Published on Saturday, May 21, 2016 at 7:30:00 AM with 0 Comments

ஏழரை சூழ் உலகு

தான் சார்ந்த கட்சியின் தலைவன் /தலைவி திருடன்,கொள்ளைக்காரன் ,ஊழல் பேர்வழி என்பதை எல்லாம் ஒத்துக்கொள்ளும் மனோபலம் கட்சித்தொண்டனுக்கு தேவை


=======



2 சித்ரம் ட்வீட்ஸ் இன்று ஆபீஸ் க்கு லீவாம்.அப்போ பாட்டுக்கு பாட்டு போட்டி ,சமையல் போட்டி ,ஒயிலாட்டம் மயிலாட்டம் மீனம்மா ஆட்டம் எல்லாம் உண்டு




=============



3 புதுசா கட்சில சேர்றவங்க தேமுதிக ல சேர்ந்து பின் திமுக வுக்கோ அதிமுக வுக்கோ கட்சி மாறிட்டா கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் போல




============



4 DON'T MISTAKE ME ன்னு பொண்ணு சொன்னா அதை DON'T MISS.TAKE ME னு அர்த்தம் கண்டுபிடிச்சுக்கறான் நெட் தமிழன்




========



5 அத்தி பூத்தாற் போலோ அத்தை சிரித்தால் போலோ ஏதோ ஒரு ட்வீட்க்கு ஏதோ ஒரு பொண்ணு ஸ்மைலி போட்டா.விட்ரக்கூடாது.நாமும் பதில் ஸ்மைலி 5 போடனும்




=============




6 கடை ஓனர் கேப்டனே துரோகி சந்திரகுமார் பற்றி கண்டுக்கலை.டிஸ்மிஸ்டு ன்ட்டார்.வை கோ இப்டி துடிக்கறாரே ஏனோ?



===================




7 இந்த பொண்டாட்டிங்க ஃபோன் பண்ணா எங்கே இருக்கீங்க? என்ன பண்ணிட்டு இருக்கீங்க?னு தான் கேட்கறாக. யோசிச்சு யோசிச்சு பொய் சொல்லவேண்டியதா இருக்கு




=============




8 ஆற்று நீர் மாசுபடாமல் தடுக்க அனைவரும் முடிந்த  வரை வெள்ளை நிற ஆடை உடுத்தினால் போதும். கலர்/ டையிங்க்கால்தான் சாயக்கழிவுகள் ஆற்றை மாசுபடுத்துது



===============




நேற்று சந்திர குமார்


இன்று சூரிய குமார்
நாளை அமாவாசை


===========

10 மன்னிப்புக்கேட்கும்போதும் ,தன்னிலை விளக்கம் அளிக்கும்போதும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து ஆலோசித்து வார்த்தை விடுதல் நலம்

=================

11 பழம் கனிந்து விழும் என காத்திருந்தேன்.இப்போதைக்கு பழத்துண்டு தான் கிடைத்தது.அரசியல்வாதிக்குப்பெருமையே துண்டு தானே?



===============



12 சரத் குமார்

சந்திர குமார் னு குமார்ங்க பெரும்பாலும் இட மாறி தோற்ற பிழையாவே இருக்காங்க


============


13 டாக்டர் ராம்தாஸ் செல் ரிங் டோன் = அலை அடிக்குது அலை அடிக்குது என்னைச்சுத்தி அலை அடிக்குது


===========

14 கலைஞர்.செல் ரிங் டோன் = பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்


==============

15 நான் தனியாக அரசியல் பேசுவதில்லை... யாரும் பேசினால் சேர்ந்து பேசுவது தான..


ஓஹோ.கூட்டத்தோட கோவிந்தா போடுவீங்க.தனியா இருந்தா பஜ்ஜி போடுவீங்க?



===========


16 அதிமுக வின் வேட்பாளர் பட்டியல் தினசரி மாறுதலுக்கு உட்பட்டது


=============


17 நமக்கு எட்டாக்கனி ஆகி.விட்டால் அது யாருக்கும் கிட்டாக்கனி ஆக்கி விட.வேண்டும். #,அரசியல் அரிச்சுவடி


=========


18 இளநீர் ஸ்ட்ரா போட்டுக்குடிப்பது காதலி லிப் கிஸ் க்கு அனுமதி தந்த பின்பும் காக்கிச்சட்டை கமல் போல் கர்ச்சீப் போர்த்தி கிஸ்.அடிப்பது போன்றது


=============

19 திடீர்னு எங்கயாவது தொலைஞ்சு போய்டனும்னு சொல்றவங்க எல்லாம் டெய்லி FB ல அலாரம் வெச்சு முறை.வாசல் கோலம் போட்டுட்டுதான் இருக்காக



============

20 உங்க கம்பெனில / ஆஃபீஸ்ல 7 ரூம் இருந்தாலும் இல்லைன்னாலும் அது ஏழரை சூழ் உலகு என்றே கொள்ளப்படும்

================

No comments: