Friday, February 26, 2016

கணிதன் - சினிமா விமர்சனம்


ஹீரோ ஒரு உள்ளூர் சேனலில் ரிப்போர்ட்டர். முகவரி இல்லாத சேனல்ல இருந்து முன்னேறி பிபிசி மாதிரி ஹிட் சேனல்ல ஒர்க் பண்ணனும்னு நினைக்கறாரு ( முகவரி- அஜித் ரெஃப்ரன்ஸ்னு கிளம்பிடுவாங்களோ?)

இண்ட்டர்வ்யூ அட்டெண்ட் பண்ணி அசத்தி அதுல வேலையும்  கிடைக்கும்போது குடும்பமே குஷி ஆகிடுது ( குஷி - விஜய் ரெஃப்ரன்ஸ்- தமிழேண்டா)

ஹீரோ அண்ட் கோ வை போலிஸ் அரெஸ்ட் பண்ணிடுது. போலிச்சான்றிதழ் கொடுத்து பேங்க்ல லோன் வாங்கி  ஃபோர்ஜரி பண்ணினதா வழக்கு.

 கோர்ட்டில் எல்லாருக்கும் 7 வருச  தண்டனை  கிடைக்குது. 

இதுக்குப்பின்னால ஒரு பெரிய நெட் ஒர்க்கே இருக்கு. போலிச்சான்றிதழ் தயாரிச்சு விற்கும் கூட்டம், அதை வெச்சு  லோன் வாங்கி ஃபோர்ஜரி செய்யும்  கூட்டம் , அதை  ஹீரோ எப்படி கண்டு பிடிக்கறார் ? என்பது தான் கதை


ஹீரோவா அதர்வா. நோ அதர் சாய்ஸ் என சொல்லும் அளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய துடிப்பான நடிப்பு . ஓப்பனிங்க் ல மொக்கை ஃபிகரான ஹீரோயினிடம் பம்முவது மட்டும் நம்பும்படி இல்லை.மற்றபடி ஆக்சன் காட்சிகள் , சேசிங்க் சீன்களில்  செம எனர்ஜெடிக் பாஸ்




ஹீரோயினா கேத்ரீன் தெரசா. ஓவர் மேக்கப் பாப்பா .ஆல்ரெடி கலரா இருப்பவர்கள் இன்னும் ஓவர் லோடா பவுடர் கோட்டிங்க் ஏத்திட்டே போனா அது பிளசை மைனஸ் ஆக்கிடாதா? எங்களை மாதிரி மாநிற ஆட்கள் பவுட ர்  போட்டா ஓகே .

 முடிஞ்சவரை தெரிஞ்சவரை அறிஞ்சவரை கிளாமர் காட்டுது பாப்பா . ஆனா ரசிக்கும்படி இல்லை ( தக்காளி  கிளாமர் காட்னா ரசிச்சுட்டுப்போகாம ரசிக்கும்படி இல்லைனு புலம்பறானே ? )

கே பாக்யராஜ்  போலீஸ் கான்ஸ்டபிளா கேரக்டர்  ரோல், திரைக்கதை மன்னனா பிரபல இயக்குநரா , ஹீரோவா சைன் பண்ணவர். எப்டி இருந்தவர் இப்டி ஆகிட்டாரே?

ஹீரோவின் நண்பரா வரும் கருணா கச்சிதமான நடிப்பு . காமெடி ஸ்கோர்  கம்மி என்றாலும்  ஓக்கே ரகம்



மனதைக் கவர்ந்த  வசனங்கள்

ஹை க்ளாஸ் பிகருங்க ஜாலியா பேசுவாங்க.ஆனா பேரைக்கூட சொல்ல மாட்டாங்க #,க


2 டேய்.எப்டிடா நேத்து அறிமுகமான பிகரை அதுக்குள்ளே கரெக்ட் பண்ணினே?


நேத்து நைட் பூரா பேசி பேசி கரெக்ட் பண்ணிட்டேன்.ஹிஹி #,க


3 என் கிட்டே ஏன் பொய் சொன்னே?


எனக்கு உன்னைப்பிடிச்சிருந்தது.அதான் பொய் சொன்னேன்.#,க


4 ஒருத்தர் வெற்றிக்குப்பின் யாரும் இல்லாம இருக்கலாம்

ஆனா பல தோல்விகள் இருக்கும் #,க


5 முயற்சிக்கத்தயங்குபவன் தான் தோல்வியைப்பார்த்து பயப்படுவான்.#,க

6 இங்க்லீஷ் ங்கறது வெறும் லேங்க்வேஜ் தான்.நாலெட்ஜ் இல்லை

7  எல்லா அழகான பொண்ணுங்களும் மொக்கைப்பையனா பார்த்துப்பாத்த்து லவ்வுவாங்க # க


8 இந்தக்கால மாடர்ன் பிகருங்க கிட்டே எதை வேணா வாங்கிடலாம்.ஆனா போன் நெம்பர் மட்டும் வாங்கவே முடியாது #,க

9 ஊர்ல இருக்கற எல்லா கிரிமினல்சுகளும் வந்துட்டுப்போகும் இடம் கோர்ட்தான் #க

10 தப்பு நடக்கறதைக்கண்டுக்காம இருப்பவனைக்கூட மன்னிச்சுடுவாங்க, ஆனா தப்பைக்கண்டிப்பவனை மன்னிக்கவே மாட்டாங்க தீயசக்திகள் # க


11 அவதான் ஃபோன் பண்றானு எப்டி கண்டுபிடிச்சே? எல்லாப்பொண்ணுங்களும் நாம சரக்கு அடிக்கும்போதுதான் ஃபோன் பண்ணுவாங்க #க













 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


கணிதன் =145 நிமிசம்

2 கதைக்களம் கோ பாகம் 2,போல் இருக்கு # க

3 அப்பாவிடம் இல்லாத சுறுசுறுப்பு ,உடற்கட்டு ,சிரிப்பு அதர்வா முரளியின் + # க

4 ஹீரோயினை ஓப்பனிங் சீனிலேயே ஓவர் கிளாமராய் காட்டி விடக்கூடாது.பின் வரும் காட்சிகளில் கண்ணிய உடை அணிந்து வந்தாலும் எடுபடாது



5 பின்னணி இசை க்கு பிண்ணனி இசை னு டைட்டில்.இடமாறு தோற்றப்பிழை



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1  சாதா ஆக்சன் ஃபிலிமாக எடுக்காமல் சமூக விழிப்புணர்வுக்கான மெசேசை  நீட்டாக  சொன்னதற்காக ஒரு  ஷொட்டு


2 ஹீரோ தன் பேரில் போலி சர்ட்டிஃபிகேட் வேணும் என வில்லன் க்ரூப்பில் கேட்கும்போது அவனை வில்லன் க்ரூப் அடையாளம் அறியும் செம த்ரில்  காட்சி

3   இசை , ஒளிப்பதிவு ,  எடிட்டிங்க் போன்ற டெக்னிக்கள் சமாச்சாரங்கள் கன கச்சிதம்

4  வில்லனாக வருபவரின்  தோற்றம், நடிப்பு எல்லாமே நல்லாருக்கு



இயக்குநரிடம்  சில கேள்விகள்

1  வில்லன்கள் துரத்தி பெட்ரோலால் நனைக்கப்பட்டு சாவின் விளிம்பில் போய் பயத்துடன் இருக்கும் கருணா ஹீரோவிடம் அந்த சீனில் சரக்கு அடிக்கலாமா? என கேட்பது செம செயற்கை.சும்மா தியேட்டரில் கை தட்டல் வாங்குவதற்காக அமைக்கப்பட்ட காட்சி அது.

2 போலி சர்ட்டிஃபிகேட் பிரச்சனை பெருசான பின்  ஹீரோ தங்களை டார்கெட் பண்றார் என தெரிந்த பின்னும் வில்லன் க்ரூப் எப்படி  தொடர்ந்து தங்கள் பணியை எப்பவும் போல் செய்வது எப்படி? கொஞ்ச நாள் தள்ளிப்போட மாட்டாங்க ?


3 ஃபோர்ஜரி சர்ட்டிஃபிகேட் மூலம் பேங்க்கில் லோன் வாங்கின வழக்கில் உடனடியாக தீர்ப்பு வருவது எப்படி. பெரிய பெரிய 2 ஜி  ஊழல் வழக்குகள் , கலைஞர் டி வி 200 கோடி ரூ வழக்கு, ஜெ வின் சொத்து குவிப்பு வழக்கு எல்லாம் வருடக்கணக்காக இழுத்தடிக்கப்படும்போது சாதா வழக்குகள் எல்லாம் மினிமம் 10 வருசம் இழுத்தடிப்பாங்க  இல்ல. ஒரே வாரத்தில்  தீர்ப்பு , விசார்ணை எல்லாம்  வருவது எப்படி?


4 எந்தப்பின்புல பிரஷரும்  இல்லாமல் அந்த சாதா கேசில் போலீஸ் ஹீரோ அண்ட் கோ வை அப்படி டார்ச்சர் செய்வது ஏன்?ஏன்னா போலீஸ் எல்லாம் எப்டியாவது காசு பிடுங்கத்தானே பார்ப்பாங்க இப்டி கை வெச்ட்டா  எப்டி?

5  க்ளைமாக்சில்  பர பரப்பான ஆக்சன் காட்சிகளை ஆடியன்ஸ் எதிர்பார்க்கும்போது அந்த டைமில்  ஹீரொயின் - ஹீரோ ரொமான்ஸ் , டூயட்  சீன் ஸ்பீடு பிரேக்கர்






சி  பி  கமெண்ட் -கணிதன் -போலி சர்ட்டிஃபிகேட் ஃபோர்ஜரி பற்றிய ஆக்சன் த்ரில்லர் -ஏ சென்ட்டரில் ஓடும்- விகடன்  மார்க் -41 , ரேட்டிங் - 2.75/ 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 41



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)  - ஓக்கே



 ரேட்டிங் -2.75/ 5


ஈரோடு காசிபாளை யம் அருகே உள்ள மகாராஜா மல்ட்டிபிளக்ஸ்ல படம் பார்த்தேன், செம தியேட்டர். கள்ளக்காதலர்களுக்கு சவுகர்யமான ஒதுக்குப்புறமான தியேட்டர். நான் தனியாத்தான் போனேன்

0 comments: