Monday, June 27, 2016

பவுனு பவுனுதான் , அம்மா வந்தாச்சு

1  கார், பைக் தருகிறேன் என்று சொன்னால் நம்பாதீர்கள்: ஸ்டாலின் வேண்டுகோள் # ஒரு ஏக்கர் நிலம் தர்றோம்னு சொன்னவங்களையே நாங்க நம்பலை



============


2  அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை மையம் # சூர்யா வின் 24  ரிலீஸ் ஆகுது. தியேட்டர்ல கூட்டம் கூடும், வெப்பம் அதிகமாகும்



=============

மோடியின் கல்வித் தகுதியை பகிரங்கப்படுத்த டெல்லி பல்கலை.க்கு கேஜ்ரிவால் கடிதம் # டிப்ளமோ இன் டூரிசம் படிச்சிருக்காராம்



================


4   ஸ்மிருதி கல்வி சான்றிதழை கண்டு்பிடிக்க இயலவில்லை-டெல்லி யுனிவர்சிட்டி # சரி, மோடியோட சர்ட்டிஃபிகேட்டாவது இருக்கா?


===========


5 சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது.-. இளங்கோவன் # காங்கிரசுக்கு ஒரு இடத்தில்கூட டெபாசிட் கிடைக்காதுன்னு தமிழிசை சொல்வாரோ?


================


6 2016 சட்டசபை தேர்தலுடன் விஜயகாந்தின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து விடும்- தமிழருவி மணியன் # இது ஒரு ஆரம்பம் தான்.வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறும், வீரம் காட்டும்\\\=======

=============


7 அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: குஷ்பு பேச்சு # கமான் மேடம், மக்கள் கமா வைக்கலாம்னு முடிவு எடுத்துட்டாங்க


=============

8 சொன்ன திட்டங்களை நிறைவேற்றுவதில் நாணயம் தவறாதவர் கருணாநிதி-கி.வீரமணி # நா நயம் மிக்கவர் , நாணயம் மிக்கவர் என்பதில் ஐயம் இல்லை,


==============

9 தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டு வர எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்: அன்புமணி # பாலைவன ஒட்டகம் , கூடாரம் கதை தான் நினைவு வருது


================

10 விவசாயிகள் கடன்கள் அனைத்தும் ரத்து - ஜெ # அப்போ ஆல்ரெடி கட்டினவங்களுக்கு அதை திருப்பிக்கொடுப்பீங்களா?


====================


11 டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை - ஜெ # அப்போ பழைய கட்டணம் கொடுத்தா போதுங்களா?



===============


12 விலைவாசி ஏற்றத்திற்கு அதிமுக ஆட்சியில் அதிகரித்து விட்டதாக திமுக பொய் பிரச்சாரம் - ஜெ # கேப்டன் கேட்ட 500 கோடியை மனசில் வெச்சு புலம்பி இருப்பாங்க


===============

13 100 யூனிட் வரையிலான மின்சார பயன்பாட்டுக்கு கட்டணம் இல்லை -ஜெ # அடேங்கப்பா, இது நிஜமாவே ஷாக்கிங் நியூஸ் தான். கரண்ட் இருக்குமில்ல?


===========


14 ஏழை மக்களுக்கு அம்மா வங்கி அட்டை வழங்கப்படும் -ஜெ # அதில் அட்டையை விட பெருசா உங்க ஃபோட்டோவும் இருக்குமா?


==============


15 பொங்கலுக்கு கோ ஆப்டெக்சில் துணிகள் வாங்க ரூ500 கூப்பன்-ஜெ # வெய்யிலுக்கு தலைக்கு முக்காடு போட துண்டு வாங்கிக்கலாம்


\=============
16  தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைக்க நடவடிக்கை - ஜெ # எல்லா மணல் லோடும் ஒரே ஏரியாவில் இறக்கப்படும் போல , ஏன்னா ஆற்றில் மணல் தான் மிச்சம்


=============


17 பேருந்து நிலையங்கள், வணிகவளாகங்களில் வைபை வசதி வழங்கப்படும் - ஜெ # இனி ஒரு பய நெட் செண்ட்டர் போக மாட்டான்


==============


18 சத்துணவு திட்டத்தில் காலை டிபன் வழங்கப்படும்- ஜெ # டீ, பன் கொடுத்துட்டு அதான் டிபன் -னு ஏமாத்திடப்போறாங்க


===========


19 தாலிக்கு தங்கம் 4 கிராமில் இருந்து 1 பவுனாக உயர்வு- ஜெ # பவுனு பவுனுதான் , அம்மா வந்தாச்சு-னு குதிப்பாங்களே


=============


20 மகளிருக்கு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி- ஆட்டோக்கள் வாங்க மானியம் - ஜெ # லேடீஸ் ஓட்டெல்லாம் “ ஆட்டோ”மேடிக்கா வந்திடும் போலயே


================

0 comments: