Wednesday, April 06, 2016

KING LIAR - சினிமா விமர்சனம் ( மலையாளம்) காமெடி

ஹீரோ ஒரு டுபாக்கூர் பார்ட்டி , அரிச்சந்திரனுக்கு எதிர் வீடு. இன்னும் தெளிவாப்புரியவைக்கனும்னா அவர் ஒரு கலைஞர் மாதிரி.சாராயத்தை தமிழகத்துக்குக்கொண்டு வந்ததே  தான் தான் என்பதை மறைத்து , 5 முறை ஆட்சிக்கு வந்தப்பவும் 5 தடவையும் சாராய சாம்ராஜ்யத்தை தான் தான் விரிவுபடுத்தினோம் என்பதை மறைத்து மீண்டும் ஆட்சிக்கு ( ஒரு வேளை) வந்தா மது விலக்கு கொண்டு வர்றோம்னு அடிச்சு விடறார் பார்த்தீங்களா? அந்த மாதிரி வெறும் வாய்லயே வடை சுடும் மொள்ள மாரிதான்  ஹீரோ.

தனக்கு யாரையும் தெரியாதுன்னாலும் எல்லாரையும்  தெரிஞ்ச மாதிரி காட்டிக்குவார்.அரசியல் , சினிமா விஐபி கள் கூட ஒண்ணா இருப்பது  போல் ஃபோட்டோ, செல்பி எடுத்து வெச்சு ஊரை ஏமாத்திட்டு இருக்கார்.இவருக்கு ஒரு பள்ளிப்பருவ   காதலி.


காதலிக்கு இவர் தான் தன் ஸ்கூல் மேட் என தெரியாது.அதை வெளிப்படுத்தாமயே ரூட் போட்டுட்டு இருக்கார்.


 இன்னொரு  ஹீரோ இவர் சசிதரூர் மாதிரி  பெரிய பிஸ்னெஸ் மேக்னட். இவரோட சம்சாரம் சுனந்தா மாதிரி டப் பார்ட்டி . கம்பெனி , சொத்து எல்லாம் சம்சாரம் பேர்லதான் இருக்கு. ஒரு பார்ட்டி நடக்குது. அங்கே ஹீரோ இன்னொரு பொண்ணு கூட  லிப் கிஸ் கொடுத்துட்டு இருப்பதை சம்சாரம் பார்த்துடுது. ஐஸ்வர்யா தனுஷ் மாதிரி  பெருந்தன்மையான கேரக்டர் இல்ல அந்த சம்சாரம் , செம கடுப்பாகி பிரிஞ்சிடறாங்க.


தன் சம்சாரம் கண் எதிரே  பார்த்ததை கண்ணால் கண்டது பொய் என நம்ப வைக்கனும், அதுக்கு சரியான ஆள் இல்லாததை இருக்குன்னு நம்ப வைக்கும் பொய்க்காரன் ஹீரோ தான் சரியான ஆள் என ஹீரோ நெ 2 நினைக்கறார்


2 பேரும் சேர்ந்து எப்படி திட்டம் போட்டு ஜெயிக்கறாங்க என்பதுதான் திரைக்கதை 


 கதை நல்ல கருதான் ஆனா திரைக்கதை அமைக்கும்போது  பின் பாதியில் நம்பகத்தன்மையான காட்சிகள் வைக்காம லாஜிக்  சொதப்பல்களோட படம் நகருது. ஆனா ஹீரோவோட 2 கண்ட்ரீஸ் என மெகா ஹிட் கொடுத்த பிளஸ் இந்த படத்தின்  வெற்றிக்கு,  ஓப்பனிங் கிற்கு உதவும். படம் தப்பிச்சிடும்.


 ஹீரோவா திலீப்.இவரது பாடி லேங்குவேஜ் , கலகலப்பான பேச்சு ,டயலாக் டெலிவரி எல்லாம்  சபாஷ் ரகம்.இவரோட டிரஸிங்க் சென்சும் குட் . ஹீரோயினோட கெமிஸ்ட்ரி தான் ஒர்க் அவுட் ஆகல, ரொம்ப சந்தோசம் ( ஆஹா என ஒரு உயர்ந்த  உள்ளம்)



ஹீரோயினா   மடோனா செபாஸ்டின் .இவரோட மூக்கு இவருக்கு ஒரு மைனஸ் . ரொம்ப பெருசா இருக்கு.  நோஸ்கட் கொடுக்கறதுக்காகச்சொல்லலை. ஒரு அக்கறைல சொல்றேன்.  ஆனா நடிப்பு ஓக்கே , க்ளைமேக்ஸ் ல நல்லா நடிச்சிருக்கார்.ஆனா இயக்குநர் இவரை ( திரையில்) சரியா யூஸ் பண்ணிக்கலை

 இன்னொரு ஹீரோயினா ஆஷா .இவரது மன்னன் விஜயசாந்தி டைப் தெனாவெட்டான லுக், ஆக்டிங் எல்லாம் குட் .


இன்னொரு  ஹீரோவா படத்தோட டைரக்டர் லால். இவரது கெட்டப்  சகிக்கலை. தலையோட 4 பக்க பார்டல்ர்லயும்  மொட்டை அடிச்சு  நடுவில்  முடி, கண்றாவி. ஆனா தொழில் அதிபர்கள் எவ்வளோவ் கேவலமா இருந்தாலும்  பொண்ணுங்க, நடிகைங்க  அந்த லூசுங்களை காதலிக்க  ரெடியாதானே இருக்காங்க?

பாடல்கள்  சுமார் ரகம். முதல் பாடலில்   உதடு ஒரு மாதிரி அசையுது. பாட்டு ஒரு டைப்பா வருது. குறிப்பா  ஹீரோயின் உதடு

திரைக்கதை வசனம் எல்லாம் அறிவு ஜீவிகள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. திலீப் ரசிகர்கள் மட்டும் ரசிக்கலாம் ( வேறு வழி இல்லை. தன் அபிமான ஹீரோ என்ன குப்பை கொடுத்தாலும் ரசிகர்கள் அதை ஏத்துக்கிட்டுதானே ஆகனும்?)


படம் 2 மணி நேரம் 38 நிமிசம்  ஓடுது. ரொம்ப நீளம், பின் பாதி நாடகம் பார்ப்பது  போல்  இருக்கு.ஆனா  ஃபேமிலி எண்ட்டர்டெய்னர் தான்


சபாஷ்  இயக்குநர் 



1  ஹீரோ  ஹீரோயினுக்கு  கை கொடுக்கும்போது நைசா அவர் மோதிரத்தை  உருவுவதும்  பின் சாரி சொல்லி அதே மோதிரத்தை அணிய வைப்பதும் நிச்சயதார்த்த மோதிரம் போல் அதை நினைப்பதும் அப்போ காமெடியன்  இருவரை கலாய்ப்பதும் நல்ல காமெடி சீன்

2  ஹீரோவுக்கான ஃபிளாஸ்பேக் காட்சியில்  எக்சாம் பேப்பர்ஸ் வைக்கப்பட்ட ரூமின் கீ களவாடும் காட்சியில்  காந்தம் கட்டப்பட்ட குச்சியால்  இரும்பு சாவிக்கொத்தை லபக்கும் சீன்


3 மேஜிக் பார்ட்டி  ஒருவர்  கலர் கலரா கண் இமைக்கும் நேரத்தில்  டிரஸ் கலரை மாற்றிக்காட்டும் ஃபார்முலாவை க்ளைமாக்சில்  ஃபேஷன் ஷோவில்  லேடி போட்டிருக்கும் கலர் டிரசை மாற்றி சொல்லி ஹீரோயின் நெ 2 வை குழப்புவதும்  அதன் மூலம்  அவர் பார்த்தது உண்மைக்காட்சி அல்ல ஹாலுசினெசன் எனப்படும் கற்பனை மனக்குழப்பம் என நிறுவுவதும் 


4 ஃபேஷன்  ஷோ வில்  இரு தரப்பு லேடிகளும் கிளமாக்ஸ் குவிஸ்  கேள்விக்கு  பதில் அளிக்கும் விதம் ஒரே சமயத்தில்  இரு தரப்பு ஹீரோயின்கள் மனதிலும் மாற்றம் வரும் காட்சி 



 லாஜிக் சொதப்பல்ஸ்



1 ஓப்பனிங்  சீன் சாங் ல  ஏரியில் படகில் செல்லும் நபர்  பிட்  நோட்டீசை கத்தை கத்தையாக தண்ணீரில் அள்ளி விடும் சீன் எதுக்கு? சுற்றுப்புற சூழலை மாசு படுத்தும்  சீனை எப்படி இயற்கை எழில் கொஞ்சும் கேரளா சென்சார் போர்டு அனுமதித்தது? அந்த நனைந்த நோட்டீஸால்  யாருக்கு என்ன பயன்?


2  கலர்  பிளைண்ட்னெஸ் ( நிற  தர வேறுபாடு காண முடியா குறைபாடு) ஒரு கம்பெனி எம்டி  தன் பி ஏ விடம்  நீ போட்டிருக்கற ஆரஞ்சு கலர் சுடி அழகுன்னு சொல்லி மாட்டிக்கறார். இது கேனத்தனமா இருக்கார் . உன் சுடி  சூப்பர்னு சொன்னாலே போதுமே , எதுக்கு கலர் சொல்லி மாட்டனும்?


3 மஹாத்மா காந்தி  ராகுல் காந்தியோட மகன் அல்லவா? என கேனத்தனமான டயலாக் வருது. காமெடிக்கு என்றாலும் அதில் மினிமம் லாஜிக்காவது வேண்டாமா? 


4 ஹீரோ  1  ஹீரோ நெ 2 வோட சம்சாரத்தை கார்ல  கூட்டிட்டு ஃபார்ம் ஹவுஸ் போறார். அப்போ ஃபோன்ல  தன் நண்பனிடம் நான் ஃபார்ம்  ஹவுஸ் போறேன் நீ என் ஆளைக்கூட்டிட்டு  அங்கே வந்துடாதே என சொல்றார். டிராஃபிக் சவுண்ட்ல அது சரியா  கேட்காம  நண்பர் அதே ஃபார்ம்   ஹவுஸ்க்கு அங்கே வந்துடறார். லொக்கேஷனை  சொன்னாங்காட்டிதானே இப்டி தப்பு நடக்குது. ஒண்ணா மெசேஜ் பண்ணி இருக்கலாம். அல்லது லொகேசன் சொல்லாம  வெயிட் -னு சொல்லி  இருக்கலாம்


5  ஹீரோ நெ1  ஹீரோயின் நெ2  சரக்கு அடிச்சு மப்பில்  இருக்கும்போது அவரை கைத்தாங்கலா கூட்டிட்டுப்போவதை  ஹீரோயின் நெ 1 பார்த்துடுது. ஹீரோயின் நெ 2 க்கு மப்பு தெளிஞ்சபின் இந்த சீனை விளக்கி இப்போ என் ஆள் பார்வைல நாம 2 பேரும் தப்பு பண்ணவங்க , ஆனா நாம பண்ணலை இதே போல் தான்  நீங்க  உங்க கணவரை  வேற  ஒரு பொண்ணு கூட  தப்பா பார்த்ததும் என விளக்கி இருக்கலாமே அதை ஏன் செய்யலை?

6  அவ்ளோவ் பெரிய கம்பெனி எம் டி  எதுக்கு தன் கீழ் வேலை செய்யும் சாதா ஆள்  வீட்டுக்கு  வர்றார். ஃபோன் பண்ணி வா அப்டின்னா வந்துட்டுப்போறார்


7 ஹீரோ கம்பெனி இன்சார்ஜ் ஆனதும் 2 ஐடியாவால கம்பெனியை முன்னேற்றிடறார், 1 கம்பெனி ஒர்க்கிங் டைம் ஸ்டார்ட் ஆக 1 நிமிசம் முன் சங்கு ஊதுதல்  பின்  மாலை ஒரு நிமிசம் லேட்டா 
சங்கு ஊதுதல் இதன் மூலம் தினம் 2நிமிசம்  டோட்டல்  லேபர்ஸ் 5000 பேர்  அப்போ தினம் எவ்ளோ  ஒர்கிங் டைம்  மிச்சம் என கால்குலேசன் போடுவது கேனத்தனமானது. 8 மணி  நேர  ட்யூட்டியில் எத்தனையோ    நிமிசங்கள் வெட்டி அரட்டையால  வேஸ்ட் ஆகுது


8  டூத் பேஸ்ட் ட்யூப்    வாய் அகல விட்டத்தை அதிகம் பண்ணிட்டா அதிக பேஸ்ட்  வெளி வரும் , கன்ஸ்யூமர்க்கு சீக்கிரம் பேஸ்ட் தீரும் அதன் மூலம் சேல்ஸ்  அதிகம் ஆகும்  என சொல்வதும் ஏற்றுக்கொள்ள   முடியாததே. கன்ஸ்யூமர்  அந்த அளவு முட்டாளா?


9   க்ளைமாக்சில் ஆந்த ஃபேஷன்  ஷோ ஃபைனல்  கேள்வி அடங்கிய ஃபைலை ஹீரோ  மாற்றும் சீன் நம்பும்படி இல்லை

10  முன் பின் அறிமுகம் ஆகா மாடலிங்க் கேர்ள்  ஹீரோவின்  திட்ட்டத்துக்கு எப்டி ஒத்துக்கிட்டார் என திரைக்கதையில்  சொல்லப்படவே இல்லை 

11   உடலை வெளிச்சம் போட்டுக்காட்டும் எஃப் டி வி ஃபேஷன் பரேடு மாதிரி ஒரு நிகழ்ச்சிக்கு தன் ஆத்மார்த்த காதலியை ஃபேசன் ஷோ மாடலிங்காக  ஹீரோ அனுமதிப்பது , ஹீரோ நெ 2  தன் கண் எதிரே காதலியின் தோளில் கை போடுவது  கிஸ் அடிப்பது இதை எல்லாம் சகிப்பதும் சகிக்கலை


 நச்  டயலாக்ஸ் 



1 இது தான் அவர் சிக்னேச்சரா? இந்தியா பாகிஸ்தான் எல்லை ல வரும் கம்பி வேலி டிசைன் மாதிரி இருக்கு?


2 இட் ஈஸ் மை பிளஷர்

 என்னது பிரசரா? காரை ஹாஸ்பிடலுக்கு விடவா?

3  பொதுவா பொண்ணுங்க நம்ம கிட்டே ஃபோன்ல பேசும்போது தோழிகள் முன்  ஸ்பீக்கர் ஃபோன் ஆன் பண்ணி நம்மை கலாய்ப்பாளூக, நாம தான் ஜாக்கிரதையா  இருக்கனும்

4  செத்துப்போன இவரோட மாமா சீரியசா இருக்கார் 

 வாட்?

 சாரி  சீரியசா இருந்த இவர் மாமா செத்துப்போய்ட்டார்



5   என் பேரு  புஷ்ப குமார், என்னை நீங்க குமார்னு  கூப்பிடலாம்

 இல்லை புஷ்பு னு கூப்பிடறேன் அதான் கிக் ( நல்ல வேளை , க்யூட் புஷ்பான்னு கூப்பிடலை)

6  இதோ பாரு  கம்பெனியோட பிராஃபிட் லைன்  கிராஃப்

 இவ்ளோவ் தானே இந்த கிராஃப்ல ஒரு கோடு இழுத்தா போதாது’?

 மடையா> லாபத்தை கூட்டனும்’  கோட்டை அல்ல 




7   என் ஆளோட லக்கி நெ 2. இப்போ என்ன பண்ணலாம்?

 இரு, எனக்கு நெ 2 பாத்ரூம் வருது , போய்ட்டு வந்துடறேன்


8 ஜெயிக்கறமா தோற்கறமா என்பது  முக்கியம் இல்லை. ஜெயிக்கறோம் என்ற தன்னம்பிக்கையை மனசில் நாம விதைச்சுக்கனும் அதுதான் வெற்றிக்கு அடிப்படை


 சி பி கமெண்ட் -  கிங்க் லையர்  கலகலப்பான ஃபேமிலி எண்ட்டர்டெய்னர் . மூளையை கழட்டி வெச்ட்டு ரசிக்கலாம்.  சூப்பர்  ஹிட் ஆகலைன்னாலும் சராசரி  ஹிட் தான்


ரேட்டிங் = 2.75 / 5


ஆட்டிங்கல்  நியூ ட்ரீம்ஸ்  தியேட்டரில் பார்த்தேன் . கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் மாதிரி வித்தியாசமான  முகப்பு .இங்கே டிக்கெட் ரேட் செம காமெடி

 90 ரூபா டிக்கெட் பெஞ்ச் டிக்கெட்  100 ரூபா பால்கனி  டிக்கெட். அந்த 10 ரூபால என்ன வருது? 75    , 100 என்றாவது வைத்திருக்கலாம்




0 comments: