Wednesday, June 12, 2019

ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதா தா

1  கடந்த, 45 ஆண்டுகளில் இல்லாத அளவு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது; இதற்கு, மத்திய அரசு, என்ன பதில் சொல்லப் போகிறது?-  மாயாவதி:


என்ன சொல்லும்? வேலைவாய்ப்புகளை விரைவில் ஏற்படுத்துவோம், அவ்ளவ் தான்


நீங்க சொல்றது நிஜமா இருந்தா பாதிக்கப்பட்டவங்க ,அவங்க பெற்றோர் இவங்க வாக்களிச்சு ஜெயிக்க வெச்சிருப்பாங்களா?

==================

2   : சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு, அரசு அனுமதி அளிக்காது என, கொள்கை முடிவு எடுத்துள்ளோம். -நாராயணசாமி:


சுற்றுச்சுழலை பாதுகாக்கனும்னா ம்ஜுட்ன்ஹல்ல பிளஸ்டிக்கை ஒழிக்கனும், டிக் டாக் தடை செஞ்ச மாதிரி  பிளாஸ்டிக்கை தடை செய்யனும்

=================


3 புதுச்சேரிக்குத் தேவையான நல்ல திட்டங்களுக்கு, மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கும். மக்களின் எதிர்ப்பு கொண்ட எந்த திட்டத்துக்கும், அரசு அனுமதி அளிக்காது.-நாராயணசாமி:

அப்போ பாண்டிச்சேரி ஸ்பெஷல் ஐட்டம் சரக்குக்கும் தடை விதிக்க,லாமே?

===============

4  : காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும் என, கர்நாடக அரசை ராகுல் கண்டிக்காதது ஏன்? -*இ.பி.எஸ்., 

 நிலைமை கை மீறிப்போயுடுச்சோ என்னவோ?

==============


5  பொதுச் சேவை செய்ய நினைத்து வருபவர்களுக்கு, சகிப்புத்தன்மை, பொறுமை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும். - கருணாஸ் 


முக்கிய்மா கொலை செய்வேன், கை யை வெட்டுவேன்னு மிரட்டாம இருக்கனும் , உங்களைத்தான் சொல்றோம்

=================


6 நடிகர் சங்கம் என்பது, கார்த்திக், விஷால், நாசர் சங்கம் கிடையாது. அது, நடிகர்களுக்கான சங்கம். தனிப்பட்டவர்களிடமுள்ள கருத்து வேறுபாடுகளை, சங்கத்துக்குள் கொண்டு வருவதை, ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்- கருணாஸ் 

  நல்லா நடிக்கறவங்க மட்டும்தான் நடிகர் சங்கத்தலைவர் ஆகமுடியுமோ?


அப்போ நீங்க பாக்யராஜ் பக்கம்?

=================
7   கூடங்குளம் அணு உலைகளே ஆபத்தானவை என, அச்சப்படும் நிலையில், அதைவிட ஆபத்தான அணுக்கழிவுகளையும், அந்த வளாகத்திற்குள்ளேயே சேமித்து வைக்க நினைப்பது, மக்கள் மீது, கொஞ்சமும் அக்கறையில்லாத, ஈவு இரக்கமற்ற செயல்.-தினகரன் :

 மக்களிடையே சேமிப்புப்பழக்கம் வளரனும்கறதை இப்படி நிரூபிக்கறாங்க போல 

===============

8 தமிழகத்திலிருந்து புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, எம்.பி.,க்களுக்கு, மக்கள் மீது அக்கறை இருக்குமானால், மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, சர்வதேச விதிகளுக்கு முரணாக, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை, தடுத்து நிறுத்த வேண்டும்.-தினகரன் :

சர்வதேச விதிகளுக்கு முரணாக,  இருந்தா வழக்கு தொடுக்கலாமே?

================ 

9 தி.மு.க., தமிழை வளர்க்கவில்லை; கனிமொழியை தான் வளர்த்தது. - அமைச்சர், ராஜு :


 அப்போ ஸ்டாலின் அழகிரி மு க் முத்து இவங்களை எல்லாம் யார் வளர்த்தது?

 தமிழ் மொழியோ கனிமொழியோ ஏதோ ஒரு மொழியை வளர்த்தா போதாதா?


=============

 10  அவர்கள் ஆட்சியில், பெயருக்காக, பிழைப்புக்காக, அரசியலுக்காக, தமிழைப் பயன்படுத்தினரே தவிர, சொல்லும்படி ஒன்றும் செய்யவில்லை.- அமைச்சர், ராஜு : 

ஹிந்தி ஒழிகனு கோஷம் போடற திமுக காரங்க வீட்ல எல்லாக்குழந்தைகளும் ஹிந்தி கத்துக்கிட்டவங்கதான்

=================


 11 மொழியிலும், மக்களை ஏமாற்றுவதிலும், தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது.'- அமைச்சர், ராஜு : 

இரட்டை இலை நீங்க
இரட்டை வேடம் அவங்க 
 மேட்சுக்கு மேட்ச்

==============

12  தமிழக அரசு உருவாக்கிய பாடப் புத்தகத்தில், பாரதியாரின் தலைப்பாகை, காவி நிறத்தில் இருப்பதாகக் கூறியவர்கள், அவரது கோட், பச்சை நிறத்தில் இருப்பது குறித்து, கேள்வி எழுப்பாதது ஏன்... பாரதியார் எப்போது, பச்சை கோட் அணிந்தார்?-இல.கணேசன் 

பசுமை பாரதம் காண்போம்கறதுக்கா இருக்குமோ?


பாரதியார் ஒரு பச்சைத்தமிழர் ஆச்சே?

================
13 :லோக்சபா தேர்தலை போல், தமிழக உள்ளாட்சி தேர்தலிலும், தி.மு.க.,வுடனான வெற்றிக் கூட்டணி ”தொடரும்”- கே.எஸ்.அழகிரி 

 ஆளுங்கட்சியின் வெற்றிக்கு ”முற்றும் ” போடப்படும்?


================

14   தொகுதி பங்கீடு மற்றும் யார் எங்கெங்கு போட்டியிடுவது என்பது பற்றியும், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும், பேசி முடிவு செய்யப்படும். -கே.எஸ்.அழகிரி 


 திமுக கொடுக்கறதை வாங்கிக்கப்போறீங்க , பேரம் பேசற அளவு நம்மகிட்டே வாக்கு வங்கி இல்லையே?

===========


15  தமிழகத்தில்,  ஸ்டாலின் ஆட்சி அமைக்க முயற்சி செய்தால், காங்கிரஸ் கட்சி அதற்கு, முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.-கே.எஸ்.அழகிரி 


இவரு ஒத்துழைச்சா ஆட்சி அமைக்க முடியுஜ்ம்னு  நம்ப்றாரு போல

==================


16   சுதந்திரம் அடைந்து 100 வது ஆண்டை அடையும் போதும் பா.ஜ., ஆட்சியே இந்தியாவில் இருக்கும் - ராம் மாதவ்


இதுக்கு எதுனா பரிகாரம் உண்டுங்களா?


அதுக்குள்ளே எத்தன டைம் பண ஒழிப்பு நடவடிக்கை இருக்குமோ?

=============


17 ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தால் ஏற்பட்ட மோதல் காரணமாக, மேற்கு வங்க மாநிலத்தில், தபால் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுக்கு தபால் நிலையம் மம்தாவுக்கு எதுனா சேல்ஸ் கமிஷன் கொடுக்குமா?


===============


 நீட் தேர்வு எழுதுனவங்கள்ல இந்த டைம் 50% பாஸ் ஆகி இருக்காங்களே?


===============



 ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதா தா - இப்படியா?


அவங்க டில்லி போறாங்க படிப்பாங்க , தமிழன் தமிழ் நாட்டுக்குள்லேயே குண்டுச்சட்டில குதிரை ஓட்டட்டும்

====================




 தமிழ,கத்தில் தாமரை மலர்ந்தே தீரும்னு அடிக்கடி சவால் விடறதை முதல்ல நிறுத்தனும், அதுக்கே ஜனங்க காண்ட் ஆகறாங்க்


=======================

0 comments: