Tuesday, November 17, 2015

மழைக் காலத்தில் என்ன செய்யலாம்... என்ன செய்யக் கூடாது!

ழை காலத்தில் மக்கள் சில முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழ்நாட்டு தீயணைப்பு மீட்பு பணி துறை, இணை இயக்குநர் விஜயசேகர் அறிவுறுத்துகிறார்.

* தேவையில்லாத பயணங்களை தவிர்க்கலாம். இதன் மூலம் மழை கால தொற்று நோய்களை தவிர்க்கலாம். மேலும் வாகனத்துக்கும் நல்லது.

* தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் எந்நேரமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

* தேங்கி கிடங்கும் தண்ணீரில் நடப்பதை தவிர்க்கவும். அங்கு பள்ளம், கரண்ட் ஒயர், பூச்சிகள் என எதுவும் இருக்க வாய்ப்பு உள்ளது.

* பெரியவர்கள், குழந்தைகள் இருக்கும் வீட்டில், மெடிக்கல் கிட் மற்றும் டிரை புரூட்ஸ் போன்றவற்றை எந்நேரமும் வைத்து இருப்பது நல்லது.

* மழை காரணமாக எப்பவேண்டுமானலும் கரண்ட் கட் ஆகலாம். அதனால் ஒரு டார்ச் லைட், ரெயின்கோர்ட், பிளாங்கெட், ரெகுலர் சாப்பிடும் மருந்துங்கள் போன்றவற்றை கூடவே வைத்திருப்பது சிறந்தது.

* நமது வீடுதான் என்றாலும், மழைநேரம் என்பதால்... வீட்டில் மின்சாரம் பயன்படுத்தும் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். எந்நேரம் வேண்டுமானாலும் ஷாக் அடிக்கலாம். இதில் அலட்சியம் வேண்டாம்.

* மழை நேரங்களில், அசுத்தமாக இருக்கிறது என சிலர் காலை தரையில் சரியாக ஊன்றாமல் நடப்பர், தாவி செல்வர். இதுப்போன்ற நேரங்களில் வழுக்கி விட அதிக வாய்ப்பு இருக்கிறது.

* அப்பார்ட்மெண்டில் தரைதளத்தில் இருப்பவர்களின் வீடுகளில், பள்ளமான பகுதியில் இருக்கும் வீடுகளில் தான் மழை நீர் வீட்டுக்குள் வர வாய்ப்புகள் அதிகம். குழந்தைகள் தண்ணீரில் இறங்கி விளையாடுவார்கள். அதை அனுமதிக்க கூடாது.

* வானிலை அறிக்கையை கேட்டபின், பயணங்களை திட்டமிட்டுவது சிறந்தது.

* சாலை அமைப்பு சரியில்லாததால், மரங்களில் வேர்கள் வழுவிழந்து இருக்கிறது. அதனால், மரத்துக்கு கீழ் நிற்பது, வாகனங்களை நிறுத்துவது போன்றவற்றை தவிர்க்கவும்.

* தெருவில் கரண்ட் ஒயர் அறுந்துகிடந்தால், முதலில் மின்துறைக்கு போன் பண்ணனும். தனியாக போய் அதை சரிசெய்ய கூடாது.

வீட்டுக்குள் மழைநீர் புகுந்து, அவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தால், ரோட்டில் மரம் விழுந்து கிடந்தால், அதை அப்புறப்படுத்த, கரண்ட் ஒயரை அப்புறப்படுத்துவதற்கென தீயணைப்புத் துறையை 101, 102, 108 ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

-கே. அபிநயா

0 comments: