Tuesday, November 06, 2018

சர்கார் -சினிமா விமர்சனம்

sarkar के लिए इमेज परिणामஎந்த நாட்டுக்குப்போனாலும் அங்கே இருக்கற கார்ப்பரேட் கம்ப்பெனிகளுக்கு கிலி கொடுக்கற ஒரு கார்ப்பரேட் க்ரிமினல் சொந்த நாட்டுக்கு  விசிட் அடிக்கறார், யாருக்கு ஆப்பு விழுமோன்னு கம்பெனிங்க நடுங்கறப்ப தன் ஓட்டைப்போடத்தான் வந்திருக்கார்னு தெரிஞ்சு ஆசுவாசம் ஆகிடறாங்க. ஆனா அவர் போட வேண்டிய ஓட்டை வேற ஒருத்தன் போட்டுடறான். எதிர்த்து கேஸ் போடறாரு, அந்த தொகுதில மட்டும் தான் தேர்தல் கேன்சல் ஆகும்னு அசால்ட்டா இருந்த ஆட்கள் அதைப்பார்த்து 234 தொகுதி ஆட்களும் கேஸ் போட டோட்டல் டேமேஜ், தேர்தல் கேன்சல். வில்லனுக்கும் , ஹீரோவுக்கும் நடக்கற போராட்டம்தான் பின் பாதிக்கதை


 ஏ ஆர் முருகதாஸ்  எப்பவும் கதைக்கருவில் ஒரு நம்பகத்தன்மையையும், பலமான அடித்தளத்தையும் அமைச்சுடுவார், அதே ஃபார்முலா இதிலும் ஒர்க் அவுட் ஆகி இருக்கு, ஆனா பின் பாதி திரைக்கதைல தடுமாறிட்டார், 234 தொகுதிகள்லயும் ஹீரோ செல்வாக்கு பெறுவதை கரெக்ட்டா எக்சிக்யூட் பண்ண முடியல


 ஹீரோவா தளபதி விஜய். ஆக்சன் காட்சிகளில் அதகளம் பண்ணி இருக்கார், படத்தின் முக்கிய பிளஸ்சே ஃபைட் சீன்கள் தான். இவருக்கோ , இவரோட அப்பாவுக்கோ ஒரு ஓவர் கான்ஃபிடன்ஸ் மனசுக்குள்ள இருக்கு , இதே மாதிரி ஒரு சந்தர்ப்பம் ராசய்யா பட ரிலீஸ்ல பிரபு தேவாகிட்ட இருந்தது , என் சம்பளம் இப்போ ஒரு கோடி-னு பஞ்ச் பேசுனார், ராஜ்கிரண் மாணிக்கம் ல ஒரு டஹால்டி பஞ்ச் பேசுனார், அதே போல் 3 இடங்களில்  விஜய் பஞ்ச் பேசறார். பாடல் காட்சிகள், நடனம் வழக்கம் போல் விஜய் ஸ்கோர் பண்றார். சில இடங்களில் நாடகத்தனம் தூக்கலா தெரியுது


வில்லியா வரலட்சுமி, செம ஆக்டிங். இவருக்கு ஜெ வின் உடை அலங்காரம் , சசிகலாவின் திமிர்த்தனம் வர்ற மாதிரி கேரக்டர் செட் பண்ணி இருக்காங்க , நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு


 நாயகியா கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் ல பட்டையைக்கிளப்பின கீர்த்தி இதுல சராசரி ஆகி இருக்கார்

 யோகி பாபு சும்மா கெஸ்ட் ரோல் மாதிரி


ராதாரவி கவனிக்க வைக்கும் நடிப்பு, எத்தனை வருச அனுபவம்!!


இசை  குட் , பின்னணி இசை இன்னும் கலக்கி இருக்கலாம். 

 ஒளிப்பதிவு  , எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்கள் சராசரி ரகம். திரைக்கதை முன் பாதி சுவராஸ்யமா கொண்டு போற இயக்குநர்  பின் பாதில தடுமாறி இருக்கார் 

 பெண்கள் , குழந்தைகளுக்குப்பிடிக்குமா? என்பது டவுட் தான், விஜய் ரசிகர்களுக்கு செம தீபாவளி விருந்து



நச் டயலாக்ஸ்

1  FB ல சிங்கிள்னு போட்டிருந்தீங்க?

ஆமா
ஆனா கூட ஒரு பொண்ணு இருந்ததே?
ஆமா,ஒரு பொண்ணு தானே இருந்தது?அதான் சிங்கிள்னு போட்டேன்


நெம்பர் 2 பொசிஷன்ல இருக்கற உனக்கே இவ்ளோ அதுப்பு இருந்தா நெ 1 பொசிஷன்ல இருக்க எனக்கு எவ்ளோ அதுப்பு இருக்கும்!? ,விஜய் உள்குத்து பஞ்ச்


இந்தக்காலத்துல எவன் யோக்கியனா இருக்கான்?

எங்க அப்பா ரொம்ப நல்லவரு,கம்மியாதான் லஞ்சம் வாங்குவாரு


5  திருடனை பிடிப்பது மட்டும் சட்டத்தோட வேலை இல்லை,திருடப்பட்ட பொருளை உரியவங்களுக்கு திருப்பித்தர்றதும் சட்டத்தோட கடமைதான்

மக்கள் சாகவே கூடாதுனு அரசாங்கம் நினைக்கல,கலெக்டர் ஆபிஸ் முன்னால வந்து பிரச்சனை பண்ணக்கூடாதுனு நினைக்கறாங்க

நம்ம நாட்டுல பிரச்சனைக்கு தீர்வு தேவை இல்லை,இன்னொரு பிரச்சனை தான் தேவை,மக்கள் டைவர்ட் ஆனா போதும்

இந்தப்பிரச்சனைக்கு மக்களோட ரீ ஆக்சன் என்ன?
ஸ்பாட்ல இருந்தவன் அவன் பிரண்ட்சுக்கு எல்லாம் பார்வார்டு பண்ணான்,அவங்க அவங்களோட பிரண்ட்சுக்கு பார்வார்டு பண்ணாங்க,அவ்ளவ்தான்

நம்ம எல்லாருக்கும் பொதுவா இருக்கறது பணம்தானே?
இல்லை,மக்கள்.ஒவ்வொரு இடத்துலயும் மக்கள்தான் பொது


10 அவன் கிட்ட எந்த வம்பும் வெச்சுக்காதீங்க,ரொம்ப டேஞ்சரான ஆளு (SAC எடுத்துக்கொடுக்க ஜெயமோகன் தொடுத்துத்தந்த பஞ்ச் போல)


11 நம்ம ஜனங்கள்ல பாதிப்பேரு முட்டாளுங்க
யோவ்....
சரி,நம்ம ஜனங்கள்ல பாதிப்பேரு புத்திசாலிங்க
ஆங்,அது
பாத்தீங்களா?ஒரே விஷயம் தான்,சொல்ற விதத்துலதான் வேறுபடுது

12 நெகடிவ்வா சொன்னாதான் ஒரு விஷயம் ஜனங்களுக்கு போய்ச்சேரும்


13 1000 ருபா திருடுன திருடனைப்பிடிக்க போலீஸ் 10,000 ருபா செலவு பண்றதில்லையா? 9000 ருபா நட்டம்னு நினச்சா அந்த திருடன் அவன் வாழ்நாள் பூரா திருடீட்டே இருப்பான்

14 ஆட்சிக்கு வந்தா எது வேணா பண்ணலாம்னு நினைக்கற அரசியல்வாதிங்க திமிரை அடக்கனும்,நான் அடக்கறேன்


15 தப்பு பண்றதை விட அபத்தம் அதை மறைக்கறது


16 நீங்க பண்ற ஒவ்வொரு தப்பும் எதிரிக்கு லாபம்


17  கண்ட்டெய்னர் ல கோடி கோடியா பணத்தை கடத்துனவங்க எல்லாம் செத்தே போய்ட்டாங்க ( அதிமுக ஜெ வை அட்டாக்கிங்)


18 தேர்தல் ல போட்டியிட ரூல்ஸ் எல்லாம் தெரியுமில்ல?
அதெல்லாம் அவருக்கு தெரிஞ்சதாலதான் எலக்சனே மறுபடி வருது

19 எதிர்க்க ஆளே இல்லைன்னு இறுமாப்போட இருக்கறதுதான் ஜனநாயகத்தோட முதல் பலஹீனம்


20 வரலட்சுமி பஞ்ச் = அவன் கார்ப்பரேட் கிரிமினல், நான் கருவிலேயே கிரிமினல்






தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  சர்கார் ,தீபாவளிக்கொண்டாட்டம் @ ஈரோடு ஸ்ரீநிவாசா 4.30 am ஷோ ,ஹவுஸ்புல் ,ஜனங்க கிட்ட இருக்கற இந்த விழிப்புணர்வு படிக்கறப்ப இருந்திருந்தா எல்லாரும் கலெக்டராவோ,ஐபிஎஸ் ஆபிசராவோ ஆகி இருக்கலாம் (என்னையும் சேர்த்து)


தியேட்டர்ல பார்க்கற அனுபவமே தனி,ரசிகர்களோட உற்சாகக்குரல்,கை தட்டல்,விசில் கொண்டாட்டத்தோட படம் பார்க்கறதே தனி அனுபவம்.


கூகுள் சுந்தர் பிச்சை + டிராபிக் ராமசாமி = சுந்தர் ராமசாமி (ஹீரோபேரு உருவான வரலாறு)

ஹீரோ ஓப்பனிங்க் சீன் துப்பாக்கி,கத்தி லெவல்ல ... ஹீரோயின் ஓப்பனிங்க் சீன் டம்மி

5  தலைவா படத்துல தண்ணி அடிச்ட்டுப்பாடற அதே சிச்சுவேசன்ல சிம்டாங்கரன் சாங். தர லோக்கல் குத்து டான்ஸ்

விஜய்,யோகிபாபு காம்போ சீன் ஒரு ரிலாக்சேசனுக்காக.ஆனா மெயின் கதையோட சீரியஸ்னெஸ் பாதிக்கப்படுது


கீர்த்தி சுரேஷ் வழக்கம் போல,ஆனா வரலட்சுமி ராக்கிங் பர்பார்மென்ஸ்,கிட்டத்தட்ட வில்லி

சர்கார் இடைவேளை வரை ஓகே. இந்த கதைக்கு விஜய்காந்த் ரொம்ப பொருத்தமா இருப்பார்,குழந்தைகளை,பெண்களை இது போன்ற சீரியஸ் விஜய் கவர்வாரா?தெரியல


விஜய் உள்குத்து ஹம்மிங் −வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்....

10  ரைட்டர் ஜெயமோகன் நல்ல திறமைசாலிதான்,ஆனா பீர்பால் கதைகள்,பஞ்ச தந்திரக்கதைகள் ல இருந்து வசனங்களை உருவி பட்டி டிங்கரிங் பண்ணாம அப்டியே ராவா தர்றாரு

11 தீனா,கஜினி,துப்பாக்கி ல காமிச்ச ரொமான்ஸ் போர்சன் ரசனையை அதுக்குப்பின் ARM காட்டவே முடில,ஆக்சன் காட்சிகள்ல கலக்கறார்

12 பின் பாதி திரைக்கதைல இயக்குனர் தடுமாற்றம்.திடீர்னு ஹீரோ 234 தொகுதிலயும் ஆள் நிறுத்தற படலம் ,அதுக்கு மக்கள் ஆதரவு நாடகத்தனம் ,லைட்டா போரிங்

13 திருமலைக்குப்பிறகு ஆக்சன் காட்சிகள் ,ஸ்டண்ட் இதில் அதகளம் ,விஜய் ராக்கிங் பர்பார்மென்ஸ்





சபாஷ் டைரக்டர்

1   சட்டப்பிரிவு 49 பி பிரிவை பரவலா ஜனங்க கிட்டே கொண்டு வந்து சேர்த்த விதம் அருமை,  சமூக விழிப்புணர்வுப்பதிவு 

2  வரலட்சுமியின் பாத்திரப்படைப்பு, அவருக்கான காஸ்ட்யூம் டிசைன்ஸ், பாடி லேங்க்வேஜ் எல்லாமே கலக்கல்ஸ்

\
3  சிம்டாங்காரன்  உட்பட எல்லாப்பாடல்களுமே ஹிட் ரகம்





லாஜிக் மிஸ்டேக்ஸ்


1   நான் ஒரு கார்ப்பரேட் கிரிமினல்னு பஞ்ச் பேசும் ஹீரோ அதை செயலில் கடைசி வரை காட்டவே இல்லை


2  ரஜினி , கமல், விஜயகாந்த்  மாதிரி பல வருடங்கள் மக்களைக்கவர்ந்தவர்களே அனைத்து தரப்பு மக்களையும் கவர முடியாத நிலையில் ( கேப்டன் 12%) ஒரு ஃபாரீ ஆள் என் ஆர் ஐ திடீர்னு மக்கள் ஆதரவை 234 தொகுதிகள்லயும் பெறூவது எப்படி? என்பதுதான் திரைக்கதையின் அடிநாதம், அதில் கோட்டை விட்டுட்டாங்க

3  நாயகிக்கு திரைக்கதையில் பெரிய வேலை எதும் இல்லை, சும்மா டூயட் பாடத்தான் ( தமிழ் சினிமாவின் விதி )


4  ஒரு மாநில முதல்வர் சொந்தமா யோசிக்கவே மாட்டாரா? மகள் கொடுக்கற ஐடியா மட்டும் தான் ஃபாலோ பண்றார்

5  முதல்வன் படத்துல் ஒரு முதல்வர் ஹீரோவுக்கு எப்படி எல்லாம் நெருக்கடி கொடுப்பார்னு பக்காவா காட்டி இருந்தாங்க , அந்த டீட்டெய்லிங் இதுல மிஸ்சிங்



சி.பி கமெண்ட் - சர்கார் −முதல் பாதி சுவராஸ்யம்,பின் பாதி திரைக்கதை நம்பகத்தன்மை குறைவு,தடுமாற்றம்.ஆக்சன் சீன்ஸ் அதகளம்.வரலட்சுமி கெத்து நடிப்பு,சீரியஸ்னெஸ் முகத்துடன் விஜய் .துப்பாக்கி,கத்தி க்கு கீழே,ஸ்பைடருக்கு மேலே.விகடன் 42 ,ரேட்டிங்க் 2.75 / 5 . ARM+ விஜய் ஹாட்ரிக் ஹிட்




============