் நாளே"100 கோடி வடை சுடலாம்



==============


17 நீட் தோல்வி: தற்கொலை செய்துகொண்ட மாணவிகளின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்குக; திருமாவளவன் # நாம எதுக்குங்க அரசு கிட்ட கையேந்தனும்?37 பேர் இருக்கோம்,எல்லாரும் அவங்கவங்க 3 மாச சம்பளத்தைக்குடுப்போம்


==============


18 யார் மேலோ உள்ள அதிருப்தியால், நாங்கள் தோல்வியடைந்தோம்.இது, என்னுடைய சொந்த கருத்து.-செல்லப்பாண்டியன்  அதிமுக 


நேத்துதான் ஈபிஎஸ்  யாரும் அவங்கவங்க சொந்தக்கருத்தை மீடியாக்களிடம் தெரிவிக்க வேணாம்னாரே?


==============
19  கடந்த, 45 ஆண்டுகளில் இல்லாத அளவு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது; இதற்கு, மத்திய அரசு, என்ன பதில் சொல்லப் போகிறது?-  மாயாவதி: # மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு ஏகப்பட்ட வேலை வாய்ப்பு உருவாகி இருக்கே? அது போதாதா?


===============


20 கர்நாடகாவிலிருந்து, மாத அடிப்படையில் திறந்துவிட, காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும், அந்த மாநில அரசு, தொடர்ந்து தண்ணீர் திறக்காமல் மறுத்து வருகிறது. மறுத்த உடனே,அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு தவறிவிட்டது.தொடர்ந்து, இந்த விவகாரத்தில் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு, முதல்வர் பதில் அளிக்க வேண்டும்.  -நல்லசாமி  


ராகுல் ஒரு வார்த்தை சொன்னாப்போதுமே? மறுவார்த்தைப்பேசாமல் தண்ணீர் திறந்துவிடப்படும், ஆனா சொல்ல மாட்டார், காரணம் பாலிடிக்ஸ்


==================

0 comments: