Friday, December 02, 2016

KAHAANI 2( hindi) - சினிமா விமர்சனம்

Image result for kahaani 2 posterவித்யா பாலன் நடித்த கஹானி ஹிந்திப்படம் நயன் நடிக்க தமிழில் ரீமேக்கானது. மாசமா இருக்கும் நாயகி தன் கணவனை தேடி அலையும் கதை.  தமிழில் நயன் மாசமா இருப்பது போல் நடிக்க ஒத்துக்கொள்ளாததால் கதையை மாற்றி மாசாமாகாத நாயகியாய் கேரக்டர் திருத்தம் செய்யப்பட்டது


அதனோட 2 வது பாகம் என சொல்லப்பட்டாலும் முதல் பாகத்துக்கும் , இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 2ம் வெவ்வேற கதை


ஹீரோயின் ஸ்கூல் டீச்சர். ஸ்கூல்ல படிக்கும் மினி என்னும் ஒரு பொண்ணு வழக்கமான குழந்தைகளை விட கொஞ்சம் வித்தியாசமா நடந்துக்குது. தூங்கி தூங்கி விழுது. டீச்சர் நைசா விசாரிச்சப்போ அந்தக்குழந்தையோட வீட்டில் இருக்கும் ஒரு உறவினரே  அந்த 6 வயசுக்குழந்தையை  பாலியல் துஷ்பிரயோகம் பண்ணிட்டு இருக்கார்னு தெரிய வருது


அந்தப்பொண்ணை காப்பாத்த முயற்சிக்கும்போது ஹீரோயின் மேலயே பழி போட்டு டார்ச்சர் பண்றாங்க, ஹீரோயின் வில்லன் க்ரூப்க்கு எதிரா எடுக்கும் நடவடிக்கை, போராட்டம் தான் கதை


படத்தின் முதல் பாதி பிரமாதமான திரைக்கதை. ஒரு ஷாட் கூட  வேஸ்ட் பண்ணாம அட்டகாசமா செஸ் மூவ் போல் ஒவ்வொரு சீனும் சொல்லப்படுது.


ஹீரோயின் அந்தக்குழந்தையின்  வீட்டில் ட்யூஷன் டீச்சரா சேர்வது , குழந்தையிடம்   பேசி உண்மையை அறிவது , வில்லனின் நடவடிக்கை , போலீஸ் அராஜகம் எல்லாமே மிக இயற்கையாக  சொல்லப்பட்டிருக்கு


ஹீரோயினா வித்யா பாலன் ஒட்டு மொத்தக்கதையையும் ஒரே ஆளா தாங்கும் விதம் பிரமாதம்

மினியாக  வரும்  அந்தக்குழந்தை கொள்ளை அழகு. நடிப்பும் கன கச்சிதம்

வில்லனாக வரு ம் ஆள் மிரட்டவில்லை எனினும் சொதப்பவில்லை

ஹீரோயினுக்கு லிவ்விங் டுகெதர் லவ்வராக வரும் ஆள் சுமார் நடிப்பு


இசை , பின்னணி இசை பிரமாதம், ஒளிப்பதிவு கனகச்சிதம், எடிட்டிங் பக்கா, பின் பாதி  திரைக்கதை யில் தான் கொஞ்சம் கோட்டை விட்டு விட்டார்கள் , இருந்தாலும் 2 மணி நேர படத்தில் மிகத்தெளிவாக கதை சொல்லிய பாணி அருமை

சபாஷ் டைரக்டர் 


1   கதைக்கரு  பாலகரின் பாலியல் பலாத்காரம் பற்றிய விழிப்புணர்வுக்கதை என்றாலும்  ஒரு சீன் கூட  அது போல் நேரடியான காட்சியால் சொல்லாமல் மறைமுகமாக மிக நாகரீகமாக காட்சிப்படுத்திய நாசூக்கு அழகு

2  இது ஒரு பிரச்சாரப்படம் போல் இல்லாமல் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராக தொடுக்கப்பட்ட விதம் மிக அழகு


லாஜிக் மிஸ்டேக்ஸ் + திரைக்கதையில்  சில ஆலோசனைகள் , சில கேள்விகள்

1  போலீஸ் ஆஃபீசர்  தன் மனைவியோட நெருக்கமாக இருக்கும் அந்த பெட்ரூம் சீன் படத்துக்கு தேவை இல்லாதது. சர்வதேச பட முத்திரை விழவும், ஃபிலிம் ஃபெஸ்டிவலில் பேசப்படவும் இது போல் செயற்கையான ரொமான்ஸ் காட்சிகள் சேர்ப்பது ஃபேஷன் ஆகி விட்டது

2  ஹீரோயின் தன் காதலுடன் நெருக்கமாக இருக்கும் பெட்ரூம் சீன் கூட மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதது. சொல்ல வந்த  கருத்து கசப்பு மருந்து போல் என்பதால் அதை ஆடியன்சுக்கு தர இனிப்பு சேர்ப்பது போல் மேற்சொன்ன  2 காட்சிகள் சேர்த்திருப்பதாக இயக்குநர் சால்ஜாப் சொல்லக்கூடும்


3  போலீஸ் ஆஃபீசர் தன் மனைவியிடம் கூட அந்த க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸ் சீன்  பற்றி சொல்லாதது ஏனோ?


4  சாலை ஓர பிச்சைக்காரன் பிளாஸ்டிக் , பாட்டில்கள் , குப்பைகளை சேகரிக்கும்போது அந்த முக்கிய எவிடன்சான நாயகியின் செல்ஃபோனை அதன் மதிப்பு தெரியாமல் குப்பையோடு குப்பையாக பேக் செய்வது எப்படி?செல் ஃபோனை வந்த விலைக்கு பிளாட் ஃபார்ம் கடையில் விற்க மாட்டானா?

5  வில்லன் அந்த 6 வயசு குழந்தையை மிஸ் யூஸ் பண்றான், ஓக்கே ஆனா வாய்ப்பிருந்தும்  நாயகியை கை வைக்கலையே? அல்லது வைக்க முயற்சிக்கலையே அது ஏன்?

6  தனது காதலன் பிரமோஷனில் தன்னை விட்டு தொலை தூரம் செல்லப்போவதாக சொல்லும்போது எந்த விதமான கமிட்மெண்ட்டும் லோக்கலில் இல்லாத நாயகி காதலனுடன் செல்லாமல் பம்முவது ஏன்?


வாழ்க்கைல இந்த இந்த டைம் ல இவ்ளோ சந்தோஷம் கிடைக்கும்னு யாரும் கேரண்டி கொடுக்க முடியாது 2(hin


2 என் கிட்டே எதுனா சொல்லனுமா?

இல்ல.சொன்னா சண்டை போட ரெடியா இருப்பே னு தெரியும் 2(HINDI)

3 என்னைப்பத்தி கவலைப்பட ,அக்கறை கொள்ள ஒரு ஜீவன் இருக்கு என்பதை முதன்முதலில் உணர வைத்தான் 2 ( hindi)


4 DURGA RANI SINGH என்பதுதான் முதலில் வைக்கப்பட்ட டைட்டில் 2(hindi)


5 நான் எதைத்தேடிட்டு இருக்கேன்னு எனக்கே தெரியல.ஆனா தேடிட்டு இருக்கேன் 2( hindi)


6 பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் பலாத்காரம் ,துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வு சஸ்பென்ஸ் த்ரில்லர் 2( hindi)

7 6 வயசு பெண் குழந்தைக்கு எது அன்பு எது துஷ்பிரயோகம்னு தெரியாது.நாமதான் தெரிய வைக்கனும். 2( hindi)

8 இன்ஸ்பெக்டர்.நான் எந்த தப்பும் செய்யல

ஏன் என்னைப்பாத்ததும் ஓடுனே?
ஏன் என்னை துரத்துனீங்க? 2(hindi)





சி.பி, கமெண்ட் -KAHAANI 2 (hindi)-நேர்த்தியான திரைக்கதை,பெண்கள் பார்க்க வேண்டிய சஸ்பென்ஸ் த்ரில்லர் - ஏ சென்ட்டர் பிலிம்.ரேட்டிங் =3.25 / 5

0 comments: