Thursday, February 28, 2019

ஒரு அடார் லவ் (மலையாளம்) - சினிமா விமர்சனம்

Image result for oru adaar love
ஒரே ஒரு டீசர்ல இந்தியா பூரா பிரபலம் ஆனது நம்ம பிளிங்க்கிங் ப்யூட்டி கண்ணடிக்கும் கட்டழகி ப்ரியா வாரியர்தான்,அவர் நடிச்ச படம் டீசர் மாதிரி ஹிட் அடிச்சுதா? இல்லையா?னு பாப்போம் வாங்க


ஹீரோ , ஹீரோயின் 2 பேரும் 11 வது படிக்கறாங்க,ஸ்கூல்ல முதல் டைம்பார்த்ததுமே ஹீரோ ஹீரோயினைபார்த்து சிக்னல் குடுக்கறாரு ( நானெல்லாம் 11 வது படிச்சப்ப கூட படிச்ச பொண்ணுங்களோட முகத்தைப்பார்க்கவே 20 நாட்கள் ஆச்சு , ஏன்னா பொண்ணூங்க எங்க பெஞ்ச்சுக்கு முன்னாடி உக்காந்திருக்கும்க, காலைல வந்தபின் 4 பீரியட் நடக்கும்,லஞ்சுக்கு மரத்தடிக்குப்போய்டுவாங்க, க்ளாஸ் ரூம்ல வெறும் முதுகுதான் தெரியும்)


ஹீரோயின் வெட்கப்பட்டு தலை குனியும்னு எதிர்பார்த்தா அது கண்ணடிக்குது,புருவத்தை ஆட்டுது., ஹீரோ அடுத்த ரீல்லயே ஹீரோயினுக்கு லிப் கிஸ் குடுத்துடறாப்டி ( தியேட்டர்ல ஒரே விசில் மழை)

இனிமேதான் செம காமெடி, ஹீரோவுக்கு ஹீரோயின் தன்னை லவ் பண்ணுதா? இல்லையா?னு ஒரு டவுட் (ங்கொய்யால லிப் கிஸ்சே தந்தபின் என்ன கேனத்தனமான டவுட்?)


அதைக்கண்டுபிடிக்க மறுபடி ஒரு  கேனத்தனமான ஐடியா பண்றாப்டி,இப்டியே இடைவேளை வரை போகுது, ஒரு ட்விஸ்ட் வேணூமில்ல> 2 பேருக்கும் சின்ன கருத்து வேற்றுமை, பிரியறாங்க, லைனுக்கு பழைய படி நாயகியை வரவைக்க என்ன வழி?

 சக மாணவி அது ஹீரோ ஹீரோயின் 2 பேருக்கும் பொது ஃபிரண்டு, அது கூட பேசி வெச்சுக்கிட்டு 2 பேரும் லவ் பண்ற மாதிரி டிராமா போடலாம்னு ஐடியா, பொறாமைப்பட்டு நாயகி லைனுக்கு வந்துடும்னு திட்டம்


ஆனா ஒரு திருப்பம் , 2 பேரும் நிஜமாவே லவ் பண்றாங்க ( தமிழ்ல ரீமேக்குனா நயன் தாரா , சிம்பு , பிரபு தேவா நடிக்கலாம்)


க்ளைமாக்ஸ் என்ன ஆச்சு, வெள்ளித்திரையில் காண்க


Image result for oru adaar love


ஹீரோ நடிப்பு அருமை,போதும் ஆம்பளைங்களைப்பற்றி நமக்கென்ன கவலை?திருப்பதி லட்டு , திருநெல்வேலி அல்வா கணக்கா 2 ஹீரோயின்கள் இருக்காங்க, வர்ணிப்போம்


ப்ரியா வாரியர் பெரிய பிளஸ் அவரோட புருவங்கள்தான், லிப்ஸ்டிக் இடாமலேயே பிங்க் கலர்ல இருக்கும் அவர் உதட்டுக்கு லிப்ஸ்டிக் போட்டு கெடுத்து வெச்சிருக்கு, மற்றபடி அவரோட நடை, உடை , இடை எல்லாம் அழகு


அடுத்ததா நூரின் ஷெரீப், கர்லிங்க் ஹேர் கட்டழகி,  எதார்த்தமான சிரிப்பழகி. உதட்டுச்சாயம் பூசாத இதழ் அழகி, பிரிச்சு மேய்ஞ்சுட்டாப்டி, ரசிகர்களுக்கு  ஒரு ஷாக்கிங் சர்ப்பரைஸ் இவர் அழகு, ஏன்னா பட் டீசர், ட்ரெய்லர்ல ப்ரியாவாரியர்தான் சிக்சர் அடிச்சாரு, இவரை யாருக்கும் தெரியல

ஸ்கூல் கலாட்டாக்கள் அருமை, 

 ஜாலியா போகுது, 2 அழகிகளை ரசிக்கவே போலாம்

Image result for oru adaar love


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

காதலர்கள் ,கள்ளக்காதலர்கள் கூட்டத்தோட
587 பேரு ்/465 சீட்ஸ் ,பலரும் மடில உக்காந்துக்கிட்டாங்க,அடடா.. @கேரளா கோட்டயம் தன்யா

2  எத்தனை லவ் சப்ஜெக்ட் படங்கள் வந்தாலும் தவறாமல் இடம் பெறும் காட்சி ஒரே குடையின் கீழ் காதலர்கள் மழை பெய்யும் சமயம்,சலிப்பு தட்டாத காட்சி


சயின்ஸ் க்ருப்ல தான் ஹை க்ளாஸ் பிகர்கள் வருவாங்க (ஆனா நான் படிச்ச சயின்ஸ் க்ருப்ல மொக்க பிகருங்கதான் )


4 தற்செயலா அமையுதா?திட்டமிட்டு பண்றாங்களா தெரில,லவ் சப்ஜெக்ட் படங்கள்ல நாயகியை விட நாயகியின் தோழி செம பிகரா அமைஞ்சிடுது


டீசர்லயோ,ட்ரெய்லர்லயோ அப்ளாஸ் வாங்கற சீன் பெரும்பாலும் இடைவேளைக்கு அப்பறம்தான் வரனும்,எப்ப வரும்?எங்கே வரும்?னு ஜனங்க ஏங்கனும்,எதிர்பார்த்த சீன் வரும்போது தியேட்டர் அதிரனும் #


6  திரையில் ஒரு படம் ,தியேட்டர் சீட்களில் பல படங்கள் ஓடுவதால் இன்று லாஜிக் மிஸ்டேக்ஸ் கண்டுபிடிக்க டைம் இல்லை


Image result for oru adaar love
நச் வசனங்கள்



1  க்ளாஸ்மொத்தமும் கேர்ள்ஸா இருக்கனும்


அதுக்கு நீ கேர்ள்ஸ் ஹை ஸ்கூல்லதான் படிக்கனும்



கேரளா ல வெள்ளம் வந்தப்ப ஜனங்களைக்காப்பாத்துனது சூப்பர்மேனோ,ஸ்பைடர்மேனோ இல்ல,பிஷர்மேன் ( இது ட்விட்டர்ல ஹிட் ஆனது,சுட்டுட்டாங்க)


3 அப்பாவோட கண்டிப்பு இல்லாம அம்மாவோட அன்புல மட்டும் வளர்ற பையனோட ஒழுக்கம் சந்தேகத்துக்கு உரியதாத்தான் இருக்கும் v


4  உன் மேல யாருக்கு பொசசிவ்னெஸ் மட்டும் இருக்கா அவங்களை விட உன் கேரக்டரை நீ யாருக்காக மாத்திக்கறயோ,யார் உன் கேரக்டரை மாத்தறாங்களோ அவங்கதான் உன் வாழ்க்கைத்துணை யா அமைய பெஸ்ட் சாய்ஸ் ( எடிட்டட்)

Image result for oru adaar love

இயக்குநரிடம் சில கேள்விகள்



1 லாஜிக் மிஸ்டேக் 1− நாயகன்,நாயகி,நண்பர்கள் எல்லாரும் 11 வது படிக்கறமாதிரி தான் கதைக்களம் அமைந்தது,ஆனா பேர்வெல் பார்ட்டி வைக்கறாங்க ,12 வதுலதானே வைப்பாங்க?அதே ஸ்கூல் ல படிக்கறப்ப எப்டி 11 வதுலயே பேர்வெல் பார்ட்டி நடக்கும்? (malayalam)

2 என்னதான் நவீன யுகமா இருக்கட்டும், 11 வது படிக்கற க்ளாஸ் ரூம், ஸ்கூல் வளாகம் எல்லாம் ஒரே லவ்ஸ் மழைதான் , நிர்வாகம், கண்டிப்பு மருந்துக்குக்கூட இருக்காதா/


3 க்ளைமாக்ஸ்ல இவரா? அவரா? என்ற கேள்விக்கு விடையே சொல்லாமல் ட்விஸ்ட் வைத்தது எதுக்கு?


Image result for oru adaar love


OruAdaarLove (malayalam)- திரைக்கதையை விட இரு நாயகிகளின் அழகை நம்பி எடுக்கப்பட்ட சிறார்களின் காதல் கதை,ட்ரெய்லர் ஹிட் அடிச்ச மாதிரி படம் ஹிட் அடிப்பது எல்லாப்படங்களுக்கும் அமைஞ்சிடாது,மடத்தனமான,செயற்கையான க்ளைமாக்ஸ் பெரிய மைனஸ் , ரேட்டிங் 2.25 / 5

Wednesday, February 27, 2019

ஜூன் (2019) (மலையாளம்) - சினிமா விமர்சனம் ( எ ஃபீல் குட் மூவி ) @ டிஸ்னி ஹாட் ஸ்டார் +



பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு பிப் 15 அன்னைக்கு ரிலீஸ் ஆன ஏ செண்ட்டர் ஹிட் படம் இந்த ஜூன், கிட்டத்தட்ட நாயகியின் ஆட்டோகிராஃப் டைப் படம், பிரமாதமான திரைக்கதை அமைப்பு, நடிகர்களின் மிக இயல்பான நடிப்பு , அற்புதமான ஒளிப்பதிவு இவற்றால் கேரள மக்களை கொண்டாட வைத்திருக்கும் படம்

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோயின் ஒரு பிளஸ் 1 மாணவி,ஸ்கூல்ல சக மாணவனை லவ் பண்றா.ஜாலியான ஸ்கூல் நிகழ்வுகள் 4 ரீல் ஓடுது. பிளஸ் 2 முடிச்ட்டு காலேஜ் போறப்ப நாயகனும், நாயகியும் பிரியறாங்க. நாயகன் எங்கே இருக்கான்ன்னு தெரிஞ்சுக்கிட்டு காலேஜ் படிப்பை முடிச்ச நாயகி ஃபாரீன் போய் நாயகனை சந்திச்சு தன் காதலை வெளிப்படுத்தறா

இங்கதான் ஒரு சிக்கல், நாயகன் வீட்ல ஒரு கண்டிஷன் போடறாங்க, பொண்ணு வீட்டோட இருந்து சமையல் வேலை, புருசன் இந்த இரண்டை மட்டும் கவனிச்சா போதும் , வேலைக்குப்போக வேண்டாம்,, அது தேவை இல்லாத ஆணிங்கறாங்க


இது சம்பந்தமான நாயகன் நாயகி வாக்குவாதத்தில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு இருவரும் பிரியறாங்க

ஸ்கூல் படிச்சப்ப நாயகியை ஒன் சைடா லவ்வின இன்னொரு பையனை  இப்ப நாயகி சந்திக்குது, அவர் கூட பழகறது, காதலை ஏத்துக்க நினைக்கறதுனு ஒரு 4 ரீல் ஓடிடுது


இப்பதான் சிக்கல், நாயகி வீட்ல 

 நாயகி வீட்ல 2 லவ்வரையும் மறந்துடு, நாங்க பாக்கற மாப்ளையை கட்டுங்கறாங்க

 நாயகி என்ன முடிவு எடுத்தா என்பது க்ளைமாக்ஸ்

ஸ்கூல் மெமரீஸ் ஆடியன்ஸ் மனசுல ஆழமா பதிய வைக்கப்பட்ட பிரமாதமான படங்களான ஆட்டோ கிராஃப் , வைகாசி பொறந்தாச்சு ,96 , அழகி, பள்ளிக்கூடம் பட வரிசையில் நிச்சயம் ஜூன் இடம் பிடிக்கும்


 இயக்குநரின் திரைக்கதை அறிவு , கேரக்டர்களை அவர் வடிவமைத்த விதம், நடிக நடிகையர்களீன் அற்புதமான நடிப்பு . அட்டகாசமான ஒளிப்பதிவு அனைத்தும் படத்தை தூக்கி நிறுத்துது


 நாயகியா  ராஜிஷா விஜயன் நடிப்பு பிரமாதம், ஓப்பனிங் சீன்ல யே அவரோட கேரக்டர் வெளீப்படுத்தற விதம் அருமை, தன்னை எல்லாரும் கிளாமரான பொண்ணா பார்க்கனும், த்னிப்பட்ட  டேலண்ட் எதுவும் கில்லைன்னாலும் தனித்துவமா தான் மத்தவங்க கண்ணுக்கு தெரியனும் என நினைக்கும் கேரக்டர்


காதலிக்கும் மனசு , அம்மா அப்பாவுக்கு கட்டுப்பட்டு இருப்பது, தன் தன்மானம்  சீண்டப்படும்போது காதலனை தூக்கி வீசுவது என நடிப்பில் ஆங்காங்கே சிக்சர்


பொதுவா சினிமா வில் அப்பா கேரக்டர்  மிக்சர் சாப்பிடற ஆளாகவோ, ஓவரா பில்டப் தர்ற அன்புள்ள அப்பா சிவாஜியாவோ பார்த்தே பழக்கப்பட்ட நமக்கு மிக இயல்பான அப்பா கேரக்டர் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கு  




தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  நேத்து ரிலீஸ் ஆன இன்று ரிலீஸ் ஆன 2ம் பள்ளிக்காதல் பற்றிய கதை.காட்சி அமைப்புகள் பாத்தா ஒரே டிவிடி யை அட்லீயும் ,முருகதாசும் பாத்து தனித்தனியா 2 படம் எடுத்த மாதிரி இருக்கு




2 தியேட்டர்ல கைதட்டல் வாங்கறதுக்காக மடத்தனமான காட்சிகளை வைப்பது இயக்குநர்களுக்கு பழகிடுச்சு,காதலன் படத்துல அப்பா,மகன் ஒண்ணா உக்காந்து சரக்கு அடிக்கற மாதிரி இதுல அப்பாவும் மகளும் (15 வயசு) சரக்கு அடிக்கறாங்க வீட்ல,விளங்கிடும் (malayalam)






3 இடைவேளை வரை ஒருத்தனை லவ்விட்டு சில பிரச்சனைகளால் (கருத்து வேற்றுமை)நாயகி டக்னு ஆளை மாத்தி இடைவேளைக்குப்பின் வேற ஒருத்தன் கூட பழகீட்டு இருக்கு,நமக்கு ஜீரணிக்க கஷ்டமா இருக்கு,நிஜ வாழ்க்கைலயும் இப்டித்தான் ,பொண்ணுங்க (malayalam)








இயக்குநரிடம் சில கேள்விகள்,லாஜிக் மிஸ்டேக்ஸ்

1− கேரளா வில் ரேஷன் கார்டு இருக்கோ இல்லையோ ஒவ்வொரு வீட்டிலும் மினிமம் 2 குடை உண்டு,(ஏழை வீட்டிலும்) ஒரு மிடில் கிளாஸ் பேமிலி கேர்ள்ஸ் 10 பேரு ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் குடை இல்லாம வெளில கிளம்பறாங்க ,மழை சீசனில்
2− பள்ளி வளாகத்தில் செல்போனே நாட் அலோடு.இதுல வீடியோ கேமராவே ஸ்கூல் க்ளாஸ் ரூம்க்குள்ள கொண்டு வந்து பொண்ணுங்களை வீடியோ எடுக்கறாரு


2− ஸ்கூல் முடிஞ்சு (4.30 pm) வீட்டுக்கு வர்ற (5pm) மாணவி வீட்ல அப்பா ஆபீசுல இருந்து அவருக்கு முன்பே ரிட்டர்ன் வந்திருக்காரு,சுகவாசிகளான பாங்க் ஆபீசர்ஸ் ,அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூட வீட்டுக்கு வர 6 pm ஆகிடுமே?






நச் டயலாக்




1 நான் போன் பண்றப்ப நீ போன் அட்டண்ட் பண்றப்ப உங்க வீட்ல யாராவது பக்கத்துல இருந்தா பவ் னு சொல்லு




அப்டின்னா?

Parents are watching (paw)





சி பி எஸ் ஃபைனல் கமெண்ட்
ஜூன் (மலையாளம்)− எதிர்பாராத வெற்றிப்படம்.கண்ணியமன திரைக்கதை அமைப்பு,உணர்வுப்பூர்வமான நெறியாள்கை,நடிகநடிகையர்களின் ஆத்மார்த்தமான நடிப்பு அனைத்தும் கிளாசிக்,ஏ சென்ட்டர் பிலிம்,கிட்டத்தட்ட நாயகியின் ஆட்டோகிராப் ,ரேட்டிங் 3 / 5
கேரளா கோட்டயம் ரம்யா ஜூன் fdfs 11 am show
June
June (2019 film) poster.jpg
Theatrical release poster
Directed byAhammed Khabeer
Written byLibin Varghese
Ahammed Khabeer
Jeevan Baby Mathew
Produced byVijay Babu
StarringRajisha Vijayan
Sarjano Khalid
Arjun Ashokan
Joju George
Aswathi Menon
Sunny Wayne
CinematographyJithin Stanislaus
Edited byLijo Paul
Music byIfthi
Production
company
Distributed byFriday Tickets
Release date
  • 15 February 2019
CountryIndia
LanguageMalayalam




=





a




Tuesday, February 26, 2019

மிஸ்டர் அன்ட் மிஸ் ரவுடி (2019) ( மலையாளம்) -சினிமா விமர்சனம் ( காமெடி மெலோ டிராமா) @ ஜியோ சினிமாஸ் , அமேசான் பிரைம்




Director:

 Jeethu Joseph

Writers:

 Linta Jeethu (story), Jeethu Joseph

Stars:

 Kalidas Jayaram, Shebin Benson, Vishnu Govindhan





அண்ணன் அழகிரி மாதிரி பெரிய ரவுடி ஆகிடலாம்னு ஹீரோ & ஃபிரண்ட்ஸ் க்ரூப்க்கு ஆசை, ஆனா பாருங்க தம்பி தளபதி மாதிரி காமெடி பீஸ் ஆனதுதான் மிச்சம், பெரிய பிராஜெக்டே வரமாட்டேங்குது, வர்றதெல்லாம் டம்மி கேசுங்க


இந்த மாதிரி சந்தர்ப்பத்துலதான் ஹீரோயின் மேல வண்டியை மோத விட்டு ஆக்சிடெண்ட் பண்ணிடறாரு ஹீரோ , ஒரு நாள் அவர் கூட ஹாஸ்பிடல்ல இருக்காரு, ஹீரோயினோட சித்தி இதுதான் சாக்குன்னு ஹீரோயினை வீட்டை விட்டு அனுப்பிடறாப்டி, சின்னம்மா, சித்தின்னாலே கொடுமைக்காரிங்கதானே?

ஒரே விட்ல ரவுடி ஹீரோ, ஹீரோயின் ஆனா இவங்க 2 பேருக்குள்ள லவ் கிடையாது, எப்படி திரைக்கதை பயணிக்குது? அப்டிங்கறதுதான் மிச்ச மீதி

த்ரிஷ்யம் ( பாபனாசம்)னு மெகா ஹிட் த்ரில்லர் கதை எழுதுன அதே ஜீத்து ஜோசப்தான் இதுலயும் திரைக்கதை, இயக்கம், ஆனா பாருங்க அவரோட சம்சாரம்தான் கதை , தயாரிப்பு, நான் என்ன நினைக்கறேன்னா அவரோட சம்சாரம்தான் முழு கதை திரைக்கதை எழுதி பிராண்ட் வேல்யூக்காக தன் புருசன் பேரை போட்டுக்கிச்சுன்னு


முதல் பாதி பூரா அச்சு பிச்சுக்காமெடி, பின் பாதில வேற வழி இல்லாம ஹீரோ , ஹீரோயினை சுத்தி கதை போகுது, ஒரு வலிய திணிக்கப்பட்ட ஆக்சன் க்ளைமாக்ஸ்


ஹீரோ சிடு சிடு முக நரசிம்ம ராவா வர்றாரு, எடுபடலை, பொதுவா ஆம்பளைங்க எப்படி பெர்ஃபார்ம்  பண்ணா நமக்கு என்ன? ஹீரோயினைப்பற்றி பார்ப்போம்,



 அபர்ணா பாலமுரளி தான் நாயகி. ஹீரோ தனுஷுக்கு தம்பி மாதிரி இருக்காரு, ஹீரோயினு அனுஷ்காக்கு அக்கா மாதிரி இருக்கு, கன்னம் எல்லாம் ரொம்ப முற்றிப்போயிடுச்சி, ஆனாலும்  ஃபிகரு சைட் அடிக்கற கணக்காதான் இருக்கு

மொக்கை ஃபிகரு ரோட்ல போனாலே முப்பது தடவை திரும்பிப்ப்பார்ப்போம்,நல்ல ஃபிகர்போனா விடுவமா?


ரவுடியிசக்கதைல கடைசி வரை போலீஸ் ஸ்டேஷன், போலீஸ் இவங்க எல்லாம் இருக்காங்களா? இல்லையா?ன்னே தெரியல

50,000 ரூபா சம்பளம் குடுத்துட்டு நாயகி கிட்டே 5 லட்சம் ரூபாக்கு பர்ஃபார்மென்ஸ் வாங்கற கேமரா மேதை கர்ணன் ( ஜம்பு, இரட்டைக்குழல் துப்பாக்கி, ஜான்சி)கிட்டே இந்தப்படத்தோட கேமரா மேன் , இயக்குநர் கத்துக்க நிறைய இருக்கு, 10 லட்ச ரூபா சம்பளம் கொடுத்து 1000 ரூபாக்கு கூட நாயகியை யூஸ் பண்ணலை, ஒரு க்ளோசப் ஷாட் இல்லை, ஒரு ஸ்லோமோஷன்  சீன் இல்லை, ஒரு டூயட் இல்லை, ஒரு ரொமான்ஸ் சீன் இல்லை, அப்பறம் எதுக்கு தண்டமா அந்த ஹீரோயின்?


நச்  டயலாக்ஸ்


1  நம்ம எல்லாருக்கும் ஒரு வேலை கிடைச்சிருக்கு,ஆனா அதுக்கு ஒரு முழு நாள் சாப்பிடாம பட்டினி கிடக்கனும்


இப்பவே அப்டித்தானே இருக்கோம்?
a jeethu joshep film




தான் ஒரு பேஷன் போட்டோகாராபர்னு அந்தப்பொண்ணு கிட்ட கத விட்டிருக்கான்


ஓஹோ
ஆனா நிஜத்துல அசிஸ்டெண்ட்டா விளக்குப்பிடிக்கற வேலைதான், ஐ மீன் லைட் பாய்
a jeethu joshep film




தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  சூர்யா நடித்த "காதலே நிம்மதி" + கமல் நடிக்க இருந்து கைவிடப்பட்ட கண்டேன் சீதையை + வின்னர் வடிவேலு காமெடி டிராக் = ஜீத்து ஜோசப் பின் "Mr & mrs rowdi ( malayalam ) ( இயக்குநர் ஒரு த்ரில்லர் மூவி ஸ்பெஷலிஸ்ட் ஆனா இது காமெடி மூவி)

2  Mr & mrs rowdi ( malayalam ) 11 am fdfs @ kerala kottayam aasha 65% full a jeethu joshep film \


இயக்குநரிடம் சில கேள்விகள்


1   லாஜிக் மிஸ்டேக் 1− ஒரு கோபத்துல வீட்டை விட்டு வெளில போ னு சித்தி துரத்தி விடுது,நாயகி ஒரே ஒரு துக்ளியூண்டு பேக்ல 3 செட் டிரஸ் எடுத்துட்டுப்போகுது.பொதுவா பொண்ணுங்களுக்கு ஒரு பீரோ நிறைய சேலை கலெக்சன் இருக்குமே? நல்ல பேமிலி வேற ((malayalam )



2 லாஜிக் மிஸ்டேக் 2− ரூம் கிடையாதுனு சொன்னதும் ஹீரோ ஹீரோயின் கிளம்பறாங்க ,ஊர்ல எத்தனை லேடீஸ் ஹாஸ்டல் இருக்கு,ஒரு ஆள் இல்லைன்னா முயற்சியை விட்ருவாங்களா?அட்லீஸ்ட் 3 கூட பாக்க மாட்டங்களா?
a jeethu joshep film





MrandMrsRowdy − பாசில் இயக்கிய அரங்கேற்ற வேளை (ராம்ஜிராவ் ஸ்பீக்கிங்க்) போல முதல் 80% திரைக்கதை காமெடி,கடைசி 20 % ஆக்சன் த்ரில்லர் ,மீடியம் ஹிட் அடிக்கும் ,ரேட்டிங் 3/5
a jeethu joshep film


Mr. & Ms. Rowdy
Mr. & Ms. Rowdy movie poster.jpg
Theatrical release poster
Directed byJeethu Joseph
Screenplay byJeethu Joseph
Story byLinta Jeethu[1]
Produced byGokulam Gopalan
Jeethu Joseph[2]
StarringKalidas Jayaram
Aparna Balamurali
Shebin Benson
CinematographySatheesh Kurup
Edited byAyoob Khan
Music byScore:
Anil Johnson
Song:
Arun Vijay
Production
company
Sree Gokulam Films
Distributed byCentral Pictures
Release date
  • 22 February 2019
(India)
Running time
138 minutes
LanguageMalayalam
Budgetcrore
Box office 1.5 crore





Monday, February 25, 2019

Kodathi Samaksham Balan Vakeel (2019)( malayalam) -சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)

Image result for Kodathi Samaksham Balan Vakeel ( malayalam)

ஹீரோ ஒரு வக்கீல்.அவர் கிட்டே ஒரு வினோதமான கேஸ் வருது. அதாவது ஒரு பொண்ணு வந்து புகார் தருது. ஒரு அரசியல்வாதியை சந்திக்கப்போனப்ப அவரு பாலியல் ரீதியா துன்புறுத்துனாரு,அவர் கிட்டே ஒரு கோடி ரூபா மானநட்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பனும்னு. ஹீரோ ஒத்துக்கறாரு, நோட்டீஸ் போகுது


போலீஸ் விசாரணைல ஒரு பொண்ணைக்கூட்டிட்டு வ்ந்து இந்தப்பொண்ணுதான் புகார் தந்த அந்தப்பொண்ணா?னு கேட்கறாங்க. 2ம் வேற வேற , ஏதோ ஆள் மாறாட்டம், ஆனா சந்தர்ப்ப சூழலால ஹீரோ ஆமாங்கறாரு


இப்ப அந்தப்பொண்ணு மாட்டிக்கிச்சு. இந்தக்கேசோட பின் புலம் என்ன>? என்பதே மிச்ச மீதித்திரைக்கதை


ஹீரோவா திலீப், இவரு பெரும்பாலும் காமெடி கேரக்டர்தான் பண்ணுவாரு, நம்ம அரசியல் தளபதி மாதிரி. இந்தப்படம் அவருக்கு ஒரு கம் பேக் படம்.ஆல் செண்ட்டர்  மீடியம் ஹிட் அடிச்சிடுச்சு.இவரோட ஸ்க்ரீன் பிரசன்ஸ் , டயலாக் டெலிவரி எல்லாமே கன கச்சிதம்


ஹீரோயினா மம்தா மோகன் தாஸ். ரொம்ப பிரமாதமும் இல்லை, ரொம்ப மோசமும் இல்லை


இன்னொரு நாயகியா ப்ரியா ஆனந்த் , ஏதோ பேலியோ டயட்ல இருப்பார் போல , கோபிகா மாதிரியே இவரும் முகமெல்லாம் நீள் வட்டம் ஆகி ஒல்லியா லேடி தனுஷ் மாதிரி இருக்காரு


திரைக்கதைல ஹீரோ க்கு திக்குவாய் என்பது வலிந்து திணிக்கப்பட்டிருக்கு, அது தேவையே இல்லை, அதை வெச்சு செய்யப்பட்டகாமெடி டிராக் செம கடுப்பு

ஒளிப்பதிவு , எடிட்டிங், இசை , பின்னணி இசை எல்லாமே சராசரி தரம், ஃபிளாஸ்பேக் காட்சிகள் ஹீரோவை இளமையா காட்டுது, மேக்கப் குட்



தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  நடிகை,பாவனா பாலியல் பலாத்கார வழக்கில் கைது ஆகி சிறையில் இருக்கும் தண்டனைக்கைதி திலீப் நடித்த (மலையாளம்) ஏ சென்ட்டர் ஹிட் என தகவல் ( இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம் ,ஹீரோ வக்கீல்)




2 மாற்றுத்திறனாளி களை கிண்டல் செய்வது போல் காமெடி டிராக் அமைப்பது மிகத்தவறானது.காதலா காதலா வில் கமல் செய்த அதே தவறை திலீப் இதில் செய்திருக்கிறார் ( malayalam)









லாஜிக் மிஸ்டேக்ஸ்



1 லாஜிக் மிஸ்டேக் 1− பிரவம் ரோடு எனும் ரயில்வே ஸ்டேஷனில் போலீஸ் என்கொயரி நடப்பது போல் சீன்,அப்போ அங்கே போர்ட்டர்கள் பார்சலை இறக்கி ஏத்தறாங்க.ஆனா நிஜத்தில் கேரளாவில் பாலக்காடு ,திருச்சூர்,எர்ணாகுளம்,கோட்டயம்,கொல்லம்,திருவனந்தபுரம் மட்டுமே பார்சல் புக்கிங் உண்டு,பிரவம் ரோடு பேசஞ்சர் ரயில்,memo மட்டுமே நிற்கும்.எக்ஸ்பிரஸ்க்கு ஸ்டாப்பிங்க் கிடையாது #KodathiSamakshamBalanVakeel ( malayalam)




லாஜிக் மிஸ்டேக் 2 − போலீஸ் கமிஷனர் ஆபீஸ் மீட்டிங் ஹாலில் பேசிமுடித்து வெளியே வந்த உடனேயே வாசலிலேயே ஒரு போலீஸ் ஆபீசரும் ,லாயரும் (ஹீரோ)சட்டத்துக்குப்புறம்பான சதி ஆலோசனை செய்யறாங்க,சிசிடிவி இருக்குதே? தள்ளிப்போய் சதி செய்ய மாட்டாகளா? ( malayalam)




3 ஹீரோ , அவரோட காலேஜ் மேட் இருவரும் ஒரே வயசு, அவ்ளோ சின்ன வயசுல ஒருவர் ஜட்ஜ் ஆக முடியுமா?வக்கீலா கொஞ்ச வ் அருசம் சர்வீஸ் பண்ணி ஒருவர் ஜட்ஜ் ஆக எப்படியும் 40 வயசு ஆகிடும், இதுல 26 வயசுலயே ஜட்ஜ் ஆகறாரு






நச் டயலாக்ஸ்




1 இந்த உலகத்துல பணத்தால எதை/யாரை வேணா விலைக்கு வாங்க முடியும்னு நினைக்கறாங்க,ஆனா பணத்தை விட வலிமையான ஆயுதம் பெண்தான் ( malayalam)





2 எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டு வாழ்க்கைல அடுத்து என்ன செய்யறது?னு தெரியாம திண்டாடறப்பக்கூட நேர்மையான வழியைத்தேர்ந்தெடுப்பவனே மனோபலம் மிக்கவன் ( malayalam)




3 மோசக்காரனா ,குடிகாரனா இருந்தாலும் கடைசி வரை ஒரு மகளுக்கு நம்பிக்கையானவனா,நேர்மையானவனா இருக்க அவளோட அப்பாவாலதான் முடியும் ( malayalam)













திலீப் நடித்த KodathiSamakshamBalanVakeel (மலையாளம்) க்ரைம் த்ரில்லர் @ kerala kottayam abhilash 2 pm show 60% full Kodathisamakshambalanvakeel



=
=






KodathiSamakshamBalanVakeel ( malayalam)− முதல் பாதி காமெடி,பின் பாதி க்ரைம் த்ரில்லர்,திலீப்க்கு மீண்டும் ஒரு வெற்றிப்படம் (மூன்றாம் கலைஞர் ரீமேக் பண்ண சரியான சப்ஜெக்ட்), ரேட்டிங் 2.75 / 5 பி சென்ட்டர் ஹிட் ( malayalam)