Friday, December 04, 2015

வெள்ளப் பரிதவிப்பு தகவல்கள் 10- கடலோரப் பகுதிகளில் பேரவதிகள்; சென்னைக்கு தொடரும் மழை எச்சரிக்கை

சென்னை கோட்டூர்புரத்தில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புப் பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரம். | படங்கள்: ஜி.கிருஷ்ணமூர்த்தி, பி.ஜோதி ராமலிங்கம்
சென்னை கோட்டூர்புரத்தில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புப் பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரம். | படங்கள்: ஜி.கிருஷ்ணமூர்த்தி, பி.ஜோதி ராமலிங்கம்
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 4 நாள்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, புதன்கிழமை இரவு தொடங்கி அடுத்த 48 மணி நேரத்துக்கு கவலைக்குரிய அளவில் பாதிப்பு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழை - வெள்ளத்தால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
வானிலை முன்னறிவிப்பு:
* சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், ''தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் அடுத்த 3 அல்லது 4 நாள்களுக்கு தமிழகம், புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளது.
கடலோர மாவட்டங்கள், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கன மழை பெய்யும். நீலகிரி, கோவை போன்ற மலை மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். விட்டுவிட்டு மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்றார்.
* தாம்பரத்தில் மிக அதிக மழை
* இன்று காலை நிலவரப்படி சென்னை தாம்பரத்தில் மிக அதிக அளவாக 49 செ.மீ., செம்பரம்பாக்கத்தில் 47 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 42 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு, பொன்னேரியில் 39 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர், செய்யூரில் 38 செ.மீ., சென்னை விமான நிலையத்தில் 35 செ.மீ, மாமல்லபுரம், பூந்தமல்லியில் 34 செ.மீ., செங்குன்றம், கிண்டியில் 32 செ.மீ., நுங்கம்பாக்கத்தில், தரமணியில் 30 செ.மீ., சோழவரம், வட சென்னையில் 29 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 1901-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி 24 மணி நேரத்தில் 26.1 செ.மீ. மழை பெய்தது. இதுவே இதுவரை அதிகபட்ச மழை அளவாக இருந்தது. ஆனால், இன்று காலை நிலவரப்படி சென்னையில் அதிக பட்சமாக 33 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புறநகர் பகுதிகளில் அதிக அளவாக 49 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீட்புப் பணிகள் தீவிரம்
சென்னை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கிய பொதுமக்களைக் காப்பாற்ற மாநகராட்சி நிர்வாகம் தமிழக அரசு மூலமாக கடற்படை உதவியை கோரியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. | முழு விவரம்: சென்னையில் மக்களை மீட்கும் பணிகள் தீவிரம்; காஞ்சி மீட்பில் தொடரும் சிரமம்
பொது விடுமுறை அறிவிப்பு
* கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு தமிழக அரசு டிசம்பர் 3, மற்றும் 4-ம் தேதி பொது விடுமுறை அறிவித்துள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு அரசு அறிவுரை
* தனியார் நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
47 ரயில்கள் ரத்து
* கனமழை காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய 24 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 23 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதை தெற்கு ரயில்வே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை விமான நிலையம் டிச.6 வரை மூடல்
* சென்னை விமான நிலையத்துக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் டிசம்பர் 6-ம் தேதி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் வெள்ளம் சூழ்ந்ததால் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. ஆனாலும், மெட்ரோ, பறக்கும் ரயில்களின் சேவை மட்டும் பயணிகளுக்கு கை கொடுத்தது. | விரிவான செய்தி - கனமழை வெள்ளத்தால் சென்னையில் சாலை, ரயில், விமான போக்குவரத்து முடக்கம்
இருளில் மக்கள் தவிப்பு
* சென்னை முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். தொடர்புகொள்ளும் வசதி இல்லாததால் திணறி வருகின்றனர். ஏடிஎம் சேவை, பெட்ரோல் பங்க் முடங்கியதால் அவதி தொடர்கிறது. அனைத்து கடலோர மாவட்டங்களிலும் இதே நிலைதான்.


  • Subash  India
    மழையை அளவிடுவதில் எங்கோ தவறு இருக்கிறது 1968 அல்லது 1969 அக்டோபர் மாதம் இடைவிடாது பெய்த மழையால் செங்கல்பட்டு பாலாற்றுக்கு மேல் 3 அடிகளுக்கு வெள்ளம் போனது அப்போதைய மதுராந்தகம் தொகுதியின் MLA கொளத்தூர் கோதண்டம் அவர்கள் சம்பவ இடத்தில் கொட்டும் மழையில் நின்று மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தார் ஆனால் இன்று எந்த MLA க்களையும் காணோம்
    1260
    about 18 hours ago
     (1) ·  (0)
     
    Samooga Up Voted
    • கன மழையால், சென்னையில் பெரும்பாலான பகுதி, அடுக்குமாடி குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. பல பகுதிகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதை வைத்து, பால் நிறுவனங்கள், வியாபாரிகள் பால் விலையை இஷ்டம்போல் உயர்த்தி விற்றனர். சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில், 18 ரூபாய் முதல், 25 ரூபாய் வரை விலை உள்ள, அரை லிட்டர் பால் பாக்கெட், 50 ரூபாய் வரை விற்கப்பட்டது. சில இடங்களில், தனியார் நிறுவன பால் ஏஜென்ட்களே, சாலை சந்திப்புகளில் வைத்து, இவ்வாறு விற்றனர். பள்ளிக்கரணை பகுதியில், அரை லிட்டர் பால் பாக்கெட், 100 ரூபாய் வரை விற்கும் கொடுமை நடந்தது. வழக்கமாக, 20 லிட்டர் குடிநீர் கேன், 30 - 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இரண்டு நாட்களாக, சென்னையின் பல வெள்ளம் சூழ்ந்த மக்கள் தத்தளித்த பகுதிகளில், ஒரு கேன், 75 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது. அதுபோல், காய்கறிகளும், மூன்று மடங்கு விலை வைத்து விற்கப்பட்டது. 'இதுபோன்ற இக்கட்டான சூழலில், மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். இதுபோன்று லாபம் ஈட்டும் வேலையை தவிர்க்க.
      4085
      about 20 hours ago
       (0) ·  (0)
       
      • NG Viswanathan  United States
        சென்னை ரெயின் ரிப்போர்ட் பய் தி Hindu
        about 22 hours ago
         (0) ·  (0)
         
        • VR
          V. Ramaswamy  India
          வரலாறு காணாத இந்த அதீத மழையும், தொடரும் வெள்ளமும் ஆற்றொணாத் துயர் உடையது என்பது உண்மை. இதனால் மக்கள் படும் அவதியைக் காண்போர் எவரும் கண் கலங்குவர். அதே சமயம் இது இயற்கை மிக புத்தி சாலிகளாகக் கருதும் அரசியல் வாதிகளுக்கும் கடந்த 40 ஆண்டுகளாக தூரப் பார்வையுடன் நிர்வாகம் செய்யத் தெரியாத அரசு நிர்வாகத்திற்கும் புகட்டிடும் பாடம். இயற்கை வளத்தை தேவைக்கு மேல் கொட்டுகிறது, கிடைக்கும் போது சேமிப்பு செய்ய வசதிகள் ஏற்படுத்தவில்லை, முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட குளம், குட்டைகள், ஏரிகளைப் பாதுகாக்கவும் வாக்கு இல்லை வாய்ச்சொல் வீரர்களுக்கு. கிடைக்கும் போது பணம் சுருட்டி தலைமுறை தலைமுறைகளுக்கு சேர்த்து வைக்கத் தெரிகிறதல்லவா? இனியேனும் வல்லுனர்களைக் கலந்து தக்க எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கத் தெரியாவிட்டால், சம்பந்தப்பட்ட அனைவரும் மடையர்களே.
          1655
          about 22 hours ago
           (2) ·  (0)
           
          Samooga · subbu Up Voted
          • BR
            B R  India
            இனிமேலாவது அரசு தேவையில்லாத இல்லவசங்களை தவிர்த்து நீர் ஆதாரம் பாதுகாப்பு, தடையில்லா நீர் வடிகால், தகுதியான சாலை முதலிய வட்டிற்கு தொலைநோக்குடன் வல்லுனர்களின் ஆலோசை படி அரசியல்வாதிகள் அதிகாரிகள் சுயலாபதினை தவிர்த்து மனசாட்சியின்படி தம்மால் நாட்டிற்க்கு இன்ன நல்லதினை செய்யமுடியுமோ அதனை செய்து தங்களின் பணியாற்றல் குறித்தி மக்கள் புகழுமாறு நடந்துகொள்ளவேண்டும்
            405
            about 24 hours ago
             (3) ·  (0)
             
            Samooga · arun · subbu Up Voted
            • A
              Anandharaj  India
              Hai
              a day ago
               (0) ·  (0)
               
              • M
                Maideen  India
                இயற்கையை மதிப்போம் ..மனிதனை நேசிப்போம்
              தஹிந்து

              0 comments: