Thursday, December 24, 2015

காட்டு கோழி (2015)- சினிமா விமர்சனம்

நடிகர் : முகேஷ்
நடிகை :கரிஷ்மா
இயக்குனர் :முகேஷ் சி
இசை :முத்து
ஓளிப்பதிவு :சுரேஷ்
கிராமத்தில் பெரும் செல்வந்தரான முகேஷ், தன் மனைவி கரீஷ்மாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் வாழ்க்கையில் வேலைக்காரன் வடிவத்தில் விதி விளையாடுகிறது. வீட்டு வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே முதலாளியம்மாவை (கரீஷ்மா) ஓரக்கண்ணால் பார்த்து ரசிக்கத் தொடங்கும் அவன், எப்படியாவது அவளை அடைந்துவிட வேண்டும் என சுற்றி வருகிறான்.

இவனுக்கு ஒரு காதலியும் இருக்கிறார். இதற்கு முன்பு வேலை பார்த்த வீட்டில், வேலை செய்யும் அஞ்சலியை காதலித்த இவன், சில பிரச்சனைகளால் வேலையை விட்டு வெளியேறியிருக்கிறான்.

இந்நிலையில், முகேஷுக்கும் மற்றொரு செல்வந்தருக்கும் பகை ஏற்படுகிறது. இரண்டு பேரும் ஒருவரையொருவர் கொல்ல நினைக்கின்றனர். எதிரி மேல் உள்ள கோபத்தால் மூக்குமுட்ட குடித்து விட்டு வீட்டுக்கு வரும் முகேஷ், மனைவி கரீஷ்மாவுடன் உல்லாசமாக இருக்கிறார். ஆனால், அவரால் கரீஷ்மாவை திருப்திப்படுத்த முடியவில்லை. இப்படி போதையில் வருவதும், முக்கியமான நேரத்தில் பொத்தென்று விழுவதும் தொடர்கிறது. இதனால், விரக்தியடையும் கரீஷ்மாவின் கடைக்கண் பார்வை வேலைக்காரன் மீது விழுகிறது.

இதற்காகவே காத்திருந்த வேலைக்காரனும் ஜாடை காட்ட, பிறகென்ன... இருவரும் வீட்டில் நேருக்கு நேர் சந்திக்கும் போதெல்லாம் உரசிக்கொள்வது, கட்டிப்பிடிப்பது என நெருக்கமாகிறார்கள். இந்த விஷயம் அரசல்புரசலாக அஞ்சலிக்கு தெரியவருகிறது. அதுபோல், வேலைக்காரனுக்கு ஒரு காதலி இருக்கும் விஷயம் கரீஷ்மாவுக்கும் தெரிய வருகிறது.

இந்த சமயத்தில், வேறுவிதமாக யோசித்த கரீஷ்மா, தன்னை முழுமையாக அடைய வேண்டும் என்றால், தன் கணவன் முகேஷை கொல்லவேண்டும் என வேலைக்காரனை உசுப்பேற்றுகிறார்.

முதலாளியம்மாவை அனுபவிக்கும் வேகத்தில் இருக்கும் வேலைக்காரன், முகேஷை கொன்றாரா? அல்லது காதலி அஞ்சலியுடன் இணைந்தாரா? கரீஷ்மா, முகேஷை கொல்ல துடிப்பது ஏன்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் புதுமுக நடிகர்கள் என்பதால் முதல் முறையாக நடிப்பது அப்பட்டமாக தெரிகிறது. நாயகியாக நடித்திருக்கும் கரீஷ்மா கவர்ச்சியில் தாராளம் காட்டாமல் ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார். பாடல் காட்சிகள் படத்தில் இடம் பெறாதது ரசிகர்களுக்கு வருத்தமே. வழக்கமான கதையை கொஞ்சம் கவர்ச்சி கலந்து எடுத்திருக்கிறார் இயக்குனர் முகேஷ். ஆனால், பெரிதாக எடுப்படவில்லை. 

மொத்தத்தில் ‘காட்டு கோழி’ கறிக்கு உதவாது.

http://cinema.maalaimalar.com/2015/12/23211034/Kattu-kozhi-movie-review.html


0 comments: