Friday, April 05, 2019

அண்ணன் - தம்பி களா இருந்தாதான் கூட்டு வைக்கனும்னு தேர்தல் கமிஷன் புது ரூல்ஸ்


1   சத்ருகன் சின்ஹா: காங்., மட்டும் தான், நம் நாட்டில் உள்ள, உண்மையான தேசிய கட்சி.-சத்ருகன் சின்ஹா # ஏகப்பட்ட காசிய கட்சி ஆச்சே?காசு உள்ள கட்சி


==============

2   தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும், மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். நாட்டில், சர்வாதிகார ஆட்சி நடக்கிறது-மம்தா பானர்ஜி: # வ்ழக்கமா இந்த டயலாக்கை தேர்தல்ல தோல்வி அடைஞ்சவங்க சப்பைக்கட்டு சொல்றதுக்காக யூஸ் பண்ணுவாங்க


================


: தலைவர் எடுத்த முடிவுக்கு மாற்று கருத்து உள்ளவர்கள், உண்மை தொண்டர்களாக இருக்க முடியாது. -த.மா.கா., துணை தலைவர், கோவை தங்கம் # தொண்டர்களின் உணர்வுக்கு மதி[ப்பு அளிகாமல் இஷ்டம் போல் முடிவு எடுப்பது ஜனநாயக தலைவனுக்கு அழகில்லையே?

=============

4  அ.தி.மு.க.,வுடன், பா.ம.க., கரம் கோர்த்தது, அவர்களின் விருப்பம். ஆனால், அவர்கள் கூட்டணி வைத்ததையும், அண்ணன் தம்பிகளாக நாங்கள் சண்டை போட்டு, திரும்பக் கூட்டணி சேர்ந்ததையும் ஒப்புமை காட்டுவதில், ஒரு விழுக்காடு கூட அர்த்தமில்லை. - வை கோ #  அண்ணன் தம்பி மாதிரின்னா அழகிரி ஸ்டாலின் போலவே?


===============

5   ஸ்டாலின், 'நடக்க உள்ள தேர்தலில், அ.தி.மு.க., அரசு காணாமல் போகும்' என, பேசி வருகிறார். OPS  #  அது காணாமப்போனா என்ன? அதுக்குப்பதிலா பாஜக அரசு இருக்கில்ல?


===============


6  ஆண்டுக்கு, இரண்டு லட்சம் பேருக்கு வேலை தருவதாகக் கூறிய பிரதமர் மோடி, அதைச் செய்யவில்லை.-ஸ்டாலின் : -  மீம்ஸ் க்ரியேட்டர்கள் , பக்கோடா போண்டா விஸ்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு இருக்கே?


====================


7  ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் திட்டமிட்டு, தமிழக அரசுக்கும், மோடி அரசுக்கும் எதிராக செயல்படுகின்றனர். அவர்களை, தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்.-அர்ஜுன் சம்பத் # கவர்மெண்ட் டீச்சர்களால டார்ச்சர்?


==================


8  காங்கிரசின் ஓட்டு வங்கி அரசியல், தேசத்தின் பாதுகாப்புடன் விளையாடும் அளவுக்கு, சென்று விட்டது. அதனால் தான், அமேதியை விட்டு, ராகுல் கேரளாவுக்கு ஓடுகிறார். ஏனெனில், அமேதியில் அவர் செய்த பணிகளுக்கு, மக்கள் கணக்கு கேட்பர் என்பதால், அவர் பயப்படுகிறார்-அமித் ஷா # அப்போ குஜராத் - வாரணாசி கதையை அவங்க கிளறுவாங்களே?


================


 9  மோடி, இரும்பு பிரதமர் அல்ல... கல் பிரதமர். -ஸ்டாலின் : - # அதாவது நிக்”கல்” பிரதமர்


==============


10  மோடி, முதல்வர் பழனிசாமி ஆகியோர், மக்களை பற்றியோ, நாட்டை பற்றியோ, நெசவாளர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் பற்றியோ, கவலைப்படுவது இல்லை. - ஸ்டாலின் : # இவர்களைப்பற்றி எல்லாம் தேர்தல் வரு ம் சமயங்களீல் மட்டும் கவலைப்படும் ஒரே கட்சி திமுக தான்?


=================

 11  மத்தியில் ஆட்சி மாற்றம் வந்ததும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்-ஸ்டாலின் :# மாற்றம் முன்னேற்றம் பாமக ஸ்;லோகன் ஆச்சே?அதை ஏன் துண்டுச்சீட்டு அட்மின் எழுதித்தந்தாரு>?


============== 


12  ஒன்றரை கோடி விழுதுகள் பறந்து விரிந்து கிடக்கும் ஆலமரத்தை, புயல், சுனாமி, பூகம்பமே வந்தாலும் வீழ்த்த முடியாது.- ஓபிஎஸ்  # இவரு இதுக்கு முன்னாடி புயல் , பூகம்ப, சுனாமி சேதங்களைப்பார்வையிட்டதே இல்லை போல 


============


 13  மக்களுக்கு, நல்ல தொண்டாற்ற வேண்டும். அதன்மூலம், மக்களின் அன்பை பெற்று, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என, ஜெயலலிதா எங்களுக்கு, பயிற்சி அளித்துள்ளார். எனவே, இந்தத் தேர்தலில், யார் காணாமல் போவர் என்பது தெரியும்-ஓபிஎஸ் # மக்களுக்கு நல்ல தொண்டுன்னா சொந்த ஊர் மக்களுக்கே கிணற்றுத்தண்ணீர்  கிடைக்க விடாமல் பண்றதா?


==============
14  நான் திராவிட இயக்கத்தால் வார்க்கப்பட்டு, கருணாநிதியால் வளர்க்கப்பட்டவன். பா.ம.க.,வும், அ.தி.மு.க.,வும், அண்ணன் தம்பிகளாக இருந்தனரா? - வை கோ- அப்போ அண்ணன் - தம்பி களா இருந்தாதான் கூட்டு வைக்கனும்னு தேர்தல் கமிஷன் புது ரூல்ஸ் போட்டிருக்கா?

===============

15  என் குடும்ப நண்பரான, லாலு பிரசாத், காங்கிரசில் சேரும்படி, என்னை வற்புறுத்தினார். அதனால், விரைவில் அந்த கட்சியில் இணைவேன்-சத்ருகன் சின்ஹா # அவருக்கே டதெரிஞ்சிருக்கு , அவர் கட்சில இவருக்கு இடம் தந்துடக்கூடாதுன்னு 


===================

16  கூட்டணிக்கு ராகுல் மறுப்பு: கெஜ்ரிவால் விரக்தி  #  அடுத்ததா காங்கிரசை கடுமையா தாக்கி அறிக்கை விடறதுதானே? நடக்கட்டும்


==================


17    ''தி.மு.க., பிரமுகர்களின் வீடுகளில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினால், 10 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும்,'' -  மீன் வளத் துறை அமைச்சர், ஜெயகுமார்  # இவர் தான் எண்ணி வெச்சு பணடல் போட்டு வெச்ச மாதிரியே பேசறாரே?



=================


18   நான் ஹிந்து மதத்துக்கு எதிரானவன் அல்ல: ஸ்டாலின்  # ஆமா, தேர்தல் வந்திடுச்சு இல்ல?இனி ஏப்ரல் 18 வரை இந்துக்களுக்கு ஆதரவு , அதற்குப்பின் வ்ழக்கம் போல  இந்துப்பண்டிகைகளுக்கு விடுமுறை தின வாழ்த்து?


==================


19  

மாநகராட்சி ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் வருமான வரித்துறை ரூ.15 கோடி கைப்பற்றப்பட்டதே என்ன ஆனது?- ஸ்டாலின் கேள்வி  # துரை முருகன் வீட்டில் கைப்பற்றப்பட்ட 33 கோடி பணம் போலவே அதுவும் உரிய இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டது



=================

20   

5 ஆண்டு எம்.பி.யாக இருந்து என்ன செய்தீர்கள்? எட்டுவழிச்சாலைக்கு எதிராகப் போராடினீர்களே: அன்புமணியைக் கேள்வி கேட்ட தொண்டருக்கு செம்மலை பளார் #  அறை கொடுத்தது ஏன்?னு யாராவது கேட்டா ரூம் தான் குடுத்தோம்னு சமாளீக்கலாம்


=============

0 comments: