Tuesday, June 11, 2019

நம்ம கட்சிக்காரங்க டீக்கடைல பஜ்ஜி வாங்குனாக்கூட காசு தர்ற்றதில்லையாம்



1 பதவிகள் மீது எனக்கு என்றுமே ஆசை கிடையாது. - வைகோ:


 அப்போ மதிமுக கட்சியோட தலைவர் பொறுப்பை வேற யார்கிட்டயாவது தரப்போறாரா?
================


2  கட்சியினரை பதவியில் அமர்த்தி அழகு பார்ப்பேனே தவிர, நான் அந்த பதவிக்கு ஆசைப்படுவது இல்லை. - வைகோ:

உங்களோட ராசி பற்றி தான் ஊருக்கே தெரியுமே>?\



 அப்போ திமுக தரப்போற ராஜ்ய சபா சீட்டை வேணாம்னு சொல்லிடுவாரோ?===============

3 தமிழ்நாடு மின் மிகை மாநிலம். இங்கு மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதேபோல், குடிநீர் பற்றாக்குறையும் கிடையாது=தங்கமணி: 


 இவருக்கு சென்னைல ஜனங்க ;லாரித்தண்ணி கூட கிடைக்காம எவ்ளோ அவஸ்தைப்படறாங்கனு தெரியாது போல


=============


எட்டு வழிச்சாலை திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, உழவர்களின் நிலங்கள், அவர்களுக்கே சொந்தம் என்பது உறுதி செய்யப்படும் வரை, பா.ம.க., தொடர்ந்து போராடும். -அன்புமணி: 

 அப்போ ராஜ்ய சபா சீட் ”ஏழரை” தான்


===============
5    மத்திய அமைச்சரவையில், தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படாதது குறித்து, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தான் பதிலளிக்க வேண்டும் -கனிமொழி 

 2 ஜி ஊழல் வழக்கு மேல்முறையீடு வந்துடுச்சு, அதைகவனிங்க 

================

6  அ.தி.மு.க.,வில் உட்கட்சி பிரச்னை இருப்பது, அனைவருக்கும் தெரிந்தது தான். ஆட்சிக்காக, இரு தரப்பும் இணைந்து செயல்படுவது போன்ற வெளிப்புற தோற்றம் இருக்கிறதே தவிர, உள்ளே இருக்கிற பிரச்னைகள், அனைவருக்கும் தெரியும்.-கனிமொழி 


இரட்டை இலை கட்சி என்பதால்  இரட்டைசி எம் ( முதல்வர் துணை முதல்வர்)க்குள்ளே இரட்டை நிலை


=================

7    எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு, ஆதரவான நிலைப்பாட்டை, தமிழக அரசு எடுத்தால், பெரும் போராட்டத்தை சந்திக்க நேரிடும்-தினகரன்

 அவங்க ஆதரவு நிலை எடுத்து மாமாங்கம் ஆகுதுங்கோ

==============


 8  ராமதாஸ், பா.ஜ.,வுடன் கூட்டணி சேரும் போது, 'எதற்காகவும், எங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்' என்றார். தற்போது, பா.ஜ.,வின் நிலைப்பாட்டில், மவுனம் காப்பது ஏன்... ராஜ்யசபா, எம்.பி.,க்காக அமைதி காக்கப் போகிறாரா, இல்லை தொடர்ந்து எதிர்க்கப் போகிறாரா என்பதை, அவர் தெளிவுபடுத்த வேண்டும்.-தினகரன்


 சாரி , பார்ட்டி நாட் ரீச்சபிள்

===============




9    . நல்ல முடிவெடுக்கும் அதிகாரம், மத்திய அரசுக்கே உள்ளது-பினராயி விஜயன்


 அப்போ நீங்க எடுப்பது கெட்ட முடிவா?

==============


. 10   தமிழகத்தில், இருமொழிக் கொள்கை நடைமுறையில் உள்ளது. மாநில அரசு மற்றும் மக்களின் கருத்துகளை கேட்டறிந்து, அதற்கேற்ப, புதிய கல்விக் கொள்கையை முடிவு செய்ய வேண்டியது, மத்திய அரசின் கடமை. -வாசன் 

 ஜனங்க தங்கள் முழந்தைகள் ஹிந்தி படிக்கட்டும்னு ஆர்வமாதான் இருக்காங்க , இந்த போலி போராளிகள்தான் அவங்க வீட்டுக்குழந்தைகளை ஹிந்தி படிக்க வெச்ட்டு தமிழ் வாழ்க ஹிந்தி ஒழிக கோஷம் போட்டுட்டு இருக்காங்க 

---------------
11 இனி தோல்வி படங்களில் நடிக்கமாட்டேன் - சிவகார்த்திகேயன்
# இது வெற்றிப்படமா? தோல்விப்படமா?னு எப்டி கண்டுபிடிப்பீங்க?அப்டி கண்டுபிடிக்கற சக்தி இருந்தா எல்லாப்படமும் 100 கோடி ஹிட் படம் ஆகிடுமே?


==============

1  ,  ' மத்திய அமைச்சரவையில், தமிழகத்துக்கு வாய்ப்பு இல்லை என்று தான், பார்க்க முடிகிறதே தவிர, மறுக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. -கமல்,

நீங்க விடற அறிக்கைகள் , பேட்டிகள் , புரியலைன்னு சொல்லிட முடியாது , பொது ஜனங்களுக்கு , சாமான்யவர்களுக்கு புரி ஞ்சா நல்லாருக்கும்னுதான் சொல்ல முடியும்

====================


2 தமிழக மக்களின் குரல்,அந்தச் சபையில்கேட்க வேண்டும் என்பது தான், என் ஆசை. அதற்காக, நாங்களும் முயன்றோம். -கமல்,

முதல் கோணல் முற்றும் கோணல்னுன் மனசைத்தளர விடாதீங்க 


=================


3  தற்போது, அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என்றாலும், இரண்டாம் கட்டமாக, அமைச்சரவை விரிவுபடுத்தும் போது, நிச்சயமாக, தமிழகத்துக்கு இடம் கிடைக்கும் என, பா.ஜ., தலைவர்கள் கூறுவதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். -கமல்,

ஓபிஎஸ் மகனுக்கு எஸ் சொல்லிடுவாங்க?


=============


4  இன்னும் கல்வித்துறையில், ஏராளமான மாற்றங்கள் கொண்டு வரவுள்ளோம். தமிழகத்தின் கல்வி முறை, ஜூலை மாத இறுதிக்குள், தனியாரை மிஞ்சும் வகையில் இருக்கும். 
'செங்கோட்டையன் 

 ஒரு வேளை கட்டணம் வசூலிப்பாங்களோ?

==============


 5 தமிழகத்தில், 86 சதவீதமாக இருந்த, கற்போரின் எண்ணிக்கை, 99.4 சதவீதமாக, கடந்த கல்வியாண்டில் உயர்ந்துள்ளது. -செங்கோட்டையன் 

 ஜெ ஆட்சியை விட இபிஎஸ் ஆட்சி சிறந்ததுங்கறாரா?ஜெ அபிமானிகள் கோவிச்சுக்கப்போறாங்க 

==============



6 ஜனநாயக முறையில்ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோரிடம், அபரிமிதமான அதிகாரம் இருக்கும். அதற்காக, அந்த அதிகாரத்தைதவறாகப் பயன்படுத்திவிடக்கூடாது. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில்,அரசு தடுமாறும் பட்சத்தில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, தன் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கும். = மோகன் பாகவத் 


அதுவரைக்கும் வேடிக்கை என் வாடிக்கை?


=============== 


புதிய கல்விக் கொள்கையின்படி, 6ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஹிந்தியை பாடமாகக் கொண்டு வந்தால், தமிழகம் மீண்டும், போராட்டக் களத்தைச் சந்திக்கும் நிலைக்கு ஆளாகும்.-தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., சிவா 


திமுக எம் பி கள் எதுவுமே செய்யலைனு சொல்லிடக்கூடாது ஜனங்க, எதுனா போராட்டம் பண்ணியே ஆகனும்>

===============


8   மத்தியில் வலிமையாக இருந்தாலும், அந்தப் போராட்டத்தை சந்திக்கும் வலிமை, மத்திய அரசுக்கு இருக்காது-தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., சிவா 


கலைஞர் குடும்பத்துல பாதிப்பேருக்கு ஹிந்தி தெரியுமாமே? நிஜமாவா?அவங்க மட்டும் ஹிந்தி படிக்கலாமா?
==============


.9   தமிழகத்தில், மொழிப்போர் கிளர்ச்சி என்பது, அணையாத நெருப்பு. -தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., சிவா 

 அதை வெச்சுத்தானே நாம காலம் தள்ளுனோம்

==============

10  அவர்கள், நெருப்போடு விளையாடுகின்றனர். தி.மு.க., எந்த விலையையும் கொடுத்து, ஹிந்தி திணிப்பைத் தடுத்து நிறுத்தும்-தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., சிவா 


எதுவா இருந்தாலும் விலை கொடுத்து வாங்க்றது நமக்கு புதுசாச்சே? நம்ம கட்சிக்காரங்க டீக்கடைல பஜ்ஜி வாங்குனாக்கூட காசு தர்ற்றதில்லையாம், தகராறாம்

=================
========

0 comments: