Saturday, April 30, 2016

மக்கள் நலக்கூட்டணியில் கலைஞர் !! ஸ்டாலின் அதிர்ச்சி

மிஸ்! கூட்டத்துல வழி தவறிட்டீங்களா? இப்போ என்ன செய்யப்போறீங்க?

காணாமல் போன கவிதா நான் -னு FB ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டு 100 லைக்ஸ் அள்ளப்போறேன்


=================

2 தேர்தல் நடைபெறும் நாளில் ஐ டி கம்பெனி உட்பட எல்லாவற்றையும் மூடனுமாம்

கிளாமர் நடிகை = அப்போ அன்னைக்கு ஷூட்டிங்க் கிடையாதா?

============

3  டாக்டர்! ரீஃபைண்ட் ஆயில் தான் நல்லதுன்னு எதுக்கு பொய் சொன்னீங்க?

எனக்கு கமிசன் கிடைக்கும்னா பினாயில் கூட நல்லதும்பேன்


===============


4 இண்ட்டர்வ்யூ ல கேள்விக்கு தப்பு தப்பா பதில் சொல்றியே?

சார் நீங்க யார் ரசிகர்?

விஜய் ரசிகர்


அவரே மேடைல தப்பா தலைவர் பேரை மாத்தி சொல்லும்போது நான் சொன்னா என்ன?

===============

5 வைட்டமின் ஏ,டி அதிகம் உள்ள கேரட், கீரை, பால் போன்றவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொள்வது அவசியம்.


DR, அதுக்கு ஏடிஎம்ல பணம் இருக்கனும்ல?


===============



6
  • டாக்டர்! வெட்கம் வரும்போது என் சம்சாரம் நகம் கடிக்கறா.

வாவ், இந்தக்காலப்பொண்ணுங்க வெட்கப்படறாங்களா? கொடுத்து வெச்சவர் சார் நீங்க

===================



7 தலைவரே! தனியா நிப்பேன்னீங்க?


நான் தனியா தான் நிற்கறேன்.எனக்குப்பின்னால ஒரு கூட்டமே நிக்குது.நான் என்ன செய்ய?


============

8 தலைவரே.உங்களைப்பார்க்க கேப்டன் வந்திருக்கார்


அடடே.எதுக்கு?
உங்க கூட்டணி ல சேரலைனு சொல்லிட்டுப்போகவாம்


==========

9 ராம்தாஸ் திருமாவளவன் இருவரும் ஆபத்தான ஜாதிக்கட்சியினர்


தலைவரே! அவங்களை வளர்த்து விட்டதே நாமதானே?


==========


10 தலைவரே! நீங்க என்ன சொன்னீங்க?


பழம் நழுவி பாலில் விழும்னேன்
பால் இங்கே காத்திருக்கு.பழம் எங்கே?


===========

11 தலைவரே! ஊழலை உங்க கட்சியால்தான் ஒழிக்க முடியும்னு சொல்றாங்களே எப்டி?


திருடனாப்பார்த்து திருந்திட்டா திருட்டை ஒழிச்சிடலாம்


=============


12 சார், விமர்சனம் என்பது வேலை வெட்டியற்றவர்களின் வேலை.-ன்னு சிலர் சொல்றாங்களே?


தப்பு, விமர்சனம் பண்றதையே தொழிலா, வருமான வழியா வெச்சுட்டு இருக்கறவங்களுக்கு இது பொருந்தாது


==============



13 தலைவரே! தண்ணிஅடிக்கும் பழக்கம் உள்ளவங்களை கட்சியை விட்டு போகச்சொன்னீங்களா?
ஆமா
அப்போ சிகரெட கம்பெனிவெச்சிருக்கறவங்க மட்டும் கட்சி நடத்தலாமா?


================

14 தலைவரே! நம்ம மதுபாலா கூட யாரும் புழங்கலை இப்போ  போதுமா?

 இது எதுக்கு?

 மது பழக்கம் உள்ளவங்க கட்சியை விட்டு விலகலாம்னீங்களே?

===============


15 தலைவரே! நான் கறிவேப்பிலை இல்லைன்னு ரோஷமா சொன்னீங்களே?

ஆமா, இப்போ நான் இரட்டை இலை ஹிஹி


================


16  தலைவரே! நீங்க மானஸ்தன் -னு பலர் வெளில பேசிக்கிட்டாங்களே?

 அதெல்லாம் புரளி நம்பாதீங்க. நான் மானஸ்தன் -கற படத்துல நடிச்சிருக்கேன் , அம்புட்டுதான்


===============

17  தலைவரே! சம்பந்தமே இல்லாம தேர்தல் பிரச்சாரத்துக்கு சின்னக்கவுண்டர் படம் போடனுமா? எதுக்கு?

அதுல ”பம்பரம்” விடும் சீன், குடை எல்லாம் வருது இல்ல


-=============


18

 அமைச்சரே ! நாட்டு மக்கள் நலமுடன் உள்ளனரா?

 கேப்டன் நலம்

 புரியவில்லை

 மதி கெட்ட மன்னா! மக்கள் நலம் = கேப்டன்


==================

19  எங்கள் தலைவரை மரியாதையாக ஜெயிக்க வைத்து விடுங்கள், இல்லையேல் அவர் வீடு வீடாக வந்து பளார் பளார் என அறைவார் என்பதை......


==================


20  மக்கள் நலக்கூட்டணியில் கலைஞர் இருக்காரா? என்ன உளர்றே?

MNK ல MK இருக்கில்ல?மு. கருணாநிதி = MK


===============

களம் - சினிமா விமர்சனம்

ஃபாத்திமா பாபு பக்கா ஃபிகரா இருந்த காலகட்டத்தில் எப்படி ஒரு அரசியல் தலைவரால் வளைக்கப்பட்டாரோ, நிழல் உலக தாதாவான மன்னார்குடி மாஃபியா , நடரஜனோட சோஃபியா சசிகலா எப்படி தியேட்டர் தியேட்டரா 1000 கோடி ரூபாய்க்கு வளைச்சுப்போட்டாரோ  அந்த  மாதிரி  ஹீரோவோட அப்பா கண்ணுக்கு தட்டுப்படும் பாழடந்த பங்களா , பொறம்போக்கு நிலம் எல்லாத்தையும் தன் பேரில் வளைச்சுப்போடும் அழகிரி டைப்  தாதா. 


 அப்படி அவர் ஒரு  பாழடைந்த பங்களாவை வளைச்சுப்போட்டு புதுப்பிச்சு அதை தன் மகனுக்கு பரிசா வழங்கறார். ஃபாரீனில்  இருந்து இந்தியா  வந்த ஹீரோ கம் வாரிசு  தன் சம்சாரம்  குழந்தையோட அந்த பங்களாவில் தங்கறாங்க . 

 அவங்களுக்கு ஏற்படும் திக் திக் அனுபவங்கள்  திகில் அடைய வைக்குது.  அது  நிஜமாவே  பேய் தானா?  இல்லை மனிதர்களின் சதித்திட்டமா? என்பதை க்ளைமாக்சில்  சொல்றாங்க.


  வில்லனா மதுசூதனன். நல்ல நடிப்பு . பக்கா அரசியல்வாதி கம் ரவுடி போலவே இருக்கார். மகனிடம் கெத்து காட்டுவது , பாசம் காட்டுவது , அடியாளிடம் பந்தா காட்டுவது எல்லாம் கன கச்சிதம். பேய் காட்சிகளில் மட்டும்  கொஞ்சம்  தடுமாற்றம் நடிப்பில்


ஹீரோவா  அம்ஜத்கான்  சுமாரான தோற்றம். ஃபாரீன் ரிட்டர்ன் மாதிரியே தெரியாத ஒரு  லோக்கல் லுக். நடிப்பும் சராசரிதான்

ஹீரோயினா  லட்சுமிப்ரியா.  நல்ல நடிப்பு. பல காட்சிகளில் ஸ்லீவ்லெஸ் டி சர்ட் போட்டு கிக் ஏற்றுகிறார். பாத்ரூம் குளியல் காட்சி ரசிகர்களுக்கு குளுகுளு


 வேலைக்காரப்பெண்ணாக வரும் அந்த  டீன் ஏஜ் ஃபிகர் மாநிற மந்தாகினி. குட் ஆக்டிங்


 ஆர்ட் கேலரி ஃபிகராக  வரும் அந்த  மூக்குத்தி போட்ட மூணாறு ஃபிகர் கலக்கல்  நடிப்பு 

ஒளிப்பதிவு கனகச்சிதம் , பின்னணி இசை மிரட்டவில்லை என்றாலும்  சொதப்பவில்லை.


நச் டயலாக்ஸ்

1  இந்தக்காலத்தில் நல்லது நடப்பதே சிரமம், நான் உங்களுக்கு நல்லது நடக்கனும்னு நினைக்கறேன்


அவரை நீங்க உங்க புருசனா பார்க்கறதால எதுவும் தப்பா தெரியல, ஆனா நான் மனுசனா பார்ப்பதால் செய்யும் எல்லாமும் தப்பா தெரியுதும்மா

அவர் நமக்கு எந்த துரோகமும் செய்யலை இல்ல?
நமக்கு மட்டும் தான் செய்யலை, ஊர்ல எல்லாருக்கும் கெடுதல்தான் செஞ்சிருக்கார் # களம்


4 காரணமில்லாம எந்த காரியமும் இந்த உலகில் நடப்பதில்லை,நாமதான் விசாரிச்சு கண்டுபிடிக்கனும்



கஷ்டமான சூழ்நிலைல பலர் மறந்து விடும் ஒரு விஷயம் நம்பிக்கை, எப்பவும் நம்பிக்கையை மட்டும் தளரவிடக்கூடாது


 சபாஷ்  டைரக்டர் 


1  முன் பாதி திரைக்கதை கன கச்சிதமான் கட்டமைப்பு


2  பாத்திரங்கள்  தேர்வு ஹீரோவைத்தவிர எல்லாமே  சூப்பர்.  குறிப்பா  ஹீரோயின் , உப ஹீரோயின் , துணை ஹீரோயின்  என 3 பேர் நடிப்பும் அருமை 


3  ரத்தக்களறி , கோரமுகம் என்றெல்லாம் ஜல்லி அடிக்காமல்  நீட்டாக பேய்ப்படம்   கொடுத்தது  குட் 


4  மேஜிக் மேனாக வரும் நாசர் நடிப்பு நச்

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1   மகனுக்கு பரிசு அளிக்கும் வசதியான வில்லன் டைரக்டா புது பங்களா வாங்கித்தரமால்   பழைய பங்களா வாங்கி ஏன் அதை புதுப்பித்து மெனக்கெடனும்?

 2  யார் கிட்டயும்  விசாரிக்காம  புதுப்பெண்ணை பணிக்கு சேர்ப்பது எப்படி?


3  வேலை முடிஞ்சிடுச்சு கிளம்பலாமா? கிளம்பட்டுமா ? என்றுதானே வேலைக்காரி கேட்பா? வந்த முதல் நாளே   வேலை முடிஞ்சிடுச்சு கிளம்பறேன் என அசால்ட்டா சொல்வது எப்படி?


4   ஃபாரீன் ஃபிகராக வரும் நாயகி  ஒரு மென்சோகம் +ஏழை களை தெரியுது. ஆர்ட்  கம் ஓவியங்கள் வரையும் ஃபிகர்  பணக்காரத்தன்ம் வழியுது. மிஸ் மேட்ச் செலக்‌ஷன் . அப்படியே 2 பேரையும் ஆல்டர்நேடிவ்வா மாற்றி விட்டிருக்கலாம்.



5  அந்த  லேடி  பழங்கால ஓவியங்களை படங்களை அகற்றனும்னு தானே சொல்லுது? நாயகி ஏன் எரிக்குது?



6  ஹீரோயின்  தனிமைல பாத்ரூம் ல கதவு தாழ்ப்போட்டுட்டு குளிக்குது . எதுக்கு டர்க்கி டவல் கட்டிட்டு  குளிக்குது? எந்த ஊர்ல ஃபாரீன் ரிட்டர்ன் பணக்கார ஃபிகர் பாத்ரூம்ல குளிக்கும்போது டவல் கட்டிட்டு குளிச்சிருக்கு? ( இது கேள்வி அறிவுதான் நான் எந்த  வீட்டிலும் எட்டிப்பார்க்கலை )


7  ஷவர்ல  தண்ணீரோடு ரத்தம் கலந்து வருவது  தெரிந்ததும்  நாயகி ஏன் மேலே போய் வாட்டர் டேங்க் செக் பண்ணலை?

8   பங்களாவுக்கு வரும் புது ஆள் 
, லேடி எல்லாரும்   செப்பல் போட்டுட்டு வர்றாங்களே ஏன்? வெளில விடமாட்டாங்களா?

 9 லேப்டாப் யூஸ் பண்ணும் அந்த  ஃபிகர்    அதை ஆஃப் பண்ணாமயே டக்னு க்ளோஸ் பண்ணுவது  ஏன்?

The interior decoration of the maharaja multiplex is good





சி.பி கமெண்ட் -  களம் - ஏ செண்ட்டர் ரசிகர்களுக்கான சராசரி தரத்தில் ஒரு கோஸ்ட் த்ரில்லர்.105 நிமிடங்கள் மட்டுமே என்பதால் ஃபுல் மீல்ஸ் திருப்தி இல்லை. விகடன் = 41 , ரேட்டிங் = 2.75 / 5


Erode maharaja multiplex 5 screen ,near iti bus 🚌 stop,kaasipalayam





மறைவிடம் தேடி ஒதுங்காதீர்

1

விஜயகாந்துடன் இனி கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை: தமிழிசை திட்டவட்டம் # கேப்டன் திட்டி அனுப்பிட்டார் போல


===========

விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக பாஜக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்! - தமிழிசை # இப்படி நீங்க சொன்னதை உங்க மேலிடம் ஏத்துக்குமா?

===============


3 நதிகளை இணைத்து தமிழகத்தை தன்னிறைவுப் பாதைக்கு அழைத்துச் செல்வோம்: ஸ்டாலின் # முதல்ல கேப்டனை இணைத்து அப்பாவை குஷிப்படுத்துங்க


=============

4
  • பாதுகாப்பற்ற குடிநீர்: உலக அளவில் இந்தியா முதலிடம் # பாதுகாப்பான “குடி” தமிழ் நாடு முதலிடம்,டாஸ்மாக்கில் குடிகாரர்களுக்கு போலீஸ் பாதுகாப்பாம்

====================



திமுகவா.. மநகூவா.. பாஜகவா.. தனிவழியா.... இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த் # திருப்பு முனை மாநாடா அதிமுக கூட கூட்டுனு சொல்லிடனுமாம், செம காமெடியா இருக்கும்


=============

6 மகனுக்கு மட்டும் மடிப்பிச்சை கேட்டவர் ராமதாஸ்:-தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் # அது ஒவ்வொரு அப்பாவின் உரிமை, கடமை அல்லவா?


==============

மோடியை தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கும் மெழுகு சிலை  #  கோடை வெய்யில் கொளுத்துதே உருகிடாது?


===================


திருப்போரூரில் ஜெ., போட்டியிட வேண்டும் : அ.தி.மு.க.,வினர், பொதுமக்கள் வலியுறுத்தல்  # ஊர் பேர்ல  திரு வருது, போர் வருது. அது செல்வி ஜெ வுக்கு மேட்ச் ஆகாதெ?னு ஜோசியர் சொல்வாரோ?


=================


9  மக்கள் நல கூட்டணி உடையும்:இளங்கோவன் ஆரூடம்  # இது உங்க கணிப்பா? விருப்பமா? சாபமா?



==================

10 அ.தி.மு.க.,வுக்கு பார்வர்டு பிளாக் ஆதரவு # தன் ஆதரவை ஃபார்வார்டு பண்ணியாச்சா?


=====================




11  மக்கள் நல கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இணையும் - வைகோ #,ஆம் னு ஆம் ஆத்மி கட்சி சொன்னாதான் நம்புவோம்


==============


12 வனத்துறை ஊழியர் எனக்கூறி காதல் ஜோடியை நிர்வாணமாக்கி செல்போன்கள், கைப்பை பறிப்பு # மறைவிடம் தேடி ஒதுங்காதீர் னு வார்னிங் போர்டு வைக்கனும் போல

===============

13 காசோலை மோசடி வழக்கில் நடிகை பிரீத்தி ஜிந்தா விடுவிப்பு # FREEத்தி ஜிந்தா ஆகிட்டாங்்களா?


=============

14 திருமாவளவன் எனக்கு சிறந்த நண்பர் - கருணாநிதி # தலைவர் யாரையாவது பாராட்னா அதுக்கு எதுனா உள்ளர்த்தம் இருக்கும்


==============


15 மக்கள் நல கூட்டணியில் தேமுதிக சேர உள்ளதாக தகவல் # தானைத்தலைவர் அதுக்கு விடமாட்டாரே.தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்காம பார்த்துக்குவாரே

================

16 மக்கள் நல கூட்டணி தலைவர்களுடன், விஜயகாந்த் சந்திப்பு-செய்தி!# தலைவரே!பழம் கனியும் என இனியும் எதிர்பார்க்காதீர்


================


17 மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க : முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிப்பு # சூரியனுக்கே சூப் குடுத்துட்டாரே?

===============

18 மக்கள் நல கூட்டணியில் தேமுதிக-விற்கு 124 இடங்கள் # 1+2+4 =7 கூட்டுத்தொகை 7,வருது.ஏழரை யாருக்கோ தெரியலை


==============


19 மந. கூட்டணி - தேமுதிகவினால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது - பொன்.ராதாகிருஷ்ணன் # தா"மறை" கழண்ட பேச்சு

===========

20 முதல்வர் வேட்பாளராக இருக்க தகுதியற்றவர் விஜயகாந்த் - தமிழருவி மணியன்" #,அப்போ கலைஞர்,ஜெ க்கு தகுதி இருக்கா? அவங்க ஆகலை?

=============== 

Friday, April 29, 2016

மனிதன் - சினிமா விமர்சனம்

a

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் முன்னாள் முதல் காதலன் சல்மான்கான் பிளாட் ஃபார்ம் வாசியை கார் ஏற்றி கொலை செய்து விட்டு பின் ஒரு குமாரசாமியிடம் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்து தப்பிச்சார் இல்லையா> அதுதான் கதைக்களம். வக்கீலா வரும் ஹீரோ அந்த கேசை எடுத்து நடத்தி ஏழைக்கு நீதி வழங்கச்செய்தாரா> என்பதே திரைக்கதை 

ஹீரோ ஒரு  வக்கீல் . அவருக்கு ஒரு காதலி, முறைப்பெண் தான். மூணு வருசமா லவ்வறாங்க. முறைப்பெண் வயசுக்கு வந்ததில் இருந்தே ஏன் லவ்வலை?ன்னு லாஜிக் கேள்வி எல்லாம் கேட்கப்படாது


ஹீரோ பணக்காரன் கிடையாது. ஏன்னா அது ரஜினி தான். அதனால தனக்கு பேரும் புகழும் கிடைப்பது போல் ஒரு கேசில் ஜெயிக்கனும் என்ற லட்சியத்தோடு இருக்கார்.


 வில்லன்  பிளாட்ஃபார்ம்வாசிகள் 6 பேரை கார் ஏற்றிக்கொன்ற வழக்கில் ஆஜர் ஆகி எப்படி ஜெயிக்கிறார்? என்பதே  திரைக்கதை


 ஓப்பனிங் பஞ்ச் டயலாக், ஓப்பனிங்க் சாங்  ஃபைட் எதுவும் இல்லாமல்  மிக சாதாரணமாக இயல்பாக அறிமுகம் ஆகி ச்பாஷ் போட வைக்கிறார் உதய் நிதி.  லஞ்சம் வாங்கும் சராசரி ஆளாக, காதலியிடம் அவமானப்படும் ஆளாக, யாரோ  ஒருவரிடம் கன்னத்தில் அறை வாங்கும்போதும்  மிக் இயல்பான  நடிப்பு ,சபாஷ்

ஹீரோயின் ஹன்சிகா, பூரிப்பு குறைஞ்சிருச்சு. ஐ மீன் முகத்தில் மலர்ச்சி கம்மி ஆகிடுச்சு. சிம்பு பிரிவாக இருக்கலாம்


 பிரகாஷ் ராஜ் தான் வக்கீலாக கலக்குபவர். வசன டெலிவரியில்  பிஹெச்டி முடிச்சவர் சபாஷ்

திரைக்கதை  வசனம் இயக்கம் எல்லாம் கனகச்சிதம்.

ஒளிப்பதிவு நார்மல் ஆனால்  இசை  பின்னணி இசை எல்லாமே ரொம்பவே அடக்கி வாசிக்கப்பட்டது ஏனோ?  இது போல் ஒரு கோர்ட் ஸ்பெஷல் கதையில்  பிஜி எம் பின்னி பெடல் எடுத்திருக்க வேண்டாமா?

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு  ஓக்கே ஆனால்  ஒப்பனை சரி இல்லை. அய்யோ பாவம்


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


எதிர்க்கட்சித்தலைவர் பேரன் ப்டமாக இருந்தாலும் மக்கள் மனதை ஆளும் பட்சி யாக உதயநிதியின்  மனிதன் # ப்ரமோ ஐடியா

   ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின் த ரேஸ்  ஃபார்முலாவில் நிதானமான மெதுவான நம்பகத்தன்மையுடன் கூடிய திரைக்கதை கோர்ட் பேக் ட்ராப்பில் #மனிதன்


3   மிக நேர்த்தியான திரைக்கதை. மிக மெதுவாகச்செல்லும் நதி நீர் போல் உதய நிதி @ ஹிஸ் பெஸ்ட் மூவி # மனிதன்- இடைவேளை வரை ஓக்கே குட்


பக்கா  திமுக எதிர்ப்பாளர்களான அண்ணன் இட்ஸ் பிரசாந்த் , அமஸ் மேடம்  இருவருக்கும் சத்ய சோதனை, மனிதன் பட த்துகு பாசிட்டிவ் ரிவ்யூ கொடுத்தே ஆகனும். இப்ப என்ன செய்வாக?




 நச் டயலாக்ஸ்


1  உன் வக்கீல்  யாரு?

 சக்தி சாரு

 சாரா? இனி எந்த சக்தியாலும் உன்னை காப்பாத்த முடியாது # மனிதன்


தோசைக்கல் உள்ளே இருந்தா பெரிய ஹோட்டல், வெளியே இருந்தா சின்ன ஹோட்டல், ஆனா மாவு 1 தான் # மனிதன் ( ட்விட்டரிலிருந்து எடுத்தாளப்பட்ட டயலாக்)


3  தப்பு பண்றவனுக்கு பெயில் வாங்கித்தர்றதுதானே ஒரு  வக்கீலோட வேலை? #மனிதன்


4   கோபித்த காதலியை சமாளிக்க அழகிய வழி 

டியர் முதல்ல இருந்து காதலிப்போமா? என கேட்பதே # மனிதன்


5  லாயர் வேலையோ புரோக்கர் வேலையோ காசு என்னைக்கும் காசுதானே? #மனிதன்


 காசால எல்லாத்தையும் விலை கொடுத்து வாங்கிடலாம்னு நினைப்பது தப்பு. மரியாதையையும், சந்தோஷத்தையும் காசு கொடுத்து வாங்க முடியாது#மனிதன்

நான் செஞ்சது சரிதானா?

 நீ அடிச்ச சிக்சர்ல BALL லையே காணோம்னா பார்த்துக்கோ #மனிதன்

8  எனக்கு கான்ஸ்டபிளை  தெரியும்’

 எனக்கு கமிசனரையே தெரியும் ஆனா இந்தக்கேசில் 1ம் பண்ன முடியாது #மனிதன்

 உண்மைக்காகப்போராடும்போது எப்படி உணர்ச்சிவசப்படாம இருக்க? #மனிதன்


10  நீதிதேவதைக்கும் , சட்டத்துக்கும் வேணா எதுவும் தெரியாம இருக்கலாம், ஆனா நீதிபதியின் கண்ணுக்கு  எல்லாம் தெரியும் $மனிதன்

11  நான் ஜெயிப்பேனா? தோற்பேனா தெரியலை, ஆனா கடைசி வரை உண்மைக்காகப்போராடுவேன் #மனிதன்











சபாஷ் இயக்குநர்


1 கோடிக்கணக்கான சொத்து இருந்தும் மிக அடக்கமான ஹீரோவாக யதார்த்தமாக வரும் தயாரிப்பாளர் கம் ஃபைனான்சியர் உதயநிதி சபாஷ் போட வைக்கிறார் #மனிதன்

2    பிர்காஷ்ராஜ்  விளையாடும்போது  டேபிள் மேல் இருந்த எல்லா பந்துகளும் மறைந்து  எலிகளாக தெரிவதும் அவர் மிரள்வதும்

3  வசனங்கள்  செம கெத்து.


4 லாயர்  பிரகாஷ்ராஜை கொலைகாரனின் அப்பா, தாத்தா  மிரட்டும் காட்சி


5   கார் டிரைவரின் சாட்சியை  ஹீரோ மடக்கும் இடம். அப்ளாஸ்  சீன் கீரே இல்லாத  ஃபாரீன் காரில் 3 வது  கீரில்  போனதாக சொல்வது, மாட்டுவது


லாஜிக் மிஸ்டேக்ஸ்


1   கோர்ட்,லயே  பப்ளிக்கா ஒரு குமாரசாமி ஒரு வக்கீல் கிட்டே லஞ்சம் கேட்கறாரு, கூறு கெட்ட குப்பன் கூட அப்டி கேட்க மாட்டான் #மனிதன்



2  தனக்கு லஞ்சமாக தரப்பட்ட காரை  பிடிச்சிருந்தா வெச்சுக்கனும், பிடிக்கலைன்னா வேணாம் சொல்லனும். எதுக்கு காரை சுக்கு நூறா உடைச்சு சீன் போடறார்  ஹீரோ?


3   இப்பதான் முதல் முறையா கேஸ் வாதாடறான் என ஒரு டயலாக் விவேக் டூ மயில்சாமி  அபவுட் உதயநிதி, வருது.ஆனா ஆல்ரெடி அவர் 3   கேஸ்  வாதாடினவர்


4   ஹீரோவை  வில்லனின் ஆட்கள்  குடிசைவாசிகள்  முன்னால் அடிப்பதும்  அனுதாபம் வர வைப்பதும்  செயற்கை, அடிக்கறவங்க ஆள் நடமாட்டம்  இல்லாத  இடத்துக்கு  கூட்டிட்டு போய் அடிக்கலாமில்ல?

5  ஹெல்மேட்  ஏன் போடலை?

 ஹேர்ஸ்டைல் கலைஞ்சிடும்

 இந்த டயலாக்கை சென்சார்ல எப்படி விட்டாங்க? அட்லீஸ்ட்  சைடில் ஒரு விழிப்புணர்வு  வாசகமாவது  போடலாமில்ல?

 சி பி கமெண்ட்  -மனிதன் -  உதயநிதி ஸ்டாலினுக்கு அமைந்த  நீட் ஹிட்  ஃபிலிம்., ஏ பி செண்ட்டர்  ஹிட் , விகடன் மார்க் = 43 , ரேட்டிங் = 3 / 5


Perundurai Murugan theatre 🎦 erode district