Friday, December 25, 2015

பூலோகம்-சினிமாவிமர்சனம்

'தனி ஒருவன்' படத்துக்குப் பிறகு வெளியாகும் ஜெயம் ரவியின் படம், ஜனநாதன் வசனத்தில் அவர் உதவியாளர் இயக்கத்தில் வெளியாகும் படம், ஜெயம் ரவி - த்ரிஷா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் என்ற இந்த காரணங்களே 'பூலோகம்' படத்தைப் பார்க்கத் தூண்டின.


'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படத்தில் பாக்ஸராக நடித்த ஜெயம் ரவி இந்தப் படத்திலும் பாக்ஸராக நடித்திருப்பதால் படம் வேற லெவலில் இருக்குமா? என்று நினைத்தபடி தியேட்டருக்குள் நுழைந்தோம்.


உண்மையில் படம் எப்படி?


'பூலோகம்' கதை: வடசென்னையில் பாக்ஸர்களாக இருக்கும் இரு பரம்பரை குடும்பங்களுக்கும் உள்ள மோதல்தான் கதைக்களம். இந்த போட்டியை மீடியா வியாபாரம் பார்க்க நினைக்கிறது. இந்த போட்டி என்ன மாதிரியானது? யார் கலந்துகொள்கிறார்கள்? மீடியா என்ன செய்கிறது? யார் எப்படி ஜெயிக்கிறார்? என்பது மீதிக்கதை.



குத்துச்சண்டை போட்டிக்குள் டீட்டெய்லிங் கொடுத்த விதத்தில் அறிமுக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் கவனம் ஈர்க்கிறார். அதில் இருக்கும் நுட்பங்களை கதாபாத்திரங்கள் வழியாக சொன்னது புத்திசாலித்தனம்.


ஜெயம் ரவி நிஜ குத்துச்சண்டை போடும் வட சென்னை இளைஞனாக தோற்றம், உடல் எடை, உடல் மொழி, வசன உச்சரிப்பு என எல்லாவற்றிலும் கடும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார். அவரின் தொழில் நேர்த்திக்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் ஒரு சபாஷ் போடலாம்.


ஆனால், வலுவான கதைக்களமும், பலவீனமான திரைக்கதையும் இருப்பதால் ஜெயம் ரவியின் அத்தனை உழைப்பும் வியர்வையாய் வீணாகிப் போகிறது.



நல்வழிப்படுத்தும் நல் ஆசானாய் பொன்வண்ணனின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. வழக்கம் போல பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்துக்கான வேலையை செய்கிறார். ஆனால், அது கம்பீரத்தையோ, பயத்தையோ வரவைக்கவில்லை.



த்ரிஷா அடிக்கடி சில காட்சிகளில் வந்து போகிறார். வெளிநாட்டு பாக்ஸராக நடித்திருக்கும் நாதன் ஜோன்ஸ், சண்முகராஜா ஆகியோர் சிறப்பான தேர்வு.

வட சென்னை கலாச்சாரம், மசான கொள்ளை, மக்களின் யதார்த்தம், பாக்ஸிங் பயிற்சிகள், போட்டிகளின் அடுத்தடுத்த கட்டங்கள் உள்ளிட்ட அத்தனை நேட்டிவிட்டியையும் இயக்குநர் காட்சிப்படுத்தி இருக்கிறார்.



ஆனால், குத்துச்சண்டையை மையப்படுத்தாமல் கதாபாத்திரத்தின் ஆர்வக் கோளாறு, அடிதடி என்றே முதல் பாதி பயணிக்கிறது. இரண்டாம் பாதியில் போட்டியைத் தவிர வேறு எந்த முனைப்பும் இல்லை. ஆனால், கிடைத்த கேப்பில் வசனங்கள் மூலம் சர்வதேச அரசியலைப் பேசி விடுகிறார்கள்.



விறுவிறு என்று நகர வேண்டிய திரைக்கதையில் ''வியாபாரம் சர்வதேசம். அது எல்லை தாண்டி நம்ம சேரிக்குள்ளயும் வந்து காசு பார்க்கும்.''


''எங்க ஏரியாவுல வந்து பாரு எத்தனை தெண்டுல்கர், தோனி, டைசன் இருக்கான்னு தெரியும்'' போன்ற வசனங்கள் மட்டும் கைதட்டலுக்கான ஆறுதல்.



ஜெயம் ரவி பாக்ஸிங் சண்டைக்காக வருந்துவது, இடைவேளை ட்விஸ்ட், பாக்ஸிங் டீட்டெயில் போன்ற சில காட்சிகளே படத்துக்கு பலம் சேர்க்கின்றன.


500 கோடி வியாபாரம் செய்யும் பிரகாஷ்ராஜ் 10 ரூபாய் சிகரெட் பிடிப்பது, எதற்கெடுத்தாலும் சங்கத்தில் தீர்மானம் போட கையைத் தூக்குவது, நாதன் ஜோன்ஸை கலாய்ப்பதாக நினைத்து செய்யும் சீரியஸ் காட்சிகளில் தியேட்டரில் சிரித்துத் தொலைக்கிறார்கள். இந்த லாஜிக் ஓட்டைகளை கவனிக்கவே மாட்டீங்களா கல்யாண் சார்!



சதீஷ்குமாரின் ஒளிப்பதிவில் வட சென்னை அச்சு அசலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.



ஸ்ரீகாந்த் தேவா இசை படத்துக்கு எந்த விதத்திலும் பலம் சேர்க்கவில்லை. மனிதர் உச்ச கட்ட காட்சியில் 'ரெக்யூம் ஃபார் எ ட்ரீம்' இசையை சுட்டு போட்டிருக்கிறார்.


லாஜிக், மேஜிக் தேவையில்லை. சண்டைக் காட்சிகள் இருந்தால் போதும் என்றாலோ, ஃபவர் புல் வசனங்கள் தரும் திருப்தியே என் தேவை என நினைத்தாலோ பூலோகம் உங்களுக்குப் பிடித்திருக்கும்.


-தஹிந்து


1]திருவனந்த புரம் தேவிப்ரியா மேட்னி ஷோ பூலோகம்.ஆண்கள் கூட்டமா இருக்கு.மருந்துக்குக்கூட லேடீஸ் இல்லை. பார்க்கலாமா ?திரும்பிடலாமா?


2]143 நிமிஷம்.பூலோகம் ட்யூரேசன். ஐ லவ் யூ .குறியீடு.லவ் சப்ஜெக்ட்டா?



3]வோர்ல்டு மார்க்கெட் பத்தி தெரியாம பேசாதீங்க.வால்மார்ட் கூட இந்தியா ல ஷாம்பு விக்க வந்துட்டாங்க.# பூ


4]தகராறை போஸ்டர் ஒட்றதுல இருந்தே ஆரம்பிக்கனும் # பூ


5]தற்போதைய தமிழ் சினிமாவில் கம்யூனிச வசனம் எழுதுவதில் நெ.1,எஸ் பி ஜனநாதன் ராக்கிங் # பூலோகம்


6]ஓப்பனிங் சீன் ல த்ரிஷா தொடை 2 லயும் ஹீரோ உருவத்தை பச்சை குத்திக்குது # தையல் சொல் கேளீர் THIGHயல் ஜொள் பாரீர்


7]ஒருத்தரைக்கொல்லனும்னு நினைக்கறது லட்சியம் இல்லை.வெறி #,பூ


=8]ஒரு வரலாறை வளர விடாம தடுத்துடாதீங்க.

எப்போதுமே குரங்குக்கு மதிப்பு இல்லை.குரங்கு காட்ற வித்தைக்குதான் மதிப்பு # பூ

10]மாஸ்டர்.நீங்க பாக்சர்களை உருவாக்கிட்டு இருக்கீங்க.பாக்சர்ங்க பல அநாதைகளை உருவாக்கிட்டு இருக்காங்க #,பூ


11]பூலோகம் = சராசரி ஆக்சன் மசாலா ,ஜெயம் ரவி யின் ஒர்க் அவுட் ,வசனம் டாப்.விகடன் =40 .ரேட்டிங்= 2.25 /5 , வன்முறை வன்மம்.பெண்கள் தவிர்க்கவும்




நடிகர் : ஜெயம் ரவி
நடிகை :
திரிஷா
இயக்குனர் :
கல்யாண கிருஷ்ணன்
இசை :
ஸ்ரீகாந்த் தேவா
ஓளிப்பதிவு :
சதீஷ் குமார்
சென்னையில் 1948-ல் இருந்து இரண்டு ஏரியாக்களுக்கிடையே பாக்சிங் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஜெயம் ரவி சிறுவயதில் இருக்கும்போது அவருடைய அப்பா, எதிராளியுடன் பாக்சிங்கில் போட்டியிருக்கிறார். இதில் தோற்கும் ஜெயம்ரவியின் அப்பா, அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் ஜெயம்ரவி சிறு வயதில் இருந்தே பெரிய பாக்சராகி எதிராளியின் மகனை தோற்கடித்து பழியை தீர்க்க வேண்டும் என்ற கொள்கையோடு வளர்கிறார்.

இந்நிலையில், டிவி சேனல் நடத்தி வரும் பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவியின் வெறியை வைத்து பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறார். ஜெயம் ரவிக்கும் எதிராளிக்கும் இடையே பெரும் போட்டியை ஏற்பாடு செய்கிறார். இதற்காக ஜெயம் ரவியுடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்.

இந்த போட்டியில் ஜெயம் ரவி வெற்றி பெறுகிறார். இந்த போட்டியின்போது தன்னால் தாக்கப்பட்ட எதிராளி, உயிர்போகும் நிலைக்கு ஆளாவதைக் கண்டு மனம் இறங்குகிறார் ஜெயம் ரவி. இதனால், இனி பாக்சிங் வேண்டாம் என்று முடிவுக்கு வருகிறார். மேலும் எதிராளியை காப்பாற்றும் முயற்சியிலும் ஜெயம் ரவி ஈடுபடுகிறார்.

ஜெயம் ரவியை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்திருக்கும் பிரகாஷ் ராஜ் இதனை அறிந்து அவரை மீண்டும் பாக்சிங்கில் ஈடுபடுத்த பல சதி வேலைகளை செய்கிறார். இறுதியில் பிரகாஷின் சதி திட்டத்தை ஜெயம்ரவி அறிந்துக் கொண்டாரா? மீண்டும் பாக்சிங்கில் ஜெயம் ரவி ஈடுபட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி, பாக்சிங் வீரருக்கு தேவையான உடற்கட்டு பெற்று கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சண்டை காட்சிகளில் நிஜ பாக்சிங் வீரர்களே தோற்றுப் போகும் அளவிற்கு ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். இவருடைய கடின உழைப்புக்கு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம்.

நாயகியாக நடித்திருக்கும் திரிஷா, கல்லூரி மாணவியாகவும் ஜெயம் ரவியின் ரசிகையாகவும் நடித்திருக்கிறார். ஜெயம் ரவி மீதுள்ள காதலால் உடம்பில் பச்சை குத்துவது அவரை துரத்தி துரத்தி காதலிப்பது என சிறப்பாக நடிப்பு திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். வழக்கம் போல் வில்லத்தனத்தில் மிரட்டி ரசிகர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார் பிரகாஷ் ராஜ். இரண்டாம் பாதியில் களமிறங்கும் ஹாலிவுட் பாக்ஸர் நாதன் ஜோன்ஸ், தனது உருவத்தாலேயே மிரட்டுகிறார். ஜெயம் ரவியும் இவரும் சண்டை போடும் காட்சிகள் சீட்டின் நுனிக்கே ரசிகர்களை இழுக்கிறது.

பாக்சிங்கை மையமாக வைத்து படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன். தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் விளையாட்டு வீரர்களை வியாபார பொருளாக்கி வருகிறார்கள் என்பதை வெளிப்படையாக கூறியிருக்கிறார். எஸ்.பி.ஜனநாதனின் வசனங்கள் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஜெயம் ரவி பேசும் வசனங்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படம் வெளிவந்திருந்தாலும் ரசிகர்களை துளிகூட ஏமாற்றவில்லை என்றே சொல்லலாம்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் கானா பாடல்கள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, மரணகானா மற்றும் தீம் சாங் மீண்டும் ஒருமுறை கேட்கத் தூண்டியிருக்கிறது. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். சதீஷ் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஒளிப்பதிவு செய்த விதம் அருமை.

மொத்தத்தில் ‘பூலோகம்’ ரசிகர்களை பூர்த்தி செய்யும்

http://cinema.maalaimalar.com/2015/12/24202643/Bhooloham-movie-review.html





0 comments: