Saturday, February 20, 2016

NEERJA ( 2016) -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)


உண்மை சம்பவத்தை படமாக்குவதில் சவாலும் இருக்கு, சந்தோஷமும் இருக்கு. சரித்திரத்தைப் பதிவு பண்றோம்கற  ஜாக்கிரதைத்தனத்தோட நம்ம கிரியேட்டிவிட்டியையும் காட்டனும்.1985 செப்டம்பர் 5 ம் தேதி நடந்த ஒரு உண்மைச்சம்பவம் , ஹைஜாக் பற்றிய படம் தான் இது.


நீர்ஜா ஒரு ஏர் ஹோஸ்டல். விமான  தலைமை பணிப்பெண். அவருக்கு 2 சகோதரர்கள் , ஒரு அம்மா, ஒரு காதலர் இவங்க கூட இவர் வாழ்க்கை ச்ந்தோசமா போய்க்கிட்டு இருக்கு

சம்பவம் நடக்கற அன்னைக்கு அந்த சம்பவம் நடக்கப்போகுதுன்னு  தெரியாம நீர்ஜா ட்யூட்டிக்குப்போகுது. மும்பையில்  இருந்து கராச்சி வழியா அமெரிக்கா போகும் விமானம் அது

4 பயங்கர வாதிகள் அந்த  விமானத்தில்  புகுந்துக்கறாங்க. விமானப்பயணிகளை மிரட்றாங்க. நீர்ஜா டக்னு விமானிகளுக்கு தகவல் கொடுத்து  அவங்களை தப்பிக்க வெச்சுடுது. ஏன்னா  விமானி இருந்தாத்தானே  விமானத்தைக்கடத்த முடியும்?

பதவி இருந்தாத்தானே கண்ட மேனிக்கு மீடியா க்கு பேட்டி குடுப்பே?ன்னு இன்னோவா  பார்ட்டி யை  ஜெ துரத்தி விட்டா மாதிரி  நீர்ஜா  புத்திசாலித்தனமா  இப்டி ஒருன் காரியம் பண்ணிடுது

தொடர்ந்து  அவங்க  மிரட்டலும், நீர்ஜாவின் சினிமாத்தனம் இல்லாத  சாகசமும் தான்  திரைக்கதை.

300 க்கும் மேற்பட்ட பயணிகளை  அவர் எப்படி காப்பாற்றினார்  என்பதே கதைக்கரு


ஹீரோயினா சோனம் கபூர். இது அவருக்கு வாழ் நாள் சாதனைப்படம். நல்லா நடிக்க ட்ரை பண்ணி  இருக்கு, ஆனா பல இடங்கள்ல ஓவர் ஆக்டிங், இயக்குநர் சமாளிப்பால்  தாங்குது


 ஹீரோயின் அம்மாவா ஷபனா ஆஸ்மி,பிரமாதமான ஆக்டிங்,க்ளைமாக்சில் அவர் நா தழு தழுக்க  நிதானமாக  உரை ஆற்றும் காட்சி அபாரம். சிறந்த  நடிகை விருது , சிறந்த  துணை நடிகை விருது   என  2 விருதுகள்  நிச்சயம்


வில்லன்களாக வரும் அந்த  4 பேரில்  தாடிக்காரர் மட்டும்  குட் ( 4 பேருமே  தாடிக்காரங்க தானே? எப்டி  அடையாளம்  கண்டு பிடிக்க? )

ஒளிப்பதிவு  , எடிட்டிங்க்  கனக்ச்சிதம்  , பின்னணி  இசை  அருமை. திரைக்கதை  இயக்கம்  புதுமுகம்  என்பதை  நம்ப முடியவில்லை


இந்த சமபவம் சம்பந்தப்பட்ட ஆட்களிடம்  திரைக்கதை  விவாதம் நிகழ்த்தி, பல சம்பவங்களை  கோர்த்து அழகிய கதம்பமா தந்த மெனக்கெடலுக்கு  ஒரு சபாஷ்



மனதைக் கவர்ந்த  வசனங்கள்

வாழ்க்கை என்பது நீண்ட ஆயுளால் சிறப்படைவதில்லை.மகிழ்ச்சியான தருணங்களினால் சிறப்படைகிறது

2  ஏர் ஹோஸ்டல் ஜாப் பை விட முடியாதா?

சாரி மம்மி.ஐ லவ் மை ஜாப்

பசங்களுக்கு வீரம் இருக்கனும்னு சொல்லித்தந்து வளர்த்தறாங்க.ஆனா பெண்களுக்கும் வீரம் ,போராட்ட குணம் தேவை..சொல்லிக்கொடுத்து வளர்த்தனும்

4  உன் கை ஏன் நடுங்குது?,தீவிரவாதின்னா பயத்தை ஏற்படுத்தனும்.பயப்படக்கூடாது

ஒவ்வொரு சாதாரண பெண்ணுக்குள்ளும் ஒரு அசாதாரண சக்தி இருக்கும், என் பொண்ணு கிட்டேயும் அது இருந்தது  


சுய மரியாதை, தன்னம்பிக்கை இரண்டையும் எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காதேன்னு என் பொண்ணுக்கு கத்துக்கொடுத்து இருக்கேன்  


உயிரோட எத்தனை வருசம் வாழ்ந்தீங்க?என்பதை  விட  எத்தனை உயிரை வாழ்நாளில் காப்பாற்றி இருக்கீங்க? என்பதைத்தான் சரித்திரம் பதிவுசெய்யும்  


8  நீ  எப்போதெல்லாம் என்னை மிஸ் பண்றதா நினைக்கறியோ அப்போதெல்லாம் இந்த ஃபோட்டோவை வந்து பார்த்துக்கோ  





 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

பல வருடங்களுக்கு முன் விக்ரம் பட டைட்டில் சாங்கில் கமல் பயன் படுத்திய டான்ஸ்.ஸ்டெப் பை இப்போ பயன்படுத்தறாங்க.அது தான் கமல்

2  யாருக்கும் தராம நீயே சாப்பிடனும் என்பதே ஒவ்வொரு அம்மாவின் டிபன் பாக்ஸ் கட்டளையாக இருக்கும், இந்தப்படத்தில் அம்மா பாசம், மகள் ரிஃப்ளக்‌ஷன் கன கச்சிதம்



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   ஹீரோயின் இக்கட்டான  சூழலில் மாட்டும்போது எல்லாம்  அவரது வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் அவர் நினைவில்  வருவது போல்  திரைக்கதை  அமைத்தது நல்ல உத்தி. இது போல்  கே எஸ்  ரவிக்குமார்  புரியாத புதிர்  த்ரில்லர்  மூவியில்   ட்ரை பண்ணி  இருப்பார். படத்தில்  ஒவ்வொரு ஷாட்டின் முடிவும்  அடுத்த  ஷாட்டின் தொடக்கமாக இருக்கும்


2   ஹை ஜாக்  நிகழ்வு  ஆடியன்சின் மனதில் ஒரு நெருக்கடியைக்கொடுக்கும்  விதத்தில்  இயல்பாக  கையாளப்பட்டது

3  எந்த விதமான  சினிமாத்தன ஆக்சனோ, சூப்பர்  ஹீரோ சாகசமோ  படத்தில் இல்லாதது  பிளஸ்


4  வாய்ப்பு  இருந்தும்  டூயட் ,  மொக்கை பாடல்  காட்சிகளை தவிர்த்தது




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1 பொதுவா  ஹைஜாக்கர்ஸ்  பைலட் ரூமைத்தான்  முதல்ல சிறை பிடிப்பாங்க. இவங்க  கோட்டை விட்டது  எப்படி?


2  ஒரு அமெரிக்கரை  முதல்ல  கொலை செய்து  பயமுறுத்தலாம்  என்பது  தீவிரவாதிகளின்  பிளான். அதுக்கு  சும்மா  ஒரு கிளான்ஸ்  பார்த்தாலே  யார் அமெரிக்கர்  என  தெரியுமே? அல்லது   உங்கள்ல  அமெரிக்கன்ஸ்  யார்? யார்?  என  கேட்டா  போதும். அவங்களுக்கு  கொலை ஆகப்போறோம்னு  தெரியாதில்ல. சொல்லிடுவாங்க. அல்லது  பயணிகள்  லிஸ்ட்  வாங்குனா  பேரை  படிச்சா  தெரிஞ்சுக்கலாம். எதுக்காக  வேலை  மெனக்கெட்டு  பாஸ்போர்ட்  எல்லாத்தை யும் கலெக்ட்  பண்ணனும்?


3  ஹீரோயின்  பாஸ்போர்ட்  கலெக்ட்  பண்ணும்போது  அமெரிக்கன்ஸ் உடையதை மட்டும் கவர் ல போடாம  மறைச்சிடுது.  டோட்டல் கவுண்ட்டிங்க் ல இது காட்டிக்குடுத்திடாதா?


4  பயணிகள்  300 க்கும் மேல, அதில் 60% ஆண்கள். தீவிரவாதிகள் 4 பேர் தான். ஆண்கள்  10 பேர்  சேர்ந்தாலே உயிரைப்பணயம்  வெச்சு எதிர்த்தா  4 பேரையும்  முடிச்சிருக்கலாமே? ஒரு டைமில்  துப்பாக்கியால் எத்தனை  பேரை  சுட முடியும்?ஆனா  யாருமே அதுக்கு முயற்சியே  செய்யலையே?அத்தனை  பேருமா பயந்தாங்கொள்ளிகளா  இருப்பாங்க?







சி  பி  கமெண்ட் =NEERJA (HINDI)-விமான கடத்தல் கதை.சினிமாத்தனம் இல்லாத சினிமா.1986 உண்மை சம்பவம்.ஏ சென்ட்டர் பிலிம்.ரேட்டிங் =3.25 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 44



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = நன்று



 ரேட்டிங்=3.25 / 5


    Image result for neerja 
    Image result for neerja 
    Image result for neerja 
    Image result for neerja
    Image result for neerja
    Image result for neerja
    Image result for neerja
    Neerja Bhanot
    Flight attendant
    Neerja Bhanot AC was a purser for Pan Am, based in Mumbai, India, who was shot while saving passengers from terrorists on board the hijacked Pan Am Flight 73 on 5 September 1986. Wikipedia 
    BornSeptember 7, 1963, Chandigarh
    DiedSeptember 5, 1986, Karachi, Pakistan

0 comments: