Thursday, May 16, 2019

15 % ஓட்டு காங்கிரசை விட பாஜக வாங்கும்னு ஒரு கூட்டம் கிளம்பி இருக்குமே?


1 தெலுங்குதேசம் கட்சியுடன் மோதி, தன்னுடைய அரசியல் செல்வாக்கை, மோடி இழந்து விட்டார்.- சந்திரபாபு நாயுடு 

அப்போ உங்க கூட பழையஒஅடி ராசி ஆகிட்டா இழந்த செல்வாக்கு திரும்ப கிடைச்சிடுமா?


=

2   5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலுக்கு மட்டுமே தொகுதி பக்கம் வரும் ராகுல், ஓட்டுக்காக மட்டுமே இந்துக்களின் புனித பண்டிகையான கங்கா ஆரத்திக்கு வருகிறார் = ஸ்மிருதி இரானி

  ஆரத்தி எடுத்து வரவேற்பாங்கனு ஒரு நப்பாசை தான்


================

3  காங்கிரஸ் ஆட்சி ஊழலைத் தவிர வேறு எதையும் மக்களுக்கு கொடுக்கவில்லை,'-ஸ்மிருதி இரானி

 ஏன்? பாஜக ஆட்சி அமைச்சதே காங் ஊழல் செஞ்சதாலதானே?


===============


4  காங்கிரஸ் கட்சியினர் அயோத்தியாவிற்கு வருவார்கள். ஆனால், ராமர் ஆலயங்களுக்கு சென்று ராமரை வணங்கமாட்டார்கள். ஓட்டு தான் அவர்களுக்கு முக்கியம். மக்களை ஓட்டு வங்கிகளாக தான் பயன்படுத்துகிறார்கள்,  -ஸ்மிருதி இரானி

 ராமரை வணங்குனா அவரா ஓட்டுப்போடப்போறார்? ஜனங்களூக்கு வணக்கம் வெச்சாலாவது கொஞ்சம் ஓட்டுகள் கிடைக்கும்


-----------------


5  ''பிரதமர் பதவிக்கான போட்டியில், நான் இல்லவே இல்லை; பிரதமர் ஆகும் ஆசை கிடையாது; நரேந்திர மோடி தலைமையின் கீழ் தான் ஆட்சி அமைப்போம்,''= நிதின் கட்கரி 

அதாவது பாஜக ஜெயிச்சா?

============


6    பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சராக நியமிக்கப்படுவார்-அரவிந்த் கெஜ்ரிவால் 

 பாஜக வுக்கே தெரியாத பாஜக ரகசின்=யங்கள் இவருக்கு    தெரிஞ்சிருக்கே?


=================

7   1987-லேயே ஈமெயில் உபயோகித்தேன் -

மோடி"# இன்ட்டர்நெட்"வந்ததே 1991 ல தான்,அடிச்சு விடுங்க,காசா?பணமா?



=============


8 மேக மூட்டம் இருந்தால் விமானம் ரேடாருக்குத் தெரியாது - மோடி.

# டெக்னிக்கல் நாலெட்ஜ் இல்லைன்னா மன்மோகன்சிங் மாதிரி கம்முனு இருக்கனும்.எதுனா"வாய்க்கு வந்தபடி சொல்றது


===========


9 சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர் பெயர் நாதுராம் கோட்ஸே - கமல்ஹாசன்!

# இந்த டயலாக்கை இந்தியன் 2 ல வைங்க , நமக்குப்பின்னால வர்ற சந்ததியினர் பின்னால சிரிக்கட்டும்




============


10 கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் - ராஜேந்திர பாலாஜி

# கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.ஒரு அமைச்சருக்கு உண்டான பொறுப்புடன் பேசவும்,தனிப்பட்ட வெறுப்புடன் அறிக்கை விடக்கூடாது"




==============

11  

மோடியை எதிர்த்து போட்டியிட்ட தாதா திடீர் விலகல்


$   ஒரு தொகுதில ஒரு தாதா தான் போட்டி இட முடியும்னு தேர்தல் கமிஷன் ல சொல்லிட்டாங்களா>?


============


12  ராபர்ட் வாத்ரா, புதுடில்லியில் .ஓட்டளித்த பின், விரலில் வைக்கப்பட்ட மையுடன் கூடிய படத்துடன், சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வெளியிட்டார்.  நம் தேசியக் கொடிக்கு பதிலாக, தென் அமெரிக்க நாடான, பராகுவேயின் தேசியக் கொடியின் படத்தை அவர் வெளியிட்டுள்ளார்


ஆட்சி மாற்றம் ஏற்படனும்னா கொடிமாற்றம் ஏற்படனும்னு ஜோசிய்ர் சொல்லி இருப்பாரோ?

----------


13  ''இந்த தேர்தலில், நாடு முழுவதும், ஒவ்வொரு வீட்டில் இருந்தும், மோடி அலை பொங்கிப் பிரவாகமெடுத்துள்ளது,''  மோடி  #    மோடி எதிர்ப்பு அலையா இருக்கப்போகுது


 இதை ம்,  மத்தவங்க சொல்லனும், நமக்கு நாமே திட்டப்படி இவரே சொ.ல்லிக்கறாரு


===================


14 டுவிட்டர் சமூக வலைதளத்தில், பா.ஜ.,வை பின்தொடர்வோர் எண்ணிக்கை, 1.1 கோடியை தாண்டியுள்ளது,ராகுலை பின்தொடர்பவர் 94 லட்சம் பேர்


 அப்போ   15 %   ஓட்டு காங்கிரசை விட பாஜக வாங்கும்னு ஒரு கூட்டம் கிளம்பி இருக்குமே?


=============


15   இடைத்தேர்தல் பிரசாரத்தில், எந்த தாமதமும் கிடையாது.'கிளைமாக்ஸ்' நேரத்தில் பிரசாரம் செய்தால், மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும்-பிரேமலதா 

 ஆண்ட்டி க்ளைமாக்ஸ் ஆகிடாம இருந்தா சரி

===========


16  'மத்தியில், மூன்றாவது அணி ஆட்சி என்பது, வெறும் கற்பனை; சந்திரசேகர ராவ், ஸ்டாலின் சந்திப்பால் எதுவும் நடக்காது,'' =, பிரேமலதா 


நடக்காத விஷயத்துக்கு இவர் எதுக்கு ஸ்டாலின் வீட்டுக்கு நடையா நடக்கறாரு?>

--------------


17  தமிழகம் முழுவதும், தண்ணீர் தட்டுப்பாடு, முக்கிய பிரச்னையாக மாறிஉள்ளது. -பிரேமலதா 


 டாஸ்மாக் தண்ணி வேணா எனி டைம் கிடைக்குது


==============


18  என்னை பொருத் தவரை, மூன்றாவது அணி என்பது, 'வேஸ்ட்!-பிரேமலதா 

 ஆளுங்கட்சி எதிர்ப்பு வாக்குகள் பிரிவது  உங்களுக்கு பூஸ்ட்
=========


19  , சந்திரசேகர ராவ் மற்றும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சந்திப்பை, ஒரு சடங்காகவே பார்க்கிறேன். இந்த சந்திப்பால், எதுவும் நடக்கப் போவது இல்லை-பிரேமலதா 


 ஏன்? மீடியா ல பர பரப்பா ஒரு நாள் செய்தி போடுவாங்களே?


==================


20  சீக்கியர் படுகொலை தொடர்பான தன் பேச்சுக்கு, சாம் பிட்ரோடா வெட்கப்பட வேண்டும். அவருடைய பேச்சு முழுவதும் தவறானது. இதற்காக, நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். -ராகுல் 

 பேசாம கட்சியை விட்டு அவரை நீக்கிடுங்க, தேர்தல் முடிந்த பின் ஒரு மன்னிப்புக்கடிதம் வாங்கிட்டு சேர்த்துக்கலாம், இந்த டெக் நிக்,கை தான் ஸ்டாலின் ராதாரவி   நயன் தாரா சர்ச்சை பேச்சு  வெச்சு செஞ்சாரு

===================

0 comments: