Wednesday, August 24, 2016

கறுப்பு ஆடு,கறுப்புப்பணம், சிவப்பு +கறுப்பு

`1  கறுப்பு ஆடுகளை நீக்குவதற்கு, அருண் ஜெட்லிக்கு, நான் உதவி செய்கிறேன்- சுப்பிரமணியன் சாமி-#கறுப்புப்பணத்தைத்தான் மீட்க முடியல, கறுப்பு ஆடுகளையாவது நீக்கலாம்னா?


==========================


2  மோடி தன் மனதில் பட்டதை, 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார். அதில், அவர் விடுக்கும் கோரிக்கைகளை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.-வெங்கையா நாயுடு:  # பயணங்கள் முடிவதில்லை-னு மக்கள் அவரைப்பற்றி பேசறாங்களே?

==========================================


3  மேயரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும், தேர்தல் முறையை ரத்து செய்து, கவுன்சிலர்களே ஓட்டு போட்டு தேர்வு செய்யும் பழைய நடைமுறை, மீண்டும் அமலுக்கு வரவுள்ளது.# மக்களாட்சி மறைந்து எதேச்சாதிகார ஆட்சி தலைதூக்குது


=========================


4   மேயரை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுப்பர் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது, லஞ்ச லாவண்யத்திற்கு தான் வழி வகுக்கும்.-திருமாவளவன் # எதிர்க்கட்சிகளை தலைதூக்க விடாமல் பண்ண நினைக்கறாங்க போல


==========================

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளோம். தே.மு.தி.க., தலைமையை ஏற்கும் கட்சிகள் எங்களுடன் இணைந்து போட்டியிடலாம்.-தே.மு.தி.க., மாநில பொருளாளர் இளங்கோவன் # முன்னுக்குப்பின் முரண் ஏன்? தனித்துப்போட்டி, எதுக்கு அப்புறம் இணைந்து?


====================================


6   சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., தொகுதி உடன்பாடு மட்டுமே செய்து கொண்டது. எங்களுடன் இணைந்தது, சட்டசபை தேர்தலுக்காக மட்டுமே. இனி அவர்கள் தனித்துப் போட்டியிடுவதும், விலகுவதும் அவர்களின் உரிமை-இ.கம்யூ., மாநிலச் செயலர் முத்தரசன் பேட்டி:# அப்போ இது சந்தர்ப்பவாதக்கூட்டணின்னு நீங்களே ஒத்துக்கறீங்களா?

==================================


7  உ.பி., சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியிட முடிவு செய்து உள்ளோம்.-நிதிஷ் குமார் - திஸ் ஈஸ் நிதிஷ் , அகிLOSS குமார் என சொல்லும் அளவு வெற்றி கிடைக்குமா?

==============================


தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில், இலங்கை கடற்படையினரால் இனியும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, மத்திய அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.-ஜி.கே.வாசன் அறிக்கை:# த மாக வாக்கு வங்கி போல் ரொம்ப வீக்கா இருக்கு மீனவர்கள் வாழ்வாதாரம்


========================


மாணவர்களுக்கு மாம்பழச்சாறு வழங்கும் திட்டம் உகந்தது அல்ல -ஜெ # பாமக சின்னம் மாம்பழம், அவங்களுக்கு நல்ல பேர் கிடைச்சிடக்கூடாதுன்னா?


=======================


10  திமுக தலைவர் யார்: ஜெ., சந்தேகம் # ஆளுங்கட்சியாக இருந்தால் கலைஞர், எதிர்க்கட்சியாக இருந்தால் ஸ்டாலின்


=========================


11 சிறை கைதிகள் யோகா கற்றுக் கொண்டால் 3 மாத காலம் தண்டனை குறைப்பு: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு # அப்போ 3 மாச ஜெயில் தண்டனை பெற்றவர்கள் ரிலீஸ்?

======================


12 தே.மு.தி.க. தொழிற்சங்க பேரவை செயலாளர் சவுந்திரபாண்டியன் நீக்கம் - விஜயகாந்த் அறிவிப்பு.. # கட்சித்தலைமைக்கு எதிரா சவுண்ட் விட்டாரா?

================

13 2015 ஜூன் முதல் தமிழகத்தில் மின்வெட்டு அறவே இல்லை: சட்டசபையில் ஜெயலலிதா பேச்சு #
# 2016 ஏப்ரல், மே மாதங்களில் அடிக்கடி கட் ஆச்சே?அப்போ கொட நாடு போய்ட்ட்டாரா?

=============================
-
14 கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி தனது பதிலை சட்டசபைக்கு வந்து சொல்லட்டும்- ஜெ # நீங்க எந்தக்கேள்வியும் கேட்கமாட்டேன்னு வாக்குக்கொடுத்தா வருவாரு

=========================


15 மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் குதிரை பேரத்துக்கே வழிவகுக்கும்: ராமதாஸ் # குதிரை பேரமும் , திரை மறைவு வேலைகளும் அரசியலில் சகஜம்

========================


16 கச்சத்தீவு பிரச்னையை எடுத்தாலே தி.மு.க.,வினர் ஓடுகின்றனர்-ஜெ # ஜாகிங்க் போனா நல்லதுன்னு டாக்டர் சொன்னாராம்

=============================


17 கச்சத்தீவை கொடுத்த பிறகு தான் தனக்கு தெரியும் என கருணாநிதி கூறினார். அது பொய் -ஜெ # அப்போ முதல்வர் பொறுப்பில் அவர் பொறுப்பாக இல்லைனு ஒத்துக்கறாரா?


=========================

18 நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு  ரூ.1 கோடி எப்போ தருவீங்க? : ரஜினிக்கு விவசாயிகள் கெடு,14 வருடங்களுக்கு முன் சொன்னது இன்னும் தர்ல #  சொன்னபடி தந்தால் மகிழ்ச்சி

=================================


19  பீட்ரூட் ஏற்றுமதி அதிகரிப்பு : விவசாயிகள் உற்சாகம் # விவசாயிகளுக்கு முன்னேற்றம் அளிக்கும் ரூட் எப்படி அமைந்தாலும் வரவேற்கலாம்


================================


20  விருதுநகர் மாவட்டம் நரிக்குடி போலீஸ் ஸ்டேஷனில், ௨,௦௦௦ ரூபாய் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., ராமகிருஷ்ணன், கைது  # பேருதான் ராமன், பண்ற வேலை எல்லாம் ராவணன் வேலை

0 comments: