Sunday, February 18, 2018

கற்பூர வாசனை தெரியாத கழுதைகள்

திராவிடத்தை அழிக்க வேண்டும் என்று கூறவில்லை; நானும் பச்சை திராவிடன்தான்- பொன். ராதா # பச்சை ங்க எல்லாம் காவி ஆவதும் காவிங்க பச்சை ஆவதும் தமிழ்நாட்ல சகஜம்தான்


==============


2 சன்யாசிகளை சராசரி மனிதனோடு ஒப்பிட்டு பார்ப்பது தவறு
-எஸ்.வி.சேகர் # சராசரி மனுசனுக்கு இருக்கற பேசிக் நாலெட்ஜ் , நாவடக்கம்,சபை நாகரீகம் கூட சன்யாசிக்கு இல்லையே?


==============


3 பேருந்து கட்டண உயர்வு என்பது போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் போது குழந்தைகள் அழுவது போலாகும்-RPஉதயகுமார்#
நிதி நெருக்கடி என்பதே போலியோ?னு ஜனங்க சந்தேகப்படறாங்க


==============



4 புறம்போக்கு, களவாணி என்று சொல்லும் அளவிற்கு பாஜக இல்லை - தமிழிசை # ஆமா ,களவாணி சூப்பர் ஹிட் ,பொறம்போக்கு மீடியம் ஹிட் .பாஜக அட்டர் ப்ளாப்


=============



5 கற்பூர வாசனை தெரியாத கழுதைகள் கற்பூரத்தை பற்றி பேசக் கூடாது.
- எஸ்வீ சேகர் # தமிழர்களோட"மன ஓட்டம் தெரிஞ்சுக்காம சிலர் தமிழகத்தில் தாமரை மலரும்கறாங்களே,அது பரவால்லயா?


=============


6 குறைந்த செலவில் வாழத்தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடம்...
# குறைந்த வருமானத்தில் இருக்கறதை வெச்சு சமாளிப்பதில் உலகிலேயே நாமதான் நெ 1


===============


7 ஆளும் கட்சி ஆளும் கட்சியாக இல்லை, எதிர்க்கட்சி எதிர்கட்சியாக இல்லை என தமிழிசை குற்றச்சாட்டு!
# ஆமாங்க,தேசியக்கட்சி தேசியக்கட்சியாக இல்ல ,நோட்டா விடம் தோக்குது


=============


8 புதிதாக எடுத்து வரும் அரசியல் படம் ஓடுமா, ஓடாதா? என்று கமல் ஒத்திகை பார்த்து வருகிறார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
# ஓடுதோ ஓடலையோ அவர் உங்களை மாதிரி ஊர் மக்கள் வயித்துல அடிக்க மாட்டார்


================



9 சாதாரண பேருந்தில் கி.மீ-க்கு 2 பைசாவும், விரைவு மற்றும் சொகுசு பேருந்தில் கி.மீ 5 பைசாவும் குறைப்பு - தமிழக அரசு.
# ஏற்றியது பலாக்காய் அளவு குறைத்தது கிலாக்காய் அளவு


===============



10 ரஜினியின் ஆன்மிக அரசியல் குறித்த பார்வை நாட்டிற்கு நல்லதல்ல- மு.க. ஸ்டாலின் # திமுக வுக்கு நல்லதல்லனு ஓப்பனா சொல்ல முடியுமா?


===============


11 பக்கோடா விற்பவன் கூட தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கிறான். இதுவும் வேலைவாய்ப்பு தானே?- மோடி # இதுக்குப்பேரு சுய தொழில்.இது கூட ஒரு பிரதமருக்கு தெரீல


================


12 ஒழுக்கம்,கட்டுப்பாடு இதுதான் நமக்கு ரொம்ப முக்கியம் - ரஜினி # தனுசு ராசி மட்டுமல்ல 12 ராசிக்காரர்களும் இதைப்பின்பற்றினால் வீட்டில் "ஐஸ்வர்யம்" சிறக்கும்


===============



13 கும்பிடுற இடத்துல இருக்குறவன ்் மேல உள்ளவங்கள கேள்விகேட்கக் கூடாது. அவங்கள கேள்வி கேட்குற தகுதி உங்களுக்கு இல்ல -S.V. சேகர்
# அவங்களை கொஞ்சம் நகரச்சொல்லுங்க,ஜனங்க கும்பிடற இடத்துல மறைச்சபடி நின்னா எப்டி?


================


14

0 comments: