Tuesday, August 14, 2018

ஒப்பனைத்திலகம்

அறிஞர் அண்ணா காலத்தில் நேரில் சென்று தான் முகம் பார்த்து அஞ்சலி செலுத்த முடியும். இப்போ டிவியில் எல்லாம் லைவ். கூட்டம் குறைய இதுவும் ஒரு காரணம்.என சிலர் சொல்கிறார்கள் ,அண்ணா காலத்திய மக்கள் தொகை ,இப்போதைய மக்கள் தொகை இதையும் கணக்கு சேர்க்க வேண்டும்


==========

2 இனி கனிமொழியோ ,அழகிரியோ ஸ்டாலினுக்கு தொந்தரவு தராமல் இருந்தாலே போதும்,் கிட்டத்தட்ட ஜெயிச்ச மாதிரி


============

3 அரசு ஆசிரியர்களுக்கு வரலாறு காணாத சம்பளம் ஏற்றி விட்டதில் கலைஞரின் சாணக்கியத்தனம் கற்பனைக்கு எட்டாத தொலை நோக்குப்பார்வை.தேர்தல் பணிமனைகளில் ,வாக்களிக்கையில் நன்றிக்கடனாக "அட்ஜஸ்மெண்ட்" நடக்க வழி வகுத்தார்


===========


4 மணிரத்னம் இயக்கிய பிரமாதமான ஆவணப்படம் + சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த திராவிட வரலாற்று ஆவணப்படம் "இருவர்" (MGR+ கலைஞர்) ரிலீஸ் ஆன சமயத்தில் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை.இப்போ ரீ ரிலீஸ் ஆக்க உகந்த சமயம்.திரைக்கதை ,இயக்கம்,ஒளிப்பதிவு,இசை,பின்னணி இசை அனைத்தும் பிரமாதம்


===========


5 கலைஞரின் இன்னொரு மகனான மு.்க.முத்து உடல்நலக்குறைவாக இருக்கக்கூடும்.இறுதி ஊர்வலத்தில் காணவில்லை.


==========


6 சவபெட்டியில உப்பு போடுறது சடங்கா??
உப்பிட்டவரை உள்ளளவும் நினை பழமொழிக்கு ஏற்ப விருந்துகளில் வாழை இலையில் முதலில் உப்பு வைப்பார்கள்.தேர் உலாவில் அதே போல் உப்பு வீசுவார்கள்.


===========


7 நீதிபதிகள் : மெரினாவில் அடக்கம் செய்ய சட்ட சிக்கல் என்று காரணம் சொன்னீர்கள். இப்போது எந்த சட்ட சிக்கலும் இல்லையே..
அரசு வழக்கறிஞர் : சட்ட சிக்கல் இல்லை. ஆனால் மரபு இல்லை. நீதிபதிகள் : பிறகு ஏன் சட்ட சிக்கலை காரணமாக சொன்னீர்கள் ? அரசு வழக்கறிஞர் : இல்லை வழக்கு நிலுவையில் 1/3

நீதிபதிகள் : அதான் வழக்குகள் தள்ளுபடி செய்தாகிவிட்டதே.. அரசு வழக்கறிஞர் : ஒரே நேரத்தில் இத்தனை வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. நீதிபதிகள் : சரி இப்போது என்ன பிரச்சினை உங்களுக்கு ? அரசு வழக்கறிஞர் : முன்னாள் முதல்வருக்கு இடம் ஒதுக்க மரபு இல்லை. #2/3


அரசு வழக்கறிஞர் : முன்னாள் முதல்வருக்கு இடம் ஒதுக்க மரபு இல்லை. நீதிபதிகள் : இன்னாள் முதல்வருக்கு தரப்படவேண்டும் என மரபு எங்கே இருக்கிறது காட்டுங்கள் ! அரசு வழக்கறிஞர் : இந்த வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க அவசியமில்லை. நீதிபதிகள் : அப்ப ஒரு வாரம் கழிச்சு விசாரணை பண்ணலாமா? #3/3


============

8 எனக்குத்தெரிஞ்சு ட்விட்டர் நண்பர்கள் (பாலோயர்ஸ் 10,0000+) திமுக காரங்க 150+ இருக்காங்க.அதில் வசதி வாய்ப்புள்ளவர்கள் 75%.ஆனா சென்னை அஞ்சலி செலுத்தப்போனவங்க 12 பேர்தான்


==========


9 ஆன் லைன் ல வர்ற திமுக ,கலைஞர்"புகழ்"பாடும் ட்வீட்களை எல்லாம்"பார்த்தா 2021 தேர்தல்ல 75% வாக்கு வந்திடும் போலயே.


==========


10 பேங்க் கேஷியர் தினமும் காலைல ஓப்பனிங்க் பேலன்ஸ் செக்"பண்ற,மாதிரி நெட்டிசன்கள் டெய்லி அவங்கவங்க பாலோயர்ஸ் கவுண்ட் சரியா இருக்கா?னு"செக் பண்றாங்க


==========


11 காமராஜர் ,அறிஞர்,அண்ணா,எம்ஜியார் ,இவர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற,பெண்கள் எண்ணிக்கையில் பாதி கூட கலைஞர் இறுதி"ஊர்வலத்தில் இல்லை.திமுக வின் தோல்விக்கு"மிக முக்கிய,காரணம் பெண்கள் வாக்குகளை"கவரத்தவறியது


============


12 விஸ்வரூபம்,2 ல ட்ரெய்லர் ல வந்த பாத்ரூம் ,பெட்ரூம் சீன் எல்லாம்"சென்சார்ல கட் டாம்.மெயின் பிக்சர்ல அதெல்லாம் கிடையாது,எனவே அந்த எதிர்பார்ப்போடு போய் ஏமாற வேண்டாம் (இதை எனக்கு"நானே சொல்லிக்கறேன்)


============


13 ஒப்பனைத்திலகம் பிக்பாஸ் புகழ் ரைசா நடித்த ப்யார் ப்ரேமாகாதல் இன்று ரிலீஸ் ஆவதாக இருந்தது.நாளை தள்ளிப்போடப்பட்டிருக்கு prema kadhal



==========


14 ரிலையன்ஸ் ஜியோல கால் பண்ணா உடனே கால் எண்ட் வருது என்னா பண்றது?
போனை ஆப் பண்ணி ஆன் பண்ணவும்.சமிபத்தில் வந்த ஒரு ஹாலிவுட் படத்துல இந்த டயலாக் வருமே.ஹீரோயின் டூ ஹீரோ



============


15 பொதுவா ஹீரோ வில்லனைப்பாத்து டயலாக் பேசும்போது ஹீரோ"பக்கத்துல நிற்கற ஹீரோயின் வில்லனோட ரீ ஆக்சனைதான் பாக்கனும்,ஆனா ஹீரோவை ஆச்சரியமாப்பார்க்கற மாதிரி தமிழ்சினிமா ல தான் காட்டறாங்க


============

16  அரசு நூலகங்கள்ல இலவசமா ஏராளமான (அனைத்து தரப்பு)நாவல்கள்,சிறுகதைகள் புத்தகங்கள் கொட்டிக்கிடக்கு,நகர மக்கள் அதை பயன்படுத்தறதே இல்ல.கவுரவக்குறைச்சலா நினைக்கறாங்க போல.இதே போல் பேசஞ்சர் ட்ரெயினில் பயணிப்பதையும் சிலர் தவிர்க்கின்றனர்


===========


17 விஸ்வரூபம் 2 கேரளாவில் 200 தியேட்டர்களில் வெளியிடப்படுவது ஆச்சரியம்,குறிப்பா தலைநகரான திருவனந்தபுரம் ல மொத்தமே 13 தியேட்டர்கள்தான்.அதுல 9 தியேட்டர்கள்ல ரிலீஸ்,அடேங்கப்பா.கமலின் அதிகபட்ச அச்சீவ்மெண்ட் இதுதான் போல


============


18 பேபி டிபி வெச்ச ஒரு பிரபல ட்வீட்டர் எப்ப பாத்தாலும் "எனக்கு உடம்பு சரி இல்ல" ங்கறாரு.கடலை போடறது பூரா பொண்ணுங்க கிட்ட.இது தெரியாம இத்தனை நாளா நாம ஹாஸ்பிடல் போய் டாக்டருக்கு தண்டம் கட்டி இருக்கோம்


============



19 துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி க்கு ரிசர்வ் வங்கியில் முக்கிய (கவுரவ)பொறுப்பு தந்திருப்பது சாமான்ய ஜனங்களுக்கு ஏதோ ஒரு வகையில் இடைஞ்சலாக இருக்கும் என சொல்லப்படுகிறது



============


20 அடுத்த தேர்தலில் உங்க வாக்கு யிருக்கு?னு இப்ப போல் வைக்கற 13 பேருக்கும் சொல்றேன்
1 அனுதாபம் இருக்கற இந்த டைமில் சொல்வது செல்லாது.மனம் மாறும் 2 தேர்தல் 2021 மே மாதம்.அதற்குள் பல நிகழ்வுகள் மக்கள் மனதை மாற்றும் 3 ஆன் லைன் வராத பாமர மக்கள் கருத்து முக்கியம்,அது முற்றிலும் வேறு

0 comments: