Saturday, February 17, 2018

நாகேஷ் திரையரங்கம் - சினிமா விமர்சனம்

Image result for nagesh thiraiarangam


மக்களால் அதிகம் கவனிக்கப்படாத “புலி வருது “ பட ஓப்பனிங் 20 நிமிடகாட்சி , பிரமாதமாக பேசப்பட்ட ” யாவரும் நலம் ” இந்த 2 படங்களிலிருந்து  அட்லீ ஒர்க் ( உல்டா ரீமிக்ஸ்) செய்து இருந்தாலும் சொந்த சரக்கும் கொஞ்சமாவது சேர்த்து தான் இந்த திரைக்கதையை ரெடி பண்ணி இருக்காங்க , நல்ல முயற்சி தான்



ஹீரோ தூங்கும்போது ஒரு கனவு வருது , அதில் ஒரு கொலை நடக்குது, விழிச்சுப்பார்த்தா கனவில் நடந்தது நிஜத்திலும் தொடருது, ஹீரோ கனவில் கண்டதை ஹீரோயின் நிஜத்தில் சந்திக்கறார்  ( நூறாவது நாள் , 24 மணி நேரம் படத்துலயும் நளினி இப்படி கனவு காண்பார்)


இந்த சுவராஸ்யமான முடிச்சை வெச்சு ஒரு கோஸ்ட் த்ரில்லர் தந்திருக்காங்க 

ஹீரோவா ஆரி நல்ல இயல்பான அமைதியான நடிப்[பு . ஓப்பனிங் சீன்கள்ல திரைக்கதை மொக்கை போட்டாலும், 4 வது ரீலில் இருந்து படம் சூடு பிடிக்குது. நல்ல கதைக்கரு அமைஞ்சும் , அந்த நாயகன் நாயகி லவ் போர்சன் , எக்ஸ்ட்ரா லக்கேஜ் தான்


நாயகிகளாக அதுல்யா ,ஆஸ்னா சவேரி 2 பேரும்  கொடுக்கப்பட்ட வேலையை கரெக்டா பண்ணி இருக்காங்க ,.  மேக்கப் தான்  ஓவர்


ஹீரோவுக்கு நண்பரா வர்ற காளி வெங்கட்  பெரிய காமெடி எதுவும் பண்ணலைன்னாலும்  அப்பப்ப ஒன்லைனர் அடிச்சு சி செண்ட்டர் ஆடியன்சை கவர முயற்சிக்கறார்


சித்தாரா  கெஸ்ட் ரோல் , 


இயக்குநர்  இஷாக் ஆல்ரெடி அகடம் என்ற படத்தை இயக்கி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தவர் . இந்தப்படத்துக்கு சென்சார்ல 18 கட்டாம், யப்பா 

ஒளிப்பதிவும் இயக்குநரே, பெரிய அளவில்  மிரட்டவில்லை , பேய்ப்படமாக எடுக்காமல் சஸ்பென்ஸ் த்ரில்லராகவே எடுத்திருக்கலாம், இப்பத்தைய ட்ரெண்ட் பேய்ப்படம் என்பதால் இப்படி ஒரு  திரைக்கதை அமைத்திருக்கக்கூடும் 

Image result for nagesh thiraiarangam

நச் டயலாக்ஸ்


அறிவு இல்லாதவன்தான் முட்டாள்னு இல்ல.அறிவு இருந்தும் பணம் சம்பாதிக்கத்தெரியாதவன்தான் முட்டாள்


50,000 rs சம்பளம் வாங்கிட்டு 55,000 ரூ க்கு EMI கட்றவன்தான் சாப்ட்வேர் இஞ்சினியர்


3 வேளை சோறு ,தங்க இடம் கொடுத்தா போதும் ,வேலைக்கு வர 5 லட்சம் இஞ்சினியர்ஸ் காத்துக்கிட்டு இருக்காங்க

பொண்ணுங்களை கரெக்ட் பண்றப்ப மட்டும் இவன் பிரைன் பிரைட்டா"வேலை செய்யும்


வேலை வெட்டி இல்லாதவன்தான் பார்க் வருவான்,ஆனா பார்க் ல ஒரு வேலைங்கறியே,அப்டி என்ன வேலை?


காதலர்களுக்கு சர்வீஸ் பண்றது அந்த கடவுளுக்கே சர்வீஸ் பண்ற மாதிரி


ஊட்டில ஒரு பாட்டி ,கோவைல ஒரு பாட்டி ஒரே டைம்ல இட்லி சுட்டாங்க.யாரோட இட்லி முதல்ல வேகும்?


ஊட்டி பாட்டீது.ஏன்னா ஹைட்டான இடம் இல்லையா?
சபாஷ் 1971 IAS எக்சாம்ல கேட்கப்பட்ட கேள்வி இது,ஒரு பய இதுவரை பதில் சொல்லல




எவளோ ஒருத்தி உனக்கு கேட்பாஸ் க்கு
நான் மட்டும் டைம் பாஸ்க்கா?


நைட் பூரா கூடவே இருந்தும் எதுவும் செய்யாதவன் பகல்ல மட்டும் என்ன செஞ்சிடப்போறான் ?



10 இந்த வேலை உனக்குத்தாம்மா
என்ன தகுதி ல தந்தீங்க?
நீ பொண்ணுங்கற ஒரு தகுதி போதாதா?


11  நீ பேசறது பொய்னு தெரியுது, ஆனா பேசறது நீ என்பதால் அதை ரசிக்கத்தோணுது  #naaheshthiraiarangam


Image result for actress ashna zaveri images
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


ஹீரோயின் பாத்ரூம்ல குளிச்ட்டு டர்க்கி டவல் கட்டீட்டு வெளில வருது,டவல் ஈரமா இருக்கு,ஆனா உடம்புல ஒரு நீர்த்திவலை கூட இல்ல ,அது எப்டீ?அவனவனுக்கு அவனவன் கவலை



சபாஷ் டைரக்டர்


1   பின் பாதி திரைக்கதை செம ஸ்பீடு 

2   டூயட் காட்சிகள் , மொக்கை காமெடி என எந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கும் இல்லாதது

Image result for actress ashna zaveri images
லாஜிக் மிஸ்டேக்ஸ்  ; திரைக்கதையில் சில ஆலோசனைகள்



1  அனாதைகள் உடம்பில் இருந்து ரத்தம் எடுத்து அதில் உள்ள பிளாஸ்மாக்களை  பிரித்து எடுத்து மீண்டும் பேலன்ஸ் ரத்தத்தை அவங்க உடம்புலயே செலுத்தறதா வில்லன் க்ரூப்ல வசனம் வருது , எதுக்கு ரத்தத்தை மீண்டும் அவங்க உடம்பில் செலுத்தனும்?தேவையே இல்லையே?


2 ஹீரோயின்  வில்லன்  கேம்ப்பில் போய் வீடியோ எடுக்கும்போது வில்லன் பார்ப்பார் என  தெரிந்தும் பெப்பரப்பே என ரூமில் அசால்ட்டாக வீடியோ கேமராவுடன்  போவது நம்பும்படி இல்லை

3  தூங்குனாத்தானே கனவு வருது , பின் கொலை நடக்குது , நாம தூங்காம இருப்போம் என ஹீரோ முயல்வது நம்பும்படி இல்லை , யாரோ எவரோ கொலை செய்யப்படுவதால் இவருக்கு என்ன லாஸ்? இவர் ஏன் தூக்கத்தை கெடுத்து விழித்திருக்கவேண்டும் ? அது சாத்தியம் ஆகுமா? நமக்கு வேண்டப்பட்டவர் கொலை செய்யப்பட்டால், அல்லது கொலை செய்யப்படுவதாக இருந்தால் கூட ஓக்கே 

Image result for actress athulya

சி.பி கமெண்ட்-நாகேஷ் திரையரங்கம் − ஆதரவற்ற அனாதைகளிடம் ரத்த தான மோசடி செய்யும் மருத்துவர்கள் பற்றிய கோஸ்ட் த்ரில்லர்,திரைக்கதை இழுவை,பேய்க்கதையாக எடுக்காமல் சஸ்பென்ஸ் த்ரில்லரா எடுத்திருக்கலாம் .விகடன் 40 ,ரேட்டிங் 2.5 / 5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) - 40


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)   2.5 / 5


ஈரோடு ஸ்ரீநிவாசா நாகேஷ் திரையரங்கம்



0 comments: