Monday, June 04, 2018

தேர்தல் முடிஞ்சதும் இவர் பாட்டுக்கு இமயமலை போய்டுவாரு,

கன மழை பெய்தால் எளிதாக நீர் தர முடியும்" - குமாரசாமி
# அப்போ சுனாமியோ ,வெள்ளமோ வந்தாதான் தண்ணி தருவீங்க?அப்டி தந்தா அது உங்க கணக்குல வராதே?இயற்கையா பாத்து தர்றது


==========


2 வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல்
உட்பட அனைத்து தேர்தலையும் சந்திக்க தயாராக உள்ளோம் - ரஜினிகாந்த்"# தேர்தல் முடிஞ்சதும் இவர் பாட்டுக்கு இமயமலை போய்டுவாரு,இவரை எப்டி பாக்கறது?


==========


3 திமுகவில் செயல்படாத நிர்வாகிகள் நீக்கப்படுவர்.
மு.க.ஸ்டாலின் எச்சரிக்ககை!.# செயல் தலைவரே ஒரு செயல்படாத தலைவர்தான்னு ஜனங்க பேசிக்கறாங்க.


=========


4 காங்கிரஸுடன் முதல்வர் பதவியை பகிரும் திட்டமில்லை - குமாரசாமி # நமக்கு கிடைச்சதே ஓசி தான்,அதுல"பங்கு தந்தா என்ன?குறைஞ்சா போயிடும்?


===========


5 கர்நாடகத்தில் காங்கிரசுக்கும், மஜத - க்கும் திருமணம் நடைபெற்று ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது - திருநாவுக்கரசர் # என்ன சீர் சினத்தி தான் ஜாஸ்தி.முதல்வர்"பதவியையே தர வேண்டியதா போய்டுச்சு


=======



6 ரஜினி மன்றத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது; பெண்கள் இருக்கும் பக்கம் வெற்றி உறுதி - ரஜினி பொண்ணுங்க பியூட்டி பார்லர்ல தான் இருக்காங்க.அப்போ பியூட்டி பார்லர் நடத்தறவர் அரசியலுக்கு வந்தா ஜெயிச்சிடுவாங்களா?


==============



7 மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 800 அரசுபள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு-செய்தி
"சேர்க்கை" சரி இல்லை னு நினைச்சுக்கப்போறாங்க.


==========


8 கர்நாடகாவில் திரும்ப தேர்தல் நடத்த வேண்டும்:அமித்ஷா
பேசாம பாஜக ஜெயிக்கும் வரை திரும்ப திரும்ப தேர்தல் நடத்தனும்னு சொல்லிடலாம்


============


9 ரஜினி ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு முதல் நியூட்ரினோ வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் - தமிழுருவி மணியன்! # சந்தை ல சர்வரோகநிவாரணி னு விளம்பரம் பண்ணி விக்கறவர் மாதிரி பேசறாரே!


=======




10 பணம் இருந்தால் போதும், குதிரை பேரம் மூலம் யாராக இருந்தாலும் முதலமைச்சர் ஆகலாம்!”- மு.க.ஸ்டாலின் # நம்ம கிட்ட இல்லாத பணமா?அதுக்கெல்லாம் சாமார்த்தியம் ,யோகம் வேணும்



==========



11 வேண்டுமென்றே திட்டமிட்டு, அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக விரோதிகளும் இந்த அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த செய்த போராட்டம் இது"-முதல்வர்
எப்போ நல்ல பேரு இருந்துச்சு?துரோகி ,அடிமை,எடுபுடி னு பூரா கெட்ட பேருதான்


=============



12 மக்கள் நலனுக்காக ஸ்டெர்லைட்"நிறுவனம் 150 கோடி முதலீடு.அதுல 35 கோடி"வட்டி கிடைக்குது
யோவ்,மடத்தனமா உளறாதீங்க.ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு கேன்ச்ர் வரப்போகுது,அதுக்கான நஷ்ட ஈடு.பணம் வரும் ,போகும் ,உயிர் போனா வருமா?


============


13 தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை காவல்துறை கைது செய்ததைக் கண்டித்து போரூர் டோல்கேட் தகர்ப்பு. ஐடியா,இந்த ஆளை டெய்லி ஒரு டோல்கேட்ல வெச்சு கைது பண்ணா தமிழகம் பூரா டோல்கேட்டை ஒழிச்சிடலாம்


============



14 பாஜக குறித்து எதிர்மறையான கருத்துக்களே பரவுகின்றன- தமிழிசை# நேர்மறையா தேடி எதுனா சொன்னா மறைகழண்ட கேஸ்னு ஜனங்க திட்றாங்கக்கா


=============



15 மக்களை அரசு பாதுகாக்கவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது - செல்லூர் ராஜு # நல்ல வேளை ,பாம் வைக்கல.



===========



16 பேங்க் ஆஃப் பரோடா நிகர இழப்பு ரூ.3,102 கோடி பேங்க்"நடத்தறீங்க?நாட்டை விட்டு ஓடப்போற பணக்காரங்களுக்கு கோடிக்கணக்குல லோன் குடுத்துட்டு.கோவை கொங்கு புரோட்டா"கடை ஒரு நாள் வருமானமே 50,000 ரூபாயாம்


============



17 எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு தமிழகத்தில் இதுவரை 23,000 போராட்டங்கள் நடைப்பெற்று உள்ளன-ஆர்.பி.உதயகுமார்# அதெப்டி?365×10 =3650 தாண்டாதே?ஒரு நாளுக்கு 70 போராட்டமா நடந்தது?


====================



18 உலகிலேயே ஒரு நாளைக்கு 15 மணி முதல் 18 மணி நேரம் வரை வேலைசெய்யும் ஒரே பிரதமர் மோடிதான் ~ அமித்ஷா
செய்யறது வேணா அவரா இருக்கலாம்,ஆனா வரி கட்றது நாங்க


===============



19 வங்கி ஊழியர்களின் 48 மணிநேர ஸ்டிரைக் துவங்கியது: ஏடிஎம்களில் பணம் இல்லாமல் போகலாம் # அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அடுத்ததா பணி நேரம் ரொம்ப கம்மி ,சம்பளம் ஜாஸ்தி வகையறா இவங்கதான்.10am to 2pm
2.30 pm to 5pm/6pm மொத்தம் 7 மணி நேரம்


================


20 விஷ கிருமிகளை ஜெ அடக்கி வைத்திருந்தார் - ரஜினி.
,eps ops மாதிரி ஆளுங்களை அடக்கிதான் வெச்சிருந்தாரு


============

0 comments: