Friday, March 29, 2019

lucifer -சினிமா விமர்சனம் ( MALAYALAM)

Image result for lucifer movie posterமாநிலத்தின் முதல்வர் திடீர்னு மரணம் அடைஞ்சிடறார். ( ஜெ ரெஃப்ரன்ஸ்)அவரோட மருமகன் அதிகாரத்தை கையில் எடுக்க முற்படறார். போதைப்பொருள் கேங்க் கிட்ட இருந்து பணம் வாங்கி போதைப்பொருட்களை மாநிலத்துக்குள் பரப்பலாம்னு ஐடியா பண்றார், இந்த வில்லத்தனம் போதாதுனு தன்னோட மனைவியின் முதல் கணவருக்குப்பிறந்த மகளை ( இவருக்கும் மகள் முறைதான்) கில்மா பண்ண அப்பப்ப ட்ரை பண்றார் ( இது யாரோட ரெஃப்ரன்ஸ்னு எல்லாருக்கும் தெரியும், ஆனா நாம சொன்னா நம்மை வந்து அடிப்பாங்க ,எதுக்கு வம்பு?)


இவரோட  சதித்திட்ட்டங்களை எப்படி முதல்வரோட தத்துப்பிள்ளை யான ஹீரோ முறியடிக்கிறார் என்பதே கதை


ஹீரோவா மோகன் லால். இயக்குநர்  பிரித்விராஜ் எனும் ஹீரோ என்பதால் ஹீரோ பில்டப் காட்சிகளுக்கு குறைவே இல்லை, கிட்டத்தட்ட மோகன்லால் வரும் காட்சிகளில் 90% ஸ்லோ மோஷன் காட்சிகளே,அஜித் மாதிரி நடந்துட்டே இருக்கார். படத்தின் மொத்தக்காட்சிகளில் ஹீரோ வரும் காட்சிகள் 60% தான், இது ஒரு பின்னடைவு, ஏன்னா ஏகப்பட்ட ஸ்டார்கள் படத்துல, எல்லாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கனும்னு இயக்குநர் ஆசைப்பட்டிருக்கிறார்


 வில்லனா விவேக் ஓபராய் , கம்பீரமான நடிப்பு .


 மஞ்சு வாரியர்  குட் 

டோவினோ தாம்ஸ்  நடிப்பு கலக்கல். அப்பாவைப்போலவே கெட்டப் சேஞ்ச் செய்வது , மேடையில் பேசும்போதே  உண்மையை உடைப்பது அபாரம்

 நம்ம தமிழ் ஆள் ஜான் விஜய் வில்லத்தனமான நடிப்பில் கலக்கி இருக்கார்

 மோகன் லாலுக்கு அடியாளா வருபவர் யாரோ? அசத்தல் பாடி லேங்க்வேஜ்


 பிஜிஎம்  பட்டாசு . ஒளிப்பதிவு குட்

Image result for manju warrier
நச் டயலாக்ஸ்

நீ ராஜா ஆக ஆசப்பட்டா முதல் கட்டமா ராஜாவைப்போட்டுத்தள்ளிடு (malayalam)


2 மசாலாப்படங்கள் நிறைய பார்ப்பீங்களோ?


அரசியல்ல எதுனா மொள்ளமாரித்தனம் பண்ண சினிமா கத்துக்குடுக்கும்




நீ என் கூட நிற்கறியா?இல்லையா?அது எனக்குக்கவலை இல்ல,ஆனா எதிர்த்து நிற்கக்கூடாது (malayalam)


4 பெரிய எம் ஜி யாரா நீ?

பெரிய தலைவரா நீ?
பெரிய தல யா நீ? வில்லனின் ஹீரோ பில்டப் பஞ்ச் ,அல்டிமேட் ரெப்ரென்ஸ்

தம்பி ,மயில்வாகனம் ,நான் தல இல்லடா,ஆனா உன் தலையை எடுக்க வந்தவன் (malayalam) ஹீரோ பஞ்ச்



தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  படம் போட்டு 32 நிமிஷங்கள் கழிச்சு ஹீரோ என்ட்ரி.இப்டி லேட்டா என்ட்ரி குடுத்து ஹிட் ஆன படங்கள் கேப்டன் பிரபாகரன் ,ஊமைவிழிகள்


மோகன்லால் படத்துல சிம்பு ரெப்ரன்ஸ் − வல்லவன் இவன் ஹீரோ பல்டப் சாங்

மோகன்லால் பாஜக மூலமாக அரசியலுக்கு வரலாமா?என வெள்ளோட்டம் பார்க்கும் பொலிடிக்கல் த்ரில்லர் lucifer (malayalam) @கேரளா சங்கணாச்சேரி அபிநயா

4 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாரா வின் , மோகன்லாலின் இரண்டுமே சராசரியான,சுமார் ரகங்களே!நாளை வெளியாக இருக்கும் சூப்பர் டீலக்ஸ் க்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.ஹிட் அடிக்குமா?னு பார்ப்போம்

சபாஷ் டைரக்டர்


ஹீரோ பில்டப் காட்சிகளில் ரொம்ப கவனம் எடுத்து பண்ணி இருக்கார், பல இடைங்களில் அஜித் ரெஃப்ரன்ஸ்,. குறிப்பா விஸ்வாசம் அடிச்சுத்தூக்கு  சீன் போலவே ஒரு ஃபைட் சீன், வீரம் பட நடைக்காட்சிகள்


2  முதல்வரின் மகன் மேடையில் பேசும்  காட்சியில் கேமரா ஆங்கிள் , இயக்கம், ஒளிப்பதிவு அனைத்தும் அற்புதம்


3  தமிழ் நாட்டு அரசியல் சூழலை கேரளாக்காரங்க பந்தாடறது சிறப்பு





லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)

1  லாஜிக் மிஸ்டேக் 1 − டிஎன்ஏ டெஸ்ட் இருக்கறது தெரியாம ஒரு சீன்ல ஒரு லேடி தன் குழந்தை இவர் மூலமாப்பிறந்ததுனு ஹீரோ மேல பழி போடறாரு.எந்த சோதனையும் செய்யாம எல்லாரும் அதை நம்பிடறாங்க (malayalam)

2 லாஜிக் மிஸ்டேக் 2 − ஒரே வீட்டில் வசிக்கும் அம்மா −மகள். மகளுக்கு போதைப்பழக்கம் இருக்கு,வீட்லயே யூஸ் பண்றா என்பது அம்மாவுக்கு பல வருடங்களா தெரியாம இருக்குமா?அப்பாவை விட அம்மாவுக்குதானே வாரிசின் நாடி தெரியும்? (malayalam)


3 வில்லன் தன் மனைவியின் முதல் கணவருக்குப்[பிறந்த மகளை கரெட்க்ட் பண்ண படாத பாடு ப்டறார். போதைப்பழக்கத்துக்கு அடிமையான மகளை போதை மருந்து தருவது எல்லாம் பண்றார், ஆனா அதை வெச்சே ஈசியா மிரட்டி கரெக்ட் [பண்ணி இருக்கலாம் , அதை விட்டுட்டு அல்லாடறார் ( ஐடியா தரலை, மடத்தனமா பண்றார்)


4 பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் மகள் ஏன் தன் அம்மாவிடம் அதை சொல்ல வில்லை?

5 முதல்வரின் மகளை ஒரு போலீஸ்காரர் மிரட்டுவது நம்பும்படி இல்லை. அவரு பதவி அதிகாரத்தை பயன்படுத்தி ஆளைத்தூக்க அஞ்சு நிமிசம் ஆகுமா?

சி.பி கமெண்ட் -Lucifer (malayalam ) - மெதுவான திரைக்கதை,டெக்னிக்கல் அம்சங்களை உபயோகித்த அளவு திரைக்கதையை கட்டமைக்கவில்லை.ஹீரோ பில்டப் சீன்கள் ஓவர்,வில்லன்கள் டம்மி,லாஜிக் மிஸ்டேக்குகள் அதிகம்.சராசரி அரசியல் மசாலா.மோகன்லாலுக்கு ஒரு மீடியம் ஹிட் பிலிம் ,ரேட்டிங் 2.5 / 5











0 comments: