Wednesday, February 08, 2017

நாகராஜன் ,நடராஜன் இவங்க கிட்டே எப்பவும் ஜாக்கிரதை

1  : தற்போதைய காலகட்டத்துக்குப் பொருத்தமில்லாத 1,159 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ள து- மகேஷ் சர்மா #தற்போது தேவையான புது சட்டங்களையும் கையோட இயற்றிடலாமே?

=====================


======================


3  அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு... எச்சரிக்கை!:கொள்கையை விமர்சித்தால் நடவடிக்கை # நம்ம கொள்கை என்ன? அதான் சொன்னோமே? விமர்சிச்சா நடவடிக்கைன்னு

===================

4  'ஜெ., உடலில் இருந்து கால்களை அகற்றவில்லை' லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே விளக்கம் # அப்டியே அட்மிட் ஆகும்போது கால்கள் இருந்தனவா?ன்னு கேட்டு சொல்லுங்க

===================

ஜெ., வீட்டில் வேலை செய்த சசிகலாவை எப்படி ஏற்றுக்கொள்வர்? அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் முனுசாமி ஆவேசம் # வேலை செய்யாம சும்மா  இருந்தாலும்  சும்மா இருந்தவருக்கு எதுக்கு பதவி?ம்பீங்க

=======================


6  சிடி' விற்றவரெல்லாம் முதல்வராக வர முடியாது - EVKS # அரசியல் அமைப்பு சட்டத்துல அப்டி ஒரு விதி இருக்குங்களா?


=====================


சசிகலா முதல்வரானால், மக்கள் புரட்சி வெடிக்கும்; ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல, மிகப்பெரிய போராட்டம் நடக்கும்,''-அன்புமணி  # எச்சரிக்கை மணி அடிக்கும் அன்புமணி?

===================


8  மக்களை காப்பாற்ற நல்ல படகு வரும்... ஸ்டாலின் சொன்ன குட்டிக்கதை # அதுல ட்விஸ்ட் என்னான்னா படகோட்டி நீங்க இல்ல


=================

9 2 மாதத்திற்கு பிறகு டாக்டர்கள் விளக்கம் தருவது ஏன்? அன்புமணி ராமதாஸ் # தமிழக மக்கள் விளக்கெண்ணெய் னு நினைச்ட்டாங்க போல

==================

10 ஜெ உடலை தோண்டி எடுக்க அவசியம் இல்லை; லண்டன் டாக்டர் பீலே # அப்போ புதைந்து போன ரகசியங்கள் எப்டி வெளில வரும்?


=================


11 ஜெ, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு - உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 71/2 யாருக்கு?ன்னு தெரிஞ்சிடும்

==================

12 சசிகலா ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார் - ரிச்சர்ட் பீலே
#,சிகிச்சை ரிப்போர்ட் கேட்டா ஜிங் சக் ரிப்போர்ட் தர்றார்?

================

13


சசிகலா மிகவும் கரிசனத்தோடு இருந்தார் - ரிச்சர்ட் பீலே
# இப்பதான் எங்களுக்கு டவுட் ஜாஸ்தியாகுது

=================

14 மும்பையில் நாகப் பாம்பை முத்தமிட்டவர் பலி: போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது கடித்தது # நாகராஜன் ,நடராஜன் இவங்க கிட்டே எப்பவும் ஜாக்கிரதை

================

15 தத்தளித்து வரும் தமிழகத்தை திமுக என்னும் படகு விரைவில் மீட்கும்-ஸ்டாலின் # இனிமே மக்கள் படகு ,கட்டு மரம் எதையும் நம்ப மாட்டாங்க.


=================


16 என்னை தூக்குங்கள் என்றும் ஜெ. கேட்டபோது யாருமே தூக்க முன்வரவில்லை:- பி.எச். பாண்டியன் # அதான் மொத்தமா தூக்கிட்டாங்களே?

================

17 'சசிகலாவுக்கு போதிய அரசியல் ஞானம் உள்ளது’ : பொன்னையன்! # நல்ல வேளை.அவர் ஒரு அரசியல் ஞானி ன்னு சொல்லலை.


==================

18 சசிகலா ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை’ : பி.எச்.பாண்டியன்! # ஆனந்தக்கண்ணீர் விட்டாரே?


====================

19 இந்தியாவில் 60 சதவிகித போலி வக்கீல்கள்! போலி ஜட்ஜ் லிஸ்ட்டும் வந்தா தேவலை

================
20 ஊழல் அதிகரித்ததால் தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்படுகிறது - மோடி # கிளி ஜோசியக்காரர் மாதிரியே பேசறாரே?


==================

0 comments: