Saturday, September 17, 2016

யார் ஆட்சி அமைஞ்சாலும் பொள்ளாச்சியில் அப்படித்தானாமே?

1  பெண் எம்.பி.,க்கே பாதுகாப்பில்லை: ஸ்டாலின் # ஆமா, 2 ஜி ஊழல் வழக்குல திகார் ஜெயில்ல போட்டுடறாங்க


================
 '2 'அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில், முதன்முறையாக, ஒரு பெண் போட்டியிட, காரணம்  ஜெ-  குன்னுார் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராமு, # ஆடுடா ராமா ஆடுடா ராமா டயலாக் தான் நினைவு வருது

=================

3  அ.தி.மு.க.,வை சேர்ந்த, பெண் எம்.பி., ஒருவருக்கே, தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை; -ஸ்டாலின்: # அதான் திமுக எம் பி பாதுகாப்பா இருக்காரே அடியும் வாங்கிக்கிட்டு


===================

4  மின்சார துறையை குட்டிச்சுவராக்கிய தி.மு.க.,:சட்டசபையில் ஜெ., கடும் குற்றச்சாட்டு # எமோஷனைக்குறைங்க, நீங்க ஆட்சிக்கு வந்ததே திமுகவோட அந்த தப்பால தான், நன்றி சொல்லுங்க


====================

5  'வயக்காட்டு பொம்மைகள்' என அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,கிண்டல்: தி.மு.க., கடும் அமளி # தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் கூன் விழாம நேரா நிக்கும் ஆட்களை கிண்டல் செய்யுதுங்க


=====================


6   மின் கட்டண உயர்வுக்கும்,ADMKஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை,'' -மின் துறை அமைச்சர் # விட்டா அதுக்கும் கலைஞர் தான் காரணம்னு சொல்லிடுவீங்களே?


===============



7  

இந்தியாவில் புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்: மாநிலங்களவையில் தகவல் # தம் கட்டி சமாளிக்கனும், தம் அடிக்காம இருக்கனும்

==================



8 மின்கட்டணம் அரசு உயர்த்தவில்லை;ஆணையம் தான் உயர்த்துகிறது: அமைச்சர் தங்கமணி # என் ஆட்சியில் என் ஆணைப்படிதான் மின் கட்டணம் உயர்கிறதுனு சொல்ல தில் வேணுமில்ல?



==============

?9  ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக முறைகேடு நடைபெறும் என அஞ்சுகிறேந்   குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்  # அமெரிக்க கலைஞர்

===============

10  வெளிநாடுகளுக்கு சென்று, தொழிற்சாலைகளை தமிழக அரசு கொண்டு வருமா? -தி.மு.க., - எம்.எல்.ஏ., பிச்சாண்டி: # ஒரு நாட்டுக்கு ஒரு மோடியே போதும்ப்பா

=======================
11 மின்சார வாரியம், இன்னும் 3 ஆண்டுகளில், லாபத்தில் இயங்கும்- மின் துறை அமைச்சர் தங்கமணி # அதாவது இப்போ நட்டத்தில் இயங்குதுனு சுத்தி வளைச்சி சொல்றீக


====================
12 முதல்வரின் அன்புக்கு, பாசத்திற்கு அடிமையாக இருக்கிறோம்,''- மின் துறை அமைச்சர் தங்கமணி # முன் பாதி ஸ்டேட்மெண்ட் சப்பைக்கட்டு , பின் பாதி நிதர்சனம்

-- 

=================

'13 டாஸ்மாக் ஊழியர்களுக்கு, செப்டம்பர் முதல், ஊதிய உயர்வு வழங்கப்படும்- தங்கமணி  # அப்போ டார்கெட் பிரஷரும் இருக்கும்னு சொல்லுங்க

================

 14 ''பொள்ளாச்சி  பகுதிகளில், விவசாயிகள் கோகோ பயிரிடுகின்றனர். ஆனால், , கோகோ பயிரிடக்கூடாது - துரை முருகன் # யார் ஆட்சி அமைஞ்சாலும் பொள்ளாச்சியில் அப்படித்தானாமே?


=================

15  ஜி.எஸ்.டி., வரி விதிப்பு அமலுக்கு வந்தால் பழைய தங்க நகைகள் விற்போருக்கு இழப்பு # அப்போ நகைக்கடைக்காரங்களுக்கு லாபம்? கமிஷன் கை மாறி இருக்குமோ?

================




======================
17 கடந்த 5 ஆண்டுகளில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்?
-கருணாநிதி # 2006 டூ 2011 ஆட்சிக்காலத்தில் நாம ஏன் மதுவிலக்கு கொண்டுவர்ல?

=============


18 ஆடிப்பெருக்கு நாளில் ரூ.480 கோடிக்கு மது விற்பனை:: # நீர்நிலைகளில் விழாக்கொண்டாடு-ன்னா தமிழன் தண்ணி அடிக்கற நிலைல கொண்டாடி இருக்கான்


================


19 தமிழகத்தில் மின்வெட்டு காலம் முடிந்து விட்டது: அமைச்சர் தங்கமணி # ஆமா, இப்பவெல்லாம் அரிவாள் வெட்டு, சென்சார் வெட்டு தான் ஃபேஷன்

===============


20  ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா குறித்து கருத்து எதையும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறேன். ஏனெனில், பொருளாதாரத்தில் நிபுணர் மற்றும் கட்சிக்கு விசுவாசமானவன் என்ற இரண்டிலும் எனக்கு அர்ப்பணிப்பு உண்டு- சுப்பிரமணியன் சாமி: # இதுல ஏதோ உள்குத்து இருக்கே?மோடிக்கு வெடி வைக்கறாரா?

=================

0 comments: