Friday, December 09, 2016

சென்னை600028-2 - சினிமா விமர்சனம்

Image result for chennai28-2 songs

ஹீரோவுக்கு நிச்சயதார்த்தம். ஃபிரண்ட்ஸ் எல்லாம்  ஸ்பாட்டுக்குப்போறாங்க. போன இடத்துல ஒரு கிரிக்கெட் மேட்ச் ஆட வேண்டிய சூழல்.ஜெ  இறந்த பின் ( இறக்கடிக்கப்பட்டபின் ) இதான் சாக்குன்னு மத்திய அரசு ரெய்டு நடவடிக்கையில் இறங்குவது போல் ஹீரோவை ஒரு பொண்ணோட இருப்பது போல் ஃபேக் ஃபோட்டோ ரெடி பண்ணி மேட்ச்ல தோக்கனும்னு கண்டிசன்  போடறாங்க.

 அந்த மிரட்டலுக்காக எடுக்கப்பட்ட ஃபோட்டோ பெண் வீட்டில் சிக்கி மேரேஜே நின்னுடுது. எந்த மேட்சால் இவங்க நிச்சயதார்த்தம் நின்னுதோ  அதே மேட்ச் ( அதேன்னா அதே அல்ல அது போல் இன்னொண்ணு) எப்டி மேரேஜை நடத்தி வைக்குது என்பதே கதை


சென்னை 28 முதல் பாகத்தில் வந்த எல்லாரும் இதில் ஆஜர் , அதில் இருந்த பிளஸ் இதில் எப்டி மைன்ஸ் ஆகுதுன்னா அதில் பெரும்பாலும் அனைவரும் புதுமுகங்கள்,இப்போ ஃபேமஸ் ஆகி இருப்பதால் அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் சரக்கு அதிகம் இல்லை


ஹீரோவா ஜெய். வழக்கம் போல் அசால்ட்டான நடிப்பு. நடன அசைவுகளில் மட்டும் கொஞ்சம் வெரைட்டி காட்டினால் தேவலை. இளைய தளபதி ஸ்டெப்பை போட அவர் இருக்காரே? ஜெய் குரல் ஒரு பிளஸ்


Image result for chennai28-2 heroein


 ஹீரோயினா சனா அல்தஃப்  சுமார் ஃபிகர். அழகு நிலையம் போய் திருத்தப்பட்ட புருவ அழகி. முகத்தில் உலர் சருமம். ( ஒரு குத்து மதிப்பா சொல்றதுதான். தொட்டுப்பார்த்தியா? எப்டி ட்ரை ஸ்கின்னு அப்டினு தெரியும்னெல்லாம் கேட்கப்படாது). பாடல் காட்சிகளில் பாஸ் மார்க்.


சிவா விடம் இன்னும் எதிர்பார்க்கிறோம். ஆன் லைன் ரிவ்யூவர்ஸை நக்கல் அடிக்கும் காட்சி ஆன் லைன் ல அக்கவுண்ட் இருப்பவர்களுக்கு மட்டுமே புரியும். குறிப்பா அண்ணன் இட்ஸ் பிரசாந்த் தன் யூ ட்யூப்  நிகழ்ச்சியை சப்ஸ்க்ரைப் பண்ணச்சொல்வாரே அதை அடிக்கடி நக்கல் அடிக்கிறார்.


வழக்கமா அண்ணன் இயக்குநர் எனில் அவர் படத்தில் ஓவரா சலம்பும் பிரேம்ஜி இதில்  கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். இவர் 14 ரீல் படத்தில் மொத்தமே 4 மொக்கை ஜோக் தான் சொல்றார். அதில் 3 ட்விட்ட்டரில் சுட்டது, 1 வாட்சப் ஜோக் ( காமெடி ஸ்க்ரிப்ட் பஞ்சம் போல )


வசந்த் & கோ  ஓனர் மகன் சுமார் நடிப்பு 


நிதின் சத்யா வுக்கு இன்னும் வாய்ப்பு வழங்கி இருக்கலாம்.

 கிரிக்கெட் மேட்ச் கமெண்ட் அடிக்கும் படவா கோபி ஓக்கே


Image result for chennai28-2 heroein

 படத்துக்கு பொருத்தமான தலைப்பு சொப்பன சுந்தரி அல்லது யாரு வெச்சிருக்கா சொப்பன சுந்தரியை என்பதுதான் .

கிரிக்கெட் மேட்ச் பார்ப்பவர்கள் , கிரிக்கெட் ரசிகர்கள் இவர்களுக்கு ஒருவேளை படம் பிடிக்கலாம்.ரொம்ப மொக்கை எல்லாம் இல்லை. அதே சமயம் பிரமாதம் என சிலாகிக்கும் அளவும்  இல்லை

 சபாஷ் டைரக்டர்

1  ஆன் லைன்  ரிவ்யூவர்களை வாரு வாரு என வாரியது


2  யுவன் வழங்கிய அருமையான பிஜிஎம்,  ஒளிப்பதிவு , எடிட்டிங்

3  புது நோட்டு பிரச்னையை சாமார்த்தியமாக வசனத்தில் சொன்ன விதம் , படவா கோபியின் டயலாக் டெலிவரி


 லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் மைனஸ்கள்


Image result for sana althaf

1  இந்த இண்ட்டர்நெட் யுகத்தில்  ஒரு சாதா லேடி      ,ஃபோட்டோவை வைத்து ஒரு மேரேஜே நிற்கும் என்பதெல்லாம் சும்மா. கிராஃபிக்ஸ் என ஈசியா சமாளிக்கலாம்


2   ஓப்பனிங் சீனில்  கிரிக்கெட் பால் பட்டு  கூண்டுக்கிளிக்கு அடிபட்டதும் சிம்பாலிக் ஷாட்டாக ஒரு முட்டை உடைக்கப்பட்டு ஆம்லெட் ஆக்கப்படும் சீன் இதுவரை 13 படங்களில் வந்தாச்சு


3   அதே போல் சரக்கு சாப்பிட ஆலாய் பறக்கும்  பிரேம்ஜி அண்ட் கோ கலாட்டாக்கள் குடிகாரர்களுக்கு வேண்டுமானால் பிடிக்கும், மற்றவர்களுக்கு எரிச்சல்


4   அந்த சொப்பன சுந்தரி யார்? அவரை தேடுவோமே என யாரும் முயற்சிக்கவே இல்லை

5  முதல் பாகம் அளவு பாடல்கள் ஹிட் ஆகாதது மைனஸ்

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


அண்ணன் இட்ஸ் பிரசாந்த்தை சிவா நக்கல் அடிக்கறாரு.டயலாக் அவரை பத்தி.மகிழ்ச்சி.வளர்ச்சி -28-2

2 வெங்கட்பிரபு + யுவன் சங்கர் ராஜா இதுவரை ஏமாத்துனதில்ல.பிரேம்ஜியை மட்டும் சகிச்சுக்கனும் -2

3 ஒரு காலத்தில் மோகன் பாடல் காட்சிகளில் கமலை இமிடேட் செய்ததுபோல் ஜெய் விஜய் ஸ்டெப்களை உபயோகிக்கிறார் -2


4 சொப்பன சுந்தரி உன்னை யாரு வெச்சிருந்தா பாட்டு செம கும்மாங்குத்து.ஆனால் நடன அசைவுகள் அப்டியே கோடானு கோடி பாட்டு உல்டா -2


5 பிரேம்ஜி வந்து நின்னாலே ஜனங்க சிரிப்பாங்கனு வெங்கட்பிரபு நம்பிக்கை மாறனும்.திரைக்கதைல காமெடி சம்பவம் இருக்கானு பார்க்கனும்


நச் டயலாக்ஸ்

வாப்பா.போலாம்.அம்மா திட்டும்.

இருடா போலாம்.எல்லா அம்மாக்களுக்கும் இதான் வேலை.-2


2 அவனுக்கு எப்டி ஒரு சேட்டு பிகர் உஷார் ஆச்சுன்னு இன்னைக்கு வர அவனுக்கும் தெரில ,எங்களுக்கும் தெரில -2


3 அதெப்டிடா மச்சி?பிரண்ட்ஸ் நாங்க இருக்கறப்ப வேற யாரையும் உன்னை அடிக்க விடுவமா?

தாங்க்ஸ்
நாங்கதான் கும்முவோம் -2

4 உன் கூட ஒரு பிகர் சுத்திட்டு இருந்ததே என்னாச்?

என் கைல பைசா இருந்தவரை நைசா என் கூடவே இருந்தா.இப்போ பைசாவும் இல்ல, ஆளும் இல்ல. -2


5 ஒரு நல்ல கிரிக்கெட் டீம் க்கு அடையாளம் சேசிங் ல ஜெயிப்பதில் தான் இருக்கு -2


6 பிரேம்ஜி அடிச்ச மொக்கைகளில் ஓரளவு சுமார்-உனக்கு எல்லாம் பாஸ்புக்கே இல்லை.எதுக்குபேஸ்புக்?,-2( இதுவும் ட்விட்டரில் சுட்டது)





சி.பி கமெண்ட் -சென்னை600028-2 =கதையும் திரைக்கதையும் பலவீனம்.மொக்கை காமெடி எடுபடலை.யுவன் ஒன்லி + விகடன் =39,ரேட்டிங் - 2.25/5

முதலீட்டுக்கு மோசம் வராது. போட்ட காசை எடுத்துடலாம்.

0 comments: