Thursday, May 09, 2019

காரியம் ஆகும் வரை காலைப்பிடி , காரியம் ஆன பின் கழுத்தைப்பிடி


1  நடந்து முடிந்த தேர்தலில், எம்.பி., பதவிக்கு போட்டியிட்டு உள்ளேன். 'டிபாசிட்' இழக்காத அளவு, ஓட்டுகளை வாங்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது. என் அரசியல் பயணம் தொடரும்.-நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்   #  சினிமாலயும் காமெடி அரசியல்லயும் காமெடி + டிராஜடி

================


2  இந்த ஆட்சி முடிவுக்கு வரவில்லை எனில், தமிழகம் பாலைவனமாகிவிடும். -தினகரன்    # அப்ப மணல் காண்ட்ராக்ட் கிடைக்கும்?


==============

3  அ.தி.மு.க.,வுக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு உள்ளது? முதல்வரில் இருந்து, அமைச்சர்கள் வரை, மடியில் கனம் இருப்பதால், சிறை செல்வதற்கு பயந்து, இந்த ஆட்சியை அடகு வைக்கின்றனர்  -தினகரன்  


அடகு வெச்சதை மீட்கறேன்னு நீங்களும் 2 வருசமா சொல்லிட்டு இருக்கீங்க, இன்னும் மீட்கலை


=============


என், 40 ஆண்டு கால அரசியல் வாழ்வில், பல தேர்தல்களை சந்தித்து விட்டேன். அந்த அனுபவத்திலும், எனக்கு வந்த தகவல்களின்படியும் கூறுகிறேன். இம்முறை நாங்கள், சட்டசபை தேர்தலில், அமோக வெற்றி பெறுவது உறுதி. இதில், ஓட்டு வித்தியாசம் என்ன என்பது மட்டுமே, நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.- சந்திரபாபு நாயுடு   #  எதிர்பாராததை எதிர்பாருங்கள்  EXPECT  THE  UNEXPECTED



================


5   பீஹாரின் இரண்டாவது லாலு நான்: தேஜ் பிரதாப்    #  அப்பா மாதிரியே ஜெயிலுக்குப்போக்ப்போறாரா?

==============
6   வாக்காளர்கள் பட்டியல் தயாராகாத காரணத்தாலேயே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாவில்லை!" - தமிழக அரசு # மடத்தனமான சமாளிப்பு,அப்போ நாடாளுமன்றத்தேர்தல் குத்துமதிப்பு குமாரசாமியால நடத்தப்பட்டதா?





==============

7   போபர்ஸ்' பீரங்கி வாங்கியதில் நடந்த மோசடியால், நம்பர் - 1 ஊழல்வாதி என்ற பெயருடன்,ராஜீவ் காந்தி  இறந்தார் - மோடி  #  நாம கூடத்தான் ரபேல் ஊழல் வழக்குல அம்பேல் ஆகப்போறோம்


================


8  காமெடி பீஸ் போல, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார்,'' -கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு   # சட்டையைக்கிழிச்சுக்கிட்டே பேசினாரா?


============
9     ''கடந்த கால வரலாறுகளை மறைத்து மக்களிடத்தில்  ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடித்து வருகிறார்.,''-  மதுரை  முனுசாமி 


==============

10   பொதுத் தேர்தலை சந்திக்காமல் முதல்வராக நினைக்கும்   ஸ்டாலின் கனவு பலிக்காது,'' - ஜி.கே.மணி    #   பொதுத் தேர்தலை சந்திச்ட்டா மட்டும்?


==============
11

    சொத்து சேர்க்கவே, 'மெகா' கூட்டணி: பிரதமர் நரேந்திர மோடி விளாசல்   #  காங்  கூட்டணீ அமைச்சதைச்சொல்றாரா? தமிழகத்தில் அதிமுக   அமைச்ச மெகா கூட்டணீயைச்சொல்றாரா?


================

12  இன்னும் 25 ஆண்டுகளில் ஸ்டாலின் ஜனாதிபதியாகக் கூட வரலாம். - துரைமுருகன்.
# ஜனாதிபதி கூட வேணா வரலாம்.இதுல எப்டிண்ணே எரியும் மொமெண்ட்


=================

13  வரும், 23ல், சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானதும், தமிழகத்தில் நம் ஆட்சி தான்.-ஸ்டாலின்:  #அதிமுக ஆட்சியை அகற்றும் வரை தூங்க மாட்டேன்னாரு, ஆனா கனவு மட்டும் காண்கிறாரே? அது எப்படி?


=================


14  திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., - அ.ம.மு.க.,வை, மக்கள் சூரசம்ஹாரம் செய்வர்.=கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு:   # கமல் தான் ”சூரசம்ஹாரம்:” பண்ணார், அப்போ இவங்களையும்  டார்ச் லைட்   சூரசம்ஹாரம் செய்யும்கறீங்களா?


===============

 15   இத்தேர்தல், தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கிறது.  =கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு:  # எல்லா அரசியல்வாதிகளும் இதே டயலாக், கர்மம் கர்மம்


=================

16     சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெறமாட்டோம் என்ற தோல்வி பயம் வந்ததால், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை, தி.மு.க.,வினர் கொண்டு வந்துள்ளார் - **இ.பி.எஸ்.,  # அப்போ நாம 18 + 3  எம் எல் ஏ க்களை  தகுதி  நீக்கம் செய்தது எதுக்கு?> அதே பயம் தானே?

===============
17    கருணாநிதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக, ஒட்டப்பிடாரம் தொகுதியின் பல்வேறு பகுதிகளில், தி.மு.க.,வினர் என்னிடம் தெரிவித்தனர்-அமைச்சர், ராஜேந்திர பாலாஜி, ' # அவர் இறந்து இத்தனை  நாட்கள் கழிச்சுதான் டவுட் வருதா? தேர்தல் வர்றதால டவுட் வருதா?னு ஜனங்களூக்கு டவுட்  வருது


====================

18     : முதல்வராக வேண்டும் என்பதற்காக, சசிகலா முன்பு, நாலு காலில் மண்டியிட்டவர், இ.பி.எஸ்.=தினகரன்  # காரியம் ஆகும் வரை காலைப்பிடி , காரியம் ஆன பின் கழுத்தைப்பிடி


==============

19   நன்றி மறந்த  EPS உடன் தென் மாவட்டத்தை சேர்ந்த எட்டப்பன், ஓ.பி.எஸ்., கைகோர்ந்து நிற்கிறார் -தினகரன்  # வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறதுங்கறது நிதுதான் போல ,  முதல்வரா இருந்தவர் துணை முதல்வர் ஆகிட்டார்


==================


20    இரட்டை இலை சின்னம் இருந்தால் ஜெயித்து விடலாம் என, நினைக்கின்றனர். அந்த சின்னம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கையில் இருக்கும்போது, நிச்சயம் வெற்றி தான். துரோகிகள் கையில் இருக்கும்போது, எப்படி வெற்றி கிடைக்கும்?--தினகரன்   # கிடைக்காதுன்னா  அப்றம் ஏன் இரட்டை இலை சின்னம் வேணும்னு கேஸ் போட்டீங்க?
=================




0 comments: