Saturday, April 27, 2019

கலைஞர் , ராம்தாஸ் , கமல் மூவருக்கும் ஒரு ஒற்றுமை

1  சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் திமுக அமைச்சரின் மகன் மணி அன்பழகனுக்கு 7 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம் விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. # அந்த ஒரு கோடி உழைச்சு சம்பாதிச்சதா இருக்கனும்,திருடுனதை தரக்கூடாதுனு சொல்லிடனும்


==============


2 மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்கும் சினேகன்! # இவர் எந்தத்தொகுதி ல போட்டி இடறாரோ அந்தத்தொகுதி மக்கள் கவனமா இருக்கவும்.ஓட்டுக்கேட்க வரும்போது கட்டிப்புடி வைத்தியம் பாத்துடப்போறாரு,பிக்பாஸ் ஞாபகத்துல


=================


3 இந்த மாநிலத்தை டெல்லியிலிருந்து பிரதமர் கட்டுப்படுத்துகிறார். இது தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய அவமானம். இதை என்னால் ஏற்க முடியாது’’ # வாஸ்தவம்தான்.மன்மோகன்சிங் பிரதமரா இருந்தப்ப அவரை நீங்க கட்டுப்படுத்தலையா?அந்த அவமானத்தைக்கூடத்தான் நாங்க சகிச்சிக்கிட்டோம்


==============


4 இது போன்ற விஷயங்களை நான் ஆழமாக படிப்பது கிடையாது; எனவே, அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது; தெரியாத விஷயங்களை நான் பேசுவது கிடையாது!" - இல.கணேசன் # நாட்டுல நடக்கற முக்கிய விஷயங்கள்,குற்றங்கள் பற்றியே தெரியாம இருப்பதே ஒரு தலைவருக்கு மைனஸ்தான்


=================


5 என்னிடம் கடினமான கேள்வியைக் கேளுங்கள், எளிதான கேள்விகளை கேட்க வேண்டாம்!- ராகுல்காந்தி
வரும்போது மட்டும் அரசியல்வாதிகள் மக்களைத்தேடி வந்து சந்திக்கறாங்களே,அது ஏன்?


===============


6 பொள்ளாச்சி பாலியல் பயங்கரவாதிகள் வீடுகள்,அருகாமை இடங்களை"இடித்து சோதனை இட வேண்டும்.புலன் விசாரணை,நூறாவதுநாள் பட பாணியில் பல சடலங்கள் சிக்கக்கூடும்


===============


7 பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கலாம் - எடப்பாடி # மாங்கா கூட கூட்டணி வெச்ட்டு மாங்கா அடிக்கனும்கறாரே?தலைக்கு தில்லு பாத்தீங்களா?


===========

8 அதிமுக + தேமுதிக ஒப்பந்தம் கையெழுத்தானது "SUN" DAY. நேரம்−சூரிய அஸ்தமனம் ஆகறப்ப.எதுனா குறியீடா?


=============


9தேமுதிக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
தேமுதிகவிற்கு மொத்தம் 4 தொகுதிகள் ஒதுக்கீடு # ஏம்மா மின்னல்?இந்த நாலு சீட்டுக்காகத்தான் இந்த இழுவை போட்டீங்களா?நான் கூட 10 சீட் வாங்கி பாமக வை தாண்டிடும்னு நினச்சேன்


============


10 தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை; மக்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை - ரஜினிகாந்த் # எங்கே கமல் ஆதரவு கேட்டுட்டா என்ன பதில் சொல்றதுனு முந்்திக்கிட்டாரு


=================


11 தேமுதிக ரகசியங்களை உடைக்கிறார்', முன்னாள் எம்.எல்.ஏ சந்திரகுமார் # ஒரு துரோகிக்கு கட்சியில் இடம் கொடுத்தால் அவர் ஒரு சமயத்தில் இங்கேயும் துரோகம் இழைப்பார்


==============


12 மதிமுக எந்த தொகுதி மற்றும் எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பார் - வைகோ # விசுவாசம்னா இப்படி இருக்கனும்,அபாரம்


=============


13 7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது தமிழக ஆளுநரா? தமிழக அரசா? - வைகோ
# 2ம் இல்லை,பலரது கொடூர மரணத்துக்கு உடந்தையாக இருந்தது,தமிழன் தப்பு செஞ்சாலும் தப்பு தப்பு தானே?


===============


14 முதல் மனைவியின் 2 மகள்களின் உதவியுடன் 3வது மனைவியை கொன்ற 2வது மனைவி!- செய்தி.
# நீதி− 3 சம்சாரம் வெச்சிருந்தா பிரச்சனைதான்


============


15 "வலிமையான, திறமையான, அனுபவமிக்க ஒருவர் பிரதமராக வரவேண்டும்" : முதல்வர் பழனிசாமி
எங்க தளபதியால பிரதமர் ஆகவும் முடியாதுங்கறீங்களா?


==============



16 7பேர் விடுதலைக்காக திமுக எந்த நடவடிக்கையையும் எடுத்ததில்லை; 7பேர் விடுதலைக்காக மனித சங்கிலி என்ற நாடகம் நடத்தப்படுகிறது
- முதல்வர் பழனிசாமி # மனித சங்கிலிப்போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் மோதிரம்,வாட்ச்,பிரேஸ்லெட் பத்திரம்,உருவிடப்போறாங்க


==============


17 தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழகத்துக்கு கிடைத்த படகு, ஸ்டாலின் - நாஞ்சில் சம்பத் ? # காகிதக்கப்பல் கரை சேருமா?


=============


18 ராணுவ ரகசியங்களை இலங்கைக்கு பரிமாறிய கட்சி திமுக - தம்பிதுரை
# ஜெ மரணத்துக்கு காரணம் திமுக டைப் குற்றச்சாட்டு,இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு?


===============


19 பிரதமர் மோடி எங்கள் டாடி"- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
# எதுகை மோனையாப்பேசறதா நினைச்சு எதுனா உளற வேண்டியது,அப்றம் மீம்ஸ் போடறாங்க,நக்கல் பண்றாங்கனு புலம்ப வேண்டியது,அப்பா மாதிரி மரியாதைக்கு உரியவர்னாவது சொல்லி இருக்கலாம்


==============


20எனக்கு பிறகு எனது மகளோ, மைத்துனரோ அரசியலுக்கு வர மாட்டார்கள் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்
# இப்டித்தான் நான் பிறப்பதற்கு முன் கலைஞரும்,நான் சின்னப்பையனா இருக்கும்போது டாக்டர் அய்யாவும் சொன்னாக


===============

0 comments: