Wednesday, November 11, 2015

வேதாளம் - தெறி ஹிட்டா? மீடியம் ஹிட்டா? - த இந்து அலசல் - மக்கள் கருத்து

* 'மாஸ் ரசிகர்களுக்கான மாஸ் சினிமா' என்ற 'பழிவாங்கல்' கதைக்களம் கொண்ட தமிழ் சினிமா இலக்கணத்துக்குள் கச்சிதமாகப் பொருந்திருயிருக்கும் படம் 'வேதாளம்.'
* 'நாயகன்' ரேஞ்சில் தன் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் கொடுக்க 'தலைவா' மூலம் ஒரு முயற்சி செய்தார் விஜய். அந்த வகையில், 'பாட்ஷா' லெவலுக்கு ஒரு படத்தை தன் ரசிகர்களுக்குத் தர அஜித் விரும்பினார் போலும். அதற்காக, 'பாட்ஷா' திரைக்கதையை 'தைகக்ரைதி'யெல்லாம் பண்ணி பின்னியெடுத்திருக்கிறார் இயக்குநர் சிவா.
* அதிரடி, தெறிப்புகளைத் தாண்டி, சென்ட்டிமென்ட்ஸ் - எமோஷன்ஸ் என தன் ரசிகர்கள் மட்டுமின்றி, பொழுதுபோக்கு சினிமா ரசிகர்கள் அனைவரின் கவனத்தையுமே ஈர்க்க ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார் அஜித்.
* அஜித்தைத் தவிர படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் முழுமையாக வலம் வந்திருப்பவர், தங்கை கதாபாத்திரத்தை ஏற்றுள்ள லஷ்மி மேனன் மட்டுமே. இந்த தீபாவளி ரிலீஸின் புஸ்வானம் ஸ்ருதி ஹாசன்தான். மற்ற அனைவரும் தவுசன் வாலாவில் பங்கு வகித்த உதிரி வெடிகளாகவே வந்து போயிருக்கிறார்கள்.
* விறுவிறுப்பான தெறிப்புச் சண்டைக்காட்சிகள்தான் படத்துக்கு பலம். அதிரடித் திரைப்படத்தில் சண்டைக்காட்சிகளில் புதிய அம்சங்களைப் புகுத்த முயற்சித்து, அதில் ரசிகர்களின் வரவேற்பால் வெற்றியும் பெற்றிருக்கிறது வேதாளம் டீம்.
* 'வீர விநாயக', 'ஆலூமா டோலுமா' ஆகிய இரண்டு பாடல்கள் அமர்க்களம். மற்றவை ரசிகர்கள் தியேட்டர் வாசலுக்கு வந்து வெடிகளைப் பற்றவைத்து கொஞ்சம் குதூகலித்துவிட்டு அரங்குக்குத் திரும்ப துணைபுரிகின்றன.
* மாஸ் மசாலா திரைப்படத்துக்கு முதுகெலும்பே ஒளிப்பதிவும் எடிட்டிங்கும்தான். இவை இரண்டுமே வேதாளத்தில் பக்கா. ஹிட்டான ஹரி படங்களை நினைவூட்டினாலும், வேதாளம் தரும் வேகம் - அஜித் ரசிகர்களுக்கு அட்டகாச அனுபவத்தைத் தருகிறது.
* வழக்கமான பழிவாங்கல் - தாதா சார்ந்த கதைதான் என்றாலும், சுறு சுறு திரைக்கதையிலும், அசத்தல் திருப்பங்களிலும் பிசுபிசுப்பிக்காமல் தெறித்து வெடிக்கவைத்த வகையில், இயக்குநர் சிவாவின் பங்களிப்பு சிறப்பு.
* லாஜிக் பார்க்கும் சீரியஸ் சினிமா ஆர்வலர்களைத் தாண்டி, இயல்பு மீறாத பொழுதுபோக்கு ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்திருக்கும் வகையில், வேதாளம் - அஜித் ரசிகர்களுக்கானது மட்டும் அல்ல என்ற எல்லையைத் தாண்டி விடுகிறது.
* திரையரங்கில் ரசிகர்களின் கொண்டாட்டத்தைப் பார்த்தால், ஒட்டுமொத்தமாக அஜித்... அஜித்... அஜித்... இந்த ஒரு நட்சத்திரத்துக்காக மட்டுமே விரும்பி வேதாளம் பார்க்கச் செல்வோருக்கு நிச்சயம் இது தல தீபாவளிதான். மற்றபடி, அதிரடி - மசாலா - மாஸ் பட விரும்பிகளுக்கும் சுவையான விருந்துதான்.
சரி... அடுத்த கட்டம் நோக்கிய தமிழ் சினிமாவுக்காக ஏங்கிவரும் திரைக் கலை ரசிகர்களுக்கு... அதான் தெறிக்க விட்டாச்சே!

  • Karthik  from India
    இது மாதிரி படம் தான் ஒவ்வொரு ரசிகனும் எதிர் பார்க்கறது ... செம கலக்கல்...
    about an hour ago
     (1) ·  (0)
     
    mahendrakumar Up Voted
    • M
      Makthum  from India
      Mass movie
      about 2 hours ago
       (0) ·  (0)
       
      • P
        Pravin  from United States
        வழக்கமா பல படத்துல பார்த்த கதைதான் ஆனா நீங்க இப்படி விமர்சனம் பன்றிங்க ஆனா புதுசா எதாச்சும் முயற்சி பன்னுனா அது நல்லா இல்லனு விமர்சனம் பன்றிங்க
        about 3 hours ago
         (0) ·  (0)
         
        • S
          Srinivasan  from United States
          Blockbustermovie
          about 4 hours ago
           (0) ·  (0)
           
          • M
            Manichan  from India
            படம் ரொம்ப சுமார் ராக இர்ருக்கிறது ...ஆனால் அஜித் alaga இர்றிக்கிறார்
            about 4 hours ago
             (0) ·  (0)
             
            • V
              Vendhan  from Sri Lanka
              வேதாளம் படத்துல அப்படி என்ன இருக்கு. காத கிளிகுற சத்தம் ஹீரோவ தூக்கி பிடிக்குற visual காட்சி அமைப்பு. சுத்தம்மா வேஸ்ட்
              about 5 hours ago
               (4) ·  (5)
               
              Rajagopal · manichan · prasad · sathish Up Voted
              Thangam · mahendrakumar · parthi · inbarasan · Govardhanan Down Voted
              • N
                N.Govind  from India
                Centiment action &ajith

              -thanx - the hindu


              0 comments: