Thursday, January 14, 2016

பொங்கல் ரிலீஸ் படங்கள் -6 - ஒரு முன்னோட்டப்பார்வை

1 ரஜினி முருகன்
2 கதகளி
3 தாரை தப்பட்டை
4 கெத்து
Monsoon Mangoes ( மலையாளம்)
6  PAAVADA ( மலையாளம்)
பொங்கல் வெளியீடாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 4 படங்கள் வெளியாக இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.


'கதகளி', 'கெத்து', 'தாரை தப்பட்டை' ஆகிய படங்கள் முதலில் தங்களது பொங்கல் வெளியீட்டை உறுதிப்படுத்தியது. இறுதியில் இக்கூட்டணியில் இணைந்தது 'ரஜினி முருகன்'.


4 படங்களுமே முக்கியமான படங்கள் என்றாலும், 'ரஜினி முருகன்' படம் வெளியீடுவது குறித்து பைனான்சியர்களிடம் திருப்பதி பிரதர்ஸ் தனது பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. 'கதகளி' மற்றும் 'கெத்து' ஆகிய படங்கள் முதலில் தங்களது திரையரங்க ஒப்பந்தத்தை தொடங்கின.



1050 திரையரங்குகளை 4 படங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதால் முதலில் ஒப்பந்தத்தை தொடங்கிய 'கெத்து' மற்றும் 'கதகளி' ஆகிய படங்களுக்கு முன்னுரிமை அளித்தார்கள். ஆனால், டிசம்பரில் திரையரங்குகள் வெளியீட்டுக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை 'ரஜினி முருகன்' படக்குழு அப்படியே பொங்கல் வெளியீட்டுக்கு புதுப்பித்தது. இதனால், மீண்டும் திரையரங்க ஒப்பந்தத்தில் சிக்கல் நீடித்து வந்தது.



இறுதியாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஏரியாக்கள் தவிர, 'ரஜினி முருகன்' மற்ற இடங்களில் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த பொங்கல் திரையரங்க உரிமையாளர்களுக்கு உற்சாகப் பொங்கலாக அமைந்திருக்கிறது.


அனைத்து திரையரங்குகளிலுமே 2 படங்கள் வெளியாகிறது. காலை - மதியம் காட்சிகளில் ஒரு படமும், மாலை - இரவு காட்சிகளில் ஒரு படமும் திரையிட இருக்கிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து மக்களிடம் எதிர்பார்ப்பு இருக்கும் 4 படங்கள் வெளியாகி இருப்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.



1 ரஜினி முருகன்

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'ரஜினி முருகன்' வெளியீடு தள்ளி வைப்புக்கான காரணம் ஈராஸ் நிறுவனம் தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'ரஜினி முருகன்'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வேந்தர் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது.
'ரஜினி முருகன்' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். சென்சார் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து படத்தை செப்டம்பர் 17ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால், திருப்பதி பிரதர்ஸ் கடன் பிரச்சினைகள் காரணமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அப்பிரச்சினை முடிவுற்று வெளியீட்டு தேதியை அறிவிப்பார்கள் என பலரும் காத்திருக்கிறார்கள். செப்டம்பட் 17ம் தேதி படம் வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து விசாரித்த போது, "முதல் காரணம் ஈராஸ் நிறுவனம் தான். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அவர்களுக்கு பெரும் தொகை கொடுக்க வேண்டியதிருக்கிறது. பணம் கொடுத்த மற்றவர்களோ இப்படம் வெளியானால் தான் அந்நிறுவனத்துக்கு பணம் வரும் என்பதால் வெளியீட்டில் தலையிடவில்லை.
ஆனால், ஈராஸ் நிறுவனம் பணம் கொடுத்தால் மட்டுமே தங்களால் அனுமதி அளிக்க முடியும் என்று கூறிவிட்டது. லிங்குசாமியும் மும்பைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அந்நிறுவனமோ, வட்டியுடன் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே வெளியீடு என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
அபிராமி ராமநாதன் மூலமாக ஈராஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதற்கும் மறுத்துவிட்டது ஈராஸ் நிறுவனம். ஈராஸ் நிறுவனத்தின் கடனை அடைத்தால் மட்டுமே 'ரஜினி முருகன்' வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது" என்றார்கள்.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு 'உத்தம வில்லன்' வெளியீட்டின் போதும், ஈராஸ் நிறுவனத்தால் தான் தாமதமாக வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது அக்டோபர் 21ம் தேதி 'ரஜினி முருகன்' படத்தை வெளியிட முயற்சி செய்து வருகிறது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.

ரஜினி முருகன் என்பது 2016 ஆவது ஆண்டில் வெளியாகவிருக்கும் ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். லிங்குசாமிக்கு சொந்தமான திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில்சிவகார்த்திகேயன்கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும், சூரிராஜ்கிரண்,சமுத்திரக்கனி ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்




ரஜினி முருகன்
இயக்குனர்பொன் ராம்
தயாரிப்பாளர்என். சுபாஷ் சந்திரபோஸ்
லிங்குசாமி
கதைபொன் ராம்
நடிப்புசிவகார்த்திகேயன்
கீர்த்தி சுரேஷ்
இசையமைப்புடி. இமான்[1]
ஒளிப்பதிவுபாலசுப்ரமணியம்[1]
படத்தொகுப்புவிவேக் அர்சன்
கலையகம்திருப்பதி பிரதர்ஸ்
விநியோகம்ஈராஸ் இன்டர்நேசனல்[1]
வெளியீடுஜனவரி 14, 2016 [2]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
2 கதகளி


விஷால், கத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடிக்கும் 'கதகளி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை தற்போது படுமும்மரமாக நடத்தி வருகிறார் இயக்குநர் பாண்டிராஜ். இன்னும் 1 வாரத்தில் மொத்த படமும் முடிந்துவிடும் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வரும் இப்படத்தை விஷால் வழங்க முதல் பிரதி அடிப்படையில் இயக்குநர் பாண்டிராஜ் தயாரித்து வருகிறார்.
இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று விஷால் மற்றும் பாண்டிராஜ் இருவருமே கூட்டாக அறிவித்து இருக்கிறார்கள்.




விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கதகளி’. இதில் விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதில் விஷால் பேசும்போது, ‘எல்லோரும் என்னிடம் இந்த படத்துக்கு ஏன் ‘கதகளி’ என்று தலைப்பு வைத்தீர்கள் என்று கேட்கின்றனர். நாங்கள் கதகளி தலைப்பு தமிழ் தான் என்று தெரிந்த பின்னர்தான் படத்துக்கு கதகளி என்று பெயர் வைத்தோம். நான் முதன் முறையாக இயக்குனர் பாண்டிராஜ் உடன் இணைந்து பணியாற்றி உள்ளேன்.
இது மிகவும் சிறப்பான கதை. என்னுடைய படங்களில் இரண்டாம் பாதியில் பாடல்கள் இல்லாமல் வருவது இது தான் முதல் முறை. படத்தில் இடம் பெரும் சண்டை காட்சிகள் அனைத்துக்கும் ஒரு காரணமும், லீடும் நிச்சயம் இருக்கும். படத்தில் மொபைல் போனுக்கு முக்கிய பங்கு உண்டு.
ஒரே ஒரு தொலைபேசி அழைப்பால் ஒருவனுடைய வாழ்க்கையே மாறிவிடும். அது தான் ‘கதகளி’. என்ன அழைப்பு என்பதை எல்லாம் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
படத்துக்கு இசையமைப்பாளர் ஆதி மிகச்சிறப்பாக இசையமைத்துள்ளார். படத்தில் அவருடைய பின்னணி இசை பெரிதும் பேசப்படும் விஷயமாக இருக்கும். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் மிகச்சிறப்பாக படத்தை படம் பிடித்துள்ளார். கேத்ரீன் தெரசா நடிப்பு நிச்சயம் பேசப்படும்.
என்னை பொறுத்தவரை பொங்கலுக்கு வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற வேண்டும். நான் அனைவருக்காகவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய படத்துக்காக இன்னும் அதிகமாக வேண்டி கொள்கிறேன்’ என்றார்.

3 தாரை தப்பட்டை


பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்த விஷால்தான், தனது தோழி வரலட்சுமிக்கு தாரை தப்பட்டையில் வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்தார் என்ற வதந்தி உலவி வருகிறது. தாதரை தப்பட்டை பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை வரலட்சுமியிடம் கேட்டேவிட்டனர்.

 
 
விஷால் காரணமில்லை, சங்கீதா மேடம்தான் காரணம் என்றார் வரலட்சுமி. தாரை தப்பட்டை நடனம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் வரலட்சுமியிடம் பேசவிருப்பதாக பாலா சங்கீதாவிடம் சொல்ல, சங்கீதா அதனை வரலட்சுமியிடம் கூறியுள்ளார். அதன் பிறகே பாலா - வரலட்சுமி சந்திப்பு நடந்துள்ளது.
 
அதன் பிறகும் ஒரு மாத நடனப் பயிற்சிக்குப் பிறகே வரலட்சுமியை நடிக்க வைப்பது என முடிவு செய்தாராம் பாலா.


4 கெத்து


மான் கராத்தே இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் நடித்திருக்கும் கெத்து படத்துக்கு சென்சாரில் கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. இன்று இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்துக்கு எந்தவித எதிர்ப்புமின்றி யூ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
UDHAYANIDHI-620x300
இதனால் படக்குழு மிகுந்த உற்சாகமடைந்துள்ளது. இதுவரை உதயநிதி நடித்துள்ள அனைத்து படங்களுமே சென்சாரில் யூ சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை நகைச்சுவை கலந்த காதல் படங்களில் மட்டுமே நடித்துவந்த உதயநிதி, இதில் முதல்முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.
Monsoon Mangoes ( மலையாளம்)


Monsoon Mangoes is an upcoming Malayalam film written and directed by Abi Varghese.[1] The film stars an ensemble cast of Fahadh FaasilIswarya Menon,[2] Vinay Forrt, and Vijay Raaz, and is produced by Thampy Antony.
The film was originally intended to have the title Bourbon Street, which was later changed to Njan D P Pallikkal and finally to Monsoon Mangoes.

Monsoon Mangoes Poster-1.jpg
Theatrical release poster
Directed byAbi Varghese
Produced byThampy Antony
Written byAbi Varghese
Matt Grubb
Naveen Bhaskar
StarringFahadh Faasil
Iswarya Menon
Music byJakes Bejoy
CinematographyLukasz Pruchnik
Edited byDon Max
Production
company
Kayal Films
Distributed byCentral Pictures
CountryIndia
LanguageMalayalam
6  PAAVADA ( மலையாளம்)

மலையாள சினிமாவில் நடிகர் என்பதையும் தாண்டி நல்ல பாடகர் என்று நிரூபித்து வருபவர் ஜெயசூர்யா. இவர் இதுவரை அவரது படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.
தற்போது இவர் பிருத்விராஜ் நடித்துவரும் Paavada படத்தில் ஒரு பாடல் பாட இருக்கிறார். அப்பாடலின் போது எடுத்த ஒரு புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் பதிவிட்டு இத்தகவலை உறுதி செய்துள்ளார் ஜெயசூர்யா.
அதோடு அவர், பிருத்விராஜ் தான் என்னை இப்பாடல் பாட கூறினார் என்றார்.

நன்றி - விக்கிபீடியா தினமணி  மாலைமலர் ஆல் சினி வெப்சைட்ஸ்


ஸ்ரீகுமார்-ரஜினிமுருகன் -11.15 AM , ரிவ்யூ -2PM


அஜந்தா-கதகளி - 2.30pm , ரிவ்யூ -6 PM



பத்மநாபா-தாரைதப்பட்டை =6.15 pm , ரிவ்யூ


-10PM#14.1.16

1 comments:

'பரிவை' சே.குமார் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.