Sunday, February 21, 2016

Akashvani (2016) - சினிமா விமர்சனம் ( மலையாளம் )

ஆகாஷ்வாணி , செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சுவாமி - இந்த கணீர்க்குரலை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.ஆண்மை கலந்த கணீர்க்குரல்

 அதுக்குப்பின் ஆனந்த விகடன் ல ஆர் பார்த்திபன்  எழுதிய  தொடர் கதை சொர்ணமுகியில்  ஒரு நாயகன் பெயர் ஆகாஷ்

தமிழ் சினிமாவில்   அதிகமான முறை  ஹீரோவுக்கு வைக்கப்பட்ட பெயராய் அமைந்தது கார்த்திக் ( CARத்திக்) , ஆகாஷ் ( aa"cash”)

அவ்ளோவ் தாங்க ஆகாஷ்க்கும்  நமக்குமான பரிச்சயம். ஆகாஷ் வாணி  டைட்டில்  டிசைன்ல ஷ்+ வா  2 க்கும் ஒரு இறுக்கமான முடிச்சு போட்டது நல்லாருந்தது


சரி  பட விமர்சனம் பார்ப்போம்

ஹீரோயின் நீயா நானா? கோபிநாத் மாதிரி ஒருன் பிரபல டாக் ஷோ கோ ஆர்டினேட்டர்.&  சித்தி  ராதிகா போல்  க்ரியேட்டிவ் ஹெட். எப்பவும் அவர் டி வி ல பிசியாவே  இருப்பார்.

ஹீரோ ஒரு கம்பெனி எம் டி. இவரும் ஆஃபீஸ் ஒர்க்ல  எப்பவும்  பிசியாவே  இருப்பார்

 இந்த காதல் தம்பதிக்கு  ஒரு மகனும் உண்டு.

 நல்லா போய்ட்டிருக்கும் இவங்க வாழ்க்கைல  ஒரு பிரச்சனை

ஹீரோயினால  ஃபேமிலிக்கு டைம் ஒதுக்கவே முடியலை.அதனால 2 பேருக்கும்  ஈகோ கிளாஸ் ஆகுது.

ஹீரோ திடீர்னு 5 நாள்  யாரோ ஒரு பொண்ணு கூட அவுட்டிங்க் போகப்போறேன் அப்டி -னு சொல்றார்.2 பேருக்கும்  வாய்த்தகராறு வந்து  ஒரு கட்டத்தில்  ஹீரோயின்   ஹீரோ தலையில் ஒரு போடு போட்டு  சேர்ல உட்கார வெச்சு கயிற்றால் கட்டிடுது


 அப்போ  காலிங்க் பெல். ஹீரோயின்  தொழில் முறை எதிர் அனுப்ச்ச அடியாளுங்க  2 பேர்  சும்மா அவளை மிரட்டறதுக்காக வந்தவங்க. இந்த சூழ்நிலையை சாதகமா பயன்படுத்திக்கறாங்க. ஹீரோயினை கட்டிப்போட்டு  மிரட்ட ஆரம்பிக்கறாங்க


 அதுக்குப்பின் என்ன ஆச்சு? என்பதே திரைக்கதை



ஹீரோவா விஜய் பாபு . நல்ல பர்சனாலிட்டி, ஆனால் முகத்தில்  முதுமை எட்டிப்பார்க்குது. டிரஸ்சிங்க் சென்ஸ் , பாடி லேங்குவேஜ் எல்லாம் பக்கா.,

ஹீரோயின்   காவ்யா மாதவன். ஹோம்லி  ஃபிகர் . மூக்கு மடலின் அருகே இருக்கும் மரு கூட அழகாகத்தெரியும் அழகி. கேமரா மேன் எப்போப்பாரு இவர் முகத்தையே  க்ளோசப்ல காட்டிட்டே இருக்காரு. கணவனிடம் வாதிடும் காட்சி  அபாரம்

 வில்லனா அந்த  2 அடியாளுங்க  மிரட்டல்  தோற்றம்


 வசனங்கள்  அருமை, ஆனா  இன்னும்  நல்லா அதிகமா சேர்த்திருக்கலாம்


 திரைக்கதை அமைப்பில்  கொஞ்சம்  கவனம் செலுத்தி  இருக்கனும். பல  இடங்களில்  லாஜிக்  மிஸ்டேக்ஸ்


 இசை , பாடல்கள்  சராசரி அளவில்




மனதைக் கவர்ந்த  வசனங்கள்

காதலிக்கும்போது இருந்த அதே அன்பு அதே நபரை திருமணம் செஞ்ச பின் குறைஞ்சிடுதே அது ஏன்?விடை தெரியா கேள்வி VAANI(MALAIYALAM)



2 கல்யாணத்துக்குப்பின் ஒரு பெண் தன்னோட அம்மா ,அப்பா வை மறந்துடனும்னு எந்த இதிகாசத்திலாவது எழுதி இருக்கா? VAANI



3 சமூகத்தளத்தில் இயங்குபவனுக்கு சமூகப்பொறுப்பு நிச்சயம் இருக்கனும்.தன் பதவிக்கு ஏற்ப பொறுப்பு எடுத்துக்கனும் VAANI



4 உங்களோட சேர்ந்து வாழறா என்பதற்காக உங்களை சார்ந்து வாழறவனு மனைவியை குறைச்சு எடை போட்றாதீங்க VAANI




5 மாடர்ன் பிகருக்குத்தேவை ஒரு பர்பெக்ட் டம்மி ஹஸ்பெண்ட் VAANI



6 என் அன்பை அலட்சியப்படுத்துனா  தாங்கிக்குவேன்,உன் அன்பு கிடைக்கலன்னா  பொறுத்துக்குவேன்,ஆனா உன் அன்பை வேற யாருக்காவது பங்கு போட்டா. 





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1  இண்ட்டீரியர்  டெக்ரேஷன் பிரமாதம் . படத்தின்  பின் பாதி திரைக்கதை  முழுக்க முழுக்க  ஒரு பாத்ரூமில் நடப்பதால் ( நோ கில்மா , த்ரில்லர் )  அழகாக காட்ட வேண்டிய காட்டாயம், ஆர்ட் டைரக்டர் அசத்திட்டார்


2   காவ்யா மாதவன்  அணிந்திருக்கும்  சுடிதார்  டிசைன் ஒவ்வொன்றும்  பக்கா .  ஃபுல் கவரேஜ்

3  ஹீரோயின்  தோழிகளாக வரும் அந்த  2 ஃபிகர்களும்  ரசிக்கும்படி  இருப்பது

4  பின் பாதியில்  வரும் அந்த 2  ட்விஸ்ட்கள்




இயக்குநரிடம்  சில கேள்விகள்

1   என்னதான்  தம்பதிகள்  பிசியாக இருந்தாலும்  டெய்லி 2 பேரும் வீட்டில் நைட் 9 மணிக்கு வந்துடறாங்க. காலை 10 க்கு தான் கிளம்பறாங்க. ஆனா 2 பேரும் அம்மா அப்பா விளையாட்டு  கூட விளையாட டைம் இருப்பதில்லை என காட்டி இருப்பது நம்ப முடியலை. மாசம் ஒரு டைம்  கூட கிடையாதுன்னா எப்டி?>


2 கணவர்  தன் மேல் வெச்சிருக்கும் அன்பை தெரிந்து கொள்ள , அல்லது அவரை தூண்டி விட  நாயகி  அடியாள் செட் செய்து  தன்னை கணவர்  முன் அட்டெம்ப்ட்  ரேப்  பண்ண சொல்வது எல்லாம்  ஓவர்.


3  கணவர் , மனைவி இருவருமே கயிற்றால்  கட்டப்பட்டிருக்கின்றனர். என்ன தான் அடியாள் என்றாலும்  திடீர்னு மனசு மாறி நிஜமாவே ரேப் பண்ணினாலோ , கொலை கொள்ளை அடிச்சாலோ என்ன செய்ய முடியும்? இது  ரிஸ்க் இல்லையா?

4   கணவர்  டைரியில்  ஏஞ்சல் பற்றி  எழுதி  மனைவி கண்ணில் படுவது போல் டேபிளில் வைப்பாரா? அது பற்றி மனைவிக்கு சந்தேகம் ஏன் வர்லை?




சி  பி  கமெண்ட் -AAKASH-VAANI (மலையாளம்) - லவ் & பேமிலி டிராமா த்ரில்லர்.இன்ட்டீரியர் டெக்ரேசன் டாப்.லாஜிக் சொதப்பல்-ரேட்டிங் =2.75 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 42



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) -ஓக்கே



 ரேட்டிங் =2.75 / 5

திருவனந்த புரம் ஏரீஸ் பிளக்ஸ் சினிமாவில் படம் பார்த்தேன்



1 comments:

Rajasubramanian S said...

படம் எப்படி இருந்தா என்ன, உங்க விமர்சனம் நல்லா இருக்கு!