மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய ஒரே கேள்வி 'இந்த இரவில் எங்கே தங்குவது?' என்பதுதான். அதற்கு சிலர் தாமாக உதவ முன்வந்திருக்கிறார்கள்.
ட்விட்டரில் சௌமியா ராவ் என்பவர், யார் வேண்டுமானாலும் தகவல் பகிரத்தக்க ஒரு ஸ்ப்ரெட் ஷீட் பக்கத்தை இணைத்திருக்கிறார். அதில் சென்னையின் ஒவ்வொரு பகுதியைச் சார்ந்தவர்களும் தங்கள் வீட்டில் இத்தனை பேருக்கு இடம் இருக்கிறது, உணவு இருக்கிறது. தேவைப்படுபவர்கள் தங்கிக்கொள்ளலாம் என்று தொடர்பு எண்ணையும் கொடுக்கிறார்கள்.
ஒரு நபரில் ஆரம்பித்து 10 பேர், 50 பேர் தங்கவும் இடமிருப்பதாக பலர் சொல்கிறார்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த இணைப்பை க்ளிக் செய்து தேவையை நிரப்பிக்கொள்ளலாம்.
ஸ்ப்ரெஷ்ட் ஷீட் இணைப்பு: help/shelter@Chennai

தஹிந்து