Published on Monday, September 19, 2016 at 7:30:00 AM with 0 Comments

ஒலிம்பிக்ல இந்தியர்கள் ஏன் தங்கம் வாங்கலை? கண்டு பிடிச்ட்டேன்

1 தமிழ் மிஸ் தன்யா = மதுஹாசினி   சிரிக்கிறார்- இதை சுருக்கி வரைக

மதுஹாஹாஹாஹாசினி

==================


என் கல்யாணத்துக்கு ஒரு பவுன் செயின் மொய் வைக்கறேன்னு எந்த நம்பிக்கைல சொல்றே?

எப்படியும் உனக்கு கல்யாணம் ஆகாதுங்கற நம்பிக்கைல தான்


==================

3 டாக்டர். அடிக்கடி முடி கொட்டுது. என்ன செய்ய?

1ம் செய்ய முடியாது. வேலைக்காரியை விட்டு பெருக்கச்சொல்லுங்க


=================

4



  சார், 45 வயசுலயே உங்களுக்கு முடி எல்லாம் நரைச்சிடுச்சு போல.

 ஆமாங்க. 41 வயசுலயே சிலருக்கு முடியே உதிர்ந்திடுது


==================


5  கார்ல சாவியை வச்சிட்டு லாக் பண்ணிட்டேன் எப்டி ஓபன் பன்றது ?

மிஸ்! ஸ்டீல் ஸ்கேல் யூஸ் பண்ணனும்

ஓஹோ,என் கிட்டே அடிஸ்கேல் தான் இருக்கு

=============

6 என் ட்விட்டர் நண்பர்கள் அனைவருக்கும் ஆள் இருக்கு.ஆனா எனக்கு இல்லை,என்ன செய்ய?

ஃபேஸ்புக் போய் ட்ரை பண்ணிப்பாருங்க


======================


7 ஏய் மிஸ்டர்! கல்யாணம் தான் ஆகிடுச்சே? ஏன் உங்களை மாதிரி ஆளுங்க பொண்ணுங்க பின்னாடி போறீங்க?


ஜோடியா போனாத்தானே தப்பு மேடம்?


================


பேச்சிலர்ஸ்தான் பொண்ணுங்க பின் அலையறாங்கன்னா மேரேஜ் ஆன ஆண்கள் ஏன் டிட்டோ?
மேரேஜ் ஆன ஆண்கள் - மேரேஜ் ஆன பெண்கள் மேட்சுக்கு மேட்ச்


================


9  திருப்பதி பிரசாதம் யாராவது தந்தா நீ முதல்ல லட்டு சாப்பிடுவியா? திருநீறு?

 எதுக்கு வம்பு? லட்டை திருநீறில் ஒரு புரட்டு புரட்டி சாப்ட்டுட்டா போச்சு


===================


10 முதன் முதலா ஒரு சமையல்காரியை முயற்சிக்கிறேன்

 அடப்பாவி, ஏன்?

 சமையல் பண்ண முயற்சிச்சேன், முடியல, அட்லீஸ்ட்....


=========================

11 மிஸ்! உங்க கிட்டே ஸ்கூட்டி இருந்தும் ஏன் பஸ்ல ஆஃபீஸ் போறீங்க?


 பஸ்ல போனா அந்த டைம்ல 10 ஸ்டேட்டஸ் FB ல போடலாம் இல்ல?


====================


12  

மிஸ்! எந்த வயசுல இருந்து நீங்க மேக்கப் போட ஆரம்பிச்சீங்க?


25 

ஏன் லேட்?

 25 ல தான் எனக்கு மாப்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க


===================


13  

எல்லாரையும் அன்பாலோ பண்ணிட்டேன் 😁😁🚶😜

 மிஸ்! மேய்ச்சது எல்லாமே  எருமை, இதுல என்ன பெருமை?


===================


14   தலைவரே! நீங்க பக்காவான பகுத்தறிவுவாதிதானே?
ஆமா
கூட்டணிக்கட்சித்தலைவி நலம் அடைய பிரார்த்திக்கறேன்னீங்களாமே?எப்டி?பிரார்த்தனை என்ன கேட்டகிரி?


====================

15   தலைவரே! தமிழ்நாட்டை கொள்ளையடிச்சது யார் யாரு?
 நானும் அவரும் 
கடைசி காலத்துலயாவது திருந்தி திருடுனதுல 1% நாட்டுக்காக தந்தா என்ன?


=================

16  டாக்டர், குற்றால அருவி ஃபோபியா என் புருசனுக்கு வந்திருக்கு

 புதுசா இருக்கே?

 ஹேர் ஃபால் ஆனதுல  இருந்து வாட்டர் ஃபால்ஸ் பக்கம் கூட போக பயப்படறார்


=====================


17  வரலட்சுமி விரதம் இருந்தால்  நமக்கு என்ன பயன் குருவே?


 நமக்கு இல்லை. லட்சுமிமேனனுக்கும், விஷாலுக்கும் கொண்டாட்டம்



====================


18   டியர், கோபமா இருக்கும்போது என் முகம் அழகா இருக்குமா? அசிங்கமா இருக்குமா?

 ம்ம்ம், அது வந்து.. ஆங், எப்பவும் போல் இருக்கும்


====================


19   மாப்ளை ரயில்வே டிபார்ட்மெண்ட்னீங்க?

 அதாவது ரயில்ல கொள்ளை அடிக்கறவர்



=======================



20   ஒலிம்பிக்ல இந்தியர்கள் ஏன் தங்கம் வாங்கலை?

 ஆடி மாசத்துல தங்கம் வாங்குனா குடும்பத்துக்கு ஆகாதாம்,. அக்சய திதிக்கு  வாங்கலாம்னு...


======================

No comments: